26.10.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 15.10.2007 Om Shanti Madhuban
சங்கம யுகத்தில் ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு,உங்களுடைய சுமைகள், பந்தனங்கள் அனைத்தையும் தந்தையிடம் கொடுத்துவிட்டு,இலேசாகவும், ஒளியாகவும் (டபிள் லைற்) ஆகுங்கள்.
இன்று, உலகைப் படைப்பவரான பாப்தாதா, தனது முதலாவது படைப்புக்களான, அதாவது தனது அதி அதிர்ஷ்டசாலிகளான, மற்றும் அழகான குழந்தைகளுடன் ஒரு மேலாவை, அதாவது சந்திப்பைக் கொணடாடுகிறார். சில குழந்தைகள் பாபாவிற்கு முன்னால் நேரடியாக இருந்து தமது கண்களால் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர், எல்லாத் திசைகளிலும் உள்ள பல குழந்தைகள் அவருடைய இதயத்தில் அமிழ்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் மூன்று வகையான பாக்கியங்களின் மூன்று பிரகாசிக்கும் நட்சத்திரங்களை பாப்தாதா பார்க்கின்றார். முதலாவது பாக்கியம் பாப்தாதாவிடமிருந்து அவர்கள் பெற்றுள்ள மேன்மையான பராமரிப்பாகும், இரண்டாவது பாக்கியம் ஆசிரியரிடமிருந்து அவர்கள் பெற்றுள்ள கல்வியாகும், மூன்றாவது பாக்கியம் சற்குருவிடமிருந்து அவர்கள் பெற்றுள்ள ஆசீர்வாதங்களின் பிரகாசிக்கும் நட்சத்திரம் ஆகும். எனவே, நீங்கள் அனைவரும் உங்கள் நெற்றியில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கின்றீர்கள், அல்லவா? நீங்கள் பாப்தாதாவுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கின்றீர்கள், இருந்தபோதிலும், இந்த மூன்று உறவுமுறைகளும் வாழ்க்கையில் அவசியமானவை. நீண்ட காலம் தொலைந்து, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட, அன்பிற்கினிய குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் அவற்றை இலகுவாகவே அடைந்துவிட்டீர்கள். நீங்கள் அவற்றை அடைந்துவிட்டீர்கள், அல்லவா? நீங்கள் அந்த போதையைக் கொண்டிருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் உங்கள் இதயங்களில் தொடர்ந்தும் இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள், அல்லவா? “ஆஹா பாபா, ஆஹா! ஆஹா ஆசிரியர், ஆஹா! ஆஹா சற்குரு, ஆஹா!” உலகிலுள்ள மக்கள், தாங்கள் மகாத்மா என அழைக்கின்ற ஒரு லௌகீக குருவிடமிருந்து ஒரு ஆசீர்வாதத்தைப் பெறுவதற்குக்கூட அதிக முயற்சி செய்கின்றனர். ஆனால் தந்தையோ, நீங்கள் பிறப்பெடுத்த கணம் முதல் உங்களை ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்கச் செய்கின்றார். தந்தையான கடவுள் இந்தளவிற்குத் தன்னையே அர்ப்பணிக்கின்ற, இத்தகைய மகா பாக்கியத்தை உங்கள் கனவுகளிலேனும் நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்தீர்களா? பக்தர்கள் கடவுளின் பாடல்களைப் பாடுகின்றனர், தந்தையான கடவுள் யாருடைய பாடல்களைப் பாடுகின்றார்? அதிர்ஷ்டசாலிக் குழந்தைகளான உங்களுடைய பாடல்களையாகும்.
