28.06.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.11.2010 Om Shanti Madhuban
ஒவ்வொரு மணிநேரமும் ஐந்து ரூபங்களை உங்களின் மனதில் பயிற்சி செய்து, அதைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். பாபா உங்களின் உலகமாக (சன்ஸார்) இருப்பதனால், உங்களின் சம்ஸ்காரங்களையும் தந்தையைப் போன்றதாக ஆக்குங்கள்.
இன்று, பாப்தாதா ஒரே தேசத்தை, ஆதி தேசத்தைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரையும் சந்திப்பதற்கு வந்துள்ளார். அந்த ஒரே தேசம் எத்தனை அழகானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அல்லவா? பாப்தாதாவும் அந்த ஒரே இடத்தில் இருந்தே குழந்தைகளான உங்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். குழந்தைகளுக்குத் தந்தையைச் சந்திக்கும் சந்தோஷம் உள்ளது, தந்தைக்கும் குழந்தைகளைச் சந்திக்கும் சந்தோஷம் உள்ளது. இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் உங்களின் ஐந்து ரூபங்களில் பார்க்கிறார். இதனாலேயே, பிரம்மாவின் ஐந்து முகங்களின் ஞாபகார்த்தம் உள்ளது. உங்களின் ஐந்து ரூபங்களை உங்களுக்குத் தெரியும்தானே? அனைவரின் முதல் ரூபமும் ஒளிப்புள்ளி ஆகும். அது உங்களின் முன்னால் வந்துள்ளதா? இது அழகான, பிரகாசிக்கும் ரூபம் ஆகும். இரண்டாவது ரூபம் தேவ ரூபம். இதுவும் அழகான, தனித்துவமான ரூபம் ஆகும். மூன்றாவது ரூபம் மத்தியகால, பூஜிக்கத் தகுதிவாய்ந்த ரூபம். நான்காவது ரூபம், சங்கமயுகத்தின் பிராமண ரூபம். இந்த ரூபமும் மகத்தானது. ஐந்தாவது ரூபம், தேவதை ரூபம். இந்த ஐந்து ரூபங்களும் மிகவும் அழகானவை. இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு மனதின் அப்பியாசத்தைக் கற்பிக்கிறார். ஏனென்றால், மனம் சிலவேளைகளில் குழந்தைகளான உங்களைத் தன்மை நோக்கி இழுக்கிறது. அதனால் இன்று, உங்களின் மனதை நிலையாகவும் ஸ்திரமாகவும் வைத்திருக்கும் பயிற்சியை பாப்தாதா உங்களுக்குக் கற்பிக்கிறார். நாள் முழுவதும், இந்த ஐந்து ரூபங்களையும் பயிற்சி செய்து அனுபவம் செய்யுங்கள். நீங்கள் எந்த ரூபத்தை நினைத்தாலும் அதன் அனுபவம் உங்களின் மனதில் ஏற்பட வேண்டும். உதாரணமாக, ஒளிப்புள்ளி என்று நீங்கள் சொன்னவுடன், அந்த பிரகாசிக்கும் ரூபம் உங்களின் முன்னால் வரவேண்டும். அதேபோல், இந்த ஐந்து ரூபங்களையும் உங்களின் முன்னால் கொண்டு வந்து, அந்த ரூபங்களை அனுபவம் செய்யுங்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை ஐந்து விநாடிகளுக்கு இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள். ஐந்து விநாடிகள் இல்லாவிட்டால், ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள். ஒவ்வொரு ரூபத்தையும் உங்களின் முன்னால் கொண்டு வந்து அதை அனுபவம் செய்யுங்கள். இந்த ஆன்மீக அப்பியாசத்தில் உங்களின் மனதை மும்முரமாக வைத்திருங்கள். ஏனென்றால், இந்த அப்பியாசத்தால் உங்களின் மனம் எப்போதும் நன்றாக இருக்கும். எவ்வாறு பௌதீக தேகாப்பியாசம் உங்களின் சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதோ, அவ்வாறே, இந்த அப்பியாசம் உங்களின் மனதைப் பலமானதாக வைத்திருக்கும். ஒரு விநாடியேனும் உங்களின் மனதில் அந்த