28.02.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இறை சமுதாயத்தினர் ஆவீர்கள். நீங்கள் ஞான சூரியனாகிய தந்தையை, இனங்கண்டு விட்டீர்கள். நீங்கள் இப்பொழுது விழித்து எழுந்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் ஏனையோரை விழித்தெழச் செய்ய வேண்டும்.

கேள்வி:
பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருப்பது ஏன்? அவற்றுக்கான தீர்வு என்ன?

பதில்:
சரீர உணர்வு உள்ளபொழுது, பல்வேறுபட்ட முரண்பாடுகள் உள்ளன. மாயையின் சகுனங்கள் உள்ளன. பாபா கூறுகிறார்: ஆத்ம உணர்வு உடையவர்களாகி, உங்களைச் சேவையில் ஈடுபடுத்துங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள், தீய சகுனங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தவும், உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கவும் தந்தை வந்துள்ளார். நாடகத் திட்டத்துக்கேற்பவே அனைத்தும் இடம்பெற வேண்டும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். மிகச் சொற்ப நேரமே எஞ்சியுள்ளது. இராவணனின் உலகிலிருந்து இப்பாரதம் மீண்டும் ஒருமுறை விஷ்ணு உலகமாக ஆக்கப்பட வேண்டும். தந்தை மறைமுகமானவர், இக்கல்வியும் மறைமுகமானதாகும். பல நிலையங்கள் உள்ளன. சிறிய, பெரிய நிலையங்கள் சிறிய கிராமங்களிலும், பெரிய நகரங்களிலும் உள்ளன, பல குழந்தைகளும் உள்ளார்கள். குழந்தைகள் ஒரு சவாலை விடுத்துள்ளார்கள். ஆகவே, எப்பொழுதெல்லாம் நீங்கள் ஏதாவது புத்தகங்களை எழுதும் போதும், நீங்கள் எழுத வேண்டும்: எங்களுடைய இந்த பாரத தேசத்தை நாங்கள் நிச்சயமாக சுவர்க்கமாக ஆக்குவோம். நீங்களும் உங்கள் பாரத தேசத்தின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில் 5000 வருடங்களுக்கு முன்னர் இப்பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாரதம் மிகவும் இராஜரீகமாகவும், அழகாகவும் இருந்தது. அது சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய உங்களுக்கு மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நாங்கள் நிச்சயமாக, பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்கவேண்டும். நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காட்ட வேண்டும். எவ்விதமான முரண்பாட்டுக்குமான கேள்வியே கிடையாது. எவ்வாறு உங்களால் இதைக் கண்காட்சிப் படங்களுடன் விளம்பரப்படுத்த முடியும் எனவும், செய்தித்தாள்களில் படங்களைப் பிரசுரிக்க முடியும் எனவும் நீங்கள் அமர்ந்திருந்து உங்கள் மத்தியில் கலந்துரையாட வேண்டும். பாரதத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பதைக் கலந்து ஆலோசிப்பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் எவ்வாறு ஒன்றுகூடுகிறார்களோ, அவ்வாறே, இதை உங்கள் மத்தியில் கலந்துரையாடுவதற்கும் ஒரு கருத்தரங்கை நடாத்துங்கள். எவ்வாறு அனைத்து விடயங்களையும் தீர்த்துக் கொள்வது என்பதையும், எவ்வாறு பாரதத்தில் மீண்டும் ஒருமுறை அமைதியையும், சந்தோஷத்தையும் ஸ்தாபிப்பது என்பதையும் அவர்கள் அமர்ந்திருந்து கலந்துரையாடுகிறார்கள். அந்த அரசாங்கம் தொடர்ந்தும் அம்முயற்சியைச் செய்கிறது. உங்கள் பாண்டவ அரசாங்கம் நினைவுகூரப்படுகிறது. இதுவும் முக்கியமான இறை அரசாங்கம் ஆகும். இது உண்மையில் தூய இறை அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. தூய்மையாக்குபவராகிய தந்தை இங்கே அமர்ந்திருந்து தூய்மையற்ற குழந்தைகளைத் தூய உலகின் அதிபதிகளாக ஆக்குகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். பாரதத்தின் ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே பிரதான விடயமாகும். இதுவே உருத்திர ஞானயாகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை சிவனாகிய, கடவுளே, உருத்திரர் என அழைக்கப்படுகிறார். உண்மையிலேயே தந்தை வந்து, உருத்திர ஞான யாகத்தை ஸ்தாபித்தார் என்பது நினைவுகூரப்படுகிறது. அவர்கள் மிகவும் நீண்டதோர் ஆயுட்காலத்தைக் காண்பித்துள்ளார்கள். அவர்கள் அறியாமை என்னும் உறக்கத்தில் உறங்குகிறார்கள். இப்பொழுது தந்தை உங்களை விழித்தெழச் செய்துள்ளார். நீங்கள் ஏனையோரை விழித்தெழச் செய்ய வேண்டும். நாடகத் திட்டத்துக்கேற்ப, நீங்கள் தொடர்ந்தும் ஏனையோரை விழித்தெழச் செய்கிறீர்கள். இந்நேரம்வரை நீங்கள் என்னென்ன முயற்சிகள் அனைத்தையும் செய்துள்ளீர்களோ, அதே முயற்சியை முன்னைய கல்பத்திலும் செய்தீர்கள். ஆம், ஒரு யுத்த களத்தில் வெற்றியும், தோல்வியும் உள்ளன. சிலசமயங்களில் மாயை அதிகம் சக்திநிறைந்தவளாக இருக்கிறாள், சிலசமயங்களில் கடவுளின் குழந்தைகள் அதிகம் சக்திநிறைந்தவர்களாக இருக்கிறார்கள். சிலசமயங்களில் சேவை மிகவும் விரைவாக முன்னேறிச் செல்கிறது, சிலசமயங்களில் குழந்தைகள் மாயையின் தடைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மாயை அவர்களை முழுமையாக உணர்வற்றவர்கள் ஆக்குகிறாள். இது ஒரு யுத்தகளம், இல்லையா? இராமரின் குழந்தைகளை மாயையாகிய இராவணன், உணர்வற்றவர்களாக ஆக்குகிறான். இலக்குமணனின் கதை உள்ளது. மனிதர்கள் அனைவரும் கும்பகர்ண உறக்கத்தில் உறங்குகிறார்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். இறை சமுதாயத்துக்கு உரியவர்களாகிய நீங்கள், இதைக் கூறுகிறீர்கள். ஞான சூரியனைக் கண்டுகொண்டவர்களும் அதனால் விழித்து எழுந்துள்ளவர்களும் இதைப் புரிந்து கொள்வார்கள். ஒருவருக்கொருவர் எதையும் கூறவேண்டிய அவசியம் இல்லை. இறை சமதாயத்துக்கு உரியவர்களாகிய நீங்கள் உண்மையிலேயே விழித்nழுந்து விட்டீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஏனைய அனைவரும் இன்னமும் உறங்குகிறார்கள். குழந்தைகளுக்கு அவர்களின் ஆஸ்தியைக் கொடுப்பதற்குப் பரமாத்மாவாகிய, பரமதந்தை வந்திருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இதை முழுமையாக மறந்து விட்டார்கள். தந்தை பாரதத்துக்கு மாத்திரம் வருகிறார். அவர் வந்து பாரதத்தைச் சுவர்க்க அதிபதியாக ஆக்குகிறார். பாரதம் சுவர்க்க அதிபதியாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. பரமாத்மாவாகிய, பரமதந்தையின் பிறப்பும் இங்கேயே இடம்பெறுகிறது. அவர்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள், இல்லையா? அவர் நிச்சயமாக வந்து, எதையோ செய்திருக்க வேண்டும். புத்தி கூறுகிறது: அவர் நிச்சயமாகவே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபித்திருக்க வேண்டும். தூண்டுதலினூடாக ஸ்தாபனை இடம்பெற முடியாது. இங்கு, குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்படுகிறது. உங்களுக்கு நினைவுயாத்திரை விளங்கப்படுத்தப்படுகிறது. தூண்டுதலினூடாக ஒலி பரவ முடியாது. சங்கரருக்கு ஒரு தூண்டுதல் கிடைக்கிறது எனவும், அப்பொழுதே யாதவர்கள் ஏவுகணைகள் போன்றவற்றை உருவாக்குகிறார்கள் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், அதில் தூண்டுதலுக்கான கேள்வியே கிடையாது. ஏவுகணைகளை உருவாக்குவது, நாடகத்தில் அவர்களின் பாகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாடகத்துக்கேற்ப, விநாசம் இடம்பெற வேண்டும். மகாபாரத