இப்பொழுதுகூட, நீங்கள் அனைவரும் உங்களுடைய வெவ்வேறு நாடுகளிலிருந்து எந்த விமானத்தில் பறந்து வந்திருக்கிறீர்கள்? பௌதீக விமானங்களிலா? அல்லது, நீங்கள் அனைவரும் எல்லாத் திசைகளிலிருந்தும் இறையன்பு என்ற விமானத்தில் இங்கு வந்திருக்கிறீர்களா? கடவுளின் விமானம் உங்களை மிக இலகுவாக இங்கே கொண்டுவந்து சேர்க்கிறது, எவ்வித சிரமங்களும் இல்லை. எனவே, நீங்கள் அனைவரும் இறையன்பு என்ற விமானத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். எனவே, பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும்போது, நீங்கள் முதல் தடவையாக வந்திருந்தாலென்ன, அல்லது நீங்கள் நீண்ட காலமாக வந்துகொண்டிருந்தாலென்ன, ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பையும் பாப்தாதா அறிவார். பாப்தாதாவின் ஒவ்வொரு குழந்தையும், அவர் இளையவரோ, முதியவரோ, மகாவீரரோ, அல்லது முயற்சியாளரோ, குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நீண்ட காலம் தொலைந்து, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டவர்கள். ஏன்? நீங்கள் தந்தையைத் தேடினீர்கள், ஆனால் அவரைக் கண்டுபிடிக்கவில்லை. எவ்வாறாயினும் பாப்தாதா குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரையும் மிகுந்த அன்புடனும், நேசத்துடனும், பரிவுடனும் தேடினார். நீங்கள் அதிகமாக நேசிக்கப்படுவதாலேயே அவர் உங்களைத் தேடினார், ஏனெனில், தனது எந்தக் குழந்தையும் எந்தவொரு சிறப்பியல்பையுமே கொண்டிராமல் இல்லை என்பதைத் தந்தை அறிவார். உங்களுடைய ஏதோவொரு சிறப்பியல்பே உங்களை இங்கே கொண்டு வந்துள்ளது. குறைந்தபட்சம், ஒரு மறைமுகமான ரூபத்தில் இங்கு வந்த தந்தையை நீங்கள் இனங்கண்டுள்ளீர்கள். நீங்கள் கூறினீர்கள், “மேரா பாபா”. நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள், “மேரா பாபா”. “இல்லை, தேரா பாபா” (உங்களுடைய பாபா) என்று கூறுகின்ற யாராவது இருக்கிறீர்களா? நீங்கள் அனைவரும் “மேரா பாபா” என்றே கூறுகிறீர்கள். எனவே, நீங்கள் விஷேடமானவர்கள், அல்லவா? அந்தப் பெரிய விஞ்ஞானிகளாலும், வி.ஐ.பி.களாலும்கூட அவரை இனங்காண முடியவில்லை, ஆனால் நீங்கள் அனைவரும் அவரை இனங்கண்டு, அவரை உங்களுக்குச் சொந்தமாக்கினீர்கள், அல்லவா? எனவே, தந்தையும் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கினார். நீங்கள் இந்தச் சந்தோஷத்தால் பராமரிக்கப்பட்டவாறே பறக்கின்றீர்கள், அல்லவா? நீங்கள் பறக்கின்றீர்கள். நீங்கள் நடக்கவில்லை. நீங்கள் பறக்கின்றீர்கள், ஏனெனில் நடப்பவர்களால் தந்தையுடன் சேர்ந்து வீடு திரும்ப முடியாமல் போய்விடும், தந்தையோ பறந்தே செல்வார். எனவே, வெறுமனே நடப்பவர்களால் எவ்வாறு அவருடன் சேர்ந்து வீடு திரும்ப முடியும்? எனவே, தந்தை தனது குழந்தைகள் அனைவருக்கும் கொடுக்கின்ற ஆசீர்வாதம் என்ன? நீங்கள் உங்களுடைய தேவதை ரூபத்தில் இருப்பீர்களாக! தேவதைகள் பறப்பார்கள், அவர்கள் நடப்பதில்லை, அவர்கள் பறக்கின்றனர். எனவே, நீங்கள் அனைவரும்கூட பறக்கும் ஸ்திதியிலேயே இருக்கின்றீர்கள், அல்லவா? பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள்! அல்லது, சிலவேளைகளில் நடக்கும் ஸ்திதியாகவும், சிலவேளைகளில் பறக்கும் ஸ்திதியாகவும் இருக்கின்றதா? இல்லை? நீங்கள் சதா பறப்பவர்கள், நீங்கள் ஒளியாகவும், இலேசாகவும் (டபிள் லைற்) இருப்பவர்கள், அல்லவா? இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். தந்தை உங்கள் அனைவரிடமிருந்தும் ஓர் உத்தரவாதத்தைப் பெற்றுள்ளார்: உங்களில் எவராவது உங்கள் மனதிலோ அல்லது புத்தியிலோ எவ்வகையான சுமையை வைத்திருந்தாலும், அதைத் தந்தையிடம் கொடுத்துவிடுங்கள், ஏனெனில், அவற்றைப் பெறவே அவர் வந்திருக்கிறார். நீங்கள் தந்தையிடம் உங்கள் சுமைகளைக் கொடுத்துவிட்டீர்களா, அல்லது சிறிதளவைக் கவனமாக மறைத்து வைத்திருக்கிறீர்களா? உங்களிடமிருந்து அதைப் பெறக்கூடியவர் அதைப் பெறுவதால், இதில் சிந்திப்பதற்கு ஏதாவது இருக்கின்றதா? அல்லது, 63 பிறவிகளாக உங்களுடைய சுமைகளைப் பராமரித்த பழக்கம் உங்களிடம் இன்னமும் இருக்கின்றதா? சில குழந்தைகள் சில சமயங்களில் கூறுகின்றனர்: “நாங்கள் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் எமது பழக்கங்களால் வலுக்கட்டாயமாக செய்யவைக்கப்படுகிறோம்.” நீங்கள் இப்பொழுது கட்டாயப்படுத்தப்படவில்லை, அல்லவா? நீங்கள் வலுக்கட்டாயமாக செய்ய வைக்கப்படுகிறீர்களா (மஜ்பூர்), அல்லது, உறுதியானவர்களாக (மஜ்பூத்) இருக்கிறீர்களா? ஒருபோதும் கட்டாயப்படுத்தப்படாதீர்கள், நீங்கள் உறுதியானவர்கள். சக்திகள் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது கட்டாயப்படுத்தப்படுகிறீர்களா? நீங்கள் உறுதியானவர்கள், அல்லவா? நீங்கள் ஒரு சுமையை வைத்திருப்பதை விரும்புகிறீர்களா? உங்களுடைய இதயம் அதில் பற்று வைத்துள்ளதா? உங்களுடைய இதயம் சுமை மீது பற்று வைத்துள்ளதா? விட்டுவிடுங்கள்! அதை விட்டுவிடுங்கள், நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள். நீங்கள் அதைக் கைவிடாததால் சுதந்திரமாக இல்லை. அதைக் கைவிடுவதற்கான வழி, திடசங்கல்ப எண்ணத்தைக் கொண்டிருப்பதேயாகும். சில குழந்தைகள் கூறுகின்றனர்: “நாங்கள் திடசங்கல்ப எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம், ஆனால், ஆனால்…” என்ன காரணம்? நீங்கள் திடசங்கல்ப எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் கொண்டிருக்கும் திடசங்கல்ப எண்ணங்களை நீங்கள் மீட்டல் செய்வதில்லை. அவற்றை உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் மீட்டல் செய்து, சுமை என்றால் என்ன, டபிள் லைற்றாக இருப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது, புரிந்துணரும் பாடநெறியைச் சற்று அதிகமாக கீழ்க்கோடிடுங்கள். நீங்கள் பேசுவதையும், சிந்திப்பதையும் செய்கிறீர்கள், ஆனால் இப்பொழுது, சுமை என்றால் என்ன என்பதையும், டபிள் லைற்றாக இருப்பதென்றால் என்ன என்பதையும் உங்கள் இதயத்தில் புரிந்துகொள்ளுங்கள். வேறுபாட்டை உங்கள் முன்னால் வைத்திருங்கள். ஏனெனில் இப்பொழுது, காலத்தின் நெருக்கத்திற்கேற்ப, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையிலும் எதைப் பார்க்க விரும்புகிறார்? நீங்கள் கூறுவதை நடைமுறையில் செய்து காட்டுவதையாகும். நீங்கள் நினைப்பதைப் பயிற்சியில் இடவேண்டும். ஏனெனில், தந்தையின் ஆஸ்தியும், உங்கள் பிறப்புரிமையும் முக்தியும், ஜீவன் முக்தியும் ஆகும். இந்த அழைப்பிதழையே நீங்கள் அனைவருக்கும் கொடுக்கின்றீர்கள், அல்லவா? “வாருங்கள், உங்கள் ஆஸ்தியான முக்தியையும், ஜீவன் முக்தியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.” எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேளுங்கள்: நான் முக்தி தாமத்தில் முக்தியை அனுபவம் செய்ய விரும்புகிறேனா? நான் சத்திய யுகத்தில் ஜீவன் முக்தியை அனுபவம் செய்ய விரும்புகிறேனா? அல்லது, முக்தி, ஜீவன் முக்திக்கான சம்ஸ்காரங்களை இப்பொழுது, சங்கம யுகத்திலேயே உருவாக்க விரும்புகிறேனா? ஏனென்றால், நீங்கள் உங்களுடைய இறை