23.11.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.2007 Om Shanti Madhuban
புது வருடத்தில், சதா காலமும் ஒரு முடிவற்ற மகாதானியாகவும், தடைகளிலிருந்து முடிவின்றி விடுபட்டவராகவும், முடிவற்ற யோகியாகவும், வெற்றி சொரூபமாகவும் ஆகுங்கள்.
இன்று பாப்தாதா தனக்கு முன்பாக இரட்டை ஒன்றுகூடலைப் பார்க்கின்றார். ஒன்று, பௌதீக ரூபத்தில் நேரடியாக அவருக்கு முன்பாக அமர்ந்திருப்பவர்களுடையதும், மற்றையது தொலைவில் அமர்ந்திருந்தாலும், அவருடைய இதயத்திற்கு நெருக்கமாகப் பார்க்கக் கூடியவர்களுடையதும் ஆகும். ஆத்மாவின் இரு ஒன்றுகூடல்களிலும் உள்ள மேன்மையான ஆத்மாக்கள் அனைவரதும் நெற்றியில் ஆத்மாவின் ஒளி (ஆத்ம தீபம்) பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இது அத்தகையதோர் அழகான பிரகாசமான காட்சியாகும். ஓர் எண்ணத்திலும், ஒரு நிலையான ஸ்திதியிலும் ஸ்திரமாக இருந்தவாறே கடவுளின் அன்பில் திளைத்திருக்கின்ற நீங்கள் அனைவரும், ஒருமுகப்பட்ட புத்தியுடன் அவருடைய அன்பில் மூழ்கியிருப்பதுடன், பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விசேடமாக புது வருடத்தைக் கொண்டாடுவதற்காகவும் இங்கு வந்திருக்கிறீர்கள். பிரகாசிக்கின்ற தீபங்களான உங்கள் அனைவரதும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது, ஒவ்வோர் ஆத்மாவினதும் ஒளியைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார்.
இன்று சங்கம நாளாகும்: பழைய வருடத்திற்கு விடை கொடுத்தலும், புதிய வருடத்திற்கு வாழ்த்துக்களை வழங்குதலும் ஆகும். புதிய வருடம் என்றால், புதிய ஊக்கமும், உற்சாகமும் ஆகும். நீங்கள் சுய மாற்றத்திற்கான உற்சாகத்தைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சகல பேறுகளையும் அடைந்து விட்டீர்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களுடைய இதயங்களில் உற்சாகம் ஏற்படுகிறது. உலக மக்களும் இப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு மாத்திரமான பண்டிகையாகும். ஆனால் அதிர்ஷ்டமான, அழகான குழந்தைகளாகிய உங்களுக்கோ சங்கம யுகத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையே ஆகும். ஏனெனில், நீங்கள் சந்தோஷத்தின் உற்சாகத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உலக மக்கள் அணைந்த தீபங்களை ஏற்றி, புது வருடத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால், பாப்தாதாவும், நீங்களும், ஏற்றப்பட்ட தீபங்கள் அனைவரும் புது வருடப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக எல்லா இடங்களிலிருந்தும் இங்கு வந்திருக்கிறீர்கள். கொண்டாடுகின்ற இச்சம்பிரதாயங்கள் பெயரளவிலேயே உள்ளன. ஆனால் நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஏற்றப்பட்ட தீபங்கள் ஆவீர்கள். உங்கள் ஒவ்வொருவராலும் உங்களுடைய பிரகாசிக்கின்ற தீபத்தைப் பார்க்க முடிகிறது, அல்லவா? நீங்கள் அழிவற்ற தீபங்கள் ஆவீர்கள்.
