27.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நினைவின் மூலம் ஆத்மாக்களாகிய உங்களிலிருந்து குப்பையைத் தொடர்ந்தும் அகற்றுங்கள். ஆத்மாக்கள் முழுமையாகத் தூய்மையாகும் பொழுது மாத்திரமே அவர்களால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியும்.

கேள்வி:
தந்தையின் எவ்வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால் இந்த இறுதிப் பிறவியில் குழந்தைகளாகிய நீங்கள் நன்மையை அனுபவம் செய்கிறீர்கள்?

பதில்:
பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே இந்த இறுதிப் பிறவியில் தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோருங்கள். உங்கள் புத்தியை வெளியே அலைய அனுமதிக்காதீர்கள். நஞ்சைத் துறந்து அமிர்தத்தைப் பருகுங்கள். இந்த இறுதிப் பிறவியில் மாத்திரமே உங்கள் 63 பிறவிகளின் பழக்கங்களை முடிக்க வேண்டும். ஆகவே இரவுபகலாக முயற்சி செய்து ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்.

ஓம் சாந்தி.
அமைதி தாமமே ஓய்வுக்குரிய தாமமாகும். இவ்வுலகையிட்டு அனைவரும் களைப்படைந்து உள்ளார்கள். அவர்கள் தங்களுடைய சந்தோஷ தாமத்துக்குச் செல்ல விரும்புகிறார்கள்; அவர்கள் இவ்வுலகை விரும்பவில்லை. அவர்களால் சுவர்க்கத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கும் பொழுது எவ்வாறு அவர்களின் இதயம் நரகத்துடன் தொடர்புபட்டிருக்க முடியும்? ஆகவே அவர்கள் கூறுகிறார்கள்: பாபா விரைந்து செயற்படுங்கள்! இத்துன்ப தாமத்திலிருந்து எங்களை அப்பால் அழைத்துச் செல்லுங்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது ஒரு தீய உலகம் ஆகும். இது நரகமாகிய அசுரர்களின் உலகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறந்;த பெயரா? தேவ உலகத்துக்கும் அசுர உலகத்துக்கும் இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. இந்த அசுர உலகத்தின் மீது அனைவரும் சலிப்படைந்து உள்ளார்கள், ஆனாலும் எவராலும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாதுள்ளது. ஆத்மாக்களாகிய உங்களுக்குள் தமோபிரதான் மாசு கலக்கப்பட்டுள்ளது; ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த மாசை அகற்றுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். சிறந்த முயற்சியைச் செய்பவர்கள் இறுதியில் ஒரு சிறந்த ஸ்திதியைக் கொண்டிருப்பார்கள். இப்பழைய உலகம் அழிவடையும் மிகச்சொற்ப நாட்கள் மாத்திரமே இப்பொழுது எஞ்சியுள்ளன. தந்தை வந்து உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்லும்வரையில் எவராலும் வீடு திரும்ப முடியாது. உலகில் துன்பமே உள்ளது. வீட்டிலும் ஏதாவதொன்றைப் பற்றிய துன்பம் அவர்களுக்கு உள்ளது. உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவிப்பதற்கு பாபா வந்து விட்டார் என்பது குழந்தைகளான உங்கள் இதயத்தில் உள்ளது. சிறந்த நம்பிக்கையைக் கொண்ட புத்தி உடையவர்கள் ஒருபொழுதும் தந்தையை நினைவுசெய்ய மறப்பதில்லை. அவர் அனைவரினதும் துன்பத்தை அகற்றுபவர் என்று அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அவரை இனங்கண்டு கொள்கிறீர்கள். அவரை அனைவரும் இனங்கண்டு கொள்வார்களாயின் அவர்கள் அனைவரும் எங்கே அமர்வார்கள்? ஆகவே அது அசாத்தியமானது. அதனால் நாடகத்தில் அத்தகையதொரு வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களால் மாத்திரமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். இது