25.11.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குவதில் அக்கறை கொண்டிருங்கள். எந்தப் பலவீனங்களும் எஞ்சியிருக்கவில்லை என்பதையும், மாயை உங்களைக் கவனயீனமானவர்கள் ஆக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் உதடுகளிலிருந்து எத்ததைய மங்களகரமான வார்த்தைகள் சதா வெளிப்பட வேண்டும்?பதில்:
இந்த மங்களகரமான வார்த்தைகளைச் சதா கூறுங்கள்: நாங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுவோம், அதை விடச் சற்றேனும் குறைந்து விட மாட்டோம். நாங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தோம், நாங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றோம். எவ்வாறாயினும், இந்த இலக்கு மிக உயர்ந்தது. எனவே, நீங்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள். உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன்னால் வைத்திருந்து, தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள், மனச்சோர்வடைந்து விடாதீர்கள்.ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இங்கு நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்கும்போது, சகோதர சகோதரிகளுக்கு விளங்கப்படுத்துங்கள்: இங்கு ஆத்ம உணர்வில் அமர்ந்திருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் இதனை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்களுக்கு இப்பொழுது இவ்விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது. நான் ஓர் ஆத்மா, எனது தந்தை எனக்குக் கற்பிக்க வந்து விட்டார். நான் எனது பௌதீக அங்கங்கள் மூலம் கற்கின்றேன். தந்தையும் பௌதீக அங்கங்களின் ஆதாரங்களை எடுக்கின்றார். அவர் இவரினூடாகக் கூறுகின்ற முதலாவது விடயம்: தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த மார்க்கம் ஞான மார்க்கத்திற்கு உரியது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது; இது பக்தி மார்க்கம் என அழைக்கப்படுவதில்லை. உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்ற ஒரேயொரு பாடம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இது மிக அத்தியாவசியமானது. வேறெந்தச் சத்சங்கங்களிலும் இதனை எவ்வாறு கூறுவதென்பதை அவர்கள் அறியார்கள். இந்நாட்களில் போலியான ஸ்தாபனங்கள் பலவற்றில், அவர்கள் நீங்கள் கூறுவதைக் கேட்டு, அதை மீண்டும் அப்படியே கூறக்கூடும். ஆனால் அதன் உண்மையான அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அதனை விளங்கப்படுத்துவதற்கான விவேகத்தை அவர்கள் கொண்டிருக்க மாட்டார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் கூறுகின்றார்: எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது பழைய உலகம் எனப் பகுத்தறிவும் கூறுகின்றது. புதிய உலகிற்கும், பழைய உலகிற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. அது தூய உலகமும், இது தூய்மையற்ற உலகமும் ஆகும். நீங்கள் அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து, எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! கீதையில் ஒரு கூற்று இருக்கின்றது. சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், நீங்கள் சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். முதலில் உங்களுக்குச் சரீர உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வருகின்றீர்கள். நினைவு கூரப்படுகின்றது: நீங்கள் தனியாகவே வந்தீர்கள், தனியாகவே திரும்பிச் செல்ல வேண்டும். மக்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது நடைமுறையில் இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் இப்பொழுது நினைவு யாத்திரை மூலமும், யோக சக்தி மூலமும் தூய்மை ஆகுகின்றோம். இதுவே இராஜயோகத்தின் சக்தியாகும். மற்றையது ஹத்தயோகமாகும். அதன் மூலம் மனிதர்கள் குறுகிய காலத்திற்கே ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றனர். சத்திய யுகத்தில் நீங்கள் ஹத்தயோகம் தேவைப்படாத வகையில், அங்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள். இந்த அழுக்கடைந்த உலகிலேயே நீங்கள் அதைச் செய்கின்றீர்கள். இது பழைய உலகம். இப்பொழுது கடந்து சென்று விட்ட புதிய உலகான சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. எவரும் இதை அறியார்கள். அங்கு, அனைத்தும் புதிதாகவே இருககின்றது. “விழித்தெழுங்கள், ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்!” என்ற பாடல் இருக்கின்றது. புதிய யுகம் சத்திய யுகமும், பழைய யுகம் கலியுகமும் ஆகும். எவருமே இதனைச் சத்திய யுகம் என அழைக்க மாட்டார்கள். இப்பொழுது இது கலியுகம். நீங்கள் இப்பொழுது அந்தச் சத்திய யுகத்திற்காகக் கற்கின்றீர்கள். கற்பதன் மூலம் புதிய உலகில் இராஜ அந்தஸ்தைப் பெற முடியும் என வேறு எந்த ஆசிரியரும் உங்களுக்குக் கூறமாட்டார். தந்தையைத் தவிர வேறு எவராலும் இவ்வாறு கூற முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் ஞாபகப்படுத்தப்படுகின்றது. கவனயீனமாக இருக்காதீர்கள். பாபா தொடர்ந்தும் உங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் எங்கு அமர்ந்திருந்தாலும் அல்லது என்ன வியாபாரத்தைச் செய்தாலும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறே அதைச் செய்யுங்கள். உங்கள் வியாபாரத்தில் ஏதாவது சிரமம், அல்லது பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் இயன்றவரை நினைவில் அமர்வதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். ஏனெனில், அப்பொழுதே ஆத்மாக்களாகய நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். வேறெந்த வழியும் இல்லை. நீங்கள் புதிய உலகிற்காகவே இராஜயோகம் கற்கின்றீர்கள், கலியுக ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. மாயை ஆத்மாக்களின் சிறகுகளைத் துண்டித்து விட்டாள். ஆத்மாக்கள் பறக்கின்றனர், இல்லையா? அவர்கள் தங்கள் சரீரங்களை நீக்கி, வேறொன்றை எடுக்கின்றனர். ஆத்மாவே அனைத்திலும் அதிவேகமான ரொக்கட் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்புதிய விடயங்களைக் கேட்கும்பொழுது, வியப்படைகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அத்தகைய சின்னஞ்சிறிய ரொக்கட்கள்! 84 பிறவிகளின் பாகம் உங்கள் ஒவ்வொருவரிலும் பதியப்பட்டுள்ளது. அத்தகைய விடயங்களை உங்கள் இதயத்தில் வைத்திருப்பதால் நீங்கள் உற்சாகம் அடைவீர்கள். ஒரு பாடசாலையில் மாணவர்கள் தங்கள் கல்வியை நினைவு செய்கின்றார்கள். உங்கள் புத்தியில் இப்பொழுது என்ன இருக்கின்றது? புத்தி உங்கள் சரீரத்தில் இல்லை. மனமும், புத்தியும் ஆத்மாவான உங்களில் இருக்கின்றன. ஆத்மாவே கற்கின்றார். ஆத்மாவே ஒரு தொழிலைச் செய்கின்றார். சிவபாபாவும் ஓர் ஆத்மாவே, ஆனால் அவர் “பரம்பொருள்” என அழைக்கப்படுகின்றார். அவர் ஞானக்கடல். அவர் மிகவும் சின்னஞ்சிறிய புள்ளி. