24.04.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆகவே சரீர உணர்வினை மறந்து விடுங்கள், உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மா எனக் கருதி, எவரிலாவது நீங்கள் கொண்டிருக்கும் பற்றினை அகற்றுங்கள்.
கேள்வி:
சங்கமயுகத்திலே தந்தையிடம் இருந்து குழந்தைகளாகிய நீங்கள் எந்த விவேகத்தைக் கற்கின்றீர்கள்?பதில்:
எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவது என்றும், எவ்வாறு உங்கள் பாக்கியத்தை மேன்மையாக ஆக்குவது என்ற விவேகத்தையும் இப்பொழுது மாத்திரமே நீங்கள் கற்றுக் கொள்கின்றீர்கள். எவ்வளவிற்கு நீங்கள் மிகச்சரியாக யோகத்தில் இணைந்திருப்பவராகவும், ஞானம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றீர்களோ, அதற்கேற்ப நீங்கள் தொடர்ந்தும் முன்னேற்றத்தை அனுபவம் செய்வீர்கள். முன்னேறிச் செல்லும் குழந்தைகளால் ஒருபொழுதும் மறைந்திருக்க முடியாது. குழந்தைகளின் ஒவ்வொரு செயற்பாட்டில் இருந்தும் எந்தக் குழந்தை தனது பாக்கியத்தை மேன்மையானதாக ஆக்குகின்றார் என்பதைத் தந்தையால் புரிந்துகொள்ள முடியும்.பாடல்:
உங்கள் பாதையிலே வாழ்ந்து உங்கள் பாதையிலேயே மடிவோம்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இந்தப் பாடலைச் செவிமடுத்தீர்கள். பாபா “குழந்தைகள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். பிராமணர்களான எங்களையே பாபா குறிப்பிடுகின்றார் என்பதை அனைத்து நிலையத்திலும் இருக்கும் குழந்தைகளும் புரிந்து கொள்கிறார்கள். அத்துடன், “உயிருடன் இருக்கும் பொழுதே கழுத்து மாலை ஆகுவதற்கு, அசரீரி உலகிற்குச் சென்று பாபாவின் வீட்டில் இருங்கள்” என்பதையும் பாடலில் கேட்டார்கள். அதுவே சாலிகிராம்கள் அனைவரும் வாழும் சிவபாபாவின் வீடாகும். பிராமணக் குல அலங்காரங்களான, சுயதரிசனச் சக்கரதாரிகளாகிய, குழந்தைகளாகிய நீங்கள் உண்மையில் அதே பாபாவே வந்துள்ளார் என்பதை அறிவீர்கள். அவர் கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது சரீரம் அற்றவர்களாக வேண்டும், அதாவது, நீங்கள் உங்கள் சரீர உணர்வினை மறந்து விடவேண்டும். இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. இவ்வுலகம் அழிக்கப்பட உள்ளதால், இச்சரீரங்கள் துறக்கப்பட வேண்டும், அதாவது, அனைவரும் நீங்கிச் செல்ல வேண்டும். நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இப்பொழுது சந்தோஷமாக இருக்கின்றீர்கள், ஏனெனில் நீங்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் பொருட்டு, அரைக்கல்பமாக, பெருமளவு தடுமாறித் திரிந்தீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான பாதையை ஒருபொழுதும் கண்டறியவில்லை. பதிலாக, பக்தி மார்க்கத்தின் பகட்டினைக் கண்டபொழுது, நீங்கள் அதில் சிக்கிக் கொண்டீர்கள். பக்தி மார்க்கம் என்பது ஒரு புதைகுழி, மனிதர்கள் அதில் கழுத்துவரை சிக்கி இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் இந்தப் பழைய உலகினையும், இந்தப் பழைய சரீரங்களையும் மறக்கின்றோம். நாங்கள் இப்பொழுது சரீரமற்றவர்களாகி, உங்களுடன் வீட்டிற்குச் செல்வோம். பரமாத்மா, பரமதந்தையே பரந்தாமத்தில் இருந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார் என்பது உங்கள் அனைவரது புத்தியிலும் இருக்கின்றது. அவர் கூறுகின்றார்: தூய்மையானவர்களாகி, என்னை நினைவு செய்யுங்கள்! மரணித்து வாழுங்கள்! ஆத்மாக்கள் அங்கு அந்த வீட்டிலேயே வசிக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஓர் ஆத்மா ஒரு புள்ளி வடிவானவரே. ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகிற்குச் செல்வார்கள். இங்கே மனிதர்கள் இருக்கும் அளவே, அங்கிருக்கும் ஆத்மாக்களின் எண்ணிக்கையும் இருக்கும். ஆத்மாக்கள் மகா தத்துவத்தில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொள்கின்றார்கள்? ஆனால் பெரியதாக இருக்கும் சரீரங்கள் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொள்கின்றன? ஓர் ஆத்மாவிற்கு எவ்வளவு இடம் தேவை? ஆத்மாக்களாகிய நாங்கள் எவ்வளவு சிறியதோர் இடத்தை எடுத்துக் கொள்வோம்? ஒரு மிகச்சிறிய இடத்தையே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்களைத் தந்தையிடம் இருந்து செவிமடுக்கின்ற பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் சரீரம் அற்றவர்களாக வந்து, உங்கள் சரீரங்களை எடுத்து, உங்கள் பாகங்களை நடித்தீர்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது மரணித்து வாழ்ந்து, அனைவரையும் மறந்து விடவேண்டும். தந்தை வந்து எவ்வாறு மரணிப்பது என உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: உங்கள் தந்தையையும், உங்கள் வீட்டையும் நினைவு செய்யுங்கள்! பெருமளவு முயற்சி செய்யுங்கள்! யோகத்தில் இருப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர், தமோபிரதானில் இருந்து, ஆத்மாக்களான நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இதனாலேயே தந்தை இப்பொழுது உங்களுக்கு ஆலோசனை கூறுவதுடன், உங்களுக்கு முன்னைய கல்பத்திலும் கூறியிருக்கின்றார்: உங்கள் சொந்தச் சரீரங்கள் உட்பட, சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவரே அனைவரதும் தந்தை. நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள். நீங்கள் தொடர்ந்தும் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் சிவனின் குழந்தைகளே. அனைவரும் தாம் கடவுளின் குழந்தைகள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும், கடவுளின் பெயர், வடிவம், காலம் மற்றும் இடத்தை மறந்ததால் எவருமே கடவுளில் அத்தகைய அன்பைக் கொண்டிருப்பதில்லை. எவரையுமே குற்றம் சுமத்த முடியாது; இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆத்மாக்கள் அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளிகள், ஆத்மாக்களாகிய உங்களில் 84 பிறவிக்கான பாகங்கள் பதியப்பட்டுள்ளன. ஓர் ஆத்மா எவ்வாறு ஒரு சரீரத்தை எடுத்து, தனது பாகத்தை நடிக்கின்றார் என்பது ஓர் அற்புதமாகும். உங்களுக்கு இப்பொழுது இந்த எல்லையற்ற பாகத்தைத் தெரியும். வேறு எவருமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. நீங்களும் சரீர உணர்வு உடையவர்களாகவே இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு மாறுகின்றீர்கள் என்பது ஒவ்வொருவரினதும் பாக்கியத்தில் தங்கியுள்ளது. நீங்கள் இப்பொழுது உங்கள் முன்னைய