27.04.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, மலர்களாகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். மலர்களாக இருக்கும் குழந்தைகள் தங்கள் வாயிலிருந்து இரத்தினங்களை மாத்திரமே வெளிப்பட அனுமதிக்கின்றனர்.
கேள்வி:
குழந்தைகள் சதா நறுமணம் கமழும் மலர்கள் ஆகும்வகையில் குழந்தைகளுக்குக் கடவுள் கொடுக்கின்ற கற்பித்தல்கள் எவை?பதில்:
ஓ என்னுடைய மலர்களான குழந்தைகளே, உங்களின் உள்ளே பலவீனங்களின் வடிவில் எந்த அசுரத்தனமான முட்களும் இருக்கவில்லை என்பதைச் சோதிப்பதற்கு, உங்களைப் பரிசோதியுங்கள். உங்களின் உள்ளே ஏதாவது முட்கள் இருப்பின், அப்பொழுது, நீங்கள் ஏனையோரின் பலவீனங்களை விரும்பாததைப்; போன்று, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உள்ளே இருக்கின்ற அசுரத்தனமான பலவீனங்களின் மீது வெறுப்புக் கொள்ளுங்கள். அப்போதே முட்கள் அகற்றப்படும். தொடர்ந்தும் உங்களைப் பரிசோதியுங்கள். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யக்கூடியதாக எப்பாவங்களையும் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களினூடாகச் செய்யவில்லையே என்பதைச் சோதியுங்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஏனெனில் இது இராவண இராச்சியம்ம ஆகையால், மனிதர்கள் அனைவரும் தற்பொழுது, சரீர உணர்வு உடையவர்கள். இதனாலேயே அவர்கள் காட்டு முட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். யார் இதை விளங்கப்படுத்துகிறார்? இப்பொழுது முட்களை மலர்களாக மாற்றுகின்ற, எல்லையற்ற தந்தையே விளங்கப்படுத்துகிறார். சிலசமயங்களில், சிலர் மலர்களாக மாறிக் கொண்டிருக்கும் பொழுது, மாயை அவர்களை மிகவும் விரைவாக முட்களாக மாற்றி விடுகிறாள். இது முட்காடு என அழைக்கப்படுகிறது. அதில் மிருகங்களைப் போன்றுள்ள பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் மிருகங்களைப் போன்று, சண்டை சச்சரவு செய்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சச்சரவு உள்ளது. அனைவரும் நச்சுக்கடலில் இருக்கிறார்கள். இம்முழு உலகமும் மனிதர்கள் தத்தளிக்கின்ற, பெரும் நச்சுக்கடல். இது தூய்மையற்ற, சீரழிந்த உலகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது முட்களில் இருந்து மலர்களாக மாறுகிறீர்கள். தந்தை பூந்தோட்டத்தின் அதிபதி எனவும் அழைக்கப்படுகிறார். கீதையில் ஞானமும், பாகவத்தில் மனிதர்களின் செயற்பாடும் இருக்கின்றன எனவும் தந்தை இங்கே அமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார். அவர்கள் எதனை எழுதியுள்ளார்கள் எனப் பாருங்கள்! இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இருப்பதாகக் கூறப்பட மாட்டாது. சத்தியயுகமே பூந்தோட்டம். நீங்கள் இப்பொழுது மலர்களாக ஆகுகிறீர்கள். மலர்களாகிய பின்னர், சிலர் முட்கள் ஆகுகிறார்கள். இன்று நீங்கள் மிக நன்றாக முன்னேறிச் செல்லலாம், ஆனால் பின்னர் மாயையின் புயல்கள் இருக்கும். நீங்கள் எங்காவது அமர்ந்திருக்கும் பொழுது, மாயை உங்கள் நிலைமையை என்னவாக ஆக்குகிறாள் எனப் பாருங்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறேன். அவர் பாரத மக்களுக்குக் கூறுகிறார்: நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். அது நேற்றைய விடயமே. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அங்கு வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் இருந்தன. அது அல்லாவின் பூந்தோட்டம் என அழைக்கப்பட்டது. இங்கே காடு உள்ளது, பின்னர் இங்கு பூந்தோட்டம் இருக்கும். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அங்கு மலர்களைத் தவிர, எதுவும் இருக்கவில்லை. தந்தை மாத்திரமே பூந்தோட்டத்தை உருவாக்குகிறார். மலர்கள் ஆகும்பொழுது, சிலர் தீய சகவாசத்தினுள் சென்று பாழாகி விடுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் திருமணம் செய்ய விரும்புகிறேன். அவர்கள் மாயையின் பகட்டைப் பார்க்கிறார்கள்! இங்கு, முழுமையான மௌனம் உள்ளது. இம்முழு உலகமும் ஒரு காடாகும். இக்காடும் நிச்சயமாகத் தீ மூட்டப்பட வேண்டும். ஆகவே, காட்டில் வசிப்பவர்களும் அழிக்கப்படுவார்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அதே தீ, மீண்டும் இடம்பெறும். அது மகாபாரத யுத்தம் என அழைக்கப்படுகிறது. முதலில் யாதவர்களால் உருவாக்கப்பட்ட அணுக்குண்டு யுத்தம் உள்ளது. இதுவும் நினைவு கூரப்படுகிறது. அவர்கள் விஞ்ஞானத்தின் மூலம் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். சமயநூல்களில் பல கதைகள் உள்ளன. தனது வயிற்றிலிருந்து ஏவுகணைகள் போன்றவற்றை வெளிப்படச் செய்ய எவராலும் முடியாது எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். விஞ்ஞானத்தின் மூலம் அவர்கள் எத்தனை பல குண்டுகள் போன்றவற்றை உருவாக்கி உள்ளார்கள் என உங்களால் இப்பொழுது காண முடியும். இரண்டு குண்டுகளைப் போட்டுள்ளதால், நகரங்களின் அதிகளவு அழிக்கப்பட்டது என்பதையும், எவ்வாறு பலர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் பாருங்கள். நூறாயிரக்கணக்கானோர் மரணித்தார்கள். தீ மூட்டப்படவுள்ள இக்காட்டில் இப்பொழுது மில்லியன்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். சிவபாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், எவ்வாறாயினும் தந்தை கருணைமிக்கவர். தந்தை அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டும். அனைவரும் வேறு எங்கு செல்வார்கள்? தீ மூட்டப்படப் போகின்றது என்பதையும், ஆகவே, தந்தையிடம் அடைக்கலம் தேடித் தாங்கள் வருவார்கள் என்பதையும் அவர்கள் காண்பார்கள். தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவர் மறுபிறவிக்கு அப்பாற்பட்டவர். அவர் சர்வவியாபி என மக்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தவர்கள். உங்கள் புத்திகளில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கான உங்கள் பொறுப்பையும் நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும். அவர்களுக்கு அசுரக் குணங்கள் உள்ளன, உங்களிடமோ தெய்வீகக் குணங்கள் உள்ளன. இதனை ஏனையோருக்கும் கற்பிப்பது உங்கள் கடமையாகும். தொடர்ந்தும் இம்மந்திரத்தைக் கொடுங்கள். கண்காட்சிகளின் மூலம் நீங்கள் பலருக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். பாரத மக்களாகிய நீங்களே இப்பொழுது 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துள்ளீர்கள். உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுவதற்கு, அதாவது, நரகவாசிகளாக உள்ள மனிதர்களாகிய