எனவே, புது வருடத்திற்கென, உங்களுக்காகவும், உலகிலுள்ள ஆத்மாக்களுக்காகவும் உங்களுடைய இதயத்தில் ஏதாவது புதிய திட்டங்களை நீங்கள் உருவாக்கியுள்ளீர்களா? நள்ளிரவுக்குப் பின்னர், புது வருடம் ஆரம்பமாகும். எனவே, எவ்வாறு நீங்கள் விசேடமாக இவ்வருடத்தைக் கொண்டாடுவீர்கள்? நீங்கள் பழைய வருடத்திற்கு விடை கொடுப்பது போன்றே, உங்களுடைய பழைய எண்ணங்களுக்கும், பழைய சம்ஸ்காரங்களுக்கும் விடை கொடுக்கும் எண்ணத்தை நீங்கள் அனைவரும் கொண்டிருக்கிறீர்களா? பழைய வருடத்துடன் கூடவே, பழைய எண்ணங்களுக்கும் நீங்கள் விடை கொடுத்து, புதிய ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எண்ணங்களை நடைமுறையில் கொண்டுவருவீர்கள், அல்லவா? எனவே, அதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், உங்களில் என்ன புதுமையைக் கொண்டுவருவீர்கள்? எத்தகைய புதிய ஊக்கத்தினதும், உற்சாகத்தினதும் அலையை நீங்கள் பரப்புவீர்கள்? என்ன விசேட எண்ணங்களால் நீங்கள் அதிர்வலைகளைப் பரப்புவீர்கள்? நீங்கள் அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்தீர்களா? முழு உலகிலுமுள்ள ஆத்மாக்களுக்கு, பிராமணர்களாகிய நீங்கள் அனைவருமே மாற்றத்திற்கான கருவிகள் ஆவீர்கள். நீங்களே உலகிற்கான அத்திவாரம், நீங்கள் அவர்களுடைய மூதாதைகளும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களும் ஆவீர்கள். எனவே, இவ்வருடம், உங்களுடைய மேன்மையான மனோநிலை மூலம் என்ன அதிர்வலைகளைப் பரப்புவீர்கள்? இயற்கையால், குளிர்காலம், கோடை காலம் அல்லது வசந்த காலத்தின் அதிர்வலைகளைப் பரப்ப முடிவதைப் போன்று, இயற்கையை வென்றவர்களும், இயற்கையின் அதிபதிகளுமான உங்களால் ஆத்மாக்கள் குறுகிய காலத்திற்கேனும் சந்தோஷத்தையும் சௌகரியத்தையும் அனுபவம் செய்யக்கூடியவாறு என்ன அதிர்வலைகளைப் பரப்புவீர்கள்? இதற்கு, பாப்தாதா உங்களுக்கு சமிக்ஞை கொடுக்கிறார்: நீங்கள் என்ன பொக்கிஷங்களைப் பெற்றிருந்தாலும், அப்பொக்கிஷங்களைத் தகுதியான முறையில் பயன்படுத்தி, வெற்றி சொரூபம் ஆகுங்கள். குறிப்பாக, நேரம் என்ற பொக்கிஷம் வீணாகுவதற்கு அனுமதிக்காதீர்கள். ஒரு விநாடியேனும் வீணாக விடாமல், அதைப் பயன்படுத்துங்கள். நேரத்தைத் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள், ஒவ்வொரு மூச்சையும் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள், ஒவ்வோர் எண்ணத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள், ஒவ்வொரு சக்தியையும் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள், ஒவ்வொரு நற்குணத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள். இவ்வருடத்தை ‘வெற்றி சொரூபம் ஆகுவதற்கான வருடம்’ ஆகக் கொண்டாடுங்கள். ஏனெனில், வெற்றி உங்கள் பிறப்புரிமையாகும். அப்பிறப்புரிமையைப் பயன்படுத்தி, வெற்றி சொரூபங்கள் ஆகுங்கள். ஏனெனில், தற்போதைய வெற்றியானது பல வருடங்களுக்கு உங்களுடன் நிலைத்திருக்கும். உங்களுடைய தற்போதைய நேரத்தைத் தகுதியான முறையில் பயன்படுத்துவதற்காக உங்களுக்குக் கிடைக்கும் வெகுமதி சதா காலத்திற்குமாகப் பெறப்படும். உங்களுடைய மூச்சைத் தகுதியான முறையில் பயன்படுத்துவதால் - பாருங்கள், உங்களுடைய மூச்சு தகுதியான முறையில் பயன்படுத்தப்படுவதன் விளைவாக, ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் சதா காலத்திற்கும் ஆரோக்கியமாகவே இருப்பீர்கள். அங்கு எந்த நோய்களினதும் குறிப்பே இருக்காது. அங்கு