25.04.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, குழந்தைகளாகிய உங்களுக்காகப் புதிய இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு, தந்தை தூரதேசத்தில் இருந்து வந்துள்ளார். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள்.

கேள்வி:
சிவபாபாவின் மீது துண்டிக்க முடியாத நம்பிக்கை உடைய குழந்தைகளின் அறிகுறி என்ன?

பதில்:
அவர்களுக்கு எத்தகைய வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டாலும், தங்கள் கண்களை மூடிக்கொண்டு பாபாவின் ஸ்ரீமத்தைத் தொடர்ந்தும் பின்பற்றுகிறார்கள். ஒருவேளை அதன் மூலம் சில பாதிப்புக்களும் ஏற்படக்கூடும் என அவர்கள் என்றுமே எண்ணுவதில்லை. ஏனெனில் புத்தியில் அத்தகைய நம்பிக்கையைக் கொண்டுள்ள குழந்தைகளுக்குத் தந்தையே பொறுப்பு என அவர்கள் அறிவார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கையில் இருந்து பலத்தைப் பெறுகின்றார்கள், அவர்களது ஸ்திதியும் ஆட்ட அசைக்க முடியாதது ஆகுகிறது.

பாடல்:
நீங்களே தாயும், நீங்களே தந்தையும்.

ஓம் சாந்தி.
யாரது புகழை நீங்கள் செவிமடுத்தீர்கள்? குழந்தைகளாகிய உங்களைத் தவிர உலகிலுள்ள வேறு எவரும் அறியாத, ஒரேயொருவரைப் பற்றிய புகழையே ஆகும். இதுவே அதிமேன்மையான தந்தையின் புகழாகும். ஏனைய எவரது புகழும் பயனற்றதாகும். அதிமேலான ஒரேயொரு தந்தையே இருக்கிறார். எவ்வாறாயினும்;, தந்தை பற்றிய இனங்காணுதலை யார் உங்களுக்குக் கொடுப்பார்கள்? அவரே வந்து ஆத்மாக்களையும், தன்னையும் பற்றிய இனங்காணுதலைக் கொடுக்கிறார். அவர்கள் மகாத்மாக்களைப் பற்றியும், சரீரதாரிகளான ஆத்மாக்களைப் பற்றியும் பேசிய பொழுதிலும் எந்த மனிதரும் ஆத்மாக்களை இனங்காணவில்லை. சரீரம் நீக்கப்படும் பொழுது, ஆத்மா நீங்கிச் சென்றுவிட்டார் என அவர்கள் கூறுகின்றனர். சரீரம் சடலம் ஆகுகின்றது. ஆத்மா அழிவற்றவர்; ஆத்மா என்றுமே மரணிப்பதில்லை. ஆத்மா நட்சத்திரத்தைப் போன்றவரும், மிகவும் சூட்சுமமானவரும் ஆவார். ஆத்மாவை இந்தக் கண்களால் பார்க்க முடியாது. ஆத்மாக்களே அனைத்தையும் செய்கிறார்கள், ஆனால் மீண்டும் மீண்டும் நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதனால் “நான் இன்னார்” அல்லது “நான் இதைச் செய்கிறேன்” என நீங்கள் கூறுகிறீர்கள். உண்மையில், ஆத்மாவே அனைத்தையும் செய்கிறார். சரீரம் வெறுமனே புலனங்கங்களால் ஆனது. சாதுக்கள் போன்றோரும் ஆத்மா மிகவும் சூட்சுமமானவர் என்பதையும், அவர் நெற்றியின் புருவ மத்தியில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு ஆத்மாவிடம் சம்ஸ்காரங்கள் உள்ளன என்ற ஞானம் அவர்களிடம் இல்லை. ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாதவர்கள் என்பதனால், ஆத்மாக்கள் சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பதில்லை எனச் சிலர் கூறுகின்றனர். சம்ஸ்காரங்களுக்கு ஏற்பவே ஒரு பிறவி கிடைக்கிறது என வேறு சிலர் கூறுகின்றனர். பல முரண்பட்ட அபிப்பிராயங்கள் உள்ளன! எந்த ஆத்மாக்கள் 84 பிறவிகளை எடுக்கின்றனர் என்பது எவருக்கும் தெரியாது. சூரிய வம்சத்தைச் சார்ந்த ஆத்மாக்களே 84 பிறவிகளை எடுத்து, முழுச் சக்கரத்தையும் சுற்றி வர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களே 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்து, தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். இப்பொழுது, எவரால் ஆத்மாக்களைத் தூய்மையாக்க முடியும்? அதிமேன்மையான தந்தை