உங்களைச் சுவர்க்கவாசிகளாக மாற்றுவதற்கு, இப்பொழுது தந்தை வந்து விட்டார். தேவர்கள் சுவர்க்கத்தில் வசிக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது அசுரக்குணங்களை விரும்புவதில்லை. நீங்கள் தெய்வீகக் குணங்களை உடையவர்களாகி விட்டீர்களா என உங்களைச் சோதித்துப் பாருங்கள். என்னில் ஏதாவது பலவீனங்கள் உள்ளனவா? நான் என்னுடைய எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களின் மூலம் ஏதாவது அத்தகைய அசுரச் செயல்களைச் செய்துள்ளேனா? நான் முட்களை மலர்களாக மாற்றுகின்ற வியாபாரத்தைச் செய்கிறேனா அல்லது இல்லையா? பாபாவே பூந்தோட்டத்தின் அதிபதியும், பிரம்மாகுமார்களும், குமாரிகளுமாகிய நீங்களே பூந்தோட்டக்காரர்களும் ஆவீர்கள். பல்வேறு வகைகளில் பூந்தோட்டக்காரர்கள் உள்ளார்கள். சிலர் ஏனையோரைத் தங்களைப் போன்று ஆக்க இயலாத அத்தகைய புத்துக்கள். பூந்தோட்டத்தின் அதிபதி கண்காட்சிகளுக்குச் செல்வதில்லை; அங்கு பூந்தோட்டக்காரர்களே செல்கிறார்கள். இந்தப் பூந்தோட்டக்காரரும் சிவபாபாவுடன் இருப்பதனால், அவராலும் அங்கு செல்ல முடியாதுள்ளது. பூந்தோட்டக்காரர்களாகிய நீங்களே அங்கு சேவை செய்வதற்குச் செல்கிறீர்கள். மிகச்சிறந்த பூந்தோட்டக்காரர்கள் மாத்திரமே அழைக்கப்படுகிறார்கள். பாபாவும் கூறுகிறார்: புத்துக்களை அழைக்க வேண்டாம்! பாபா எப்பெயர்களையும் குறிப்பிடுவதில்லை. மூன்றாந்தரப் பூந்தோட்டக்காரர்களும் இருக்கிறார்கள். பூந்தோட்டத்தின் அதிபதி மிகச்சிறந்த மலர்களை உருவாக்கும் பூந்தோட்டக்காரர்களை நேசிக்கிறார். அவர்கள் மூலம் அவரும் பூரிப்படைகிறார். அவர்கள் தங்கள் வாயிலிருந்து சதா இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்பட அனுமதிக்கிறார்கள். இரத்தினங்களுக்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வாயிலிருந்து கற்களை வெளிவிட்டால், பாபா என்ன கூறுவார்? மக்கள் சிவனுக்கு அக் (எருக்கலம்) மலர்களை அர்ப்பணிக்கிறார்கள். ஆகவே, அத்தகையவர்களும் தங்களை அர்ப்பணிப்பார்கள், இல்லையா? அவர்களுடைய நடத்தை எதனைப் போன்றுள்ளது எனப் பாருங்கள்! முட்களும் தங்களை அர்ப்பணிக்கிறார்கள்! அதன்பின்னர், அவர்கள் மீண்டும்; காட்டுக்குச் செல்கிறார்கள். சதோபிரதான் ஆகுவதற்குப் பதிலாக, அவர்கள் மேலும் அதிகம் தமோபிரதான் ஆகுகிறார்கள். அப்பொழுது அவர்கள் நிலை என்னவாகும்? தந்தை கூறுகிறார்: முதலில், நான் தன்னலம் அற்றவர், இரண்டாவதாக, நான் என்னை இகழ்பவர்களையும் ஈடேற்றுகிறேன். நான் கருணைகொண்டு, என்னை இகழ்கின்ற பாரத மக்களைப் பெருமளவுக்கு ஈடேற்றுகிறேன். தந்தை கூறுகிறார்: நான் இவ்வேளையில் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வருகிறேன். நீங்கள் ஒருவரைச் சுவர்க்கத்துக்குச் செல்லுமாறு கூறும்பொழுது, தாங்கள் இங்கு சுவர்க்கத்திலேயே இருப்பதாக அவர்கள் பதில் அளிக்கிறார்கள். ஓ! ஆனால் சுவர்க்கம் சத்தியயுகத்திலேயே உள்ளது. சுவர்க்கம் எவ்வாறு இந்தக் கலியுகத்தில் இருக்க முடியும்? கலியுகம் நரகம் என்று அழைக்கப்படுகிறது. இது பழைய, தமோபிரதான் உலகமாகும். சுவர்க்கம் எங்கே உள்ளது என்பது மக்களுக்குத் தெரியாது. சுவர்க்கம் மேலே ஆகாயத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். தில்வாலா ஆலயத்தில், அவர்கள் சுவர்க்கத்தை