கல்பத்தின் பாக்கியத்தைப் பற்றிய காட்சிகளைக் காண்கின்றீர்கள். உலகில் பல மனிதர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தத்தமது சொந்தப் பாக்கியத்தைக் கொண்டிருக்கின்றார்கள். பின்னர், ஒவ்வொருவரும் செய்துள்ள செயல்களுக்கேற்ப, அவனோ அல்லது அவளோ சந்தோஷமானவராகவும், சந்தோஷம் அற்றவராகவும், செல்வந்தராகவும், ஏழையாகவும் ஆகுகின்றார். ஆத்மாக்களே இவ்வாறு ஆகுகிறார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆத்மாக்கள் எவ்வாறு சந்தோஷமானவர்களாகி, பின்னர் துன்பத்திற்குள் செல்கின்றார்கள் என்பதை விளங்கப்படுத்துகிறார். சென்ற கல்பத்தில் செய்ததைப் போலவே, மிகச்சரியாக, எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவது என்னும் விவேகத்தைத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்கிறார். அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு விவேகத்தைப் பெற்றீர்களோ, இப்பொழுதும் அந்தளவு விவேகத்தையே பெறுகின்றீர்கள். இறுதியில் ஒவ்வொருவருடைய பாக்கியத்தையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதுவே ஒவ்வொரு சக்கரத்திலும் ஒவ்வொருவரினதும் பாக்கியம் எனக் கூறப்படும். யோகத்தில் மிக நன்றாக இணைந்திருப்பவர்களும், ஞானம் நிறைந்தவர்கள் ஆவார்கள், அத்துடன் தொடர்ந்தும் சேவையைச் செய்வார்கள். கற்பதால், நீங்கள் சதா முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். சில குழந்தைகள் விரைவாக முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள், ஏனையோர் தலையிடியைக் கொடுக்கின்றார்கள். இங்கும் அவ்வாறே. நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சக்கரத்திலும் செய்கின்ற முயற்சியானது மறைந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் சிவபாபாவுடன் உள்ள தொடர்பைத் தந்தைக்குத் தெரியும். குழந்தைகளின் செயற்பாடுகளைப் பார்ப்பதினால் இவரும் அனைத்தையும் புரிந்து கொள்கின்றார். அவரும் அனைத்தையும் பார்க்கின்றார். நீங்கள் இவரிடமிருந்து ஏதாவது ஒன்றை மறைக்கலாம், ஆனால் உங்களால் சிவபாபாவிடம் இருந்து எதனையும் மறைக்க முடியாது. பக்தி மார்க்கத்திலும் கூட கடவுளிடம் இருந்து எதனையுமே எவராலும் மறைக்க முடியாது. ஆகவே, இந்த ஞான மார்க்கத்தில் எவ்வாறு ஏதாவது அவரிடம் இருந்து மறைக்கப்பட முடியும்? இந்தக் கல்வியானது மிகவும் இலகுவானது எனத் தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். செயல்கள் செய்யப்பட வேண்டும். உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பழைய உலகில் வாழ்ந்த வண்ணமே முயற்சி செய்யுங்கள். வீட்டில் இருந்து அத்தகைய ஆழமான அன்பைக் கொண்டிருந்து முயற்சி செய்பவர்கள், இங்கிருந்து முயற்சி செய்பவர்களையும் விட வேகமாக முன்னணியில் செல்ல முடியும். சமயநூல்களிலே அருச்சுனனதும் ஏகலைவனினதும் உதாரணம் இருக்கின்றது. ஏகலைவன் வெளியில் வாழ்ந்த பொழுதிலும், பயிற்சி செய்ததனால் அவர் அருச்சுனனை விடவும் அம்பு எய்துவதில் மேலும் திறமைசாலி ஆகினார். ஆகவே, உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும் பொழுது, ஒரு தாமரையைப் போல் ஆகுங்கள். உங்களால் உதாரணங்களைப் பார்க்க