மருத்துவர்களின் இலாகாக்கள் எதுவும் இருக்காது. மருத்துவர்கள் என்னவாக ஆகியிருப்பார்கள்? அவர்கள் அரசர்கள் ஆகியிருப்பார்கள். அவர்கள் உலகின் அதிபதிகள் ஆகியிருப்பார்கள். எவ்வாறாயினும், இந்நேரத்தில், உங்களுடைய மூச்சைத் தகுதியான முறையில் பயன்படுத்துவதால், ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கும் வெகுமதியைப் பெறுவீர்கள். அதேபோன்று, இந்த ஞானப் பொக்கிஷம் தகுதியான முறையில் பயன்படுத்தப்படுவதன் விளைவாக, உங்களுடைய சொந்த இராச்சியத்தில் அனைவரும் மிகவும் விவேகிகளாகவும், சக்திசாலிகளாகவும் ஆகுவார்கள். எந்த ஆலோசகரிடம் இருந்தும் எந்த ஆலோசனையும் பெறவேண்டிய தேவையே இருக்காது. நீங்களே விவேகியாகவும், சக்திசாலியாகவும் இருப்பீர்கள். உங்களுடைய சக்திகள் அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதன் வெகுமதியாக, நீங்கள் இரண்டு விசேட சக்திகளைப் பெறுகிறீர்கள்: தர்மத்தின் அதிகாரம், உங்கள் இராச்சியத்தை ஆளும் அதிகாரம். உங்களுடைய நற்குணங்கள் எனும் பொக்கிஷத்தைத் தகுதியான முறையில் பயன்படுத்தும்போது, அதன் விளைவாகக் கிடைப்பது, தெய்வீகக் குணங்களைக் கொண்ட உங்களுடைய தேவ அந்தஸ்து ஆகும். அத்துடன் கூடவே, இந்த இறுதிப் பிறவியில், அவர்கள் உங்களுடைய உயிரற்ற விக்கிரகங்களைப் பூஜிக்கும்போது, என்ன புகழைப் பாடுகின்றனர்? “நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள்.” எனவே, நீங்கள் இயல்பாகவே உங்களுடைய இந்நேரத்தின் வெற்றிக்கான வெகுமதியைப் பெறுகிறீர்கள். எனவே, சோதியுங்கள்: நீங்கள் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள், நீங்கள் பொக்கிஷங்கள் அனைத்தாலும் நிறைந்துள்ளீர்கள், ஆனால் எந்தளவிற்கு நீங்கள் அவற்றை உங்களுக்காகவும், உலகிற்காகவும் தகுதியான முறையில் பயன்படுத்தி உள்ளீர்கள்? நீங்கள் இப்பழைய வருடத்திற்குப் பிரியாவிடை கொடுப்பீர்கள். எனவே, இப்பழைய வருடத்தில் நீங்கள் சேமித்துள்ள எப்பொக்கிஷங்களை, எந்தளவிற்கு நீங்கள் தகுதியான முறையில் பயன்படுத்தி உள்ளீர்கள்? இதைச் சோதித்து, வரப்போகின்ற வருடத்தில், இப்பொக்கிஷங்களை வீணாக்குவதற்குப் பதிலாக, நீங்கள் நிச்சயமாக இப்பொக்கிஷங்களைத் தகுதியான முறையில் பயன்படுத்த வேண்டும். எந்தப் பொக்கிஷமும் ஒரு விநாடியேனும் வீணாகக்கூடாது. சங்கம யுகத்தின் ஒரு விநாடி என்பது, வெறும் ஒரு விநாடியல்ல, ஆனால் ஒரு வருடத்திற்குச் சமனானது என உங்களுக்கு முன்னர் கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு விநாடியை அல்லது ஒரு நிமிடத்தை மாத்திரமே வீணாக்கினீர்கள் என நினைக்காதீர்கள். எதையும் வீணாகுவதற்கு அனுமதிப்பது கவனயீனம் என அழைக்கப்படுகிறது. உங்கள் அனைவரதும் இலக்கு, தந்தை பிரம்மாவைப் போன்று முழுமையாகவும், சம்பூரணமாகவும் ஆகுவதாகும். எனவே, தந்தை பிரம்மா தனது சகல பொக்கிஷங்களையும் ஆரம்பம் முதல் இறுதி நாள் வரை தகுதியான முறையில் பயன்படுத்தினார். நீங்கள் அதன் நடைமுறை அத்தாட்சியைப் பார்த்தீர்கள், அவர் ஒரு சம்பூரண தேவதை ஆகினார். நீங்கள் உங்களுடைய அன்பான தாதியையும் பார்த்தீர்கள். அவர் அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்தியதுடன், ஏனையோரையும் அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துவதற்குத் தூண்டுவதற்காக, சதா அனைவரதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரித்தார். எனவே, நாடகத்தின்படி, உலக சேவைக்காக அலௌகீகமான ஒரு பாகத்தை நடிப்பதற்கு, ஒரு விசேட கருவி ஆகினார்.
