27.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானக்கடலாகிய தந்தையின் மூலம் நீங்கள் மாஸ்டர் ஞானக் கடல்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளதால், திரிநேத்ரி, திரிகாலதரிசி, திரிலோகிநாத் ஆவீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் உலகின் ஆன்மீகச் சேவையைச் செய்ய முடியாது, ஏன்?பதில்:
ஏனெனில் நீங்கள் மாத்திரமே பரமாத்மாவிடம் இருந்து சக்தியைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களான நீங்கள் பரமாத்மாவிடம் இருந்து முதலில் ஞான ஊசியைப் பெறுகின்றீர்கள், அதன் மூலம் நீங்கள் ஐந்து விகாரங்களை வெற்றி கொள்கிறீர்கள். பின்னர் நீங்கள் மற்றவர்களையும் அவ்வாறு செய்யக் கூடியவர்களாக ஆக்குகிறீர்கள். வேறு எவராலும் அத்தகைய சேவையைச் செய்ய முடியாது; குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே ஒவ்வொரு கல்பமும் இந்த ஆன்மீகச் சேவையைச் செய்கின்றீர்கள்.ஓம் சாந்தி.
நீங்கள் தந்தையின் நினைவில் அமர வேண்டும். நீங்கள் சரீரதாரிகளின் நினைவில் அமரக் கூடாது. வருகின்ற புதியவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவருடைய பெயர் மிகவும் இலகுவானது: சிவபாபா. குழந்தைகள் தந்தையை அறியாமல் இருப்பது அத்தகையதோர் அற்புதம்! சிவபாபா அதிமேன்மையானவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார். அவர் தூய்மை அற்றவர்கள் அனைவரையும் தூய்மை ஆக்குகிறார், அவர் அனைவருடைய துன்பங்களை அகற்றுபவர் என்றும் அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், “அவர் யார்” என்பது பிரம்மா குமாரிகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. நீங்கள் அவருடைய பேரன்களும் பேத்திகளும் ஆவீர்கள். எனவே, உங்களுக்கு நிச்சயமாகத் தந்தையையும், அவருடைய படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் தந்தையிடம் இருந்தே அறிந்து கொள்கிறீர்கள். இது தூய்மையற்ற உலகம். அவர் எவ்வாறு கலியுகத்தின் தூய்மை அற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களைச் சத்தியயுகத்தவர்களாக ஆக்குகிறார் என்பது பிரம்மா குமாரிகளைத் தவிர உலகத்திலுள்ள வேறெவருக்கும் தெரியாது. தந்தை மாத்திரமே உங்களைச் சீரழிந்த கலியுகத்தில் இருந்து அகற்றி, உங்களுக்குச் சத்தியயுகத்துச் சற்கதியை அருள்கின்றார். பாரதத்தில் மாத்திரமே அவர்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர் நிச்சயமாக வந்தாலும், அவர் எதைக் கொடுக்கின்றார் என்பது பாரத மக்களுக்குத் தெரியாது. மக்கள் ஒவ்வொரு வருடமும் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடினாலும், அவர்களுக்கு மூன்றாவது ஞானக்கண் இல்லை. இதனாலேயே அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது.பாடல்: ஓ கடவுளே, குருடர்களாகிய எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்!
