24.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது உங்கள் அதி பெறுமதிமிக்க நேரமாகும். எனவே, நீங்கள் அதனை வீணாக்கக் கூடாது. தகுதிவாய்ந்தவர்களுக்கு ஞானத்தைத் தானம் செய்யுங்கள்.

கேள்வி:
தெய்வீகக் குணங்களைத் தொடர்ந்தும் கிரகித்து, உங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதற்குரிய இலகுவான வழிமுறை என்ன?

பதில்:
பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தும் விடயங்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இந்த ஞானச் செல்வத்தைத் தானம் செய்யுங்கள். அதன்மூலம் நீங்கள் இலகுவாக தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பீர்கள். உங்கள் நடத்தை தொடர்ந்தும் சீர்திருத்தப்படும். இந்த ஞானத்தைத் தமது புத்தியில் நிலைத்திருக்கச் செய்ய முடியாதவர்கள் அல்லது இந்த ஞானச் செல்வத்தைத் தானம் செய்யாதவர்கள் உலோபிகள் ஆவார்கள். அவர்கள் தமக்குத் தாமே அநாவசியமாக இழப்பை உருவாக்குகின்றார்கள்.

பாடல்:
உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்து விடாதீர்கள்…..

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். அத்துடன் நீங்கள் அதன் அர்த்தத்தையும் மிக நன்றாகப் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும் நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதையும் மறந்து விடாதீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் தந்தையை நினைவு செய்வதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், மறு நிமிடம் நீங்கள் அவரை மறந்து, சந்தோஷம் அற்றிருக்கிறீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள், மறு நிமிடம் நீங்கள் மரணிக்கிறீர்கள். அதாவது, ஒரு நிமிடம் நீங்கள் எல்லையற்ற தந்தைக்குச் சொந்தமாக இருக்கிறீர்கள். அடுத்த நிமிடம், நீங்கள் திரும்பவும் லௌகீகக் குடும்பத்தை நோக்கிச் செல்கிறீர்கள். எனவே, தந்தை கூறுகிறார்: இன்று, நீங்கள் சிரிக்கிறீர்கள். ஆனால் நாளை அழ வேண்டாம்! இதுவே இப் பாடலின் அர்த்தமாகும். மனிதர்கள் அமைதியைத் தேடி அதிகளவு அலைந்து திரிவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், அவர்கள் யாத்திரைகளில் செல்கிறார்கள். அவர்கள் எங்கும் அலைந்து திரிவதனால் அமைதியைப் பெறுவார்கள் என்றில்லை. இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைத்திற்கும் முதலில் உங்களை இனங்கண்டு கொள்ளுங்கள்! ஆத்மாக்கள் அமைதி சொரூபங்கள். அவர்கள் வசிக்கும் இடம் அமைதிதாமமாகும். ஆத்மாக்கள் இங்கு கீழே வரும்போது, அவர்கள் நிச்சயமாகச் செயல்களைச் செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் அமைதிதாமத்தில் இருக்கும்போது, அமைதி நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். சத்தியயுகத்தில் அமைதி நிறைந்துள்ளது. அமைதியுடன் சந்தோஷமும் உள்ளது. அமைதி தாமத்தைச் சந்தோஷ தாமம் என்றழைக்க முடியாது. சந்தோஷம் உள்ள இடம் சந்தோஷ தாமம் என்றும், துன்பம் உள்ள இடம் துன்ப தாமம் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்போது இந்த விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். இவற்றை, மக்கள் புரிந்து கொள்ள, நீங்கள் அவர்களுக்கு அவற்றைத் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்த வேண்டும். மக்கள் கண்காட்சிகளுக்கு வரும்போது, அனைத்திற்கும் முதலில் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தை வழங்குங்கள். ஆத்மாக்களின் தந்தை ஒரேயொருவரே என விளங்கப்படுத்தப்படுகிறது. அவர் கீதையின் கடவுள். ஏனைய அனைவரும் ஆத்மாக்கள். ஆத்மாக்கள் தமது சரீரங்களை விடுத்து இன்னொன்றை