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் சம்ஸ்காரங்களினால் நிரப்பப்படுவதை எவரும் அறியார். நீங்கள் இப்பொழுது யோக சக்தியால் தூய்மை ஆகுகின்றீர்கள். அதற்காக, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் கல்வியில் நீங்கள் தோல்வி அடையாதிருப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இதில், முற்தரமான பாடம்: இந்த ஆத்மாவாகிய நான் சதோபிரதான் ஆகவேண்டும். எந்தப் பலவீனமும் எஞ்சியிருக்கக்கூடாது. இல்லாவிடில், நீங்கள் தோல்வி அடைவீர்கள். மாயை உங்களை அனைத்தையும் மறந்து விடச் செய்கின்றாள். ஆத்மாக்களாகிய நீங்கள் நாள் முழுவதும் பாவச் செயல்கள் எதுவும் செய்யாதிருப்பதற்காக அட்டவணை ஒன்றை வைத்திருக்க விரும்புகின்றீர்கள், எனினும், மாயை அட்டவணையை வைத்திருக்க உங்களை அனுமதிப்பதில்லை. நீங்கள் மாயையின் பிடிக்குள் சிக்கிக் கொள்கின்றீர்கள். நான் ஓர் அட்டவணை வைத்திருக்க வேண்டும் என உங்கள் இதயம் கூறுகின்றது. வியாபாரிகள் எப்பொழுதும் தங்கள் இலாப, நட்டக் கணக்கை வைத்திருக்கின்றனர். இது உங்கள் மிகப் பெரிய கணக்காகும். இது 21 பிறவிகளுக்கான வருமானம். எனவே, நீங்கள் கவனயீனமாக இருக்கவோ அல்லது எத்தவறுகளும் செய்யவோ கூடாது. குழந்தைகளாகிய உங்களிற் சிலர் கவனயீமானவர்களாகி, பல தவறுகள் செய்கின்றீர்கள். சில குழந்தைகள் இந்த பாபாவைச் சூட்சும லோகத்திலும், அத்துடன் சுவர்க்கத்திலும் பார்க்கின்றனர். இந்த பாபாவும் பெரும் முயற்சி செய்வதுடன், தொடர்ந்தும் ஆச்சரியப்படுகின்றார்: நான் பாபாவின் நினைவிலேயே நீராடுகின்றேன், எனது உணவை உண்கின்றேன். இருந்தும் நான் அவரை மறந்து விடுகின்றேன். பின்னர் மீண்டும் அவரை நினைவுசெய்ய ஆரம்பிக்கின்றேன். இது மிகப்பெரிய பாடமாகும். இதில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. கீதையில் கூறப்படுகின்றது: உங்கள் சரீரங்களையும், சரீர உறவினர்கள் அனைத்தையும் துறந்து விடுங்கள். அப்பொழுது, ஆத்மா மாத்திரமே எஞ்சியிருக்கின்றார். உங்கள் சரீரத்தை மறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! ஆத்மாக்களே தூய்மை அற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் உள்ளனர். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என மனிதர்கள் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என்று அவர்கள் கூறுகின்றனர். அத்துடன், அவரும் ஓர் ஆத்மாவாக இருப்பதால், ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என அவர்கள் கூறுகின்றனர். தமோகுணி மனிதர்கள் தமோகுணி கற்பித்தல்களையே கொடுக்கின்றனர்; அவர்களால் உங்களைச் சதோகுணியாக்க முடியாது. பக்தி மார்க்கத்தில், நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். அனைத்தும் முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர் ரஜோ, தமோ நிலைகளினூடாகச் செல்கின்றன. ஸ்தாபனையும், விநாசமும் இருக்கின்றன. தந்தை புதிய உலகின் ஸ்தாபனையைத் தூண்டுகின்றார், பின்னர் இப்பழைய