சம்ஸ்காரங்களால் தெய்வீக உலகமொன்றை உருவாக்குபவர்கள் என இந்நேரத்தில் கூறுகிறீர்கள். “எமது சம்ஸ்காரங்களால் நாம் புதியதோர் உலகத்தை உருவாக்குகிறோம்.” எனவே, முக்தி மற்றும் ஜீவன் முக்திக்கான சம்ஸ்காரங்கள் இப்பொழுது, சங்கம யுகத்திலே வெளிப்படச் செய்யவேண்டும், அல்லவா? எனவே, உங்களுடைய மனமும், புத்தியும் சகல பந்தனங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டனவா எனச் சோதியுங்கள். பிராமண வாழ்க்கையில், உங்களுடைய கடந்த காலத்தின் பந்தனங்களாக இருந்த பலவற்றில் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் சகல பந்தனங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டீர்களா? அல்லது, இன்னமும் சில பந்தனங்கள் உங்களைத் தம்முடன் பந்தனத்தில் கட்டிப் போடுகின்றனவா? முக்தி, ஜீவன் முக்தியை அனுபவம் செய்வதே பிராமண வாழ்க்கையின் மகத்துவம் ஆகும். ஏனெனில், சத்திய யுகத்தில் நீங்கள் ஜீவன் முக்தி அல்லது பந்தன வாழ்க்கை பற்றிய அறிவைக் கொண்டிருக்க மாட்டீர்கள். தற்சமயம் உங்களால் பந்தன வாழ்க்கை என்றால் என்ன என்பதையும், ஜீவன் முக்தி என்றால் என்ன என்பதையும் அனுபவம் செய்ய முடியும். ஏனெனில், நீங்கள் அனைவரும் ஒரு சத்தியம் செய்தீர்கள். நீங்கள் அனைவரும் பல தடவைகள் சத்தியங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் செய்த சத்தியங்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? எவரையாவது கேளுங்கள்: “உங்களுடைய இந்த பிராமண வாழ்க்கையின் இலக்கு என்ன?” அவர்கள் என்ன பதில் கூறுவார்கள்? “தந்தைக்குச் சமனாகுவதாகும்.” இது உறுதியானது, அல்லவா? நீங்கள் தந்தைக்குச் சமனாக விரும்புகிறீர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் சிறிதளவில் மாத்திரம் அவ்வாறு ஆக விரும்புகிறீர்களா? நீங்கள் முழுமையாக சமனாக விரும்புகிறீர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் சிறிதளவில் அவரைப்போன்று ஆகினால் அது நடக்குமா? அது நடக்குமா? அது சமனாகுதல் என அழைக்கப்பட மாட்டாது, அல்லவா? எனவே, தந்தை விடுதலையடைந்தவரா அல்லது அவருக்கு பந்தனங்கள் உள்ளனவா? உங்களுக்கு ஏதாவது பந்தனங்கள் இருந்தால், அது சரீரத்துடனோ, சரீர உறவுகளுடனோ, உங்களுடைய தாய், தந்தை, சகோதரர் அல்லது நண்பருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுடைய பௌதீக அங்கங்களுடனான உறவுமுறையில் ஏதாவது பந்தனம் இருந்தாலோ, பழக்கவழக்கங்களின் பந்தனம், சுபாவத்தின் பந்தனம் அல்லது பழைய சம்ஸ்காரங்களின் பந்தனம் இருந்தாலோ, அது எவ்வாறு தந்தைக்குச் சமனாக இருத்தல் என அழைக்கப்பட முடியும்? இருந்தும், நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமனாக விரும்புகிறீர்கள் எனத் தினமும் சத்தியம் செய்கிறீர்கள். பாபா உங்களைக் கைகளை உயர்த்த வைக்கும்போது, நீங்கள் அனைவரும் என்ன கூறுகிறீர்கள்? நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆக விரும்புவதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் மிகச் சிறந்த சத்தியங்களைச் செய்வதையிட்டு பாப்தாதா மகிழ்ச்சியடைகிறார், ஆனால் உங்களுடைய சத்தியங்களின் நன்மையை நீங்கள் அடைவதில்லை. ஒரு சத்தியத்திற்கும், அதன் நன்மைக்கும் இடையிலான சமநிலை பற்றி நீங்கள் அறியவில்லை. பாப்தாதாவிடம் உங்களுடைய சத்தியங்களின் மிக, மிக, மிகப் பெரிய ஃபைல் உள்ளது. அவரிடம் ஒவ்வொருவரினதும் ஃபைல் உள்ளது. அதேபோன்று, நன்மைகளின் ஃபைலும் இருக்கட்டும். இந்தச் சமநிலை இருந்தால் மிக நன்றாக இருக்கும்!
நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள், அல்லவா? நிலையவாசிகளும் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் சமனாகப் போகின்றவர்கள், அல்லவா? கருவி குழந்தைகள் ஆகியுள்ள நிலையவாசிகள் சமனாக இருக்கவேண்டும், அல்லவா? நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்கள், ஆனால் சிலவேளைகளில் சிறிது விஷமம் புரிகிறீர்கள். பாப்தாதா குழந்தைகளாகிய உங்கள் அனைவரதும் நடத்தையையும், செயற்பாடுகளையும் தொடர்ந்தும் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்களுடைய தாதி சூட்சும வதனத்தில் இருந்தபோது, அவரும் அனைத்தையும் பார்த்தார். அவர் என்ன கூறினார்? அவர் என்ன கூறினார் என்று உங்களுக்குத் தெரியுமா? பாபா, இப்படிக்கூட இருக்க முடியுமா? அது அப்படித்தானா? அவர்கள் இப்படிச் செய்வதை நீங்கள் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? தாதி பார்த்ததை நீங்கள் கேட்டீர்களா? இப்பொழுது, ஒவ்வொரு குழந்தையும் முக்தி, ஜீவன் முக்தி என்ற ஆஸ்திக்கான உரிமையைக் கோருவதையே பாப்தாதா பார்க்க விரும்புகிறார். ஏனெனில், இப்பொழுதுதான் நீங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். சத்திய யுகத்தில், அது உங்களுடைய இயல்பான வாழ்க்கையாக இருக்கும், உங்களுடைய இப்போதைய பயிற்சியின் அடிப்படையில் அது ஒரு இயல்பான வாழ்க்கையாக இருக்கும். ஆனால், அந்த ஆஸ்திக்கான உரிமையை இப்பொழுது, சங்கம யுகத்திலேயே பெறுகிறீர்கள். இதனாலேயே ஒவ்வொரு குழந்தையும் தன்னைச் சோதித்து, ஏதாவது பந்தனம் உங்களை இழுப்பதாக இருந்தால், அதற்கான காரணத்தையும் சிந்திக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். அதற்கான காரணத்தைச் சிந்திப்பதுடன் கூடவே, அதற்கான தீர்வைப் பற்றியும் சிந்தியுங்கள். பாப்தாதா பல தடவைகள் பல ரூபங்களில் உங்களுக்கு தீர்வுகளைக் கொடுத்துள்ளார். அவர் உங்களுக்கு சர்வ சக்திகள் என்ற ஆசீர்வாதத்தையும், சர்வ குணங்கள் என்ற பொக்கிஷத்தையும் கொடுத்துள்ளார். அப்பொக்கிஷங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றை நீங்கள் அதிகரித்துக்கொள்வீர்கள். உங்கள் அனைவரிடமும் பொக்கிஷங்கள் உள்ளன. பாப்தாதா அதைப் பார்த்துள்ளார். ஒவ்வொருவரிடமும் உள்ள கையிருப்பை பாப்தாதா பார்க்கின்றார். புத்தியே களஞ்சிய அறையாகும். ஒவ்வொருவரினதும் கையிருப்பை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் அவற்றைக் கையிருப்பில் வைத்திருக்கிறீர்கள், ஆனால் அப்பொக்கிஷங்களை நீங்கள் சரியான நேரத்தில் பயன்படுத்துவதில்லை. நீங்கள் அதை வெறுமனே ஒரு கருத்தாகவே சிந்திக்கிறீர்கள்: “ஆம், நான் இதைச் செய்யக்கூடாது, நான் இதைச் செய்யவேண்டும்.” நீங்கள் இந்த ஞானத்தை ஒரு கருத்தாகப் பயன்படுத்துகிறீர்கள். அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள், ஆனால் புள்ளி(பொயின்ற்) ரூபத்தில் உங்களை ஸ்திரப்படுத்தியவாறு இந்த ஞானக் கருத்தை (பொயின்ற்) பயன்படுத்துவதில்லை. இதனாலேயே அது வெறும் கருத்தாகவே இருந்துவிடுகிறது. இந்த ஞானக் கருத்தை உங்களுடைய புள்ளி ரூபத்தில் இருந்தவாறு பயன்படுத்துங்கள், அப்பொழுது ஒரு தீர்வை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இதைச் செய்யக்கூடாது என்று நீங்கள் கூறுகிறீர்கள், பின்னர் அதை மறந்துவிடுகிறீர்கள். அதைப்பற்றிப் பேசுவதோடு நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். பாபா உங்களுக்கு ஓர் இலகுவான வழியைக் கூறியுள்ளார். சங்கம யுகத்தில், இது புள்ளியின் அற்புதமே ஆகும். புள்ளியைப் பயன்படுத்துகங்கள், வேறெந்த நிறுத்தற் குறிகளும் தேவையில்லை. மூன்று புள்ளிகளைப் பயன்படுத்துங்கள். ஆத்மா ஒரு புள்ளி, தந்தை ஒரு புள்ளி, நாடகம் ஒரு புள்ளி. தொடர்ந்தும் இந்த மூன்று புள்ளிகளையும் பயன்படுத்துங்கள், தந்தைக்குச் சமனாகுவது சிரமமாக இருக்காது. நீங்கள் ஒரு புள்ளியைப் போடுவதற்கு முயற்சிக்கிறீர்கள், ஆனால் புள்ளியைப் போடும்போது உங்கள் கை நடுங்குவதால் அது ஒரு கேள்விக் குறியாகவோ அல்லது வியப்புக்குறியாகவோ ஆகிவிடுகிறது. அங்கே உங்கள் கை நடுங்குகிறது, இங்கே உங்கள் புத்தி நடுங்குகிறது. அல்லாவிட்டால், மூன்று புள்ளிகளை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருப்பது சிரமமாக இருக்குமா? அது சிரமமா? பாப்தாதா உங்களுக்கு வேறொரு இலகுவான வழிமுறையையும் காட்டியுள்ளார், அது என்ன? ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுங்கள். அச்சா, உங்களால் சக்திவாய்ந்த யோகம் செய்ய முடியாவிட்டால், உங்களுடைய தாரணை சிறிதளவு குறைவாக இருந்தால், சொற்பொழிவு ஆற்றுவதற்கான தைரியம் உங்களிடம் இல்லாவிட்டால், ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுவதையாவது உங்களால் செய்ய முடியும். இந்த ஒன்றை மட்டும் செய்யுங்கள், ஏனைய அனைத்தையும் ஒருபுறம் விட்டுவிடுங்கள். ஒன்றை மட்டும் செய்யுங்கள்: ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.“என்ன நிகழ்ந்தாலும், மற்றவர்கள் உங்களுக்கு எதைக் கொடுத்தாலும், நான் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும்.” இந்த ஒரு விடயத்தை உறுதியாக்கிக்கொள்ளுங்கள், ஏனைய அனைத்தும் அதில் உள்ளடங்கியிருக்கும். நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றால், சகல சக்திகளும் நற்குணங்களும் அதில் உள்ளடங்காதா? அவை தானாகவே உள்ளடக்கப்படும், அல்லவா? ஒரு இலக்கை மட்டும் வைத்திருங்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். இதை ஒரு நாள் பயிற்சி செய்து பாருங்கள், பின்னர் ஏழு நாட்களுக்கு முயற்சி செய்யுங்கள். ஓ.கே, உங்களால் ஏனைய விடயங்களைப் புத்தியில் வைத்திருக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஒரு விடயத்தையாவது உங்களால் வைத்திருக்க முடியும். “என்ன நிகழ்ந்தாலும், நான் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும்.” உங்களால் இதைச் செய்ய முடியுமா, முடியாதா? உங்களால் செய்ய முடியுமா? ஓ.கே, நீங்கள் திரும்பிச் சென்றதும் இதை முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதால், நீங்கள் இயல்பாகவே யோகயுக்த் ஆகுவீர்கள். ஏனெனில், வீணான செயல்கள் இல்லாவிட்டால், நீங்கள் யோகயுக்த் ஆவீர்கள், அல்லவா? எவ்வாறாயினும், ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற இலக்கைக் கொண்டிருங்கள். மற்றவர்கள் எதை உங்களுக்குக் கொடுத்தாலும், நீங்கள் சாபத்தையே பெற்றாலும், கோபத்தின் சூழ்நிலைகள் உங்கள் முன்னால் வந்தாலும், நீங்கள் ஒரு சத்தியம் செய்யும்போது, மாயையும் நீங்கள் செய்யும் சத்தியத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதால், அவளும் தனத சொந்த வேலையைச் செய்வாள், அல்லவா? நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகிவிட்டால் அவள் எதுவும் செய்யமாட்டாள். தற்போது, நீங்கள் இன்னமும் மாயையை வென்றவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள், எனவே, அவளும் தனது சொந்த வேலையைச் செய்வாள். எனவே, நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும். இது சாத்தியமா? இது சாத்தியம் என்று கூறுபவர்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள். அச்சா, சக்திகளே உங்கள் கைகளை உயர்த்துங்கள்! ஆம், இது சாத்தியம். எனவே, ஆசிரியர்கள் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருக்கிறீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் உங்களுடைய நாடுகளுக்குத் திரும்பியதும், அனைத்திற்கும் முதலில், நீங்கள் அனைவரும் இந்த வீட்டுவேலையை ஒரு வாரத்திற்குச் செய்து, உங்கள் பெறுபேறை அனுப்பவேண்டும். வகுப்பில் எத்தனைபேர் இருக்கிறார்கள், எத்தனை பேர் ஓ.கே.யாக இருக்கிறார்கள், எத்தனை பேர் இன்னமும் சிறிது பலவீனமாக இருக்கிறார்கள், எத்தனை பேர் பலசாலிகளாக இருக்கிறார்கள்? அவர்கள் பலவீனமாக இருந்தால், ஓ.கே. மீது குறுக்காக ஒரு கோடு போடுங்கள். இவ்வாறாக உங்கள் செய்திகளை அனுப்புங்கள், அவ்வளவுதான். இத்தனைபேர் ஓ.கே., இத்தனைபேர் ஓ.கே. மீது குறுக்காக கோடிடப்பட்டவர்கள். பாருங்கள், இரட்டை வெளிநாட்டவர்கள் இக்குழுவில் வந்திருக்கிறீர்கள், எனவே, நீங்கள் இரட்டைப் பணியைச் செய்வீர்கள், அல்லவா? ஒரு வாரத்திற்கான உங்கள் பெறுபேறை அனுப்புங்கள், பின்னர் பாப்தாதா பார்ப்பார். இது இலகுவானது, அல்லவா? இது சிரமமானதல்ல. மாயை வருவாள், நீங்கள் கூறுவீர்கள்: “பாபா, நான் இதை முன்னர் ஒருபோதும் அனுபவம் செய்ததேயில்லை, ஆனால் இப்பொழுது அது வந்துவிட்டது.” இது நிகழும், ஆனால் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிக்கான உத்தரவாதத்தைக் கொண்டிருப்பார்கள். திடசங்கல்பத்திற்கான பலன் வெற்றியாகும். வெற்றியில் குறை இருக்குமாயின், அது திடசங்கல்பம் குறைவாக இருப்பதாலேயே ஆகும். எனவே, நீங்கள் திடசங்கல்பத்தைக் கொண்டிருப்பதன் மூலம் வெற்றியடைய வேண்டும்.