அவர்கள் பார்வையின்றி இருப்பதாகக் கூறுகின்ற இந்தப் பாடல் மனிதர்களால் இயற்றப்பட்டது. அனைவரும் பௌதீகக் கண்களைக் கொண்டிருந்தாலும், தாங்கள் பார்வையற்று இருப்பதாக அவர்கள் ஏன் கூறுகிறார்கள்? மூன்றாவது ஞானக்கண்ணைக் கொண்டவர்கள் எவரும் இல்லை என்று தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். தந்தையை அறியாமல் இருப்பதே அறியாமை என்று அழைக்கப்படுகிறது. தந்தையைத் தந்தையின் மூலம் அறிந்து கொள்வதே, ஞானமாகும். தந்தை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் இந்த மூன்றாவது ஞானக் கண்ணைக் கொடுக்கின்றார், அதன் மூலம் நீங்கள் முழுப் படைப்பினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்துகொள்கிறீர்கள். ஞானக் கடலின் குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுகின்றீர்கள். மூன்றாவது ஞானக் கண்ணைக் கொண்டிருப்பது என்றால் திரிநேத்ரி, திரிகாலதரிசி, திரிலோகநாதர் ஆகுவதாகும். சத்தியயுக அதிபதிகளாக இருந்த இலக்ஷ்மியும், நாராயணனும் தங்களது ஆஸ்தியை எவ்வாறு பெற்றார்கள் என்பது பாரத மக்களுக்குத் தெரியாது. அவர்கள் எப்பொழுது வந்தார்கள்? அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள்? மக்களுக்கு இவை எதுவுமே தெரியாது. தேவர்கள் தூய்மையானவர்கள். நிச்சயமாகத் தந்தை மாத்திரமே அவர்களைத் தூய்மை ஆக்குகிறார். தேவர்களையும், சிவனையும் நம்புகின்ற பாரத மக்களாகிய உங்களுக்கே, தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். பாரதத்திலேயே சிவனின் பிறப்பு இடம்பெற்றது. கடவுளே அதி மேன்மையானவர். இங்கேயே மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஜெகதாம்பாள், ஜெகத்பிதாவாகிய, சரஸ்வதியினதும், பிரம்மாவினதும் பிறந்த நாட்களும் இங்கேயே இடம்பெறுகின்றன் பாரதத்தில் மட்டுமே அவை கொண்டாடப்படுகின்றன. அச்சா, இலக்ஷ்மியும், நாராயணனும் இங்கேயே பிறக்கின்றார்கள்; அவர்களே இராதையும், கிருஷ்ணனும் ஆவார்கள். பாரத மக்கள் இதனையேனும் புரிந்து கொள்வதில்லை! அவர்கள் கூறுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனவே நிச்சயமாக அனைவரும் தூய்மையற்றவர்கள். சாதுக்கள், புனிதர்கள், ரிஷிகள், முனிகள் அனைவரும் அழைக்கிறார்கள்: வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! மறுபுறத்தில் கங்கையே தூய்மையாக்குபவர் என அவர்கள் நம்புவதால் அவர்கள் கும்ப மேலாவிலே தமது பாவங்களைக் கழுவச் செல்கிறார்கள். வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள் என்று அவர்கள் தூய்மையாக்குபவரை அழைக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதரால் எவ்வாறு எவரையும் தூய்மையாக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆரம்பத்தில் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபொழுது, நீங்கள் அனைவரும் தூய்மையாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருக்கிறீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கடவுளே, எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்! எங்கே செல்வதற்கான பாதையைக் காட்டுவது? அவர்கள் கூறுகிறார்கள்: “பாபா, எங்களுக்கு ஜீவன்முக்திக்கான பாதையைக் காட்டுங்கள்! எங்களிடம் ஐந்து விகாரங்கள் உள்ளன. பாபா, நாங்கள் அனைவரும் சுவர்க்கத்தில் இருந்த பொழுது, விகாரம் அற்றிருந்தோம். இப்பொழுது நாம் விகாரம் உடையவர்களாகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகிவிட்டோம்; இதன் இரகசியத்தை எங்களுக்குக் கூறுங்கள்”. இவை கட்டுக் கதைகள் அல்ல. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஸ்ரீமத் பகவத்கீதையே கடவுளால் பாடப்பட்ட கீதையாகும். அசரீரியான கடவுளே தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவர் ஆவார். மனிதர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. தந்தை கூறுகிறார்: எத்தனையோ மகத்தான குருமார்கள் பாரதத்தில் இருக்கின்ற பொழுதிலும், அது ஏன் சிப்பி போன்று தூய்மையற்றதாகி விட்டது? பாரதம் சுவர்க்கமாக இருந்தது நேற்றைய விடயமாகும். பாபா பாரதத்திற்குச் சுவர்க்கம் எனும் வெகுமதியைக் கொடுத்தார். அவர் வந்து, தூய்மையற்ற பாரத மக்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, அவர்களைத் தூய்மை ஆக்கினார். தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை குழந்தைகளிடம் அவர்களின் சேவையாளராக வந்திருக்கின்றார். தந்தையே ஆன்மீகச் சேவையாளர். மனிதர்கள் அனைவரும் பௌதீகச் சேவையாளர்கள். சந்நியாசிகளும் பௌதீகச் சேவையாளர்களே. அவர்கள் அமர்ந்திருந்து, சமயநூல்கள் போன்றவற்றை உரைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அசரீரியான நான், ஒரு சாதாரண, பழைய, பௌதீகச் சரீரத்தில் பிரவேசித்து, குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன்: ஓ பாரதக் குழந்தைகளே! பாருங்கள்! ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அதைக் கூறுபவர் பிரம்மா அல்ல, இச்சரீரத்தை ஆதாரமாக எடுத்திருக்கின்ற அசரீரியான தந்தையே கூறுகின்றார். சிவனுக்கெனச் சொந்தச் சரீரம் இல்லை. சாலிகிராம் ஆத்மாக்களுக்குத் தங்களுடைய சொந்தச் சரீரங்கள் உள்ளன. மறு பிறவி எடுப்பதால், அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். இப்பொழுது முழு உலகமும் தூய்மை அற்றுள்ளது; ஒருவரேனும் தூய்மையானவர்கள் இல்லை. நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் உங்களில் கலப்படம் கலந்ததால், நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் சென்றீர்கள். பாரத மக்களாகிய உங்களிடம் சிவபாபா வந்து, 'பாக்கிய இரதம்" என்று அழைக்கப்படுகின்ற ஒரு சரீரத்தைத் தத்தெடுக்கிறார். சங்கரரும் சிவனும் இணைந்திருப்பதாக அவர்கள் நம்புவதால், ஆலயங்களில் சங்கரரின் உருவத்தைக் காட்டுகிறார்கள். சிவன் அசரீரியானவர், சங்கரரோ சூட்சுமமானவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சிவனும், சங்கரரும் எவ்வாறு இணைந்திருக்க முடியும்? அச்சா, எருதை ஓட்டுபவர் யார்? சிவனா, சங்கரரா? சூட்சும உலகிற்கு ஓர் எருது எங்கிருந்து வரும்? அசரீரியான உலகில் சிவன் வசிக்கிறார். சங்கரரோ சூட்சும உலகில் இருக்கிறார். சகல ஆத்மாக்களும் அசரீரியான உலகில் உள்ளனர். சூட்சும உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மாத்திரமே இருக்கின்றார்கள். அங்கே மிருகங்கள் இல்லை. தந்தை கூறுகிறார்: நான் ஒரு சாதாரண, பழைய சரீரத்தில் பிரவேசித்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். உங்களது சொந்தப் பிறவிகளை பற்றிக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியாது. சத்திய யுகத்தில் இருந்து இன்றுவரை நீங்கள் எத்தனை பிறவிகள் எடுத்துள்ளீர்கள்? நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். இது இப்பொழுது உங்கள் இறுதிப் பிறவி. தூய அமரத்துவ பூமியாக இருந்த பாரதம், இப்பொழுது தூய்மையற்ற மரணபூமி ஆகிவிட்டது. ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அளிப்பவர். அசரீரியான பரமாத்மாவாகிய பரம தந்தை, சிவனின் மாலையே உருத்திர மாலையாகும். ஸ்ரீ ஸ்ரீ உருத்திரரின் 108 மணிமாலை எனக் கூறப்படுகிறது. அனைவரும் சிவனின் கழுத்தைச் சுற்றிய மாலையில் உள்ளவர்களே. எனவே தந்தையே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அளிப்பவரும், அனைவருக்கும் அவர்களது ஆஸ்தியைக் கொடுப்பவரும் ஆவார். பௌதீகத் தந்தையிடம் இருந்து ஓர் எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியே பெறப்படுகிறது. சந்தோஷம் காக்கையின் எச்சத்தைப் போன்றது எனச் சந்நியாசிகள் கருதுகிறார்கள். தந்தை கூறுகிறார்: உண்மையில் உங்கள் அந்தச் சந்தோஷம் காக்கையின் எச்சத்தைப் போன்றதே. தந்தையே வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறார், அதாவது, அவர் இந்த ஞானத்தால் முட்களை மலர்களாக மாற்றுகிறார். இதுவே கீதையின் ஞானம். எந்த மனிதராலும் இந்த ஞானத்தை விளங்கப்படுத்த முடியாது. ஞானக்கடலாகிய, தூய்மையாக்குபவரான தந்தையால் மாத்திரமே அதை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இப்பொழுது பெறும் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து மாத்திரமே பெறமுடியும். நீங்கள் மாத்திரமே சற்கதியைப் பெறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்திலும், ஏனையோர் கலியுகத்திலும் இருக்கிறார்கள். இது இப்பொழுது கலியுக இறுதியாகும். மகாபாரத யுத்தம் உங்கள் முன்னிலையில் உள்ளது. 