மேலே கூரையிலும், கீழே அவர்கள் தபஸ்யாவில் அமர்ந்திருப்பதாகவும் சித்தரித்துள்ளார்கள். இதனாலேயே மக்கள் இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டார் எனக் கூறுகிறார்கள். சுவர்க்கம் எங்கே உள்ளது? (மரணிக்கின்ற) அனைவரும் ஒரு சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என அவர்கள் கூறுகிறார்கள். இது நச்சுக்கடல். விஷ்ணு பூமியே பாற்கடல் என அழைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஒரு பால் ஏரியை உருவாக்கி, அதில் விஷ்ணுவை வழிபடுவதற்காக வைத்துள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாலாறுகள் உள்ள சுவர்க்கத்துக்குச் செல்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் மலர்களாக வேண்டும். நீங்கள் முட்கள் என ஒருவர் கூறும் அத்தகைய வழியில் நடந்துகொள்ள வேண்டாம். எப்பொழுதும் தொடர்ந்தும் ஒரு மலர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். மாயை உங்களை ஒரு முள்ளாக ஆக்குகிறாள். ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்! தந்தை கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கும் பொழுது, தாமரையைப் போன்று தூய்மை ஆகுங்கள். பூந்தோட்டத்தின் அதிபதியாகிய, பாபா, உங்களை முட்களில் இருந்து மலர்களாக மாற்றுவதற்கு வந்துவிட்டார். நீங்கள் ஒரு மலர் ஆகிவிட்டீர்களா எனச் சோதியுங்கள். எங்கும் சேவை செய்வதற்கு மலர்கள் மாத்திரமே அழைக்கப்படுகிறார்கள். “பாபா, எங்களுக்கு ரோஜா மலரை அனுப்புங்கள்!” மலர்களாக இருப்பவர்களே புலப்படுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு வருகிறேன். இதுவே சத்திய நாராயணன் ஆகுகின்ற கதை, சத்திய பிரஜைகள் ஆகுகின்ற கதையல்ல! சிலர் அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆகுகிறார்கள். ஆகவே, பிரஜைகளும் உருவாக்கப்படுவார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசர்களும், அரசிகளும், பிரஜைகளும் வரிசைக்கிரமமாக உருவாக்கப்பட்டு வருவதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இரண்டு முதல் ஐந்து ரூபாய்களைக் கூட சேமிக்க இயலாத ஏழைகள் எதனைக் கொடுப்பார்கள்? 1000 ரூபாய்களைக் கொடுப்பவரைப் போன்றே, அவர்களுக்கும் வெகுமதி அளிக்கப்படுகிறது. பாரதமே அனைத்திலும் ஏழ்மையானது. தாங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்ததைப் பாரதவாசிகள் எவரும் நினைவு செய்வதில்லை. அவர்கள் தேவர்களின் புகழைப் பாடுகிறார்கள், ஆனால் அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதில்லை. ஒரு தவளை கத்துகிறது, ஒரு வானம்பாடிப் பறவை மிகவும் இனிமையாகவும், அழகாகவும் பாடுகிறது, ஆனால் அதில் அர்த்தம் இல்லை. இந்நாட்களில், கீதையைக் கூறுகின்ற பலர் இருக்கிறார்கள். இப்பொழுது அதனைச் செய்கின்ற பெண்கள் பலரும் இருக்கிறார்கள். கீதையின் மூலம் எந்தத் தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதைப் பற்றிய எதனையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒருவர் ஒரு சிறிதளவு மந்திரசக்தியைக் காண்பித்தால், அவர்கள் அவரைக் கடவுளாகக் கருதுகிறார்கள். அவர்கள் தூய்மையாக்குபவரை நினைவு செய்கிறார்கள்! ஆகவே, அவர்கள் தூய்மை அற்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். தந்தை