மாத்திரமே தூய்மை ஆக்குபவர். அவரது புகழே அனைத்திலும் அதியுயர்வானது. அனைவரும் 84 பிறவிகள் எடுப்பார்கள் என்றில்லை. பின்னர் தாமதித்து வருபவர்களால் 84 பிறவிகளை எடுக்க முடியாது. அனைவரும் ஒன்றாகக் கீழே வருகிறார்கள் என்றில்லை. சத்தியயுக ஆரம்பத்தில் வருகின்ற சூரிய வம்ச அரசர்களும், பிரஜைகளும் 84 பிறவிகளை எடுக்கின்றனர். பின்னர் மனிதர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கிறது. சிலர் 83 பிறவிகளையும், சிலர் 80 பிறவிகளையும் எடுக்கின்றனர். சத்தியயுகத்தில் அவர்கள் 150 வருடங்களான, முழு ஆயுட்காலத்தையும் கொண்டிருக்கின்றனர்; எவராலும் அங்கு தனக்குரிய நேரத்திற்கு முன்னர் மரணிக்க முடியாது. தந்தை மட்டுமே இங்கிருந்து இவ் விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது பரமாத்மாவாகிய பரமதந்தையை எவரும் அறியார். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஆத்மாக்கள் என்பதைப் போல், நானும் ஓர் ஆத்மாவே. நீங்கள் பிறப்பு இறப்புச் சக்கரத்திற்குள் பிரவேசிக்கிறீர்கள், ஆனால் நான் அதற்குள் வருவதில்லை. நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுதே, என்னை அழைக்கிறீர்கள். நீங்கள் பெருமளவு துன்பத்தை அனுபவம் செய்யும் பொழுது, என்னை அழைக்கிறீர்கள். இந்நேரத்திலேயே சிவபாபா குழந்தைகளான உங்களுக்குக் கற்பிக்கிறார். சிலர் வினவுகின்றனர்: பரமாத்மா வருகின்றார் என்பதை நாங்கள் எவ்வாறு நம்புவது? ஆகவே அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: அனைவரும் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவர் அசரீரியானவர். அவருக்கென்று சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. அவர் தூய்மையற்ற உலகிலேயே பிரவேசிக்க வேண்டும். அவர் தூய உலகில் வர மாட்டார். இவ்வாறு விளங்கப்படுத்துங்கள். அத்துடன் பரமாத்மா ஓர் ஆத்மாவைப் போல் சின்னஞ்சிறியவர், ஆனால் அவர் ஞானம் நிறைந்தவரும், மனித உலக விருட்சத்தின் விதையும் ஆவார். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னைப் பரமாத்மா பரமதந்தை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் என்னை அழைக்கிறீர்கள், ஆகவே நான் நிச்சயம் வருகிறேன். தூரதேசத்துவாசி அந்நிய தேசத்திற்கு வந்தார் என்றும் பாடப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வாறு அந்நிய தேசத்திற்கு, அதாவது, இராவணனின் பூமிக்கு வந்தீர்கள் என்பதைத் தந்தையிடம் இருந்து இப்பொழுது அறிந்து கொண்டுள்ளீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் நாங்கள் கடவுளின் பூமியில், அதாவது, எங்கள் சொந்தப் பூமியில் இருக்கிறோம். பின்னர் துவாபர யுகத்திலிருந்து அந்நிய பூமியில், அந்நிய இராச்சியத்தில் பிரவேசிக்கிறோம்; நாங்கள் பாவப் பாதைக்குள் செல்கிறோம். பின்னர் பக்தி ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் நாங்கள் சிவபாபாவையே வழிபட ஆரம்பிக்கின்றோம். அம்மக்கள் சிவபாபாவின் அத்தகைய பெரியதொரு லிங்கத்தை உருவாக்குகின்றனர், ஆனால் அவர் அந்தளவு பெரியவர் அல்ல. ஆத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். அவர் ஞானம் நிறைந்தவரும், சதா தூய்மையானவரும், சந்தோஷக்கடலும், பேரானந்தக் கடலும் ஆவார். இது பரமாத்மாவின் புகழாகும். ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என மக்கள் அழைக்கின்றனர். அவர் ஒவ்வொரு சக்கரத்திலும் வருகின்ற பரமாத்மா ஆவார். மக்கள் தூர தேசப்பயணியை அழைத்து, அவரின் புகழைப் பாடுகின்றனர். அவர்கள் பிரம்மாவையோ அல்லது சரஸ்வதியையோ அழைப்பதில்லை. அவர்கள் அசரீரியான பரமாத்மாவையே அழைக்கின்றனர். ஆத்மாக்கள் அழைக்கின்றனர்: ஓ தூரதேச வாசியே, இப்பொழுது அந்நிய தேசத்திற்கு வாருங்கள், ஏனெனில் அனைவரும் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளனர். இராவண இராச்சியம் முடியும் தறுவாயில் மட்டுமே நான் வருகின்றேன். நான் சங்கமயுகத்திலேயே வருகிறேன். எவருக்கும் இது தெரியாது. அவர் சின்னஞ்சிறிய புள்ளியாகிய, பரமாத்மா எனக் கூறப்பட்டுள்ளது. இந்நாட்களில், ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என்றும், பரமாத்மாவே ஒவ்வோர் ஆத்மாவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆத்மாக்கள் பரமாத்மாவாக முடியாது. ஆத்மாக்களினதும் பரமாத்மாவினதும் ரூபம் ஒரேமாதிரி இருந்த பொழுதிலும், இருவரும் வேறுபட்டவர்கள். ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். அவர்கள் தங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்க வேண்டியுள்ளது. பரமாத்மா மறுபிறப்பிற்கு அப்பாற்பட்டவர். அவர்கள் கூறுவதைப் போல், ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா எனில், சதோபிரதான் பரமாத்மா, தமோபிரதான் ஆகுகிறார் என்று அதற்கு அர்த்தமா? இல்லை, அது சாத்தியமில்லை. தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்கள் அனைவருக்கும் சேவை செய்யவே வருகிறேன். அவர்களால் எனது பிறப்பைப் பற்றிப் பேச முடியாது. நான் நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகளாக மாற்றவே வருகிறேன். அவர் தனது சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காகவே அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். தந்தை மட்டுமே வந்து எங்களைச் சுவர்க்கத்திற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் நடிப்பதற்குத் தங்கள் சொந்த பாகங்களைக் கொண்டுள்ளனர் என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பரமாத்மா பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவர். அவர் நிச்சயமாக வருகிறார், அதனாலேயே சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. எவ்வாறாயினும் அவர் எப்பொழுது வருகின்றார் என்பது எவருக்கும் தெரியாது; அவர்கள் சிவனது பிறந்த நாளை அவ்வாறு கொண்டாடுகின்றனர். அவர் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காக நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வரவே வேண்டும். தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்காக அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வர வேண்டும். சுவர்க்கமே அந்தத் தூய உலகம். அவர்கள் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே பழைய உலக விநாசத்திற்கான நேரத்திலேயே அவர் நிச்சயமாகத் தூய உலகை ஸ்தாபிக்கிறார். அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குவதற்குச் சங்கமயுகத்தில் வரவேண்டும். இது அந்நிய தேசம்; இது இராவணனது பூமியாகும். எவ்வாறாயினும் இராவண இராச்சியமே இப்பொழுது தொடர்கின்றது என்பதை மனிதர்கள் எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பித்தது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. முதலில் முக்கிய விடயமான, ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் இரகசியத்தை விளங்கப்படுத்துங்கள். பின்னர் அவர் சக்கரத்தின் சங்கமயுகத்தில் அனைவரையும் தூய்மை