எனவே இவ்வருடம், நாளை முதல் நீங்கள் அனைவரும் தினமும் உங்களுடைய அட்டவணைகளை வைத்திருக்க வேண்டும். எது, எந்தளவிற்கு தகுதிவாய்ந்;த முறையில் பயன்படுத்தப்பட்டது, எந்தளவிற்கு வீணாக்கப்பட்டது? அமிர்தவேளையில், இத்திடசங்கல்ப எண்ணத்தைக் கொண்டிருங்கள், இந்த விழிப்புணர்வின் சொரூபம் ஆகுங்கள்: வெற்றி எனது பிறப்புரிமை. வெற்றி எனது கழுத்துமாலை. ஒரு வெற்றி சொரூபம் ஆகுவதென்றால், சமனாக ஆகுவதாகும். நீங்கள் தந்தை பிரம்மா மீது அன்பு வைத்திருக்கிறீர்கள், அல்லவா? எனவே, தந்தை பிரம்மா எதில் அதிகூடிய அன்பு வைத்திருந்தார்? எதில் அன்பு வைத்திருந்தார் என உங்களுக்குத் தெரியுமா? முரளி. கடைசி நாள்கூட, அவர் முரளி வகுப்பைத் தவறவிடவில்லை. சமனாகுவதில், சோதியுங்கள்: தந்தை பிரம்மா எவற்றின் மீதெல்லாம் அன்பு வைத்திருந்தாரோ… தந்தை பிரம்மா மீது அன்பு வைத்திருப்பதற்கான நிரூபணம் நீங்களும் இலகுவாகவும், இயல்பாகவும் தந்தை அன்பு வைத்திருந்த அனைத்தின் மீதும் அன்பு வைத்திருப்பதாகும். தந்தை பிரம்மாவின் மற்றைய சிறப்பியல்பு என்ன? அவர் சதா விழிப்பாக(அவதானமாக) இருந்தார், அவர் எவ்வித கவனயீனத்தையும் கொண்டிருக்கவில்லை. கடைசி நாள்கூட, அவர் மிகுந்த விழிப்புடன் சேவை செய்யும் தனது பாகத்தை நடித்தார். அவருடைய சரீரம் பலவீனமாக இருந்தபோதிலும், அவர் விழிப்பாக இருந்ததுடன், எந்த ஆதாரத்துடனும் அமரவில்லை, அவர் ஏனைய அனைவரையும்கூட விழிப்பாக இருக்கச் செய்தார். அவர் மூன்று விடயங்களின் மந்திரத்தை உங்களுக்குக் கொடுத்த பின்னரே பிரிந்துசென்றார். இவற்றை நீங்கள் அனைவரும் நினைவு செய்கிறீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் எந்தளவிற்கு விழிப்பாக இருந்து அவரைப் பின்பற்றுகிறீர்களோ, அதற்கேற்ப கவனயீனம் முடிவடையும். பாப்தாதா குறிப்பாக கவனயீனம் பற்றிய வார்த்தைகளைத் தொடர்ந்தும் கேள்விப்படுகிறார். நீங்கள் அவற்றை அறிவீர்கள், அல்லவா? நீங்கள் சதா தொடர்ந்தும் இம்மூன்று வார்த்தைகளையும் (அசரீரியாக இருத்தல், அகங்காரம் அற்றிருத்தல், விகாரம் அற்றிருத்தல்) மீட்டல் செய்து, உங்கள் மனதில் உணர்ந்து கொள்வீர்களாயின் தானாகவே இலகுவாகவும், இயல்பாகவும் சமனாகி விடுவீர்கள். அனைத்திற்கும் முதலில், அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்தி, ஒரு வெற்றி சொரூபம் ஆகுங்கள்.
பாப்தாதா குழந்தைகளின் ஒரு வருடத்திற்கான பெறுபேறைப் பார்த்தார். அவர் என்ன பார்த்தார்? நீங்கள் மகாதானிகள் ஆகியுள்ளீர்கள், ஆனால் இப்பொழுது நீங்கள் முடிவற்ற (நிரந்தரமான) தானிகள் ஆகவேண்டும். ‘முடிவற்ற’ என்ற வார்த்தையைக் கீழ்க்கோடிடுங்கள். இப்பொழுது முடிவற்ற யோகிகளாகவும், தடைகளில் இருந்து முடிவின்றி விடுபட்டவர்களாகவும் இருப்பதற்கான தேவை உள்ளது. உங்களால் ‘முடிவற்ற நிலையில்’ இருக்க முடியுமா? முடியுமா? முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, உங்களால் முடிவற்றவர்கள் ஆகமுடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமாயின், கைகளை உயர்த்துங்கள். அதைச் செய்ய முடியுமானவர்கள், உங்களால் அதைச் செய்ய முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியும். மதுவனவாசிகள்கூட தமது கைகளை உயர்த்துகின்றனர். பாப்தாதா முதலில் மதுவனவாசிகளைப் பார்க்கிறார். அவர் மதுவனத்தில் அன்பு வைத்திருக்கிறார். பாபா சாந்திவான், பாண்டவ பவன் மற்றும் தாதியின் கரங்கள் அனைத்தையும் (மதுவனத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்கள்) சேர்ந்த அனைவரையும் மிகுந்த கவனத்துடன் பார்க்கிறார். நீங்கள் முடிவற்றவர்கள் ஆகியிருந்தால், உங்கள் மனதால் சக்தியைப் பரப்புவதில் மும்முரமாக இருங்கள். இந்த ஞானத்தைக் கொண்டு வார்த்தைகளால் சேவை செய்யுங்கள், நற்குணங்களைத் தானம் செய்வதன் மூலமும், நற்குணங்களின் ஒத்துழைப்பைக் கொடுப்பதன் மூலமும் செயல்களால் சேவை செய்யுங்கள்.