கூறுகிறார்: விகாரத்தில் ஈடுபடுவதே, முதல் இலக்கப் பாவம். முழு உலகமும் தூய்மையற்றது. அனைவரும் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இப்பொழுது, அவர் வர வேண்டுமா அல்லது கங்கையில் நீராடுவதனால், நீங்கள் தூய்மையாகப் போகிறீர்களா? உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுவதற்குத் தந்தை அதிகளவு முயற்சியைச் செய்ய வேண்டும்! தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், நீங்கள் முட்களிலிருந்து மலர்களாக மாறுவீர்கள். ஒருபொழுதும் உங்கள் வாயிலிருந்து கற்கள் வெளிப்படுவதை அனுமதிக்க வேண்டாம்! மலர்கள் ஆகுங்கள்! இதுவும் ஒரு கல்வி. முன்னேறிச் செல்லும் பொழுது, சிலர் தீய சகுனங்களை அனுபவம் செய்வதனால், சித்தி அடைவதில்லை. நம்பிக்கை மிக்கவராக இருப்பதில் இருந்து, அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாக ஆகுகிறார்கள், பின்னர் அவர்கள் கூறுகிறார்கள்: நான் பாபாவிடம் செல்ல வேண்டும். தூய்மை அற்றவர்களால் இந்த இந்திர சபைக்குள் பிரவேசிக்கவும் முடியாது. இதுவே இந்திரசபை. அத்தகையவர்களை இங்கு அழைத்து வருகின்ற பிராமண ஆசிரியர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அவர்கள் விகாரத்தில் ஈடுபட்டால், பின்னர் பிராமண ஆசிரியரும் ஒரு சுமையைச் சேகரிக்கிறார். இதனாலேயே நீங்கள் எவரையாவது இங்கு அழைத்து வரும்பொழுது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, சாதுக்கள், புனிதர்கள் போன்ற அனைவரும் வரிசையில் காத்திருப்பதைக் காண்பீர்கள். பீஷ்ம பிதாமகர் என்னும் அத்தகைய பெயர்களும் உள்ளன. குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி இருக்க வேண்டும். பாரதம் பூந்தோட்டமாக இருந்தது எனவும், அங்கு தேவர்கள் வசித்தார்கள் எனவும் உங்களால் எவருக்கும் கூறமுடியும். அவர்கள் இப்பொழுது முட்கள் ஆகிவிட்டார்கள். உங்களில் ஐந்து விகாரங்கள் உள்ளன. இராவண இராச்சியம் என்றால், ஒரு காடு என அர்த்தம். தந்தை வந்து, முட்களை மலர்களாக மாற்றுகிறார். இதைப் பற்றிச் சிந்தியுங்கள்: நான் இப்பொழுது ஒரு ரோஜா மலராக ஆகாமல் விட்டால், பின்னர் நான் பிறவிபிறவியாக ஓர் அக் மலர் ஆகுவேன். உங்களில் ஒவ்வொருவரும் உங்களுக்கே நன்மை செய்ய வேண்டும். நீங்கள் சிவபாபாவுக்கு எந்தப் பெரிய சலுகையும் செய்யவில்லை! நீங்கள் உங்களுக்கே ஒரு சலுகை காட்ட வேண்டும். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஒருவர் பூந்தோட்டத்துக்குச் செல்லும்பொழுது, அவர் நறுமணம் மிக்க மலர்களை மாத்திரமே பார்ப்பார்; அவர் அக் மலர்களைப் பார்க்க மாட்டார். அவர்கள் மலர்க் கண்காட்சியை நடாத்துகிறார்கள், இதுவும் ஒரு மலர்க் கண்காட்சியே. ஒரு பெரிய பரிசு பெறப்படுகிறது. மிகவும் சிறந்த முதற்தரமான மலர்கள் ஆகுங்கள். உங்கள் நடத்தை மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். கோபப்படும் நபருடன் மிகவும் பணிவாகுங்கள்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நான் தூய்மையாகி, சுவர்க்கமாகிய தூய உலகின் அதிபதியாக விரும்புகிறேன். பல சாதுரியங்கள் உள்ளன. பெண்களுக்குக் தந்திரங்கள் உள்ளன. நீங்கள் திறமையுடன் தூய்மையாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கூற முடியும்: கடவுள் கூறினார்: காமமே கொடிய எதிரி! தூய்மை ஆகுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்! “ஆகவே, நான் கடவுள் கூறுவதைக் கேட்கக் கூடாதா?” சரியான வழிமுறை மூலம் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். உலக அதிபதி ஆகுவதற்கு, நீங்கள் ஒரு சிறிதளவைச் சகித்தாலென்ன? நீங்கள் அனைத்தையும் உங்களுக்காகவே செய்கிறீர்கள். அம்மக்கள் அரசாங்கத்துக்காகச் சண்டை செய்கிறார்கள், ஆனால் நீங்களோ அனைத்தையும் உங்களுக்காகவே செய்கிறீர்கள். நீங்கள் சில முயற்சிகளைச் செய்ய வேண்டும். தந்தையை மறப்பதனால் நீங்கள் வீழ்வதுடன், பின்னர் அவமானத்தையும் உணர்கிறீர்கள். பின்னர் உங்களால் எவ்வாறு தேவர்களாக முடியும்? அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் தீய சகுனங்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு, உங்கள் வாயிலிருந்து இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரம் வெளிப்பட அனுமதியுங்கள். நீங்கள் வைத்திருக்கும் சகவாசத்தையிட்டு மிகவும் கவனமாக இருங்கள்.2. நறுமணம் மிக்கதொரு மலர் ஆகுவதற்கு, தொடர்ந்தும் குறைபாடுகளை அகற்றுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மிக, மிகப் பணிவானவர்கள் ஆகுங்கள். கொடிய எதிரியாகிய, காமத்தினால் ஒருபொழுதுமே தோற்கடிக்கப்படாதீர்கள். சாதுரியத்துடன் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்கள் சகல சக்திகளையும் உங்கள் அதிசயங்களாக அன்றி, உங்களுடைய கடமையாகப் பயன்படுத்துவன் மூலம் பூஜிக்கத் தக்கவராகவும், நினைவு கூரப்படுபவராகவும் ஆகுவீர்களாக.நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதனால் பெறுகின்ற சக்திகளை அதிசயங்களாகப் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், அவற்றைப் பயன்படுத்துவது உங்களின் கடமை. அந்த மக்கள், மந்திரசக்தியின் மூலம் அதிசயங்களைப் புரிகின்றார்கள், ஆனால் உங்களுக்கு ஸ்ரீமத் உள்ளது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் நிச்சயமாக சக்திகளை விருத்தி செய்கிறீர்கள். இவ்வாறே உங்கள் எண்ணங்கள் நடைமுறை ஆகுகின்றன. உங்கள் எண்ணங்கள் மூலம் உங்களால் ஒருவரைப் பணியொன்றை மேற்கொள்ளுமாறு தூண்ட முடியும். அதுவும் ஒரு சக்தியே. எவ்வாறாயினும், ஸ்ரீமத்துடன் உங்கள் சொந்த மனதின் கட்டளைகளைக் கலக்காத பொழுது மட்டுமே உங்களால் பூஜிக்கத் தக்கவராகவும், நினைவு கூரப்படுபவராகவும் ஆகமுடியும்.
சுலோகம்:
எவ்வகையான குழப்பத்தினாலும் மனந்தளர்ந்து போவதற்குப் பதிலாக, பெரிய இதயம் உடைய ஒருவராக ஆகுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.
இலகு சுபாவம் உடையவர்கள், இனிமை எனும் தெய்வீகக் குணத்தினால் நிறைந்திருப்பார்கள். அவர்கள் சதா முகமலர்ச்சியாக இருக்கின்றார்கள். முகமலர்ச்சி உடையவர்கள், அனைவரையும் தங்களை நோக்கிக் கவருகிறார்கள். முகமலர்ச்சியாக இருத்தல் என்றால், அதீந்திரிய சுகம் எனும் ஊஞ்சலில் ஊஞ்சல் ஆடுதல் என்று அர்த்தம். இந்த ஞானத்தைக் கடையும்பொழுது, அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்து, அதீந்திரிய சுகத்தில் ஊஞ்சலாடுங்கள். இதுவே முகமலர்ச்சியாக இருத்தல் எனப்படுகின்றது. இவ்விதமாக, முகமலர்ச்சியாக இருப்பவர்களே அனைவரையும் கவர்கின்றார்கள்.