சரியானது. ஆத்மாக்கள் தண்டனையை அனுபவம் செய்து பின்னர் அமைதி தாமத்திற்கும் தூய உலகத்திற்கும் செல்வார்கள். ஆனால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்யப்படவே வேண்டும். இரண்டாவதாகஇ தூய்மை ஆகாமல் எவராலும் தூய உலகத்துக்குச் செல்ல முடியாது. இன்னார் ஒளிக்குள் இரண்டறக் கலந்துவிட்டார் என்றோ அல்லது அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள் என்றோ மக்கள் கூறும்பொழுது அது அசாத்தியமானது. முதலாவதாகப் பூமிக்கு வந்தவர்களான இலக்ஷ்மி நாராயணனாலேயே வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாத போது வேறு எவராலும் எவ்வாறு வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியும்? இப்பொழுது அவர்களுடைய 84 பிறவிகள் முடிவுக்கு வருகின்றது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்பிச் செல்வதற்கே தபஸ்யா செய்கிறீர்கள். அனைவரும் ஒரேயொரு தந்தையையே அழைக்கிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! ஓ முக்தியளிப்பவரே! தந்தையாகிய கடவுளே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். அவர்கள் கிருஷ்ணர் போன்றவர்களை அழைப்பதில்லை. அவர்கள் கிறிஸ்துவர்களாக அல்லது முஸ்லீம்களாக இருந்தாலென்ன அவர்கள் அனைவரும் அழைக்கிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே. ஆத்மாக்கள் தங்கள் தந்தையை அழைக்கிறார்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் பொழுதே நீங்கள் “தந்தை” எனக் கூறுகிறீர்கள். ஆத்மாக்களும் ஏதாவதொன்றாக இருக்க வேண்டும். ஆத்மாக்கள் பெரியவை அல்ல, ஆனால் அவர்கள் நட்சத்திரங்களும் மிகவும் சூட்சுமமானவர்களும் ஆவார்கள். பாபாவின் ரூபத்தைப் போன்றே ஆத்மாக்களின் ரூபமும் உள்ளது. நீங்கள் அனைவரும் தந்தையைப் புகழ்கிறீர்கள். அவரே சத்தியமும் உணர்வுள்ளவரும் ஞானக்கடலும் பேரானந்தக் கடலும் ஆவார். ஆத்மாக்களாகிய நீங்கள் அவருக்குச் சமமானவர்கள் ஆகுகிறீர்கள். முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. வேறெந்த மனிதரிடமும் இந்த ஞானம் கிடையாது. பாரதம் முழுவதிலும் வெளிநாடுகள் எங்கிலும் சென்று தேடிப் பாருங்கள், இதனை அறிந்த வேறு எவரையும் நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள். ஆத்மா 84 பிறவிகளின் பாகத்தை நடிக்கிறார். 8.4 மில்லியன் பிறவிகளை எடுப்பது அசாத்தியமானது. 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றி எவராலும் பேசக் கூட முடியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றி அறிந்து கொள்வதில்லை. நான் உங்களுக்கு அவற்றைப் பற்றிக் கூறுகிறேன். எவ்வாறு எவராவது 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுவது அசாத்தியம் என்பதை இவை அனைத்தையும் செவிமடுக்கும் பொழுது கல்லுப்புத்தி உடையவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்து விட்டீர்கள். பிரம்மா 84 பிறவிகளை எடுத்தார். விஷ்ணுவும் 84 பிறவிகளை எடுத்தார். பிரம்மா விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு பிரம்மா ஆகுகிறார். 