இன்றைய நாட்களில், இந்த ஞானத்தைக் கொண்டிராத ஆத்மாக்களோ அல்லது பிராமண ஆத்மாக்களோ, அவர்களுக்கு நற்குணங்களின் தானத்தை அல்லது நற்குணங்களின் ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். நீங்களே ஓர் எளிமையான(சிம்பிள்) முறையில் இலகுவாக ஒரு மாதிரி (சாம்பிள்) ஆகினால், நீங்கள் நற்குணங்களின் சொரூபமாக இருப்பதன் மூலம், மற்றவர்களும் இயல்பாகவே அந்த ஒத்துழைப்பைப் பெறுவார்கள். இன்றைய நாட்களில் பிராமண ஆத்மாக்களும்கூட ஒரு மாதிரியையே பார்க்க விரும்புகின்றனர், அவர்கள் இனி எதையும் கேட்க விரும்பவில்லை. உங்கள் மத்தியில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? யார் அவ்வாறு ஆகியிருக்கிறீர்கள்? எனவே, ஒவ்வொருவரும் மற்றவர்களை நடைமுறையில் நற்குணங்களின் சொரூபங்களாகவே பார்க்க விரும்புகின்றனர். எனவே, உங்களுடைய செயல்களினூடாக குறிப்பாக நற்குணங்களின் ஒத்துழைப்பை அல்லது நற்குணங்களின் தானத்தை வழங்க வேண்டிய தேவை உள்ளது. எவரும் இனி கேட்க விரும்பவில்லை, அனைவரும் பார்க்கவே விரும்புகின்றனர். எனவே, இப்பொழுது குறிப்பாக இதில் கவனம் செலுத்துங்கள்: நான் இந்த ஞானத்தைக் கொண்டு, தொடர்ந்தும் வார்த்தைகள் மூலமாக மற்றவர்களுக்குச் சேவை செய்வேன், நான் தொடர்ந்தும் அதைச் செய்யவேண்டும். நான் அதைச் செய்வதை நிறுத்தக்கூடாது. ஆனால் எனது எண்ணங்களாலும், செயல்களாலும் இப்பொழுது இந்த அதிர்வலைகளை நான் எனது மனதால் பரப்பவேண்டும். இந்தக் கரண்ட்டைப் பரப்புங்கள். அதிர்வுகளாலோ அல்லது கரண்டினாலோ ஒருவர் தொலைவில் அமர்ந்திருந்தாலும் அவரைச் சென்றடைய முடியும். உங்களுடைய நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளாலும், உங்கள் மனதால் சேவை செய்வதாலும், உங்களால் எந்தவோர் ஆத்மாவிற்கும் அதிர்வலைகளையோ அல்லது கரண்டையோ வழங்க முடியும். எனவே, இவ்வருடம், முதலில், உங்களுடைய மனதின் சக்தியின் அதிர்வலைகளையும், உங்கள் சக்திகளால் கரண்டையும், உங்கள் செயல்களால் நற்குணங்களின் ஒத்துழைப்பையும் தானம் செய்யுங்கள். இந்த ஞானத்தைக் கொண்டிராதவர்களுக்கு நற்குணங்களைத் தானம் செய்யுங்கள்.