யுத்தத்தில் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்றவை அனைத்தும் திரும்பத் திரும்ப இடம்பெற வேண்டும். ஒரேதர்மம் இருக்கப் போகின்ற பாரதத்தில் நீங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பீர்கள் என நீங்கள் உத்தரவாதம் அளிக்கிறீர்கள். பல சமயங்கள் அழிக்கப்படும் என்பதை நீங்கள் எழுதுவதில்லை. சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்ட பொழுது, வேறு சமயங்கள் எதுவும் இருக்கவில்லை என்பது தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது இவை அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். சிவன், பிரம்மா, விஷ்ணுவுக்கே அதிமகத்துவமான பாகங்கள் உள்ளன. பிரம்மா, விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு, பிரம்மா ஆகுகிறார். இவை மிகவும் ஆழமான விடயங்களாகும். விஷ்ணு எவ்வாறு பிரம்மா ஆகுகிறார், பிரம்மா எவ்வாறு விஷ்ணு ஆகுகிறார் என்பன மிகவும் விரைவாக, விவேகிகளான குழந்தைகளின் புத்தியில் பிரவேசிக்கின்றன. தேவ சமுதாயமும் உருவாக்கப்பட்டது. அது ஒருவர் மட்டும் உருவாக்கப்பட்டதற்கான கேள்வியே கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். உலகில் உள்ள ஒரு நபரேனும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனையும், விஷ்ணுவையும் வழிபட்டாலும், விஷ்ணுவே இலக்ஷ்மி நாராயணனின் இரட்டை ரூபம் என்பதையும், புதிய உலகில் இராச்சியத்தை ஆட்சி செய்பவர் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறாயினும், மனிதர் எவருக்கும் நான்கு கரங்கள் இருப்பதில்லை. சூட்சும லோகத்தில் காட்டப்பட்டுள்ள இந்த இலக்கும் குறிக்கோளும் இல்லறப் பாதையைச் சித்தரிப்பதற்கே ஆகும். எவ்வாறு முழு உலகினதும் வரலாறும், புவியியலும் திரும்பத் திரும்ப இடம்பெறுகிறது என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் தந்தையை அறியாததனால், எவ்வாறு அவர்களால் அவரின் படைப்பை அறிந்து கொள்ள முடியும்? தந்தை மாத்திரமே உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைக் கூறுகிறார். ரிஷிகளும் முனிவர்களும் கூறுவது வழக்கம்: எங்களுக்குத் தெரியாது. அவர்கள் தந்தையை அறிந்திருப்பின், அவர்கள் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்திருப்பார்கள். ஆகவே, எவ்வாறு அவர்களால் படைப்பையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறிந்துகொள்ள முடியும்? தந்தை கூறுகிறார்: நான் ஒருமுறை மாத்திரமே வந்து, இந்த முழு ஞானத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறேன், பின்னர் நான் மீண்டும் வருவதில்லை. ஆகவே, எவ்வாறு அவர்களால் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறிந்து கொள்ள முடியும்? தந்தையே கூறுகிறார்: சங்கமயுகத்தைத் தவிர, வேறு எந்த நேரத்திலும் நான் வருவதில்லை. நீங்கள் என்னைச் சங்கமயுகத்திலேயே அழைக்கிறீர்கள். சத்தியயுகம் தூய்மையானது எனவும், கலியுகம் தூய்மையற்றது எனவும் கூறப்படுகின்றன. ஆகவே, நான் நிச்சயமாக, தூய்மையற்ற உலகின் இறுதியிலேயே வருவேன். நான் கலியுக இறுதியில் வந்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறேன். சத்தியயுகத்தின் ஆரம்பத்தில், அனைவரும் தூய்மையானவர்கள் ஆவார்கள். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவான விடயம். தூய்மையாக்குபவரான தந்தை எப்பொழுது வருகிறார் என்பதைப் பற்றிய எதனையும் மக்கள் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது கலியுக இறுதியாகும். அவர்கள் கூறுவதைப் போல், கலியுகம் கடந்து செல்வதற்கு, இன்னமும் 40,000 வருடங்கள் இருப்பின், நீங்கள் மேலும் எவ்வளவு அதிகமாகத் தூய்மை அற்றவர்கள் ஆகுவீர்கள்? அப்பொழுது அதிகளவு துன்பம் இருக்கும். முற்றாகவே சந்தோஷம் இருக்காது: அவர்கள் எதையும் புரிந்து கொள்ளாத காரணத்தினால், அவர்கள் காரிருளில் இருக்கிறார்கள். உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும். நீங்கள் படங்களை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். படங்கள் போன்றவை அனைத்தும் நாடகத்துக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன. நேரம் கடந்து செல்கையில், நாடகம் அதேவிதமாகத் தொடர்கிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சில குழந்தைகளின் ஸ்திதி தொடர்ந்தும் தளம்பல் அடைகிறது, சிலசமயங்களில் அது உயர்வாகவும், சிலசமயங்களில் அது தாழ்வாகவும் உள்ளது. இவ்விடயங்கள் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சிலசமயங்களில் தீய சகுனங்கள் உள்ளன, ஆகவே அந்தச் சகுனங்களை அகற்றுவதற்கு அதிகளவு முயற்சி செய்யப்பட வேண்டும். பாபா திரும்பத் திரும்ப உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்ற காரணத்தினால், முரண்பாடு ஏற்படுகிறது. நீங்கள் இதில் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சரீர உணர்வு உள்ளது. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள், உங்களால் தந்தையை நினைவுசெய்ய இயலுவதுடன், நீங்கள் தொடர்ந்தும் சேவையில் முன்னேறுவீர்கள். ஓர் உயர் அந்தஸ்தைக் கோர விரும்புபவர்கள், சதா சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அது ஒருவரின் பாக்கியத்தில் இல்லாது விட்டால், அவரால் அம்முயற்சியைச் செய்ய இயலாதிருக்கும். அவர்களே கூறுகிறார்கள்: பாபா, என்னால் இந்த ஞானத்தைக் கிரகிக்க இயலாதுள்ளது. அது அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. அனைத்து விடயங்களையும் கிரகிப்பவர்கள், பெருமளவு சந்தோஷத்தையும் அனுபவம் செய்வார்கள். சிவபாபா வந்துவிட்டார் என அவர்கள் நம்புகிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, அனைத்தையும் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டு, ஏனையோருக்கு விளங்கப்படுத்துங்கள். சிலர் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும், நாடகத்தில் பதியப்பட்டுள்ளது, அது பின்னர் அதேவிதமாக திரும்பத் திரும்ப இடம்பெறும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். புறச் சூழலில் இடம்பெறும் சொற்பொழிவுகளைச் செவிமடுப்பதற்குப் பல புதியவர்கள் வருகிறார்கள் என்பது குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. கீதையினதும், வேதங்களினதும், சமயநூல்களினதும் அடிப்படையில் பல்வேறு மக்களும் சொற்பொழிவுகளை ஆற்றுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கடவுள் இங்கு வந்து, எங்களுக்கு அவருடைய சொந்த இரகசியங்களையும், படைப்பினது ஆரம்பம், மத்தி, இறுதியினது இரகசியங்களையும் விளங்கப்படுத்துகிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதில்லை. படைப்பவர் மாத்திரமே வந்து, உங்களுக்கு இந்த முழு ஞானத்தையும் கூறுகிறார். உங்களைத் திரிகாலதரிசிகள் ஆக்குவது தந்தையின் கடமையாகும். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. இவ்விடயங்கள் புதியவை ஆகும். பாபா உங்களுக்குத் திரும்பத் திரும்ப விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் எங்கு சென்றாலும், எல்லாவற்றுக்கும் முதலில், கீதையின் கடவுள் யார் என்பதை விளங்கப்படுத்துங்கள்: ஸ்ரீ கிருஷ்ணரா அல்லது அசரீரியான சிவனா? ஒரு புரொஜெக்டரின் மூலம் உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்த இயலாதிருக்கும். கண்காட்சிகளில், அவர்களின் முன்னிலையில் படங்கள் வைக்கப்பட்டிருக்கும். விளங்கப்படுத்திய பின்னர், நீங்கள் அவர்களை வினவ முடியும்: இப்பொழுது எனக்குக் கூறுங்கள், கீதையின் கடவுள் யார்? ஞானக்கடல் யார்? ஸ்ரீகிருஷ்ணரை இவ்வாறு அழைக்க முடியாது. யார் தூய்மைக்கடலும், அமைதிக்கடலும், சந்தோஷக்கடலும் விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் ஆவார்? எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களை ஒரு படிவத்தை நிரப்ப வைப்பதன் மூலம் இதை எழுத வைக்க முடியும், பின்னர் அவர்களை அதில் கையொப்பம் இடுமாறு கேளுங்கள். (பறவைகளின் சப்தம் கேட்டது.) அவை எவ்வளவு சண்டையிடுகின்றன என்று பாருங்கள்! இந்நேரத்தில், முழு உலகிலும் சண்டை நடக்கிறது. மனிதர்கள் கூட ஒருவருடனொருவர் தொடர்ந்தும் சண்டை இடுகிறார்கள். மனிதர்களுக்கு மாத்திரமே எதையும் புரிந்து கொள்வதற்கான புத்திகள் உள்ளன. மனிதர்களின் ஐந்து விகாரங்கள் நினைவுகூரப்படுகின்றன. இது மிருகங்களுக்குப் பொருந்துவதில்லை. இது ஒரு விகார உலகாகும். இந்த உலகம் மனிதர்களுடையது எனக் கூறப்படுகிறது. கலியுகத்தில், அசுர சமுதாயமும், சத்தியயுகத்தில், தெய்வீகச் சமுதாயமும் உள்ளன. நீங்கள் இப்பொழுது முழு வேறுபாட்டையும் புரிந்துகொள்கிறீர்கள். உங்களால் இதை மக்களுக்கு நிரூபிக்க முடியும். இது மிகவும் தெளிவாக ஏணியின் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழே தூய்மை அற்றவர்களும், உச்சியில் தூய்மையானவர்களும் உள்ளார்கள். அதில் அது மிகவும் தெளிவாக உள்ளது. அவற்றில் ஏணியின் படமே பிரதானமானது: மேலேறுகின்ற ஸ்திதியும், கீழிறங்குகின்ற ஸ்திதியும். இந்த ஏணியின் படம் மிகவும் சிறந்ததாகும். இது உண்மையில் தூய்மையற்ற உலகம் என்றும், சுவர்க்கம் தூய உலகமாக இருந்தது என்பதையும் மக்களால் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் நாங்கள் என்ன அதில் எழுதலாம்? இங்கு, அனைவரும் தூய்மை அற்றிருக்கிறார்கள், ஒருவர் கூட தூய்மையாக இருக்க முடியாது. உங்களுக்கு இந்த எண்ணங்கள் இரவுபகலாக இருக்க வேண்டும். குழந்தை ஆதம் பிரகாஷ் எழுதுகிறார்: பாபா, நான் இந்தப் படத்தை உருவாக்கட்டுமா? பாபா கூறுகிறார்: நீங்கள் இந்த ஞானக்கடலைக் கடைந்து, எந்தப் படத்தையும் உருவாக்க முடியும், ஆனால் ஏணியின் படம் மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். அதன் மூலம் உங்களால் பெருமளவுக்கு விளங்கப்படுத்த முடியும். நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள், பின்னர் முதல் இலக்கப் பிறவியை எடுத்தீர்கள். பின்னர், கீழிறங்கும் ஸ்திதியிலிருந்து நீங்கள் மேலேறும் ஸ்திதிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். வேறு எவ்வாறு உங்களால் சேவை செய்ய முடியும்;? படங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. சத்தியயுகம் வந்த பின்னர், நீங்கள் ஏணியில் கீழே இறங்க வேண்டும். நீங்கள் நடிகர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்படும் பொழுது, நீங்கள் நேரடியாகச் சத்தியயுகத்துக்குச் செல்வதில்லை. நீங்கள் முதலில் மௌன தாமத்துக்குச் செல்ல வேண்டும். ஆம், உங்கள் மத்தியில் தங்களை நாடகத்தில் நடிகர்களாகக் கருதுபவர்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். தாங்கள் நடிகர்கள் என