முடியும். வீட்டில் வசிக்கும் பொழுதும் உங்களால் மிக நல்ல சேவையைச் செய்ய முடியும். நீங்கள் தொடர்ந்தும் பெருமளவு முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். இங்கிருப்பவர்களை மாயை விட்டு விடுவதில்லை; பாபாவிடம் வந்துவிட்டால் அவர்கள் மாயையில் இருந்து விடுபட்டவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதல்ல. இல்லை, நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த முயற்சியைச் செய்ய வேண்டும். வீட்டில் தமது குடும்பத்தவர்களுடன் வாழ்பவர்களால், இங்கு வாழ்பவர்களை விடவும் சிறந்த முயற்சியைச் செய்ய முடியும். அவர்களால் மிக நல்ல தைரியத்தைக் காட்ட முடியும். வீட்டில் வாழ்ந்தும் தாமரையைப் போல் ஆகுபவர்களே மகாவீரர்கள் எனப்படுகின்றார்கள். சிலர் கூறுகின்றார்கள்: பாபா, நீங்கள் அனைத்தையும் துறந்து விட்டீர்கள். பாபா கூறுகின்றார்: நான் எதையும் துறக்கவில்லை. அவர்கள் என்னை விட்டுச் சென்று விட்டார்கள். பாபா எவரையும் நீக்கி விட்டு இங்கு வரவில்லை. பதிலாக அவருடன் இருப்பதற்கு மேலும் அதிகக் குழந்தைகள் வந்தார்கள். பாபா குமாரிகளுக்குக் கூறுகின்றார்: இந்த இறை சேவையைச் செய்யுங்கள். இவரும் பாபா, அவரும் பாபாவே. பல குமாரர்களும் வந்தார்கள், ஆனால் அவர்களால் தொடர்ந்தும் இருக்க முடியவில்லை. அதனை விடவும் குமாரிகள் மேலானவர்கள். ஒரு குமாரியானவர் 100 பிராமணர்களை விடவும் மகத்தானவர் எனக் கருதப்படுகின்றார். குமாரி ஒருவர் 21 சந்ததிகளை ஈடேற்றி, இந்த ஞான அம்புகளை எய்பவரும் ஆவார். வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வாழ்பவர்களும் பிரம்மா குமாரர்கள், குமாரிகளே. அவர்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, அவர்களின் பந்தனங்களும் முடிவடையும். சேவை செய்யப்பட வேண்டும். சேவை செய்யும் குழந்தைகள் பாப்தாதாவின் இதயத்தில் அமர்கின்றனர். அவர்கள் ஆயிரக் கணக்கானோருக்கு நன்மை அளிக்கின்றார்கள். அத்தகைய சேவாதாரிக் குழந்தைகள் மீது ஆசீர்வாதங்கள் தொடர்ந்தும் பொழியப்படுகின்றன. அவர்கள் இதயத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். இதயத்தில் அமர்ந்திருப்பவர்களே சிம்மாசனத்தில் அமருவார்கள். பாபா கூறுகின்றார்: தொடர்ந்தும் உங்கள் மத்தியில் சந்திப்புக்களை நடாத்தி, அனைவருக்கும் இப்பாதையைக் காட்டுவதற்கான வழிமுறையை உருவாக்குங்கள். படங்களும் தொடர்ந்தும் உருவாக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நடைமுறை விடயங்கள். பரமாத்மா பரமதந்தை, அசரீரியானவர் என்பதை நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்துகிறீர்கள். அவரும் ஒரு புள்ளியே, ஆனால் அவரே ஞானம் நிறைந்தவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். ஓர் ஆத்மா ஒரு புள்ளியே. குழந்தை ஒருவர் சிறியவரே. ஒரு குழந்தைக்கும், ஒரு தந்தைக்கும் இடையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்நாட்களில் 15 அல்லது 16 வயதுக் குழந்தைகளும் தந்தையர் ஆகுகின்றார்கள். இருப்பினும் அவர்களது குழந்தைகள் அவர்களை விடவும் இளமையாகவே இருப்பார்கள். இங்கிருக்கும் அற்புதத்தைப் பாருங்கள்: தந்தையும் ஆத்மா, குழந்தைகளும் ஆத்மாக்களே. அவரே