நீங்கள் புதுவருடத்திற்குப் பரிசுகள் கொடுக்கிறீர்கள்தானே? எனவே, இந்த வருடம், நீங்களே நற்குணங்களின் சொரூபங்களாகி, நற்குணங்களின் பரிசை வழங்குங்கள். நீங்கள் அவர்களுக்கு நற்குணங்களின் தோளியைப் பரிமாறுகிறீர்கள்தானே? நீங்கள் அவர்களைச் சந்திக்கும்போது, அவர்களுக்குத் தோளி வழங்குகிறீர்கள், அல்லவா? அவர்களுக்குத் தோளி கொடுக்கும்போது அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள், அல்லவா? பாபாவை விட்டுச் சென்ற ஆத்மாக்களும் தோளியை நினைக்கிறார்கள். அவர்கள் ஏனைய அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். ஆனால், அவர்கள் தோளியை நினைவு செய்கிறார்கள். எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன தோளியைக் கொடுப்பீர்கள்? நற்குணங்களின் தோளியை அவர்களுக்குப் பரிமாறுங்கள். நற்குணங்களின் பிக்னிக்கைச் செய்யுங்கள். ஏனென்றால், காலம் நெருங்கி வருவதற்கேற்ப, தாதியின் சமிக்கைகளுக்கேற்ப, இது தந்தையின் சமிக்கைகளுக்கும் சாத்தியமாகும், காலம் எந்த நேரத்திலும் சடுதியாக நிறைவு பெறக்கூடும். இதனாலேயே, நீங்கள் தந்தைக்குச் சமமானவராகி, தாதியின் அன்பின் பிரதிபலனை வழங்க வேண்டும். எனவே, உங்களின் எண்ணங்களாலும் செயல்களாலும் ஒத்துழைக்க வேண்டிய தேவை எதுவாக இருந்தாலும், மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றோ, அல்லது, ‘அவர் அப்படி ஆகும்போது, நானும் அப்படி ஆகுவேன்’ என்றோ நினைக்காதீர்கள். நீங்கள் முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும். ஆகவே, ‘அவர் அப்படி ஆகும்போது நான் அப்படி ஆகுவேன்’ என்று நினைக்காதீர்கள். அப்படி ஆகினால், அவர் முதலாம் இலக்கத்தவராகவும் நீங்கள் இரண்டாம் இலக்கத்தவராகவும் ஆகுவீர்கள். நீங்கள் இரண்டாம் இலக்கத்தவர் ஆக விரும்புகிறீர்களா அல்லது முதலாம் இலக்கத்தவர் ஆக விரும்புகிறீர்களா? மற்றவர்களிடம் இரண்டாம் இலக்கத்தைக் கோரும்படி நீங்கள் சொன்னால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் எல்லோருமே தாம் முதலாம் இலக்கத்தைக் கோர விரும்புவதாகவே சொல்வார்கள். எனவே, எல்லாவற்றுக்கும் முதலில், ஒரு கருவி ஆகுங்கள். மற்றவர்கள் கருவிகள் ஆகுவதற்காக நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள்? உங்களை ஒரு கருவி ஆக்குங்கள். தந்தை பிரம்மா என்ன கூறினார்? ஒவ்வொரு விடயத்திலும், அவர் தன்னை ஒரு கருவியாக்கி, பின்னர் மற்றவர்களையும் கருவிகள் ஆக்கினார். அவர் ‘ஓ அர்ச்சுனா’ (நான் முதலடியை எடுத்து வைக்க வேண்டும்) என்ற தனது பாகத்தை நடித்தார். நான் ஒரு கருவி ஆகவேண்டும். நான் இதைச் செய்ய வேண்டும். நான் அதைச் செய்வதைப் பார்க்கும்போது, மற்றவர்களும் அதையே செய்வார்கள். மற்றவர்கள் அதைச் செய்வதை நான் பார்க்கும்போது, நான் அதைச் செய்வேன் என்பதாக இருக்கக்கூடாது. நான் அதைச் செய்வதை மற்றவர்கள் பார்க்கும்போது அவர்களும் அதைச் செய்வார்கள். இதுவே தந்தை பிரம்மாவின் முதல் பாடமாக இருந்தது. எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? வெற்றி சொரூபம் ஆகுங்கள். எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தும் வெற்றி சொரூபமாக, ஒரு முடிவற்ற தானியாக ஆகுங்கள். அதன்பின்னர் மாயைக்கு உங்களிடம் வருவதற்கான