ரூபத்தை ஒருமுகப்படுத்துங்கள். இது இலகுவானது என்று உணர்கிறீர்களா அல்லது அதைக் கஷ்டமாகக் கருதுகிறீர்களா? நீங்கள் அதைக் கஷ்டமாக உணர மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் இந்த அப்பியாசத்தைப் பல தடவைகள் செய்துள்ளீர்கள். நீங்கள் அதை ஒவ்வொரு கல்பத்திலும் செய்துள்ளீர்கள். உங்களின் சொந்த ரூபத்தை உங்களின் முன்னால் கொண்டு வருவது கஷ்டமான விடயம் இல்லை. ஒவ்வொரு ரூபத்தையும் உங்களின் முன்னால் கொண்டு வரும்போது, நீங்கள் ஒவ்வொரு ரூபத்தினதும் சிறப்பியல்பை அனுபவம் செய்வீர்கள். சிலவேளைகளில், சில குழந்தைகள் தாம் இந்த ஐந்து ரூபங்களையும் அனுபவம் செய்ய விரும்புவதாகவும் ஆனால், தமது மனம் வேறொரு திசையில் செல்வதாகவும் கூறுகிறார்கள். உங்களின் மனதை ஒரு விடயத்தில் நீங்கள் விரும்பிய அளவு நேரத்திற்கு ஒருமுகப்படுத்துவதற்குப் பதிலாக, வீணான அல்லது சரியற்ற எண்ணங்களும் தோன்றுகின்றன. சிலவேளைகளில், மனதின் கவனயீனம் காணப்படுகிறது. பாப்தாதா இந்த அப்பியாசத்தை நீங்கள் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஐந்து விநாடிகள் அல்லது ஐந்து நிமிடங்கள் அனுபவம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். இதை ஐந்து நிமிடங்களுக்குச் செய்யுங்கள். பின்னர் உங்களின் மனதை அந்தத் திசையில் செயற்பட வையுங்கள். அந்த முறையில் செயல்படுவது நல்லதல்லவா? பின்னர், உங்களின் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் உங்களின் பணியைச் செய்யவே வேண்டும். உங்களின் பணியைச் செய்யாமல் உங்களால் இருக்க முடியாது. நீங்கள் அனைவரும் யக்ய சேவையையும் உலகச் சேவையையும் செய்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். இந்த ஐந்து நிமிடப் பயிற்சியைச் செய்த பின்னர், நீங்கள் என்ன வேலையைச் செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதில் ஈடுபடுங்கள். ஐந்து விநாடிகளோ அல்லது ஐந்து நிமிடங்களோ இல்லாத எவராவது இருக்கிறீர்களா? யாராவது இருக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஐந்து நிமிடங்களேனும் இல்லாத எவரேனும் இருக்கிறீர்களா? இருக்கிறீர்களா? உங்கள் அனைவராலும் நேரத்தை ஒதுக்க முடியும். எனவே, மீண்டும் மீண்டும் இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள். நீங்கள் உங்களின் வேலையைச் செய்யும்போது போதையுடன் இருப்பீர்கள். ஏனென்றால், தந்தையின் மந்திரம் மன்மனாபவ என்பதே ஆகும். இந்த மந்திரத்தாலும் மனதின் அனுபவத்தாலும் உங்களின் மனம் மாயையை வென்றவர் ஆகுவதற்கான ஆயுதம் ஆகிவிடும். ஏனென்றால், காலம் முன்னேறிச் செல்லும்போது, நீங்கள் ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். இந்த அப்பியாசத்தைச் செய்வதன் மூலம், நீங்கள் மன்மனாபவ ஆகுவதற்கான உதவியைப் பெற்றுக் கொள்வீர்கள். ஏனென்றால், நீங்கள் ஒரு உரையாற்றும்போது அல்லது ஒரு செய்தியைக் கொடுக்கும்போது என்ன சொல்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்களே உலகை மாற்றுபவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் உலகையே மாற்றப் போவதனால், அனைத்திற்கும் முதலில் உங்களின் மனதைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். நீங்கள் விரும்பிய எந்த நேரத்திலும் விரும்பிய எண்ணங்களை அதனால் கொண்டிருக்க முடியும். உதாரணமாக, சரீரத்திற்கும் உங்களின் பௌதீக அங்கங்களுக்கும் அதை ‘உயர்த்துங்கள்! அதை கீழே விடுங்கள்!’ என்று கட்டளை இடுவதைப் போல், அதற்கு ஒரு விநாடியில் கட்டளை இடுங்கள். நீங்கள் இதைச் செய்கிறீர்கள், அல்லவா? இந்த முறையில், வீணான அல்லது சரியற்ற எதில் இருந்தும் உங்களின் மனம் பாதுகாக்கப்படும். நீங்களே உங்களின் மனதின் அதிபதி ஆவீர்கள். ‘எனது மனம்!’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். எனவே, அந்த அளவிற்கு ‘எனது மனம்’ என்பது ஒழுங்காக இருக்க வேண்டும். அதனாலேயே, உங்களுக்கு இந்த மனதின் அப்பியாசம் காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் மனதை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆக விரும்புவதை பாப்தாதா பார்த்துள்ளார். இதனாலேயே, காலம் வருவதற்கு முன்னர், நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களின் மனதை இலகுவாக நிலைநிறுத்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். எனவே இன்று, ஒவ்வொரு குழந்தையும் தனது மனம், புத்தி, சம்ஸ்காரங்களில் தான் என்ன எண்ணத்தைக் கொண்டிருந்தாலும் தனது கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். இந்தப் பயிற்சியைக் கொண்டிருப்பவர்கள், நிச்சயமாக உலகை வென்றவர்கள் ஆகுவார்கள். உங்கள் அனைவருக்கும் பாப்தாதாவின் மீதும் குடும்பத்தின் மீதும் அன்பு உள்ளது. குழந்தைகளுக்குத் தந்தையின் மீது அன்பு உள்ளது. தந்தைக்கும் குழந்தைகளான உங்களின் மீது மகத்தான அன்பு உள்ளது. எனவே, குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள் ஆகியுள்ளார்கள். ‘மேரா பாபா, மேரா பாபா’(எனது பாபா) எனக் கூறுவதன் மூலம், நீங்கள் அவரை உங்களுக்குச் சொந்தமானவர் ஆக்கியுள்ளீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த நம்பிக்கை உள்ளது: மேரா பாபா. தந்தையும் கூறுகிறார்: எனது குழந்தைகளே. ‘எனது’ என்ற இந்த வார்த்தை அற்புதங்களைச் செய்துள்ளது. உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களின் இதயத்தில் அதிகளவு உற்சாகம் உள்ளது: ‘எனது பாபா, அன்பான பாபா’. தந்தையும் மீண்டும் மீண்டும் கூறுகிறார்: எனது குழந்தைகளே! மாயை எந்த வேளையிலும் போர் புரியலாம். ஏனென்றால், நீங்கள் அரைக்கல்பமாக மாயையை உங்களுக்குச் சொந்தமாக ஆக்கியுள்ளீர்கள், அல்லவா? எனவே, மாயையும் உங்களுக்காக அன்பு வைத்திருப்பாள், அப்படித்தானே? இதனாலேயே, அவள் மீண்டும் மீண்டும் உங்களிடம் வருவதற்கு முயற்சி செய்வாள். எவ்வாறாயினும், உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா’ எனக் கூறும்போது, நீங்கள் தந்தையின் ஒத்துழைப்பைப் பெறுகிறீர்கள். ‘எனது பாபா’ என்று உங்களின் இதயபூர்வமாக ஒரு தடவை நீங்கள் கூறினாலும் தந்தை உங்களுக்கு ஆயிரம் மடங்கு சக்திசாலி ஒத்துழைப்பைக் கொடுப்பதற்குக் கடமைப்பட்டுள்ளார். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? இந்த அனுபவத்தைச் சரியான வேளையில் நடைமுறை ரூபத்தில் கொண்டு வாருங்கள்.