உலகில் வேறு எவராலும் கூற முடியாது. அவர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக இருந்த பொழுதிலும், அவர்களுக்குப் படைப்பவரையும், இயக்குனரையும் அல்லது நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் பற்றித் தெரியாது. ஆகவே அவர்கள் முதற்தரமான விவேகமற்றவர்கள் என நீங்கள் எழுதுகிறீர்கள். கடவுளே இதைக் கூறுகிறார். பிரம்மாவின் இந்தச் சரீரத்தினூடாகக் கடவுள் சிவன் பேசுகிறார். அந்த அசரீரியானவரே ஞானக்கடல் ஆவார். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. இவை மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான வழிகள் ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு போதை இருக்க வேண்டும். நாங்கள் எவரையும் அவதூறு செய்யவில்லை. இவ்விடயங்கள் சரியானவை. நீங்கள் மூத்தோர்கள் அனைவரினதும் படத்தை அச்சிடலாம். நீங்கள் எவருக்கும் ஏணியின் படத்தைக் காட்ட முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எபபோதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாரதத்தில் அமைதியையும் சந்தோஷத்தையும் ஸ்தாபிப்பதற்கும், பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குவதற்கும் உங்கள் மத்தியில் கருத்தரங்குகளை நடாத்துங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றி, இவ்விதமாகப் பாரதத்துக்குச் சேவை செய்யுங்கள்.

2. சேவையில் முன்னேறுவதற்கும் சேவையினூடாக ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கும், ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த ஞானக்கடலைக் கடையுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் தூய்மையின் அடிப்படையில் சகல பேறுகளிலும் முதல் இலக்கத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கின்ற ஓர் ஆத்மாவாக இருந்து, அமைதியையும் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்களாக.

தூய்மைக்கான தமது சத்தியத்தை சதா தமது விழிப்புணர்வில் வைத்திருக்கின்ற குழந்தைகள், இயல்பாகவே அமைதியையும் சந்தோஷத்தையும் அனுபவம் செய்கிறார்கள். தூய்மைக்கான உரிமையைக் கோருவதில் முதல் இலக்கத்தைக் கொண்டிருப்பது என்றால் சகல பேறுகளிலும் முதல் இலக்கத்தைக் கொண்டிருப்பது என்று அர்த்தம். ஆகையால் தூய்மைக்கான அத்திவாரத்தை என்றுமே பலவீனமடைய அனுமதிக்காதீர்கள். அப்பொழுதே நீங்கள் இறுதியில் வந்திருந்தாலும், விரைந்து செல்பவராக இருப்பீர்கள். இந்தத் தர்மத்தில் சதா ஸ்திரமாக இருங்கள். என்ன நடந்தாலும், மக்களும், இயற்கையும், சூழ்நிலைகளும் எவ்வளவுதான் அசைக்க முயற்சித்தாலும் உங்கள் தர்மத்தைக் கைவிடாதீர்கள்.

சுலோகம்:
வீணானது என்றால் என்னவென்றே அறியாதவராக இருந்தால் நீங்கள் உண்மையான புனிதர் ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் ஸ்திரமான, மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பவராகவும், ஏகாந்தத்தில் இருப்பவராகவும், சரீரமற்று இருப்பவராகவும், ஒற்றுமையை ஸ்தாபிப்பவராகவும், ஒரேயொருவருக்கே உரியவராகவும், சிக்கனத்தின் அவதாரமாகவும் இருப்பதையே விரும்புகிறார். ஒருவர் மற்றவரின் அபிப்பிராயங்களைப் புரிந்து கொண்டு அனைவருக்கும் மரியாதை கொடுங்கள். ஒருவருக்கொருவர் சமிக்கை கொடுக்கின்ற அதேவேளை அபிப்பிராயங்களைப் பரிமாறி உங்கள் மத்தியில் ஒன்றுகூடலின் சக்தியை வெளிப்படுத்துங்கள். உங்கள் ஒன்றுகூடலின் இந்தச் சக்தியே, முழு பிராமணக் குடும்பத்தையும் ஒன்றிணைப்பதற்குக் கருவியாக இருக்கும்.