எடுக்கிறார்கள். சரீரத்தின் பெயர்கள் மாறுகின்றன. “ஆத்மாவின்” பெயர் மாறுவதில்லை. குழந்தைகளாகிய உங்களால் விளங்கப்படுத்த முடியும்: எல்லையற்ற தந்தை மாத்திரம் சந்தோஷ ஆஸ்தியை வழங்குகிறார். தந்தை சந்தோஷ உலகை ஸ்தாபிக்கிறார். துன்ப உலகை உருவாக்குவது தந்தைக்கு அசாத்தியமான விடயமாகும். பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. அதற்குரிய படங்கள் உள்ளன. அவர்களிடம் கூறுங்கள்: உங்களாலும் இந்த சந்தோஷத்திற்குரிய ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். அது உங்களுடைய கற்பனை என அவர்கள் கூறினால், அவர்களை விட்டு விடுங்கள். இது உங்கள் கற்பனை என நினைப்பவர்கள் எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்கள் நேரம் மிகவும் பெறுமதியானது. உலகம் முழுவதிலும், வேறு எவரின் நேரமும் உங்களுடையதைப் போன்று பெறுமதி மிக்கதாக இல்லை. முக்கிய நபர்களின் நேரம் மிகவும் பெறுமதியானது. தந்தையின் நேரமும் மிகவும் பெறுமதியானது! தந்தை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதுடன் உங்களை முற்றிலும் மாற்றுகின்றார். எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் கூறுகிறார்: உங்கள் பெறுமதிமிக்க நேரத்தை வீணாக்காதீர்கள்! தகுதியானவர்களுக்கு ஞானத்தை வழங்குங்கள். நீங்கள் தகுதியானவர்களுக்கே விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் அனைவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. சிலருக்கு இதனைப் புரிந்து கொள்ளும் புத்தி இல்லை. அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தை வழங்குங்கள். ஆத்மாக்களாகிய எங்களுடைய தந்தை சிவன் என அவர்கள் புரிந்து கொள்ளும் வரை, அவர்களால் வேறு எதனையும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு மிகுந்த அன்புடனும் பணிவுடனும் விளங்கப்படுத்துங்கள். பின்னர் அவர்களை விட்டு விடுங்கள். ஏனெனில், அசுர குலத்தைச் சார்ந்தவர்கள் விவாதம் ஒன்றை ஆரம்பிக்கத் தயங்க மாட்டார்கள். அரசாங்கம் மாணவர்களை அதிகளவில் புகழ்கிறது! அவர்களுக்காகப் பல ஒழுங்குகளை அரசாங்கம் செய்து கொடுக்கிறது. கல்லூரி மாணவர்களே முதலில் கற்களை எறிய ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடம் அதிகளவு கோபம் உள்ளது. வயதானவர்களாலும் தாய்மார்களாலும் இத்தகைய விசையுடன் கற்களை எறிய முடியாது. பொதுவாக, மாணவர்களே அதிகளவு சத்தம் செய்கிறார்கள். அவர்களுக்கே யுத்தத்திற்குச் செல்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. தந்தை இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் தலைகீழாக மாறிவிட்டீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதற்குப் பதிலாக, நீங்கள் உங்களை சரீரங்களாகக் கருதுகிறீர்கள். தந்தை இப்பொழுது உங்களைச் அரைச் சக்கரத்திற்கு சரியான முறையில் நேராக்குகிறார். இரவிற்கும் பகலிற்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. சரியான திசையில் நிமிர்த்தப்படுவதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் தலைகீழாகவே இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை இப்போது உங்களை அரைக்கல்பத்திற்குச் சரியாக, நேராக நிற்கச் செய்கின்றார். நீங்கள் அல்லாவின் குழந்தைகள் ஆகும்போது, உலக இராச்சியம் என்ற உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இராவணன் உங்களைத் தலைகீழாகத் திருப்பும்போது, அனைத்தும் அழிக்கப்பட்டு நீங்கள் தொடர்ந்தும் கீழே வீழ்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இராம இராச்சியத்தைப் பற்றியும் இராவண இராச்சியத்தைப் பற்றியும் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டியிருப்பினும், உங்களுக்குப் போதுமானளவு நேரம் உள்ளது. உங்களுக்குக் கற்பிப்பதற்கு மாணவர் இல்லாதபோது அல்லது உங்களுக்கு வேறு எதுவும் செய்வதற்கு இல்லாதபோது தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.