உலகின் விநாசம் இடம்பெறுகின்றது. கடவுளே புதிய உலகைப் படைப்பவர். இப்பழைய உலகம் மாற்றமடைந்து, புதியதாகும். இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் புதிய உலகிற்கான அடையாளங்கள். அவர்களே புதிய உலகின் அதிபதிகளாவர். திரேதாயுகம் கூட புதிய உலகம் என அழைக்கப்படுவதில்லை. கலியுகம் பழைய உலகமும், சத்திய யுகம் புதிய உலகமும் ஆகும். கலியுகத்தின் இறுதிக்கும், சத்திய யுகத்தின் ஆரம்பத்திற்கும் இடையில் இந்தச் சங்கமயுகம் இருக்கின்றது. ஒருவர் எம்.ஏ அல்லது பீ.ஏ பட்டம் படித்து, மிக மேன்மையானவர் ஆகுகின்றார். நீங்கள் இக்கல்வி மூலம் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அவர்களை அதிமேன்மையானவர்கள் ஆக்கியவர் யார் என்பதை உலகிலுள்ள எவரும் அறியார். இப்பொழுது நீங்கள் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை வரலாற்றையும் அறிவீர்கள். இது ஞானம் ஆகும். பக்தி மார்க்கத்தில், இந்த ஞானத்தின் எதுவுமே இருப்பதில்லை. அவர்கள் உங்களுக்குப் பௌதீகக் கிரியைகளையே கற்பிக்கின்றார்கள். பெருமளவு பக்தி இடம்பெறுகின்றது. அவர்கள் அதைப் பற்றி அதிகளவில் பேசுகின்றனர். அது மிக அழகாகத் தோன்றுகின்றது. ஒரு விதையில் என்ன அழகு இருக்கின்றது? அத்தகைய சின்னஞ்சிறிய விதை மிகப் பெரிதாக ஆகுகின்றது. அது பக்தியின் விருட்சமாகும். பல பௌதீகச் கிரியைகள் இருக்கின்றன. இந்த ஞானத்தில் ஒரேயொரு வார்த்தையே இருக்கின்றது: மன்மனாபவ! தந்தை கூறுகின்றார்: தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்கு, என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! இராவண இராச்சியத்தில், அனைவரும் தூய்மையற்றும், சந்தோஷமற்றும் இருக்கின்றனர். இராம இராச்சியத்தில் அனைவரும் தூய்மையாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர். இராம இராச்சியம், இராவண இராச்சியம் என்ற சொற்பதங்கள் இருக்கின்றன. குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவரும் இராம இராச்சியத்தைப் பற்றி அறியார். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். வேறு எவருமன்றி, நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளின் இரகசியத்தை அறிவீர்கள். கடவுள் “மன்மனாபவ” என்று கூறுகின்றார் என ஏனையோர் கூறினாலும், அதனால் என்ன? எவ்வாறு நீங்கள் முழுமையான 84 பிறவிகளையும் எடுத்திருக்கின்றீர்கள் என அவர்களால் விளங்கப்படுத்த முடியாது. சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. கீதையை உரைப்பவர்களிடம் சென்று, அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்! இந்த ஞானம் முழுவதும் இப்பொழுது உங்கள் புத்தியில் சொட்டுச் சொட்டாக ஏறுகின்றது. பாபா உங்களிடம் வினவுகின்றார்: நாங்கள் முன்னர் சந்தித்திருக்கின்றோமா? நீங்கள் பதில் அளிக்கின்றீர்கள்: ஆம் பாபா, நாங்கள் முன்னைய கல்பத்தில் சந்தித்தோம். பாபா உங்களிடம் வினவியதும், நீங்கள் அதற்கு அர்த்தத்துடன் சரியான பதில் கூறுகின்றீர்கள். நீங்கள் வெறுமனே கிளிகளைப் போன்று பேசுவதில்லை. பின்னர் பாபா வினவுகின்றார்: ஏன் நாங்கள் சந்தித்தோம்? நீங்கள் எதைப் பெற்றீர்கள்? ஆகவே, நீங்கள் பதில் அளிக்கின்றீர்கள்: நாங்கள் உலக இராச்சியத்தைப் பெற்றோம், அனைத்தும் அதில் அடங்கியுள்ளது. நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுகின்றீர்கள் எனக் கூறினாலும், உலக