5000 வருடங்களுக்கு முன்னர், நீங்கள் இராஜயோகம் கற்ற பின்னர், வைக்கோற்போர் தீப்பற்றியது. நீங்கள் இப்பொழுது இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதற்காக இராஜயோகம் கற்கிறீர்கள். ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். தந்தை வரும்பொழுது, சுவர்க்க வாயில்களைத் திறக்கின்றார். தந்தை கூறுகிறார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் பாரதத் தாய்மார்களாகிய, சிவசக்திகளான நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறீர்கள். பாரதத் தாய்மார்களும் சிவசக்திகளுமாகிய நீங்களே பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குபவர்கள். நீங்கள் சிவனின் குழந்தைகள். நீங்கள் அவரை நினைவு செய்கிறீர்கள். நீங்கள் சிவனிடமிருந்து சக்தியை எடுத்து, எதிரியான ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்கிறீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னரும் குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்தின் ஆன்மீகச் சேவையைச் செய்தீர்கள். அந்தச் சமூக சேவையாளர்கள், பௌதீகச் சேவையைச் செய்கிறார்கள். இது ஆன்மீகச் சேவையாகும். பரமாத்மா வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஊசி போடுகிறார். அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆத்மாக்களே செவிமடுப்பவர்கள். நீங்கள் ஆத்மாக்கள், நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். நீங்கள் ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கிறீர்கள். உங்களுக்கு 84 பிறவிகளில் 84 பெற்றோர்கள் உள்ளார்கள். சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் சுவர்க்க சந்தோஷத்தைப் பெற்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் சந்தோஷ ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பாரதம் உண்மையாகவே இந்த ஆஸ்தியைப் பெற்றது. பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. அங்கே அசுரர்கள் போன்றவர்கள் இருக்கவில்லை. இந்தப் பழைய உலகம் இப்பொழுது தீக்கிரையாகப் போகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நான் வந்து ஞான யாகத்தை உருவாக்குகிறேன். நீங்கள் அனைவரும் தூய்மையான தேவர்கள் ஆகுகிறீர்கள். ஆயிரக் கணக்கான நீங்கள் தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குச் சற்கதி அருள்வதற்குத் தந்தை வந்திருக்கிறார். அவர் உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகிறார். அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானம் எனும் மூன்றாவது கண்ணைக் கொடுப்பதால், நீங்கள் முழு நாடகத்தையும், சிவபாபா என்ன பாகத்தை நடிக்கிறார் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். விஷ்ணுவின் தொப்பூள் கொடியிலிருந்து பிரம்மா தோன்றினார் எனக் காட்டப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு ஆகுகிறார், பின்னர் பிராமணர்கள், தேவர்களாக ஆகுகிறார்கள். விஷ்ணு பிரம்மா ஆகுவதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன. இந்த ஞானம் உங்களுக்கு உள்ளது. பிராமணர்களாகிய உங்களது தாமரை தொப்பூள் கொடியிலிருந்து விஷ்ணு பூமி வெளிப்படுகிறது. விஷ்ணுவின் தொப்பூளில் இருந்து பிரம்மா தோன்றி, வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும்; சாராம்சத்தினைக் கூறுவதாகக் காட்டப்பட்டுள்ள ஒரு படத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். இப்பொழுது பிரம்மாவின் மூலம் முழு சாராம்சத்தையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான்கு பிரதான சமயநூல்கள் உள்ளன. முதலாவது தேவ தர்மத்தின் சமயநூல் கீதையாகும். கீதையைப் பாடியவர் யார்? சிவபாபாவே ஆவார். சிவபாபாவே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், சந்தோஷக் கடலும் ஆவார். கிருஷ்ணர் அன்றி, அவரே பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்கினார். ஸ்ரீகிருஷ்ணர் என்னிடம் ஞானத்தைக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணர் ஆகினார். எனவே இது மறைமுகமானது, இல்லையா? புதிய குழந்தைகளால் இவ் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இது நரகம் எனவும், அது சுவர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபித்தார், அங்கு இலக்ஷ்மியும், நாராயணனும் ஆட்சி புரிந்தார்கள். நீங்கள் இப்பொழுது மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: துன்ப பூமியாகிய மரண பூமியில் இதுவே உங்களது இறுதிப் பிறவியாகும். பாரதமே அமரத்துவ பூமியாக இருந்தது. துன்பம் என்ற குறிப்பே அங்கே இருக்கவில்லை. பாரதமே தேவதைகளின் பூமியாக இருந்தது; இப்பொழுது அது மயான பூமியாகி விட்டதால், அது மீண்டும் தேவதைகளின் பூமியாக வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்காகக் கற்கின்ற இடம். இது சந்நியாசிகள் அமர்ந்திருந்து, சமயநூல்களை உரைக்கின்ற ஓர் ஆன்மீகக்கூட்டம் அல்ல. ஒரு புதியவரால் ஏழு நாள் பாடநெறியை எடுக்காமல், இவ் விடயங்களில் எதனையும் புரிந்து கொள்ள முடியாது. இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் பக்தர்கள். அந்த ஆத்மாக்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். அனைவரும் ஒரேயொரு அன்புக்குரியவராகிய, கடவுளின் காதலிகள். தந்தை வந்து சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார். அரைக் கல்பத்தின் பின், இராவணன் வந்து அதைப் பொய்மையான பூமியாக ஆக்குகிறான். இது இப்பொழுது சங்கம யுகமாகும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, பாரதத்திற்கு உண்மையாக ஆன்மீக ரீதியில் சேவை செய்யுங்கள். சர்வசக்திவானான தந்தையிடம் இருந்து சக்தியைப் பெற்று, உங்கள் எதிரியான ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்ளுங்கள்.2. மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கு, நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள். இந்த ஞானத்தைக் கிரகித்து, ஒரு முள்ளிலிருந்து மலர் ஆகுவதுடன், ஏனையோரையும் அவ்வாறு ஆகுமாறு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒளியாலான சூட்சும ரூபத்தைக் கொண்டிருந்து, விநாச வேளையில் உங்களின் பரீட்சையில் சித்தி அடைவீர்களாக.விநாச வேளையில் உங்களின் பரீட்சையில் சித்தி அடைவதற்கும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங் கொடுப்பதற்கும், ஒளியாலான சூட்சும ரூபத்தைக் கொண்டவர் ஆகுங்கள். நீங்கள் நடமாடும் வெளிச்சவீடாக ஆகும்போது, உங்களின் பௌதீக ரூபம் புலப்பட மாட்டாது. நீங்கள் உங்களின் பாகத்தை நடிப்பதற்காக ஒரு ஆடையை அணிந்து கொள்வதாகவும், உங்களின் பாகம் முடிந்த உடனேயே நீங்கள் அதைக் கழற்றுவதைப் போன்றதாகவும் அது இருக்கும். ஒரு விநாடியில் அதை அணிந்து கொள்ளுங்கள், ஒரு விநாடியில் அதைக் கழற்றி விடுங்கள். அதாவது, பற்றற்றவர் ஆகுங்கள். நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்போது, உங்களைப் பார்க்கின்ற ஏனையோர், நீங்கள் ஒளியாலான ஆடையை அணிந்திருப்பதையும் அந்த ஒளியே உங்களின் அலங்காரமாக இருப்பதையும் காண்பார்கள்.
சுலோகம்:
உங்களின் ஊக்கம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகளை நீங்கள் சதா கொண்டிருக்கும்போது, உங்களால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெற முடியும்.அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
தந்தையே சர்வசக்திவான் ஆவார். அவரின் கையைப் பிடித்திருப்பதன் மூலம் நீங்கள் உங்களின் இலக்கைச் சென்று அடைவீர்கள் என்ற நம்பிக்கை வைத்திருங்கள். நீங்களே பலவீனமாக இருந்தாலும், உங்களின் சகபாடி பலமானவர், அல்லவா? எனவே, நீங்கள் நிச்சயமாக அக்கரை செல்வீர்கள். நீங்கள் புத்தியில் நம்பிக்கையுள்ள வெற்றி இரத்தினம் என்பதை சதா உணர்ந்தவராக இருங்கள். கடந்தது கடந்தாகி விடட்டும், ஒரு முற்றுப்புள்ளி வைத்து, முன்னால் செல்லுங்கள்.