84 பிறவிகளை எடுக்கின்ற இலக்ஷ்மியும் நாராயணனுமே சரஸ்வதியும் பிரம்மாவும் ஆகுகிறார்கள். இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு 5000 வருடங்களும் வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். சக்கரம் 5000 வருடங்களுக்கு உரியது. குலங்களின் இரகசியத்தை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். “ஹம்சோ” என்பதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொண்டு விட்டீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் தேவர்களாகி பின்னர் சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகுகிறோம். நாங்கள் அத்தனை பிறவிகளை எடுத்த பின்னர் பிராமணர்கள் ஆகுகிறோம். பிராமணர்களின் இந்த ஒரு பிறவியும் உள்ளது. இதுவே ஒரு வைரத்தைப் போன்று பெறுமதியான பிறவியாகும். தந்தை கூறுகிறார்: அவை உங்களுடைய மேன்மையான சரீரங்கள். அச்சரீரங்களினூடாக உங்களால் உங்களுடைய சுவர்க்க ஆஸ்தியைக் கோர முடியும். இதனாலேயே நீங்கள் இனிமேலும் வேறெந்தத் திசையிலும் அலையக்கூடாது. இந்த ஞானாமிர்தத்தை அருந்துங்கள். உண்மையிலேயே நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். முதலில் சத்தியயுகத்தில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர் உங்களில் வெள்ளிக் கலப்படம் கலக்கப்பட்டதால் நீங்கள் சதோ ஆகினீர்கள். முழுக் கணக்கும் காட்டப்பட்டுள்ளது. அரசாங்கமும் தங்கத்துடன் கலப்படத்தைக் கலக்கும்படி அனைவருக்கும் கூறுகிறது. “14 கரட் தங்கத்தை அணியுங்கள்”. தங்கத்துடன் கலப்படத்தைக் கலப்பதைப் பாரத மக்கள் மங்களகரம் அற்றதாகக் கருதுகிறார்கள். ஒரு திருமணம் நிகழும் பொழுது அவர்கள் நிஜத் தங்கத்தை அணிகிறார்கள். பாரத மக்கள் தங்கத்தைப் பெருமளவுக்கு விரும்புகிறார்கள். ஏன்? பாரதத்தைப் பற்றிக் கேட்கவும் வேண்டாம்! சத்தியயுகத்தில் தங்க மாளிகைகள் உள்ளன, அங்கு தங்கக் கட்டிகள் உள்ளன. நீங்கள் இங்கு கற் குவியல்களைக் கொண்டிருப்பதைப் போன்றே அங்கு தங்க, வெள்ளிக் குவியல்கள் உள்ளன. அவர்கள் மாயையைப் பற்றிய ஒரு நாடகத்தைக் காட்டுகிறார்கள். அந்நபர் தங்கக் கட்டிகளைக் கண்டு (சூட்சும உலகிலிருந்து) தன்னுடன் அவற்றைத் திரும்பவும் எடுத்து வர எண்ணினார். அவர் கீழே வந்தபொழுது இங்கு எதுவுமே இல்லாததைக் கண்டார். அதில் ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும். தாங்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்துக்குச் செல்கிறார்கள் என்பதைப் புதல்விகள் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுடைய கணவர்கள் அவர்களைத் தொந்தரவு செய்தால் அவர்கள் உள்ளுர அழுது எப்பொழுது தாங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்ல முடியுமோ என அங்கலாய்கிறார்கள். “பாபா விரைந்து செயற்படுங்கள்!” தந்தை கூறுகிறார்: குழந்தைகளே எவ்வாறு என்னால் விரைந்து செயற்பட முடியும்? எல்லாவற்றுக்கும் முதலில் யோகசக்தி மூலம் உங்கள் குப்பையை அகற்றுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். தந்தை உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார். நீங்கள் அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! நீங்கள் பாடவும் செய்கிறீர்கள்: ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அது இந்நேரத்தையே குறிக்கிறது. அகாசூரன், பகாசூரன் என்னும் அசுரர்களின் பெயர்கள் சங்கமயுகத்தின் தற்காலத்தையே குறிப்பிடுகின்றன. இதுவே அசுர உலகம் ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் முழு விருட்சமும் முற்றாக உக்கிய நிலையை அடையும்பொழுது