ஆக்குவதற்கு வருகின்றார் என்று விளங்கப்படுத்துங்கள். இது அவரது பணி மாத்திரமே, ஸ்ரீ கிருஷ்ணரது பணி அல்ல. ஸ்ரீ கிருஷ்ணரும் 84 பிறவிகளை எடுத்துக் கீழே இறங்கி வருகிறார். சூரிய வம்சத்திற்கு உரியவர்கள் அனைவரும் கீழிறங்கி வருகிறார்கள். ஒரு மரமானது அரைவாசி பசுமையாகவும், அரைவாசி பழையதாகவும் இருக்காது. அனைத்தும் உக்குகின்ற ஸ்திதியைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்குச் சக்கரத்தின் கால எல்லையும் தெரியாது. அவர்கள் சமயநூல்களில் அதற்கு நீண்ட கால எல்லையைக் கொடுத்துள்ளனர். தந்தை மட்டுமே இங்கிருந்து இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அதைப் பற்றி மேலதிகக் கேள்விகள் எதுவும் இருக்க முடியாது. படைப்பவராகிய தந்தை சத்தியத்தை மாத்திரமே பேசுகிறார். பிரம்மாகுமாரர்கள், குமாரிகளான எங்களில் பலர் உள்ளனர். நாங்கள் அனைவரும் இதை நம்புகிறோம், அவர் இருப்பதனாலேயே பலரும் அவரில் நம்பிக்கை வைத்துள்ளனர். நீங்கள் நம்பிக்கையுடன் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் பொழுதும், உங்களால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை தூரதேசத்தில் இருந்து வந்துள்ளார் என்பதை முதலில் மனிதர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். எவ்வாறாயினும் அவர் எந்தச் சரீரத்தில் பிரவேசித்துள்ளார்? சூட்சும உலகிற்கு வருவதனால் அவரால் என்ன செய்ய முடியும்? அவர் நிச்சயமாக இங்கேயே வரவேண்டும். பிரஜாபிதா பிரம்மாவும் இங்கே தேவைப்படுகிறார். தந்தை இங்கிருந்து பிரம்மா யார் என்பதையும் விளங்கப்படுத்துகிறார். நான் பிரவேசித்திருக்கும் சரீரத்தில் உள்ளவரோ அல்லது குழந்தைகளாகிய நீங்களோ, உங்களுடைய சொந்தப் பிறவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. நான் உங்களைத் தத்தெடுக்கும் பொழுது, நீங்கள் குழந்தைகள் ஆகுகின்றீர்கள். நான் இவர் உட்பட, குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் வினவுகிறேன்: நீங்கள் உங்களுடைய பிறவிகளை மறந்து விட்டீர்களா? உலகச் சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகிறது, பின்னர் அது மீண்டும் மீண்டும் இடம்பெறும். நான் உங்களைத் தூய்மையாக்கவும், உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கவுமே வந்துள்ளேன். தூய்மை ஆகுவதற்கு வேறு வழி ஏதும் இல்லை. மக்கள் இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டால், கங்கையில் நீராடவோ, மேலாக்கள் போன்றவற்றிற்கோ செல்ல மாட்டார்கள். மக்கள் எப்பொழுதும் தொடர்ந்தும் ஆற்று நீரில் நீராடி வந்துள்ளனர். அவர்கள் அதைத் துவாபர யுகத்தில் இருந்து செய்கின்றனர். கங்கையில் மூழ்கி எழுவதால் தங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என அவர்கள் நம்புகின்றனர். எவ்வாறாயினும் அவர்களது எந்தப் பாவமும் அழிக்கப்படவில்லை. முதலில் அவர்களுக்கு ஆத்மாவினதும், பரமாத்மாவினதும் இரகசியத்தைக் கூறுங்கள். பரமாத்மாவாகிய தந்தையை ஆத்மாக்கள் அழைக்கின்றனர். அவர் அசரீரியானவர். ஆத்மாக்களும் அசரீரியானவர்கள். ஆத்மாக்கள் தங்கள் அங்கங்களின் மூலமே அழைக்கின்றனர். பக்திக்குப் பின்னர் கடவுள் வர வேண்டும். இதுவும் நாடகத்தில் ஒரு பாகம். தந்தை கூறுகிறார்: நான் புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வரவேண்டும். கடவுள் ஓர் எண்ணத்தைக் கொண்டிருந்தார் என்பது சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நாடகத் திட்டத்திற்கேற்பவே அவர் அந்த எண்ணத்தை நிச்சயமாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். முன்னர் நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் அதிகமாகப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு அனைத்திலும் அதி புதிய, அதி ஆழமான விடயங்களைக் கூறுகிறேன். நீங்கள் அவற்றைச் செவிமடுக்கும் பொழுது, நீங்களும் அவற்றைப் புரிந்து கொள்வீர்கள். முன்னர் சிவபாபாவே உங்களுக்கு கற்பித்தார் என நீங்கள் கூறவில்லை. இப்பொழுது நீங்கள் இதை மிகத்தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள். புரிந்து கொள்வதற்கு இன்னும் பெருமளவு விடயங்கள் உள்ளன. அவர் ஏனையோருக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவது எனத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கூறுகிறார். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துவதனால் அவர் நிச்சயமாகச் சத்தியத்தை மட்டுமே கூறுகிறார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு முதலில் இருக்க வேண்டும். இதைப் பற்றிக் குழப்பம் அடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. சில குழந்தைகள் உறுதியானவர்கள், ஏனையோர் பலவீனமானவர்கள். பலவீனமானவர்களால் ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது. ஒரு பாடசாலையிலும் வரிசைக்கிரமம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரே ஞானத்தை வழங்கினார் என்ற நம்பிக்கையை அவர்களின் புத்தியில் கொண்டிருப்பதனால், பரமாத்மாவாகிய பரம தந்தையே வந்து கற்பிக்கிறார் என்பதை நாம் எவ்வாறு நம்புவது எனப் பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். எவ்வாறாயினும் தூய்மையற்ற உலகில் ஸ்ரீகிருஷ்ணரால் பிரவேசிக்க முடியாது. பரமாத்மா மட்டுமே தூய்மையற்ற உலகில் தூய்மையற்ற சரீரத்தில் வர வேண்டும் என்பதை அவர்களுக்கு நிரூபியுங்கள். ஒவ்வொருவரது புத்தியும் தனிப்பட்டது என்பதைத் தந்தை புரிந்து கொள்கிறார். சிலரால் மிக விரைவாகப் புரிந்துகொள்ள முடியும். முடிந்தளவு விளங்கப்படுத்துங்கள். பிராமணர்கள் அனைவரும் ஒரேமாதிரி அல்ல, ஆனால் சில குழந்தைகள் பெருமளவு சரீர உணர்வைக் கொண்டுள்ளனர். அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே என்பதை இந்த பாபாவும் புரிந்து கொள்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். மூத்த பாபா கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். குருமார்கள் உங்களுக்குக் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். இப்பொழுது, சுவர்க்கத்திற்கு உங்களை அனுப்புகின்ற தந்தை கூறுவதை நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் குழந்தைகளின் புத்திகள் அத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. அதில் நட்டம் அல்லது இலாபம் இருந்தாலும், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் இழப்பே ஏற்படும் எனவும் நீங்கள் சிந்திக்கக்கூடும். இருந்த பொழுதிலும், பாபா உங்களுக்குக் கூறுவதனால் சிவபாபாவே அதனை உங்களுக்குக் கூறுவதாக நீங்கள் எப்பொழுதும் கருத வேண்டும். பிரம்மாவே அதனை உங்களுக்குக் கூறுகிறார் என எண்ணாதீர்கள். சிவபாபாவே பொறுப்பு. இது அவரது இரதம். ஆகையால், அனைத்தையம் அவர் சரியாக்குவார். அவர் கூறுகிறார்: நான் இங்கிருக்கிறேன். சிவபாபாவே அனைத்தையும் கூறுகிறார் என எப்பொழுதும் கருதுங்கள்; இவருக்கு