தைரியம் இருக்காது. நீங்கள் முடிவற்ற, மகாதானிகள் ஆகும்போது, நீங்கள் சதா சேவையாளர்கள் ஆகும்போது, நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, உங்களின் மனங்களும் புத்திகளும் சேவையாளர்கள் ஆகும்போது, மாயை எங்கே செல்வாள்? எனவே, நீங்கள் இந்த வருடம் என்னவாகப் போகின்றீர்கள்? உங்கள் எல்லோருடைய இதயங்களில் இருந்தும் ஒரே ஒலி வெளிப்பட வேண்டும். இதையே பாப்தாதா விரும்புகிறார். அது என்ன ஒலி? பிரச்சனை எதுவும் இல்லை, சம்பூரணம். பிரச்சனைகள் எவையும் இல்லை. ஆனால் நீங்கள் சம்பூரணம் ஆகவேண்டும். நீங்கள் வெற்றி மாலையில் நெருக்கமான மணி ஆகவேண்டும் என்ற திடசங்கற்பமான நம்பிக்கையை உங்களின் புத்திகளில் வைத்திருங்கள். இது சரிதானே? நீங்கள் அப்படி ஆகவேண்டும், அல்லவா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களே, நீங்கள் அப்படி ஆகவேண்டும், அல்லவா? எந்தப் பிரச்சனையும் இல்லை? எந்தவொரு முறைப்பாடும் இல்லை? இந்த தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆஹா! வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
பாருங்கள், நம்பிக்கையின் நடைமுறை அத்தாட்சி, ஆன்மீக போதையே ஆகும். ஆன்மீக போதை இல்லாவிட்டால், அங்கு நம்பிக்கையும் இருக்காது. அதன் அர்த்தம் என்னவென்றால், முழுமையான நம்பிக்கை இருக்காது, சிறிதளவு நம்பிக்கை மட்டுமே இருக்கும். எனவே, போதையைக் கொண்டிருங்கள். இது என்ன பெரிய விடயம்? எத்தனை சக்கரங்கள் நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகினீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் அவ்வாறு எண்ணற்ற தடவைகள் ஆகியுள்ளீர்கள். எனவே, இந்த போதையைக் கொண்டிருங்கள்: நான் அப்படி ஆகினேன், நான் அப்படி இருக்கிறேன், நான் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அப்படி ஆகுவேன். இந்த போதை சதா உங்களின் செயல்களில் புலப்பட வேண்டும். உங்களின் எண்ணங்களில் அல்ல, உங்களின் வார்த்தைகளில் அல்ல, ஆனால் உங்களின் செயல்களில் புலப்பட வேண்டும். செயல்கள் என்றால், உங்களின் நடத்தையிலும் உங்களின் முகத்திலும் அது புலப்படும். எனவே, நீங்கள் உங்களின் வீட்டுவேலையைப் பெற்று விட்டீர்கள், அல்லவா? நீங்கள் பெற்றுவீட்டீர்கள்தானே? இப்போது, நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்களா அல்லது முதலாம் இலக்கத்தைக் கோருகிறீர்களா எனப் பார்ப்போம். அச்சா.
பாப்தாதா பல வாழ்த்து மடல்களையும் கடிதங்களையும் ஈமெயில்களையும் கணணியின் ஊடாக அன்பையும் நினைவுகளையும் பெற்றுள்ளார். பாப்தாதா ஒவ்வொருவரையும் தனக்கு முன்னால் வரவழைத்து, தொலைவில் இருந்தாலும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பெயருக்கும் சிறப்பியல்புக்கும் ஏற்ப, தனது இதயபூர்வமாக அன்பையும் நினைவுகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார். உங்கள் எல்லோரிடமும் அன்பு இருப்பதை பாப்தாதா அறிவார். குறிப்பாக அமிர்த வேளையில், பிராமண ஆத்மாக்களான உங்களின் அன்பிற்கும் நினைவிற்கும் ஏற்ப பாப்தாதா விசேடமாக உங்களுக்குப் பதில் அளிக்கிறார். இதனாலேயே, நீங்கள் பல நல்ல வாழ்த்து மடல்களைச் செய்துள்ளீர்கள். நீங்கள் இந்த வாழ்த்து மடல்களை மேடையில் இங்கே வைத்துள்ளீர்கள். ஆனால் அவை முன்னரே சூட்சும வதனத்திற்கு பாப்தாதாவை வந்தடைந்து விட்டன. அச்சா.