அந்த வருமானம் தற்காலிகமான காலப்பகுதிக்கே ஆகும். ஆனால் இந்த வருமானம் எல்லா காலத்திற்கும் உரியது. நீங்கள் இதில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். மாயை மீண்டும் மீண்டும் உங்களுடைய எண்ணங்களை வேறு திசைகளுக்கு எடுத்துச் செல்கிறாள். இது தொடர்ந்தும் நிகழும். மாயை தொடர்ந்து உங்களை மறக்கச் செய்கிறாள். அவர்கள் இதன் அடிப்படையில் நாடகம் ஒன்றைக் காட்டுகிறார்கள்: கடவுள் இதனைக் கூறினார். மாயை இதனைக் கூறினாள். தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இதிலேயே தடைகள் ஏற்படுகின்றன. வேறு எதிலும் இந்தளவு தடைகள் ஏற்படாது. தூய்மையின் காரணத்தினால் பலரும் அடிவாங்குகிறார்கள். இந்த நேரத்தின் ஞாபகார்த்தம் பாகவதத்தில் எழுதப்பட்டுள்ளது. அரக்கிகளான புத்னா, சூர்ப்பனகை போன்றவர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவை அனைத்தும் தந்தை வந்து உங்களைத் தூய்மையாக்குகின்ற இந்த நேரத்தையே குறிக்கின்றன. நீங்கள் கடந்த காலத்தில் அனுபவித்தவற்றை, அவர்கள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் கடந்தகாலத்தைப் புகழ்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இராம இராச்சியத்தின் புகழைப் பாடுகிறார்கள். ஏனெனில் அது கடந்த காலமாகிவிட்டது. உதாரணமாக, கிறிஸ்து வந்து அந்த மதத்தை ஸ்தாபித்தார். அவர்களிடம் அதற்கான காலமும் திகதியும் இருப்பதனால், அவர்கள் தொடர்ந்தும் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அந்த வியாபாரம் பக்தி மார்க்கத்தில் அரைக்கல்பமாகத் தொடர்கிறது. அது சத்தியயுகத்தில் இடம்பெறுவதில்லை. இந்த உலகம் அழிக்கப்படும். இந்த விடயங்களைப் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே. இறுதியில் ஆத்மாக்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சரீரங்களை நீக்கி விட்டு வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். வெகு சில நாட்களே எஞ்சியுள்ளன என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது, அனைத்தும் மீண்டும் ஒருமுறை அழிக்கப்படும். நாங்கள் மாத்திரமே சத்தியயுகத்திற்குச் செல்வோம். ஆத்மாக்கள் அனைவருமே அங்கு செல்ல மாட்டார்கள். சென்ற கல்பத்தில் அங்கு சென்றவர்கள் வரிசைக்கிரமமாக மீண்டும் செல்வார்கள். அவர்களே நன்றாகக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்கிறார்கள். மிக நன்றாகக் கற்பவர்கள் வரிசைக்கிரமமாக இடம்மாற்றம் செய்யப்படுகிறார்கள். நீங்களும் இடம்மாற்றம் செய்யப்படுவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திற்குச் சென்று வரிசைக்கிரமமாக அமர்ந்திருப்பார்கள். பின்னர் தொடர்ந்து வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருவார்கள் என்பதை உங்கள் புத்தி அறியும். தந்தை கூறுகிறார்: எவ்வாறாயினும், தந்தையின் அறிமுகத்தை கொடுப்பதே பிரதான விடயமாகும். சதா தந்தையின் பெயரை உங்கள் உதடுகளில் வைத்திருங்கள். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? உலகிலுள்ள எவருக்கும் இது தெரியாது. நெற்றியின் மத்தியில் அற்புதமானதொரு நட்சத்திரம் பிரகாசிக்கிறது என அவர்கள் கூறினாலும், அதற்கு மேல் அவர்களால் எதனையும் புரிந்து கொள்ள முடியாது. இந்த ஞானம் வெகு சிலரான உங்களின் புத்திகளிலேயே உள்ளது. நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறீர்கள். அனைத்திற்கும் முதலில், தந்தையே தூய்மையாக்குபவர் என்பதை விளங்கப்படுத்துங்கள். அவர் எங்களுக்கு ஆஸ்தியை வழங்குவதுடன், எங்களை மகத்துவமான சக்கரவர்த்திகளாகவும் ஆக்குகிறார். ‘இறுதியில், அந்த நாளும் வந்துவிட்டது’ என்ற பாடல் உங்களிடம் உள்ளது. பக்தி மார்க்கத்தில், நீங்கள் இந்தப் பாதையைத் தேடினீர்கள். துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் பக்தி ஆரம்பமாகியது. பின்னர், இறுதியில், தந்தை வந்து உங்களுக்குப் பாதையைக் காட்டினார். இது கணக்குத் தீர்ப்பதற்குரிய காலம் எனப்படுகிறது. அசுர பந்தனங்களுக்குரிய கணக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் பாகத்தைப் பற்றி அறிவீர்கள். இந்தப் பாகம் தொடர்ந்தும் நடிக்கப்படுகிறது. மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். எனவே, நிச்சயமாக சிவன் வந்திருக்க வேண்டும். அவர் நிச்சயமாக எதனையாவது செய்திருக்க வேண்டும். அவர் மாத்திரமே புதிய உலகை உருவாக்குகிறார். இலக்ஷ்மியும், நாராயணனும் அதிபதிகளாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது இல்லை. தந்தை மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் முன்னரும் இந்த இராஜயோகத்தைக் கற்பித்தார். இது உங்களைத் தவிர வேறு எவரின் உதடுகளில் இருந்தும் வெளிவர முடியாது. உங்களால் மாத்திரமே இதனை விளங்கப்படுத்த முடியும். சிவபாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். ‘சிவோஹம்’ என மக்கள் கூறும்போது அதுவும் தவறானதே ஆகும். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்: நீங்கள் சக்கரத்ததைச் சுற்றி வந்து, பிராமண குலத்தில் இருந்து தேவகுலத்திற்குள் வருகிறீர்கள். ‘ஹம்ஸோ ஸோஹம்’ என்பதன் அர்த்தத்தை உங்களால் விளங்கப்படுத்த முடியும். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளோம், இது 84 பிறவிகளுக்குரிய சக்கரமாகும். இது ஓதுகின்ற ஒரு மந்திரம் அல்ல. இதன் அர்த்தம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இது ஒரு விநாடிக்குரிய விடயமாகும். எவ்வாறு உங்களால் ஒரு விநாடியில் விதையைப் பற்றியும், விருட்சத்தைப் பற்றியும் அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளதோ, அவ்வாறே, நீங்கள் ‘ஹம்ஸோ, ஸோஹம்’ என்பதன் இரகசித்தையும் ஒரு விநாடியில் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இந்த முறையில் சக்கரத்தைச் சுற்றி வருகிறோம். இதுவும் சுயதரிசன சக்கரம் எனப்படுகிறது. நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என எவராவது கூறும்போது, அவர் உங்களை நம்ப மாட்டார். நீங்களே அந்தப் பட்டத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளீர்கள் என அவர் கூறுவார். அப்பொழுது, நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என விளங்கப்படுத்த முடியும். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. ஆத்மா தனது 84 பிறவிகளின் காட்சியைக் காண்கிறார். இது சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றுவது எனப்படுகிறது. அவர்கள் இதனைச் செவிமடுக்கும்போது, முதலில் அவர்கள் வியப்படைவார்கள். அவர்கள் நினைப்பார்கள்: இவர்கள் என்ன கட்டுக்கதைகளைக் கூறுகிறார்கள்? அதன்பின்னர், நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தை கொடுக்கும் போது, நீங்கள் கட்டுக்கதைகள் கூறுவதாக அவர்கள் நினைக்க மாட்டார்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். பாடப்படுகிறது: பாபா, நீங்கள் வரும்போது நாங்கள் உங்களிடம் எங்களை அர்ப்பணிப்போம். நாங்கள் உங்களை மாத்திரமே நினைவு செய்வோம். தந்தை கூறுகிறார்: நீங்கள் இவ்வாறு கூறினீர்கள். அதனால் நான் இப்பொழுது அதனை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பற்றினை வென்றவராகி, உங்களுடைய