எதுவும் தெரியாது. எப்பொழுதும் இவ்வாறு சிந்தியுங்கள். இந்த நம்பிக்கை இருக்க வேண்டும். சிவபாபா கூறுகிறார்: தொடர்ந்தும் நான் கூறுவதைச் செவிமடுங்கள், நீங்கள் தொடர்ந்தும் நன்மை பெறுவீர்கள். இந்த பிரம்மா ஏதாவது கூறினாலும் நானே பொறுப்பாவேன். குழந்தைகளாகிய நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம், உங்கள் ஸ்திதி மேலும் உறுதியாகும். இந்த நம்பிக்கையின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் சக்தியையும் பெறுவீர்கள். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமான பலத்தைப் பெறுவீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றிச் சேவை செய்பவர்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றனர். பலர் பெருமளவு சரீர உணர்வைக் கொண்டுள்ளனர். பாபா எவ்வாறு குழந்தைகள் அனைவருடனும் அதிகளவு அன்புடன் பழகுகிறார் எனப் பாருங்கள். அவர் தொடர்ந்தும் அனைவருடனும் உரையாடுகின்றார். அவர் குழந்தைகளிடம் வினவுகிறார்: நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்களா? எந்தச் சிரமமும் இல்லை, அல்லவா? அவர் குழந்தைகளிடம் அத்தகைய அன்பைக் கொண்டிருக்கிறார். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களை அதிகளவில் நேசிக்கிறார்! ஸ்ரீமத்திற்கு அமைய நீங்கள் சேவை செய்யும் அளவிற்கேற்ப, நீங்கள் அன்பைப் பெறுகிறீர்கள். சேவையில் மட்டுமே நன்மை இருக்கிறது. சேவைக்காக உங்களது எலும்புகளையும் கொடுங்கள். குழந்தைகள் தொடர்ந்தும் முழு நேரமும் சேவை செய்யும் பொழுது, இதயத்தில் அமர்ந்திருப்பதுடன், முதற்தரமான குழந்தைகள் எனவும் அறியப்படுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்கையில், எவர் மீதும் தீய சகுனங்கள் ஏற்படலாம்; மாயையின் எதிர்ப்பு இருக்கிறது. தீய சகுனங்களின் காரணமாக அவர்களால் இந்த ஞானத்தைப் பெற முடியாதுள்ளது. சிலர் தொடர்ந்தும் பௌதீகச் சேவையைக் களைப்பின்றிச் செய்கின்றனர். அனைவரையும் சந்தோஷ பூமியின் அதிபதிகள் ஆக்குவதே உங்களது கடமையாகும். எவருக்கும் துன்பம் கொடுக்காதீர்கள். சிலருக்கு இந்த ஞானம் இல்லாததால், பெருமளவு துன்பத்தைக் கொடுக்கின்றனர். பின்னர் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாக்களதும் பரமாத்மாவினதும் விளக்கத்தையும், எவ்வாறு ஆத்மாக்களினுள் 84 பிறவிகளின் அழிவற்ற பாகங்கள் பதியப்பட்டுள்ளன என்ற விளக்கத்தையும் கொடுங்கள். அவை என்றுமே மாற மாட்டாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையை உடையவர்கள், ஒருபொழுதும் தளம்புவதில்லை. பலர் தளம்பல் அடைகின்றனர். இறுதியில் வைக்கோற் போர் தீ மூட்டப்படும் பொழுது, நீங்கள் அசைக்க முடியாதவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். மிக நல்ல குழந்தைகள் தொடர்ந்தும் சேவை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இதயத்தில் அமர்ந்திருக்கின்றனர். பலர் மிக விரைவாகத் தொடர்ந்தும் முன்னேறிச் செல்கின்றனர். அவர்கள் பெருமளவு முயற்சியைச் செய்கின்றனர். அவர்கள் சேவை செய்வதில் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றனர். பாபா உங்களிடம் உள்ள தெய்வீகக் குணங்களைப் பற்றியே பேசுகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களது எலும்புகளையும் சேவைக்காகக் கொடுங்கள். எவற்றைப் பற்றியும் சந்தேகத்தைக் கொண்டிராதீர்கள். சேவை செய்வதால், அனைவருக்கும் துன்பத்தை அன்றி, சந்தோஷத்தைக் கொடுங்கள்.