ஜொலிக்கும் ஒளிகளான ஆத்மாக்களான எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் எப்போதும் எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதுடன் வெற்றி சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளுக்கும் முடிவற்ற, மகாதானிகளாகவும் முடிவற்ற முறையில் தடைகளில் இருந்து விடுபட்டு இருப்பவர்களுக்கும் இந்த ஞானத்தில் முடிவற்றவர்களாக இருப்பதுடன் யோகியுக்தாக இருப்பவர்களுக்கும் தமது மனங்களின் சூழலினூடாகச் சேவை செய்வதன் மூலமும் வார்த்தைகளின் மூலம் சேவை செய்வதன் மூலமும் தமது நடத்தை மற்றும் முகங்களினூடாகச் செயல்களின் மூலம் சேவை செய்வதன் மூலமும் ஒரே வேளையில் மூன்று வகையான சேவை செய்பவர்களுக்கும். ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளும் இடம்பெறும்போது, இது நல்லது எனக் கூறுபவர்களில் நீங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்த மாட்டீர்கள், ஆனால் நல்லவர்கள் ஆகப் போகின்றவர்களில் அதை ஏற்படுத்துவீர்கள். அனுபவ ரூபங்களாக இருந்து, மற்றவர்களுக்கும் அனுபவத்தை வழங்கும் குழந்தைகள் எல்லோருக்கும் புது வருடத்திற்காக பாப்தாதாவிடம் இருந்து பல, பல மில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள். ஆசீர்வாதங்களும் இதய சிம்மாசனமும் உங்களை சதா இதயத்தில் அமரச் செய்துள்ளன. ஆகவே, தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் இருந்தாலென்ன அல்லது தொலைவில் இருந்தாலும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலென்ன, எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் உங்களின் பெயர் மற்றும் உங்களின் சிறப்பியல்பால் உங்கள் எல்லோருக்கும் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள். உங்களின் கைகளை அசையுங்கள்! பாருங்கள், வகுப்பில் அரைவாசியினர் முதல் தடவை வந்துள்ளார்கள். பின்னால் இருப்பவர்கள், உங்களின் கைகளை அசையுங்கள்! இது தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. உங்களில் பலர் இருக்கின்றீர்கள். முதல் தடவை வந்திருப்பவர்களுக்கு பாப்தாதாவின் இதயபூர்வமான அதிக, அதிக வாழ்த்துக்கள். அத்துடன் தயவுசெய்து இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வந்திருப்பதைப் போல், இப்போது வந்திருப்பவர்களுக்கு பாப்தாதாவிடம் இருந்து இந்த ஆசீர்வாதம் உள்ளது: நீங்கள் அமரராக இருப்பீர்களாக!
ஆசீர்வாதம்:
உங்களை இகழ்பவர்களுக்கும் நற்குணங்களின் மாலையை அணிவித்து, ஒரு விசேடமான தேவராகவும் மகாத்மாகவும் ஆகுவீர்களாக.தற்காலத்தில், விசேடமானதோர் ஆத்மாவை வரவேற்பதற்காக, அவரின் கழுத்தில் பௌதீகமாக ஒரு மாலை அணிவிக்கப்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக, அவர் அதை எடுத்துத் தனக்கு மாலை அணிவித்த அந்த நபரிற்கு அதை அணிவிப்பார். அதேபோல், உங்களை இகழ்கின்ற எவருக்கும் நற்குணங்களின் மாலையை அணிவியுங்கள். அப்போது அந்த நபர் இயல்பாகவே உங்களுக்கு அந்த நற்குணங்களின் மாலையைத் திருப்பித் தருவார். உங்களை அவமதிக்கின்ற ஒருவருக்கு நற்குணங்களின் மாலையை அணிவிப்பது என்றால், அவர் பிறவி பிறவியாக உங்களுக்கு ஒரு பக்தர் ஆகுவார் என்பதற்கு உத்தரவாதம் உள்ளது. இவ்வாறு கொடுப்பது, உண்மையில் பல மடங்காகப் பெறுவதாகும். இந்தச் சிறப்பியல்பானது உங்களை ஒரு விசேட தேவராகவும் ஒரு மகாத்மா ஆகவும் ஆக்கும்.
சுலோகம்:
உங்களின் மனதின் மனோபாவத்தை சதா சக்திவாய்ந்தது ஆக்குங்கள், பிழையாகப் போன எதுவும் நல்லதாக ஆகும்.அவ்யக்த சமிக்கை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேகி).
செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு இடையே எவ்வளவுதான் இழுபறி நிலை ஏற்பட்டாலும், உங்களின் புத்தியானது சேவை செய்வதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும் அத்தகைய வேளையில் சரீரமற்றவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உண்மையான சேவையால் ஒருபோதும் ஒரு பந்தனம் ஆக முடியாது. ஏனென்றால், சேவை செய்யும்போது, ஒரு யோகியுக்த் மற்றும் யுக்தியுக்த் சேவையாளர் சதா அப்பால் இருப்பார். செய்வதற்கு அதிகளவு சேவை இருப்பதனால் உங்களால் சரீரமற்ற நிலைக்கு வரமுடியாமல் போவதாக இருக்கக்கூடாது. அது உங்களின் சேவை அல்ல, ஆனால் தந்தை அதை உங்களிடம் செய்வதற்காக வழங்கி இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருங்கள். அப்போது நீங்கள் எந்தவிதமான பந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருப்பீர்கள்.