விசேட குறிப்பு: இன்று, தாதி ஜான்கிஜியின் நினைவு நாள். அவர் அதியன்பிற்குரிய பாப்தாதாவின் ஆழ்ந்த அன்பான குழந்தை ஆவார். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பிராமணக் குடும்பம் முழுவதனதும் உயிர்நாடியும் அனைவரின் இதயங்களையும் வெற்றி கொண்டவரும் ஆவார். 104 வயதுவரை, தாதிஜி சரீரமற்றவராகவும் ஜீவன்முக்தி நிலையிலும் இருந்தார். இந்த ஞானத்தைத் தானம் செய்ததுடன், அவர் நற்குணங்களையும் தானம் செய்து, குடும்பம் முழுவதற்கும் ஆன்மீகப் பராமரிப்பை வழங்கினார். இந்த ஞானத்தின் ஆழமான கருத்துக்களால் நிறைந்த அவரின் சாரம் நிறைந்த வகுப்புக்கள், தொடர்ந்தும் பல ஆத்மாக்களுக்கு வழிகாட்டுகின்றன. இன்றும், அவரின் பாதுகாப்புக் குடையும் பெறுமதிமிக்க கற்பித்தல்களும் தொடர்ந்து பிராமணக் குழந்தைகளின் காதுகளில் எதிரொலிக்கின்றன. தாதிஜி, நேர்மை, சுத்தம், எளிமையின் சின்னமாக விளங்கினார். தாதிஜியிடம் இருந்து பெற்ற பெறுமதிமிக்க கற்பித்தல்களில் சில கீழே தரப்பட்டுள்ளன. எனவே, தயவுசெய்து அவற்றைக் கிரகியுங்கள்.
1) உங்களின் சூட்சுமமான அகங்காரத்தை இனங்கண்டு, அதை விரைவில் முடிப்பது என்றால் உங்களையே ஆசீர்வதிப்பதாகும்.
2) சிந்திப்பதிலும் பேசுவதிலும் அதிகம் கவலைப்படுவதிலும் சக்தி வீணாகின்றது. மௌனமாக இருங்கள், சக்தி சேமிக்கப்படும்.
3) எவரின் தவறுகளையும் உங்களின் இதயத்தில் வைத்திருக்காதீர்கள். உங்களின் இதயத்தைச் சுத்தமாக வைத்திருங்கள். உங்களால் அமைதியாக வாழ முடியும்.
4) புரிந்துணர்வுடன் வீணானவை மற்றும் எதிர்மறையானவை அனைத்தையும் முடித்துவிடுங்கள். நீங்கள் அமைதியை விரும்புபவர் ஆகுவீர்கள்.
5) பாபாவிடம் இருந்து ஒரு பரிசைப் பெறுவதற்கு, கோட்பாடுகளைப் பின்பற்றுங்கள். எந்தவிதமான பற்றோ அல்லது அடிமைத்தனமோ இருக்கக்கூடாது.
6) செயல்களும் உறவுமுறைகளும் உங்களின் நற்குணங்களின் மூலமே அறியப்பட முடியும். ஆகவே, உங்களின் செயல்களில் ஆன்மீகமும் உங்களின் உறவுமுறைகளில் நேர்மையும் இருக்க வேண்டும்.
7) பணிவையும் சத்தியத்தையும் உங்களின் சகபாடிகள் ஆக்கிக் கொள்ளுங்கள், அனைத்தும் மிகத் துல்லியமாக இருக்கும்.
8) அன்பை வேண்டுவதற்குப் பதிலாக, உங்களின் சுயமரியாதையில் இருந்து, அனைவருக்கும் மதிப்பளியுங்கள். நீங்கள் அன்பிற்குப் பாத்திரமானவர் ஆகுவீர்கள்.
9) நேர்மையாகவும் சுத்தமாகவும் சேவையாளர்களாகவும் இருப்பவர்கள், இறைவனின் அன்பிற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆவார்கள்.
10) சேவை செய்யும்போது இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதே, அனைத்திலும் மிகப் பெரிய சேவையாகும்.
11) பெரிய விடயங்களையும் சிறியதாக ஆக்குங்கள், அவை முட்கிரீடத்தில் இருந்து ஒரு முள்ளைப் போன்று ஆகிவிடும்.
12) உங்களின் ஆன்மீக முயற்சியில், சிந்திப்பது இடையூறு செய்யும். ஆனால் நினைவோ உங்களின் ஆன்மீக முயற்சியில் வெற்றியை ஏற்படுத்தும்.
13) சந்தோஷம் என்ற பொக்கிஷத்தை உங்களுடன் சதா வைத்திருப்பதற்கு, சாதக சிந்தனை என்ற கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
14) உங்களின் தற்போதைய ஸ்திதியானது இறுதிக் கணங்களில் உதவி செய்யும். ஆகவே, உங்களின் ஸ்திதியை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.
15) உங்களின் மனதின் சக்தியை அதிகரியுங்கள். அதனால் உங்களால் முட்காட்டில் பாதுகாப்பாக இருக்க முடியும். அத்துடன் உங்களால் மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியும்.
16) தூய்மை இன்மையில் இருந்து விடுபடுவதற்கு, விருப்பமின்மை என்ற அக மனோபாவத்தைக் கிரகியுங்கள்.