சரீரத்தின் மீதான சகல பற்றையும் அழித்துவிடுங்கள். உங்களை ஆத்மாவாகக் கருதி என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும். நீங்கள் மற்றவர்களுக்குக் கூறுகின்ற இந்த இனிமையான விடயங்களை அனைவரும் இரசிப்பார்கள். நீங்கள் தந்தையின் அறிமுகத்தை கொடுக்காது விட்டால், அவர்கள் ஏதாவதொரு விடயத்தையிட்டு சந்தேகம் கொள்வார்கள். இதனாலேயே, நீங்கள் முதன்முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்ற, இரண்டு அல்லது மூன்று படங்களை அவர்களுக்கு முன்னால் வைக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அவர்கள் ஆஸ்தியின் அறிமுகத்தையும் பெற்றுக் கொள்வார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். ஒற்றைக் கிரீடம் தரித்த அரசர்கள், இரட்டைக் கிரீடாதாரிகளான அரசர்களை வழிபடுகின்ற படத்தை உருவாக்குங்கள். அப்பொழுது அவர்களால் பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்தவராக இருப்பதற்கும் பூஜிப்பவருக்குமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அனைத்திற்கும் முதலில் அவர்கள் தந்தையை வழிபடுகிறார்கள், அதன் பின்னர் அவர்கள் தங்கள் சொந்த விக்கிரகங்களை வழிபடுகிறார்கள். அவர்கள் கடந்த காலத்தில் வாழ்ந்த தூய்மையானவர்களின் விக்கிரகங்களை அமைத்து அவற்றை வழிபடுகிறார்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். முன்னர், நீங்கள் கடவுளிடம் கூறினீர்கள்: நீங்களே பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்தவரும் பூஜிப்பவரும் ஆவீர்கள். நீங்களே இந்;தச் சக்கரத்தைச் சுற்றி வருபவர்கள் என இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். அதன்பின்னர், உங்களால் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முடியும். உங்களுடைய செல்வத்தை தானம் செய்வதனால் அது குறைவடையாது. செல்வத்தைத் தானம் செய்யாதவர்கள் கருமிகள் எனப்படுகிறார்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியவற்றை நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தாது விடின், அநாவசியமாக நீங்கள் உங்களுக்கே இழப்பை சம்பாதித்துக் கொள்கிறீர்கள். உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க இயலாதிருக்கும். உங்கள் நடத்தையும் அவ்வாறானதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இப்பொழுது புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். ஏனைய அனைவரும் விவேகம் அற்றவர்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: இந்தப் பக்கத்தில், தேவ சமுதாயமும், அந்தப் பக்கத்தில் அசுர சமுதாயமும் உள்ளன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் புத்தியால் புரிந்து கொள்ள முடியும். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் சங்கமயுகத்தைச் சார்ந்தவராக இருப்பார். இன்னொரு உறுப்பினரோ கலியுகத்தைச் சார்ந்தவராக இருப்பார். இருவரும் ஒன்றாக வாழ்வார்கள். அவர் அன்னம் ஆகுவதற்குத் தகுதிவாய்ந்தவர் அல்ல என்பதைக் காணும்போது, யுக்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடின் அவர் தொடர்ந்தும் தடைகளை உருவாக்குவார். நீங்கள் முயற்சி செய்து, மற்றவர்களையும் உங்களைப் போன்றவர்கள் ஆக்க வேண்டும். இல்லாவிடின், அவர்கள் தொடர்ந்தும் தடைகளை உருவாக்குவார்கள். அதன்பின்னர், அவர்களில் இருந்து விலகி இருப்பதற்கு நீங்கள் ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கும். தடைகள் ஏற்படும். இந்த ஞானம் உங்களால் மாத்திரமே வழங்கப்படுகிறது. நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் பற்றை வென்றவராகவும் ஆகவேண்டும். நீங்கள் விகாரங்களில் ஏதாவதொன்றைக் கைவிடும்போது, மற்றவர்கள் சிக்கல்களை