அதிபதி ஆகுவது என்பது அரசர், அரசி, தேவ வம்சம் போன்றவற்றை உள்ளடக்குகின்றது. அரசன், அரசி, பிரஜைகள் அனைவருமே உலக அதிபதிகள் ஆகுவார்கள். இது மங்களகரமான வார்த்தைகளைப் பேசுதல் என அறியப்படுகின்றது. நான் சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவேன், அதற்குச் சற்றும் குறைவாக அல்ல. தந்தை கூறுகின்றார்: ஆம் குழந்தைகளே! முழு முயற்சி செய்யுங்கள்! உங்களின் அட்டவணையைப் பார்த்து, உங்களையே வினவுங்கள்: இந்த நிலையில் நான் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியுமா? எத்தனை பேருக்கு நான் பாதையைக் காட்டியிருக்கின்றேன்? எந்தளவிற்கு நான் குருடருக்கு ஓர் கைத்தடியாகி விட்டேன்? நீங்கள் எந்தச் சேவையும் செய்யவில்லை என்றால், பிரஜைகளில் ஒருவராகவே ஆகுவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் இப்பொழுது இச்சரீரத்தை நீக்க நேரிட்டால், என்ன அந்தஸ்தைப் பெறுவேன்? இலக்கு மிக உயர்வானது. எனவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில குழந்தைகள் தாங்கள் உண்மையிலேயே நினைவில் இருப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்வதால், அட்டவணையை வைத்திருப்பதில் என்ன பயன் என நினைக்கின்றனர். அதுவே மனந்தளர்ந்து போகுதல் எனப்படுகின்றது. அவ்வாறாகவே அவர்கள் கற்கின்றார்கள்; அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. வெறுமனே அமர்ந்திருந்து கொண்டு, உங்களை மிகவும் திறமைசாலி என்றோ, நீங்கள் இறுதியில் தோல்வி அடைவீர்கள் என்றோ நினைக்காதீர்கள். நீங்கள் உங்களுக்கு நன்மை பயக்க வேண்டும். உங்களின் இலக்கும், குறிக்கோளும் உங்கள் முன்னாலேயே இருக்கின்றன. நான் கற்று, இவ்வாறாக வேண்டும். இதுவும் ஓர் அற்புதமேயாகும். கலியுகத்தில் அவர்களின் இராச்சியம் இருப்பதில்லை. சத்திய யுகத்தில் அவர்களின் இராச்சியம் எங்கிருந்து வந்தது? அனைத்தும் இக்கல்வியிலேயே தங்கியுள்ளது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று, தேவர்கள் வெற்றியடைந்து இராச்சியத்தைப் பெற்றதாக இல்லை. எவ்வாறு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற முடியும்? கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் மத்தியில் கூட யுத்தம் இடம்பெறவில்லை. யுத்தம் பற்றிய விடயம் அர்த்தமற்றது. முதலில், தந்தை கூறுவதை அவர்களுக்குக் கூறுங்கள்: சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமற்றவர்களாகவே வந்தீர்கள், இப்பொழுது நீங்கள் சரீரமற்றவர்களாகவே வீடு திரும்ப வேண்டும். தூய ஆத்மாக்களால் மாத்திரமே வீடு திரும்ப முடியும். தமோபிரதான் ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. ஆத்மாக்களின் இறகுகள் துண்டிக்கப்பட்டு விட்டன. மாயை உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்கிவிட்டாள். நீங்கள் தமோபிரதானாக இருப்பதால், தொலைவிலுள்ள அப்புனித இடத்திற்குப் பயணிக்க உங்களால் முடியாது. ஆரம்பத்தில், நீங்கள் பரந்தாமத்தில் வசித்தீர்கள் என ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு ஒரு பாகத்தை நடிப்பதற்காக, பஞ்ச தத்துவங்களாலான பொம்மையை (சரீரம்) ஏற்றுக் கொண்டீர்கள். ஒருவர் மரணிக்கும்போது, அவர் சுவர்க்கத்தில் வசிப்பவராகி