நீங்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் சேவை செய்வதைப் போன்றே, உங்களுக்காகவும் சுய சேவை செய்வதுடன், உலகிற்கும் சேவை செய்யுங்கள். உங்களுக்குச் சேவை செய்வதென்றால், சோதித்து, உங்களைத் தந்தைக்குச் சமனாக்குவதாகும். எந்தக் குறைபாடுகளையும், பலவீனங்களையும் தந்தையிடம் கொடுத்துவிடுங்கள். ஏன் அதை நீங்கள் வைத்திருக்கிறீPர்கள்? தந்தை அதை விரும்பவில்லை. ஏன் நீங்கள் பலவீனங்களை வைத்திருக்கிறீர்கள்? அவற்றைக் கொடுத்துவிடுங்கள். கொடுக்கும்போது, சிறு குழந்தைகள் ஆகிவிடுங்கள். சிறு குழந்தைகளால் எதையாவது பராமரிக்க முடியாவிட்டால், அவர்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், என்ன செய்வார்கள்? “மம்மி, பப்பா, இதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்!” அதேபோன்று, நீங்கள் எவ்வகையான சுமையையோ, பந்தனத்தையோ விரும்பாவிட்டால்… ஏனென்றால் பாப்தாதா பார்க்கிறார், ஒருபுறம் நீங்கள் அதை விரும்பவில்லை, அது சரியில்லை என நினைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கூறுகிறீர்கள், “நான் என்ன செய்வது? எவ்வாறு என்னால் இதைச் செய்ய முடியும்?”அதுவும் நல்லதல்ல. ஒருபுறம், அது நல்லதல்ல எனக் கூறுகிறீர்கள், மறுபுறம் அதை உங்களுடனேயே கவனமாக வைத்திருக்கிறீர்கள். எனவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுவீர்கள்? அது நல்லதா? அது நல்லதல்ல, அப்படித்தானே? எனவே, நீங்கள் என்னவாக ஆகப்போகின்றீர்கள்? நல்லவரிலும், நல்லவராக அல்லவா? நல்லவராக மட்டுமல்ல, நல்லவரிலும் நல்லவராக. எனவே, அப்படி ஏதாவது இருக்கும்போதெல்லாம், பாபா எப்பொழுதும்; பிரசன்னமாக இருக்கிறார், அவரிடம் அதைக் கொடுத்துவிடுங்கள். அது உங்களிடம் திரும்பி வந்தால், அதை உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒன்றாகக் கருதி, கையளித்துவிடுங்கள். உங்களிடம் ஏதாவதொன்று நம்பி ஒப்படைக்கப்பட்டால், அதன்மீது நீங்கள் நேர்மையின்றி இருக்க முடியாது. நீங்கள் அதைத் தந்தையிடம் கொடுத்துவிட்டீர்கள், எனவே, அது இப்பொழுது தந்தைக்குரியது. தந்தைக்கு அல்லது வேறொருவருக்குச் சொந்தமான ஒன்று உங்களிடம் தவறுதலாக வந்துவிட்டால், அதை உங்களுடைய அலுமாரியில் பூட்டி வைத்திருப்பீர்களா? அதை வைத்திருப்பீர்களா? அதைக் கொடுத்துவிடுவீர்கள், அல்லவா? எப்படியாவது நீங்கள் அதைக் கொடுத்துவிட வேண்டும், அதை நீங்கள் வைத்திருக்க மாட்டீர்கள். அதை நீங்கள் கவனமாகப் பராமரிக்க மாட்டீர்கள், அல்லவா? எனவே, கொடுத்துவிடுங்கள். தந்தை அதை எடுத்துக்கொள்ளவே வந்துள்ளார். அவரிடம் கொடுக்கக்கூடியதாக வேறு எதுவும் உங்களிடம் இல்லை. எவ்வாறாயினும், உங்களால் இதைக் கொடுக்க முடியும், அல்லவா? அது ஓர் எருக்கலம்பூ, எனவே அதை அவருக்குக் கொடுத்துவிடுங்கள். அதைப் பராமரிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?