பரமாத்மாவும், ஞானம் நிறைந்தவரும் ஆவார். ஏனைய அனைவரும் தாம் கற்றுக் கொள்ளும் அளவிற்கேற்ப ஓர் உயர்ந்த அல்லது ஒரு தாழ்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். அனைத்தும் கற்பதிலேயே தங்கியிருக்கின்றது. சிறந்த செயல்களைச் செய்வதனால், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சுவர்க்கத்தில் பாரதம் மாத்திரமே இருந்தது; வேறு எந்தத் தேசங்களும் இருக்கவில்லை. ஆகவே, உங்கள் சுவர்க்கத்தை ஒரு சிறிய, புதிய இந்தியாவிலே காட்டுங்கள். அவ்வாறே, நீங்கள் “துவாரகை” என எழுதக்கூடாது, ஆனால் “இலக்ஷ்மி நாராயணனின் வம்சத்து இராச்சியம்” என எழுதுங்கள். சத்தியயுகத்தில், முதலில் தேவ வம்சத்தின் இராச்சியம் இருக்கும் என்று புத்தியும் கூறுகின்றது. அங்கே அவர்களின் கிராமங்களும், சிறிய மாநிலங்களும் இருக்கும். இதுவும் கடையப்பட வேண்டும். இத்துடன் கூடவே, உங்கள் புத்தியின் யோகத்தைச் சிவபாபாவுடன் தொடர்புபடுத்துங்கள். நாங்கள் நினைவைக் கொண்டிருப்பதனால், எங்கள் இராச்சியத்தைப் பெற்றுக் கொள்கின்றோம். துருவானது நினைவின் மூலமே அகற்றப்பட வேண்டும். இதற்கே அனைத்து முயற்சியும் தேவைப்படுகின்றது. சில குழந்தைகளின் புத்தி சதா வெளியே அலைந்து திரிகின்றது. இங்கிருக்கும் பொழுதும், அவர்களால் நினைவில் இருக்க முடியாது; அவர்களின் புத்திகள் வேறு திசைகளில் அலைந்து திரிகின்றன. பக்தி மார்க்கத்திலும் இவ்வாறே உள்ளது. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடும்பொழுது, அவர்களுடைய புத்தி வேறு திசைகளில் செல்கின்றது. தீவிர பக்தியைச் செய்பவர்கள் ஒரு காட்சியைப் பெறுவதற்குப் பெருமளவு முயற்சியைச் செய்கின்றார்கள். அவர்கள் வேறு எவரையுமன்றி ஸ்ரீகிருஷ்ணரை மாத்திரம் நினைவு செய்வதற்கு எவ்வளவோ மணித்தியாலங்கள் அமர்கின்றார்கள். இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. எட்டு மணிகளைக் கொண்ட மாலையும், 16,108 மணிகளைக் கொண்ட மாலையும் இங்கேயே உருவாக்கப்படுகின்றன. அவர்கள் நூறாயிரம் மணிகளைக் கொண்ட மாலையையும் காட்டுகின்றார்கள். எவ்வாறாயினும், இந்த ஞான மார்க்கத்திற்கான மாலையானது மிகவும் பெறுமதி வாய்ந்தது, ஏனெனில் அதற்கே ஆன்மீக முயற்சி தேவைப்படுகின்றது. பக்திமார்க்க மாலையானது மலிவானது. ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து அவர் எவ்வளவு சந்தோஷமாக நடனம் ஆடுகின்றார் என்பதைப் பாருங்கள். இந்த ஞானத்திற்கும், பக்திக்கும் இடையில் பகலிற்கும் இரவிற்குமான வேறுபாடு இருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வதனால், துரு அகற்றப்படும் என அவர்கள் கூறவில்லை. இங்கு, நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அவ்வளவிற்கு அதிகமாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்று விளங்கப்படுத்தப்படுகின்றது. யோகசக்தியின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். வேறு எவருமே என்றுமே அவ்வாறு ஆகலாம் எனக் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் யுத்தம் போன்றவற்றைச் செய்யவில்லை. அப்பொழுது, அவர்கள் எவ்வாறு உலக அதிபதி ஆகினார்கள்? குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் யோகசக்தியின் மூலமே இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், இது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிடின், அவர்கள் அதற்கான முயற்சியைச் செய்வதும் இல்லை; அவர்கள் சேவை செய்யக் கூடியவர்களாக ஆகுவதும் இல்லை. கண்காட்சிகளைத் தயாரிப்பது எவ்வாறு என பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். ஒரு நாளில் குறைந்தபட்சம் 150 முதல் 200 கண்காட்சிகள் வரை இருக்க வேண்டும். அனைத்துக் கிராமங்களுக்கும் சுற்றித் திரியுங்கள். எத்தனை நிலையங்கள் இருக்கின்றனவோ, அத்தனை கண்காட்சிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு கண்காட்சியை வைப்பதனால், விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். உங்களால் அங்கு படங்களை வைக்கக்கூடிய வகையில், நாளுக்கு நாள், நிலையங்கள் தொடர்ந்தும் பெரிதாகும். படங்களைக் கண்டு பிடித்தலும் இருக்க வேண்டும். பாரதத்தின் மிகவும் அழகான மாளிகைகள் போன்றவற்றைக் கொண்ட சுவர்க்கத்தின் படம் ஒன்றை உருவாக்குங்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகத் தொடர்ந்தும் மிகச் சிறந்த படங்கள் உருவாக்கப்படும். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்களால் எங்கும் சுற்றித் திரிந்து, தொடர்ந்தும் சேவையைச் செய்ய முடியும். எவரது பாக்கியம் பிரகாசமாக இருக்கின்றதோ, அவர்கள் வெளிப்படுவார்கள். சில குழந்தைகள் தூய்மையற்ற செயல்களைச் செய்வதனால், தமது கௌரவத்தை இழக்கின்றார்கள், இதனால் அவர்கள் யக்ஞத்தினதும் மதிப்பை இழக்கின்றார்கள். உங்கள் நடத்தைக்கு ஏற்பவே நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். பலருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பவர்களின் பெயர்கள் நினைவு செய்யப்படுகின்றன. நீங்கள் இன்னமும் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவில்லை. சில குழந்தைகள் மிக நன்றாகச் சேவை செய்கின்றார்கள். அத்தகைய குழந்தைகளின் பெயர்களைச் செவிமடுத்த மாத்திரத்திலேயே பாபா மிகவும் களிப்;பு அடைகின்றார். சேவாதாரிக் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது, பாபா மகிழ்ச்சி அடைகின்றார். அவர்கள் தொடர்ந்தும் சேவைக்காக மிகச்சிறந்த முயற்சிகளைச் செய்கின்றார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கானோர் நன்மை அடையும் வகையில், தொடர்ந்தும் பல நிலையங்களையும் திறக்கின்றார்கள். அவற்றின் மூலம் பலரும் தொடர்ந்தும் வெளிப்படுவார்கள். இன்னமும் எவருமே சம்பூரணம் ஆகவில்லை; ஏதாவது ஒரு தவறு தொடர்ந்தும் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. மாயை எவரையுமே விட்டுவிடுவதில்லை. நீங்கள் அதிகளவு சேவை செய்து அதிகளவு முன்னேறிச் செல்லும் பொழுது, கூடுதலாக இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பீர்கள். அதேபோல, அதற்கேற்ப உயர்ந்ததோர் அந்தஸ்தையும் நீங்கள் பெறுவீர்கள். பின்னர் ஒவ்வொரு சக்கரத்திலும் இதுவே உங்கள் அந்தஸ்தாக இருக்கும். சிவபாபாவிடம் இருந்து எவராலும் எதையும் மறைக்க முடியாது. இறுதியில் நீங்கள் அனைவரும், நீங்கள் செய்த செயல்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் மிகவும் கசப்பான