விட்டார் என மக்கள் கூறுகின்றனர். யார் அவ்வாறு ஆகியவர்? சரீரம் அங்கு சென்றதா அல்லது ஆத்மா அங்கு சென்றாரா? சரீரம் எரியூட்டப்பட, ஆத்மா மாத்திரம் எஞ்சியிருக்கின்றார். ஆத்மாவால் இன்னமும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. மற்றவர்கள் தங்களுக்குக் கூறுவதையே மக்கள் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் பக்தியை மாத்திரமே கற்பிக்கின்றனர். அவர்கள் எவரது தொழிலையும் அறியார்கள். அவர்கள் கூறுகின்றனர்: சிவனின் வழிபாடே அதியுயர்வானது. சிவனே அதிமேலானவர். எனவே, அவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அவர்கள் ஒரு மாலையையும் கொடுக்கின்றனர். அவர்கள் உங்களிடம் “சிவா, சிவா” எனக்கூறி, மாலையின் மணிகளை உருட்டுமாறு கூறுகின்றனர். அவர்கள் ஒரு மாலையை எடுத்து, எவ்விதப் புரிந்துணர்வுமின்றி, தொடர்ந்தும் “சிவா, சிவா” எனக் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்கின்றனர். குருமார் பல்வேறு வகையான கற்பித்தல்களைக் கொடுக்கின்றனர். இங்கு ஒரேயொரு விடயமே இருக்கின்றது. தந்தையே கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் வாய் “சிவா, சிவா” என மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஒரு குழந்தை தனது தந்தையின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்குமா? இவ்விடயங்கள் அனைத்தும் மறைமுகமானவை. நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என எவருமே அறியார். முன்னைய கல்பத்தில் இதனைப் புரிந்து கொண்டவர்கள் மீண்டும் அதைப் புரிந்து கொள்வார்கள். புதிய குழந்தைகள் தொடர்ந்தும் வருவார்கள், தொடர்ந்தும் விரிவாக்கம் இடம்பெறுகின்றது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, நாடகம் உங்களுக்குக் காட்டுகின்ற காட்சிகள் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிப்பீர்கள். எதிர்காலத்தில் நிகழப் போகின்ற காட்சிகளை, பாபா முற்கூட்டியே கொடுக்க மாட்டார். இல்லாவிடில், அது செயற்கையானது போன்றே இருக்கும். இவ்விடயங்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இப்பொழுது நீங்கள் புரிந்துணர்வைப் பெற்று விட்டீர்கள், பக்தி மார்க்கத்தில், நீங்கள் விவேகம் அற்றவர்களாக இருந்தீர்கள். பக்தியும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பழைய உலகிலேயே தங்கியிருக்கப் போவதில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மாணவர்களின் புத்தியில் அவர்களின் கல்வி இருக்கின்றது. உங்கள் புத்திகளும் பிரதான கருத்துக்களைக் கிரகிக்க வேண்டும். அவர்களில் முதலாவது விடயமான அல்ஃபா உறுதியாக்கப்பட்ட பின்னரே நீங்கள் மேற்கொண்டு தொடர வேண்டும். இல்லாவிடில், அவர்கள் தொடர்ந்தும் பயனற்ற கேள்விகளையே கேட்டுக் கொண்டிருப்பார்கள். கீதையின் கடவுள் சிவன் என்றும், அது முற்றிலும் சரியானதே என்றும் இன்ன இன்னார் கூறுவதாகச் சில குழந்தைகள் எழுதிக் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு கூறினாலும், அது அவர்கள் புத்தியில் இருப்பதில்லை. தந்தை வந்திருப்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தால், தாங்கள் வந்து அத்தகைய தந்தையைச் சந்தித்து, தங்களின் ஆஸ்தியைக் கோர