எங்குமுள்ள, பாப்தாதா விரும்புகின்ற குழந்தைகள் அனைவருக்கும், அவர் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர், அல்லவா? எனவே, இதயங்களுக்கு சௌகரியமளிப்பவரான, திலாராமினால் நேசிக்கப்படுகின்ற குழந்தைகளாகிய உங்களுக்கும், சதா அன்பு அலைகளில் முன்னேறிச் செல்கின்ற குழந்தைகளுக்கும், வேறு எவருக்குமன்றி, தந்தையொருவருக்குச் சொந்தமாக இருக்கின்ற, அதாவது வேறு எவரையும் தமது கனவிலேனும் கொண்டிருக்காத, அதியன்பான குழந்தைகளுக்கும், முழுமையாகவே சரீர உணர்வுகள் எதற்கும் அப்பால் இருக்கின்ற, பாப்தாதாவின் அத்தகைய அன்பான குழந்தைகளுக்கும், நீண்ட காலம் தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட, பல்கோடி மடங்கு பாக்கியசாலிக் குழந்தைகளுக்கும் இதயத்திலிருந்து அன்பும் நினைவுகளும், பல்கோடி மடங்கு ஆசீர்வாதங்களும். அத்துடன் கூடவே, குழந்தைகளாகவும், அதனால் அதிபதிகளாகவும் இருப்பவர்களுக்கு பாப்தாதாவிடமிருந்து நமஸ்தேயும் உரித்தாகட்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறை மரியாதைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் அடிப்படையில் ஓர் இலகு யோகி ஆகி, உலகத்திற்கு ஓர் உதாரணம் ஆகுவீர்களாக.உலகத்திற்கு ஓர் உதாரணம் ஆகுவதற்கு, அமிர்தவேளை முதல் இரவு நேரம் வரை தொடர்ந்தும் இறை மரியாதைக் கோட்பாடுகளைப் பின்பற்றுங்கள். விஷேடமாக, அமிர்த வேளையின் முக்கியத்துவத்தை அறிந்து, அந்த நேரத்தில் உங்கள் ஸ்திதியை சக்தி வாய்ந்ததாக ஆக்கிக்கொள்ளுங்கள், அப்பொழுது நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கை மகத்தானதாகும். நீங்கள் அமிர்தவேளையில் உங்களை விஷேட சக்தியால் நிரப்பி, ஓர் சக்தி சொரூபமாக முன்னேறிச் செல்லும்போது, எந்தவொரு பணியிலும் நீங்கள் சிரமத்தை அனுபவம் செய்ய மாட்டீர்கள். மரியாதைக் கோட்பாடுகளுக்கேற்ப உங்கள் வாழ்க்கையை வாழ்வதால், நீங்கள் இயல்பாகவே ஓர் இலகு யோகியின் ஸ்திதியை உருவாக்கிக் கொள்வீர்கள். அப்பொழுது, உங்களுடைய வாழ்க்கையைப் பார்த்து, உலகிலுள்ள அனைவரும் தமது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வார்கள்.
சுலோகம்:
உங்களுடைய செயற்பாடுகளாலும், முகத்தாலும் தூய்மையின் மகத்துவத்தின் அனுபவத்தைக் கொடுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களிலும் மற்றவர்களிலும் பரிசோதனை செய்யுங்கள்.
பரிசோதனை செய்கின்ற ஆத்மாக்கள் எப்பொழுதும் தமது சம்ஸ்காரங்களையும், இயற்கை மூலமாக வருகின்ற சூழ்நிலைகளையும், விகாரங்களையும் வெற்றி கொண்டவர்களாகின்றனர். ஒரு யோகி ஆத்மாவிற்கு அல்லது பரிசோதனைகள் செய்கின்ற ஆத்மாவிற்கு, ஐந்து விகாரங்கள் என்ற பாம்பானது ஒரு கழுத்து மாலையாகவோ அல்லது சந்தோஷ நடனமாடுவதற்கான ஒரு மேடையாகவோ ஆகிவிடுகின்றது.