நான் வருகிறேன். சத்தியயுகத்தில் அனைத்தும் சதோபிரதானாகவே உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு பல்வேறு பறவைகளும் மிருகங்களும் உள்ளன. அங்கு அத்தனை உயிரினங்கள் இருக்க மாட்டாது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தங்களைச் சுற்றிலும் பெருமளவு சுத்தத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வசிப்பிடங்கள், அவர்களுடைய தளபாடங்கள் போன்றவை மிகவும் சிறந்தவை. நீங்களும் அத்தகைய மேன்மையான தேவர்கள் ஆகுகிறீர்கள். அங்கு எவ்விதமான அசுத்தமும் இருக்க முடியாது. இங்கு நுளம்புகளும் பல விதமான நோய்கள் போன்றனவும் உள்ளன. எங்கும் அதிகளவு அசுத்தம் உள்ளது! கிராமங்களில் அந்தளவு அசுத்தம் இருப்பதில்லை. பெரிய நகரங்களில் அதிகளவுக்கு அசுத்தம் உள்ளது, ஏனெனில் அங்கு பல்வேறு மக்கள் உள்ளனர். அவர்கள் வசிப்பதற்குப் போதுமானளவு இடம் இல்லை. நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். மக்கள் பாடுகிறார்கள்: பிரம்மா பிரபஞ்சத்தில் இருக்கிறார், விஷ்ணு பிரபஞ்சத்தில் இருக்கிறார், 900இ000 நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உள்ளனர். பிரம்மா விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணுவுடன் நட்சத்திரங்களும் உள்ளார்கள்; அவர்கள் சத்தியயுகத்தில் தேவர்கள் ஆகுகிறார்கள், அதனால் அத்தனை பேர் இருக்க மாட்டார்கள். முதலில் விருட்சம் சிறியதாக இருந்து பின்னர் வளர்கிறது. சத்தியயுகத்தில் மிகச் சொற்பளவினரே இருப்பார்கள். அவர்கள் இனிமையான ஆற்றங்கரைகளில் வாழ்வார்கள். இங்கு ஆறுகளிலிருந்து பல்வேறு கால்வாய்கள் உருவாக்கப்படுகின்றன. அங்கு எந்தக் கால்வாய்களும் இருக்க மாட்டாது. அங்கு ஒரு கைப்பிடி அளவினரான மக்கள் மாத்திரமே இருக்கிறார்கள். அந்தளவு மக்களுக்கு கங்கையாறும் யமுனை ஆறும் போதுமானதாக இருக்கும். அவர்கள் அனைவரும் அந்த ஆறுகளுக்கு அருகில் வாழ்கிறார்கள். அங்கு பஞ்ச தத்துவங்களும் தேவர்களுக்கு அடிமைகள் ஆகுகின்றன. அங்கு ஒருபொழுதும் வழமைக்கு மாறான மழைவீழ்ச்சி இருப்பதில்லை. ஆறுகள் ஒருபொழுதும் பெருக்கெடுப்பதில்லை. அதன் பெயரே சுவர்க்கம் ஆதலால், அங்கு அதற்கு மேலாக வேறு என்ன இருக்க முடியும்? மக்கள் சுவர்க்கத்தின் கால எல்லை பல நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறுகிறார்கள். சரி, எங்களுக்குக் கூறுங்கள், யார் அங்கு ஆட்சி செய்தார்கள்? அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பொய்களைக் கூறுகிறார்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே மிகச்சரியாக உங்கள் பாகங்களை நடிக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். இந்த உருத்திர ஞான யாகத்தில் அசுரர்களிடம் இருந்து பல விதமான தடைகள் இருக்கும். அசுரர்கள் மேலிருந்து குப்பையையும் சாணம் போன்றவற்றையும் வீசினார்கள் என மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் இல்லை. எவ்வாறு பலவிதமான தடைகள் ஏற்படுகின்றன என்பதை உங்களால் பார்க்க முடியும். அப்பாவிகள் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகுகிறார்கள். அப்பொழுதே பாவக் கலசம் நிறைகிறது. தந்தை கூறுகிறார்: சிறிதளவு சகித்துக் கொள்ளப்பட வேண்டும். தொடர்ந்தும் உங்கள் தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். அடிவாங்கும் வேளையிலும் சிவபாபாவை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் புத்தியில் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் தூக்கிலிடப்பட இருக்கும் வேளையிலும் ஒரு குரு அவரைத் தந்தையாகிய கடவுளை நினைவு செய்யும்படி கூறுகிறார். “கிறிஸ்துவை நினைவு செய்யுங்கள்” என அவர் கூறுவதில்லை: அவர் அந்நபருக்குக் கடவுளை நினைவு செய்யுமாறே ஒரு சமிக்ஞையைக் கொடுக்கிறார். அவர் மிகவும் அன்பானவர்! அனைவரும் அவரையே அழைக்கிறார்கள். ஆத்மாக்களே அழைக்கின்றனர். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் 63 பிறவிகளாகச் சரீர உணர்வு உடையவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது அரைக் கல்பத்துக்கான அந்தப் பழக்கத்தை ஒரே பிறவியில் முடித்து விடுங்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதனால் நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். இது அத்தகையதொரு மேன்மையான பேறாகும்! ஆகவே நீங்கள் இதற்காக இரவுபகலாக முயற்சி செய்ய வேண்டும். தங்கள் வியாபாரம் போன்றவற்றில் மக்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். மக்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கும் பொழுது தூங்கி வழிவதோ அல்லது கொட்டாவி விடுவதோ கிடையாது; அவர்களுக்குப் பணத்தைச் சம்பாதிக்கின்ற சந்தோஷம் உள்ளது. களைப்படைந்தவர்கள் ஆகுவதற்கான கேள்வியே கிடையாது. பாபாவும் அனுபவம் வாய்ந்தவர். நீராவிக் கப்பல்கள் இரவில் வரும்பொழுது மக்கள் பொருட்களை வாங்குவதற்காக வெளியில் வருகிறார்கள். வாடிக்கையாளர்களின் சட்டைப்பைகள் வெறுமை ஆகும்வரை கடை உரிமையாளர்கள் அவர்களை விட்டு வைப்பதில்லை! பாபா மிகவும் அனுபவம் வாய்ந்ததோர் இரதத்தைப் பெற்றுள்ளார். இவர் அனைத்தையும் அனுபவம் செய்துள்ளார். இவரும் ஒரு கிராமத்துக் குறும்புக்காரச் சிறுவனாகவே இருந்தார். இவர் அண்ணளவாக 40 இறாத்தல் தானியத்தை 10 அணாக்களுக்கு (62 பைசாக்கள்) விற்பது வழக்கமாகும். இப்பொழுது பாருங்கள், இவர் உலக அதிபதி ஆகுகிறார்! இவர் முழுமையாகவே ஒரு கிராமத்துக் குறும்புக்காரச் சிறுவனாக இருந்தார். பின்னர் இவர் வளர்ந்து பெரிய மனிதராகிய போது முழுமையாகவே நகை வியாபாரத்தில் ஈடுபட்டார். நகையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. இது இப்பொழுது நிஜமான நகை வியாபாரம் ஆகும். இது ஓர் இராஜ வியாபாரம் ஆகும். பாபா மிகவும் அனுபவம் வாய்ந்தவர். பாபா தனது சொந்த வீட்டுக்குச் செல்வது போல் ஆளுநர் போன்றவர்களின் வீட்டுக்குச் செல்வதுண்டு. இவை அழிவற்ற இந்த ஞான இரத்தினங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் உங்கள் புத்தியில் அதிகளவுக்குக் கிரகிக்கும் பொழுது அதிகளவுக்கு ஒரு கோடானுகோடீஸ்வரர் ஆகுவீர்கள். சிவபாபாவே வியாபாரியும் நகை வியாபாரியும் என்று அழைக்கப்படுகிறார். மக்கள் அவருடைய புகழைப் பாடிய பின்னர் அவர் சர்வவியாபி எனக் கூறுகிறார்கள். அவருடைய புகழுடன் அவரை அவதூறு செய்வதும் உள்ளது. பக்தி மார்க்கத்தின் நிலைமை என்னவாகி விட்டது எனப் பாருங்கள்! தந்தை கூறுகிறார்: பக்தி முடிவுக்கு வரும்பொழுது பக்தர்களைப் பாதுகாப்பவராகிய தந்தை வருகிறார். யார் அதிகமாகப் பக்தி செய்கிறார் என்பதுவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்களே அதிகமாகப் பக்தி செய்கிறீர்கள். அத்தகையவர்களே இங்கு வந்து முதலில் பிராமணர்களாகி மீண்டும் ஒருமுறை தந்தையிடம் இருந்து வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்ற தங்கள் ஆஸ்தியைக் கோருவார்கள். இராவணன் உங்களை வழிபடுபவர்கள் ஆக்கினான், தந்தை உங்களை வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். இவையே கடவுளின் வாசகங்கள். கடவுள் ஒருவர், இரண்டு அல்லது மூன்று கடவுள்கள் இருக்க முடியாது. கீதையின் கடவுள் நினைவு கூரப்படுகிறார். “கடவுள் சிவன் பேசுகிறார்” என எழுதுவதற்குப் பதிலாக அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டு விட்டார்கள். இதனால் அது அத்தகையதொரு வேறுபாட்டை உருவாக்கியுள்ளது! நாடகத்திற்கேற்ப கீதையின் பெயர் அவ்விதமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அவர்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! தந்தை உங்களைத் தூய்மை ஆக்குகிறார். இராவணன் உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறான். இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு ஒரு மிகத் திறமையான புத்தி தேவைப்படுகிறது. அதிமேன்மையான வழிகாட்டல்களான ஸ்ரீமத் ஒரேயொரு தந்தையிடம் இருந்தே பெறப்படுகின்றது. தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால் இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகள் ஆகினார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஒரு பிறவியில் 63 பிறவிகளின் சரீர உணர்வு என்னும் பழைய பழக்கத்தை அகற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஆத்ம உணர்வு உடையவராகி ஒரு சுவர்க்க அதிபதி ஆகுங்கள்.

2. வைரங்களைப் போல் பெறுமதிமிக்க இம்மேன்மையான பிறவியில் உங்கள் புத்தி அலைபாய்வதை அனுமதிக்காதீர்கள். சதோபிரதான் ஆகுங்கள். எந்த வன்முறைத் தாக்குதல்களையும் சகித்து தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
ஆதார சொரூபமாகவும் ஈடேற்றுபவராகவும் ஆகி சரீரத்தந்தையை போன்று உங்களுடைய ஒவ்வொரு செயலையும் ஒரு ஞாபகார்த்தம் ஆக்குவீர்களாக.

சரீரத்தந்தை தனது ஒவ்வொரு செயலையும் ஒரு ஞாபகார்த்தமாக ஆக்கினார். அவ்வாறே உங்களை ஓர் ஆதார சொரூபமும் ஈடேற்றுபவரும் எனக் கருதி வாழும் போது உங்களுடைய ஒவ்வொரு செயலும் ஒரு ஞாபகார்த்தமாக ஆகும். உலக மாற்றத்திற்கான ஆதார சொரூபம் எனத் தம்மைக் கருதுபவர்களின் ஒவ்வொரு செயலும் அதியுயர்வானதாக இருக்கும். உங்களுடைய பார்வையும் மனோபாவமும் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்ற உணர்வைக் கொண்டிருக்கும் போது உங்களுடைய ஒவ்வொரு செயலும் மேன்மையானது ஆகின்றது. அத்தகைய மேன்மையான செயல்கள் ஒரு ஞாபகார்த்தம் ஆகுகின்றது.

சுலோகம்:
சத்தியத்தின் சக்தியைக் கிரகிக்க வேண்டுமாயின் சகிப்புத்தன்மை கொண்டிருங்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

இந்த இலகு யோகி வாழ்வில் நீங்கள் சிரமத்தை அனுபவம் செய்வீர்களாயின் உங்களால் எவ்வாறு இலகுவாக ஆட்சி புரிய முடியும்? இங்கிருக்கின்ற சம்ஸ்காரங்களே உங்களை அங்கே அழைத்துச் செல்கின்றன. தேவர்களின் படங்களைப் பாருங்கள், அவர்கள் நிச்சயமாக இலகுத்தன்மையையும் எளிமையையும் தமது முகங்களில் காட்டுகிறார்கள். ஒருவர் எந்தளவிற்கு இலகுவான முயற்சியாளராக உள்ளாரோ அந்தளவிற்கு அவர் தனது மனதில் எளிமையாகவும் தனது வார்த்தைகளில் எளிமையாகவும் தமது செயல்களில் எளிமையாகவும் இருப்பார். அத்தகைய ஓர் ஆத்மாவே ஒரு தேவதை என்று அழைக்கப்படுகின்றார்.