விரும்புவதாகக் கூறியிருப்பார்கள். ஒருவரேனும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. ஒரு நபரேனும் அத்தகைய கடிதத்தை உடனடியாக எழுதியிருக்கவில்லை! இந்த ஞானம் மிக நல்லது என அவர்கள் எழுதினாலும், தாங்கள் நீண்ட காலம் பிரிந்திருந்தவரும், பக்தி மார்க்கத்தில் தாங்கள் தேடி அலைந்தவரும், இப்பொழுது அவர்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கு வந்திருப்பவருமான அத்தகைய அற்புதமான தந்தையிடம் ஓடி வருவதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை! அவர்கள் பின்னரே வெளிப்படுவார்கள். தந்தையே அதிமேலானவரான கடவுள் என்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டிருப்பின், அவர்கள் அவருக்கு உரியவர்களாகவே இருக்க வேண்டும். அவர்களின் புத்தி திறந்து கொள்ளும் வகையில், நீங்கள் அத்தகைய விளக்கத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் வியாபாரத்தை மேற்கொள்ளும்போது, உங்கள் ஆத்மாவைத் தூய்மையாக்குவதற்கு நேரத்தை ஒதுக்குவதுடன், நினைவில் இருப்பதற்கும் முயற்சி செய்யுங்கள். ஒருபோதும் அசுர செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.2. உங்களுக்கும், பிறருக்கும் நன்மை செய்யுங்கள். கற்று, ஏனையோருக்கும் கற்பியுங்கள். உங்களை அதி திறமைசாலி எனக் கருதாதீர்கள். நினைவு சக்தியைச் சேமியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உலகிற்குப் பாக்கியத்தை அருள்பவராகி, பெயரையும் புகழையும் துறப்பதனால், அனைவரினதும் அன்பையும் பெறுவீர்களாக.தந்தை பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறியிருப்பினும், தந்தையின் பெயரே அதிகம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. அதேபோல், நீங்களும் தற்காலிகமான பெயருக்கும் புகழிற்கும் அப்பாற் செல்ல வேண்டும், அப்போது நீஙகள் சதாகாலமும் அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள். பெயருக்கும் புகழுக்கும் பிச்சைக்காரர்களாக இருப்பதைத் துறப்பவர்களே, உலகிற்குப் பாக்கியத்தை அருள்பவர்கள் ஆகுகின்றார்கள். உங்கள் கர்மத்தின் பலனே இயல்பாக உங்கள் முன்னிலையில் அதன் முழு ரூபத்தில் வரும். ஆகவே, எல்லைக்கு உட்பட்ட ஆசைகளைக் கூட அறியாதவர்கள் ஆகுங்கள். பழுக்காத பழத்தை உண்ணாதீர்கள், ஆனால் அதைத் துறந்து விடுங்கள், அப்போது பாக்கியமானது உங்களைத் தொடரும்.
சுலோகம்:
நீங்களே தந்தையாகிய கடவுளின் குழந்தைகள் ஆதலால், உங்கள் புத்தியானது சதா சிம்மாசனத்தில் அமரட்டும்.அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி)
நீங்கள் விரும்பிய சேவையைப் பற்றிச் சி;ந்தித்து, திட்டங்களைத் தீட்டலாம். ஆனால் என்ன நடக்குமோ என யோசித்தவாறு அதனைச் செய்யாதீர்கள். ஆனால் சரீரமற்றவராகவும், ஒரு பற்றற்ற பார்வையாளராகவும் இருந்தவாறு அதனைச் செய்யுங்கள். ஒன்றைச் சிந்தித்து, அதற்கான ஒரு திட்டத்தைத் தீட்டுங்கள், பின்னர் உடனடியாக உங்கள் ஸ்திதியை வெறுமை ஆக்குங்கள். அந்த ஸ்திதிக்கான தேவை இப்பொழுது இருக்கின்றது. முகில்கள் வந்து செல்வதைப் போல், உங்கள் சரீரமற்ற ஸ்திதி மூலம் மிகவும் இலகுவாக, அனைத்து பாதகமான சூழ்நிலைகளையும் வெற்றிகொள்ள முடியும். சரீரமற்றவராக இருக்கின்ற ஒருவர், ஆட்ட அசைக்க முடியாதவராக இருந்தவாறு எந்தவொரு விளையாட்டையும் பார்க்கிறார்.