உருவாக்குவார்கள். அப்பொழுது, அனைத்துமே சென்ற கல்பத்தில் நிகழ்ந்தவாறே இப்பொழுதும் நிகழ்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிந்துணர்வுடன், நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். நீங்கள் விதியைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். மிக நன்றாக விளங்கப்படுத்துகின்ற சில குழந்தைகளும் வீழ்வார்கள். அவர்கள் அதிகளவு விசையுடன் அறையப்படுவார்கள். கூறப்படுகிறது: அவர்கள் சென்ற கல்பத்திலும் அறையப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளார்த்தமாக இதனைப் புரிந்து கொள்ள முடியும். சிலர் எழுதுகிறார்கள்: பாபா, நான் கோபம் அடைந்து ஒருவரை அடித்து விட்டேன். நான் இந்தத் தவறைச் செய்துவிட்டேன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இயன்றளவிற்கு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பல்வகைப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். கள்ளங்கபடம் அற்றவர்களைத் தாக்குகிறார்கள். ஆண்கள் பலசாலியாகவும், பெண்கள் பலவீனமானவர்களாகவும் காணப்படுகிறார்கள். மறைமுகமான முறையில் போராடி, எவ்வாறு இராவணனை வெல்வது என்பதை மீண்டும் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். வேறு எவரின் புத்தியிலும் இந்தப் போராட்டம் இருப்பதில்லை. இதனைப் புரிந்து கொள்கின்ற நீங்களும் வரிசைக் கிரமமானவர்களே. இது முற்றிலும் புதியதொரு விடயமாகும். சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்காகவே நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது இதனை நினைவு செய்தாலும், பின்னர் நீங்கள் இதனை மறந்து விடுவீர்கள். பிரதானமான விடயம் நினைவு யாத்திரையாகும். நினைவு செய்வதன் மூலம் நாங்கள் தூய்மை ஆகுவோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

ஆசீர்வாதம்:
சுயநலமற்ற கருணை நிறைந்தவராகி, ஆத்மாக்களை அலைந்து திரிவதில் இருந்தும் யாசிப்பவர்களில் இருந்தும் பாதுகாப்பீர்களாக.

சுயநலமற்ற கருணை நிறைந்த, குழந்தைகளாகிய நீங்கள், ஒரு விநாடியில் இன்னமும் பலருக்கு அவர்களுடைய ஆன்மீக வடிவத்தையும் இலக்கையும் ஞாபகப்படுத்தும் கருணை நிறைந்த எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். கருணையான குழந்தைகளாகிய உங்கள் எண்ணங்களின் காரணமாக, யாசித்துக் கொண்டிருப்பவர்கள், பொக்கிஷங்கள் அனைத்தினதும் கணநேரக் காட்சியைக் காண்பார்கள். அலைந்து திரியும் ஆத்மாக்கள் முக்தி, ஜீவன்முக்திக்கான இலக்கின் கரையை தம்முன்னால் பார்ப்பார்கள். துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவர்கள் என்ற உங்கள் பாகத்தை நீங்கள் நடிப்பதுடன், நீங்கள் எப்பொழுதும் மந்திரச் சாவியை உங்களுடன் வைத்திருப்பதுடன் சந்தோஷமற்ற ஆத்மாக்களை சந்தோஷம் ஆக்குவதற்கான வழியையும் அறிந்திருப்பீர்கள்.

சுலோகம்:
சுயநலமற்ற சேவை செய்கின்ற ஒரு சேவையாளர் ஆகுங்கள், நீங்கள் நிச்சயமாக உங்கள் சேவைக்கான பலனைப் பெறுவீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

இறுதிக் கணங்களில், இயற்கையின் பஞ்சதத்துவங்களும் உங்களை அதிகளவு அசைத்துப் பார்க்கும். எவ்வாறாயினும், சரீரமற்ற ஸ்திதியை பயிற்சி செய்கின்ற ஆத்மாக்களாகிய நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவர்களாக இருப்பதன் மூலம் சிறப்புச்சித்தி எய்துவீர்கள். தந்தை பிரம்மாவை போன்று நீங்களும் அனைத்துச் சூழ்நிலைகளையும் கடந்து சென்று உங்கள் சிறப்புச் சித்திக்கான அத்தாட்சியைக் காட்டுவீர்கள். இதனை அடைவதற்கு, இயற்கையின் பஞ்ச தத்துவங்களுக்கும் சேவை செய்வதற்காக நேரம் ஒதுக்கி, தொடர்ந்தும் நல்லாசிகளுக்கான சகாஷைக் கொடுங்கள்.