கண்ணீர் சிந்தி அழவேண்டி ஏற்படும். இதனாலேயே பாபா தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இறுதியில் தண்டனையைப் பெற்று, வருந்தும் வகையில் அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். எவ்வளவுதான் இதனை விளங்கப்படுத்தினாலும், இது ஒருவரது பாக்கியத்தில் இல்லாவிடின், அவர் முயற்சியைச் செய்வதில்லை. இந்நாட்களில் மக்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள், ஆனால் அவர்களுக்கு அவரைத் தெரியாது. அவர்கள் அவர் கூறுவதைச் செவிமடுப்பதுவும் இல்லை. நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து ஒரு விநாடியில் சத்தியயுக இராச்சிய ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அனைவரும் சிவபாபாவின் பெயரை விரும்புகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்களே எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் நடத்தையின் மூலம் தந்தையினதும், யக்ஞத்தினதும் பெயரைப் புகழடையச் செய்யுங்கள். தந்தையின் கௌரவம் இழக்கப்படும் வகையில் அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். சேவை செய்வதால், உங்கள் சொந்தப் பாக்கியத்தை உருவாக்குங்கள்.2. தந்தையைப் போல் உபகாரியாகி, அனைவரதும் ஆசீர்வாதங்களைப் பெற்று, ஒரு முன்னணி இலக்கத்தைக் கோருங்கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசித்து, ஒரு தாமரையைப் போல் வாழ்வதனால், தைரியசாலிகளாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் சதோபிரதான் ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் இரட்டை அகிம்சாவாதியாகி, சதா சந்தோஷத்தையும் அமைதியையும் அனுபவம் செய்வீர்களாக.உங்களின் சதோபிரதான் சம்ஸ்காரங்களால் சதா ஸ்திரமாக இருந்து, அமைதியையும் சந்தோஷத்தை அனுபவம் செய்வதே உண்மையான அகிம்சை ஆகும். ஹிம்சை என்றால், நீங்கள் துன்பத்தை அல்லது அமைதி இன்மையை அனுபவம் செய்யக்கூடிய ஏதாவதொரு வழிமுறை ஆகும். எனவே, சோதித்துப் பாருங்கள்: 1) நாள் முழுவதும், நான் ஏதாவது வகையான வன்முறையில் ஈடுபட்டேனா? நீங்கள் யாராவது ஒருவரின் ஸ்திதியை உங்களின் வார்த்தைகளால் தளம்பல் அடையச் செய்தால், அதுவும் வன்முறையே ஆகும். 2) நீங்கள் உங்களின் சதோபிரதான் சம்ஸ்காரங்களை அடக்கி, ஏனைய சம்ஸ்காரங்களை நடைமுறை வடிவில் கடைப்பிடிப்பதும் வன்முறையே ஆகும். ஆகவே, தெளிவானவராகி, ஒரு மகாத்மாவாகவும் இரட்டை அகிம்சாவாதியாகவும் இருக்கும் உணர்வில் இருங்கள்.
சுலோகம்:
ஏதாவது பொய்மை சத்தியத்தில் கலந்த உடனேயே, உங்களின் சந்தோஷம் மறைந்துவிடும்.அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தேவதையினுடையதைப் போல், அலௌகீகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் இனிமையாக இருக்க வேண்டும். இந்த விடயத்தைக் கீழ்க்கோடிடுங்கள். அப்போது மட்டுமே வெளிப்படுத்துகை இடம்பெறும். ஏனென்றால், இதுவரை வார்த்தைகளின் சக்தி வீணாகிப் போகின்றது. ஆகவே, தந்தையை வெளிப்படுத்துவதில் இருக்க வேண்டிய சக்தி குறைவாகவே உள்ளது. உங்களின் வார்த்தைகள் வீணாகிப் போகாமல் நீங்கள் சேமித்தால், தந்தையின் வெளிப்படுத்துகையின் ஒலி, உரத்தும் தெளிவாகவும் கேட்கும்.