2. நம்பிக்கையின் சக்தி மூலம் உங்களது ஸ்திதியை அசைக்க முடியாததாக்கிக் கொள்ளுங்கள். தந்தையே பொறுப்பு ஆதலால், நீங்கள் எந்த ஸ்ரீமத்தைப் பெற்றாலும் அதில் நன்மையே அமிழ்ந்துள்ளது. ஆகவே, கவலைப்படாதீர்கள்!

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சூட்சுமமான அல்லது கடுமையான பந்தனங்களை அழித்து, உங்களின் யோகியுக்த ஸ்திதியால் பந்தனத்தில் இருந்து விடுபடுவீர்களாக.

1)யோகியுக்தாக இருப்பதன் அடையாளம், பந்தனத்தில் இருந்து விடுபட்டு இருப்பதாகும். யோகியுக்த் ஆகுவதற்குப் மிகப் பெரியதும் இறுதியானதுமான பந்தனம், உங்களைப் புத்திசாலிகள் எனக் கருதுவதும் ஸ்ரீமத்தை உங்களின் சொந்தப் புத்தியின் அற்புதம் எனக் கருதுவதுமே ஆகும். இது உங்களின் சொந்தப் புத்தியை ஸ்ரீமத்துடன் கலப்பதாகும். இது புத்தியின் அகம்பாவம் எனப்படுகிறது. 2) யாராவது உங்களுக்கு ஒரு பலவீனத்தைப் பற்றிய சமிக்கையை வழங்கும்போது அல்லது தீங்கான ஒன்றைக் கூறும்போது, உங்களுக்குள் ஏதாவது வீணான எண்ணங்கள் ஏற்படுமாயின், அதுவும் ஒரு பந்தனமே ஆகும். இந்த பந்தனங்களை நீங்கள் கடந்து, வெற்றி - தோல்வி, புகழ்ச்சி - இகழ்ச்சி என்பனவற்றைச் சமமாகக் கருதும்போது, நீங்கள் முற்றிலும் பந்தனத்தில் இருந்து விடுபட்டவர் எனப்படுவீர்கள்.

சுலோகம்:
ஏதாவதொரு செயலைச் செய்வதற்கு முன்னர், அனைத்தையும் கருத்தில் கொள்வதே ஒரு ஞானம் நிறைந்த ஆத்மாவின் பண்பு ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.

ஓர் அறியாப் பிள்ளை, தீங்கு செய்யக்கூடிய ஒரு பொருளை ஒரு பொம்மையாகக் கருதினால், அதைக் கைவிடுவதற்காக அவருக்கு வேறு ஏதாவது கொடுக்கப்படுகிறது. அதேபோல், யாராவது ஒருவர் தற்காலிகமான மரியாதை அல்லது கௌரவத்தை விரும்பினால் அல்லது ஏதாவது தற்காலிகமான ஆசையைக் கொண்டிருந்தால், அவருக்கு அந்த மரியாதையை வழங்குங்கள், நீங்கள் பணிவுடன் இருங்கள். அந்த வேளையில் நீங்கள் அவரைத் திருத்த முயற்சி செய்தால், முரண்பாடுகளே ஏற்படும். ஆகவே, அத்தகைய வேளையில் யுக்தியுக்த் ஆகச் செயல்படுங்கள். அத்துடன் கருணைநிறைந்தவராகி, மரியாதையுடன் மன்னியுங்கள். அனைத்திற்கும் முதலில், அவர் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். அதன் மூலம் அது தீங்கானது என்பதை அவர் உணர்வார்.