குழந்தைகளான உங்களின் ஒரு விடயத்தைப் பார்க்கும்போது, பாப்தாதாவிற்கு அவரின் இதயத்தில் வியப்பு ஏற்படுகிறது. அது என்ன விடயம் என்று உங்களுக்குத் தெரியுமா? பாபா உங்களின் உலகம் என்று நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். தந்தை உங்களின் உலகம் என்று நீங்கள் கூறுகிறீர்கள், அல்லவா? நீங்கள் இதைக் கூறுகிறீர்கள், அல்லவா? தந்தை தமது உலகம் எனக் கூறுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, தந்தையே உங்களின் உலகம் ஆவார். உங்களிடம் வேறோர் உலகம் இல்லையல்லவா? உங்களிடம் வேறோர் உலகம் இல்லை, ஆனால் உங்களிடம் வேறு என்ன இருக்கிறது? சம்ஸ்காரங்கள். தந்தையே உங்களின் உலகமாக இருப்பதனால், உங்களிடம் வேறு எந்த உலகமும் இல்லை. வேறோர் உலகம் இல்லை, அப்படி என்றால் சம்ஸ்காரங்கள் எப்படி உருவாகின்றன? தற்காலத்தில், காலத்திற்கேற்ப, பாப்தாதா ‘சம்ஸ்காரங்கள்’ என்ற வார்த்தையை அழிக்க விரும்புகிறார். அதை அழிக்க முடியுமா? முடியுமா? தமது சம்ஸ்காரங்கள் தடையாக ஆகாது என்று நினைப்பதுடன் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள்? இன்றும், திடசங்கற்பமான எண்ணத்துடன் நிச்சயமாக அவற்றை முடிக்கப் போகிறோம் என்ற இந்தத் திடசங்கற்பமான முயற்சியைச் செய்யக்கூடியவர்கள் யார்? ‘நான் அதைச் செய்வேன், நான் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பேன், பார்ப்போம்’ என்பதல்ல. ஆனால், ‘நான் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும்’ என்று இருக்க வேண்டும். சம்ஸ்காரங்களின் கடமை வருவது, குழந்தைகளான உங்களின் கடமை, நிச்சயமாக அவற்றை முடித்து விடுவது. இந்தளவு தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? இந்தத் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் முன்னரும் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். ஆனால் இப்போது உங்களிடம் உள்ள எண்ணங்களுக்கு ஏற்ப அனைத்தையும் நடைமுறையில் செய்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். தந்தை எதையோ கூறினார், ஓர் இலட்சியத்தை வழங்குவது தந்தையின் கடமை. தந்தை எதைக் கேட்கிறாரோ அதை நிச்சயமாகச் செய்ய வேண்டியது குழந்தைகளின் கடமை ஆகும். இதற்காகத் தாம் ஒரு திகதியை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும் என்று உணர்பவர்கள். எப்படி பக்தர்கள் சிவராத்திரியைக் கொண்டாடுவதற்காக ஒரு திகதியை நிச்சயம் செய்துள்ளார்களோ, அதேபோல் இதற்கும் ஒரு திகதியை நிச்சயம் செய்து கொள்ளுங்கள். ஓகே, ஒன்றுதிரட்டிய முறையில் உங்களால் இதற்காக ஒரு திகதியை நிச்சயம் செய்து கொள்ள முடியாவிட்டால், நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் உங்களுக்காக ஒரு திகதியை நிச்சயம் செய்து கொள்ள முடியும். உங்களால் இதைச் செய்ய முடியுமா? இதை உங்களால் செய்ய முடியும் என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எனவே, நீங்கள் இதை நிச்சயம் செய்து விட்டீர்களா? உங்களால் இதைச் செய்ய முடியும் என்றால், நீங்கள் இதைச் செய்து விட்டீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களே, நீங்கள் ஒரு திகதியை நிச்சயம் செய்து விட்டீர்களா? முன்னால் அமர்ந்திருப்பவர்களே, நீங்கள் அதை நிச்சயம் செய்து விட்டீர்களா? நீங்கள் என்ன திகதியை நிச்சயம் செய்தாலும் எழுத்தில் அதை பாப்தாதாவிடம் கொடுங்கள். தைரியத்துடன் உங்களின் பரீட்சையில் சித்தி அடைவதற்கு பாப்தாதா குழந்தைகளான உங்களைப் பாராட்டுவார். அத்துடன் அவர் குழந்தைகளைப் பற்றிய பாடல்களையும் பாடுவார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! அவர் ஒரு விழாவைக் கொண்டாடுவார். ஓர் எண்ணத்தைக் கொண்டிருந்து, அதற்கேற்ப அதை நடைமுறை வடிவில் கொண்டு வருபவர்களுக்கு பாப்தாதா ஒரு விழாக் கொண்டாடுவார். ஏனென்றால், ஒரு வேறுபாடு காணப்படும், அப்படியல்லவா? நீங்கள் என்ன திகதியை நிச்சயம் செய்திருந்தாலும் அந்தத் திகதியை நோக்கி நீங்கள் முன்னேறும்போது நீங்கள் நெருக்கமாக வருவீர்கள், அல்லவா? அங்கே ஒரு வேறுபாடு ஆரம்பம் ஆகும். தமது திகதிக்கேற்ப சம்பூரணம் ஆகுபவர்களுக்கு பாப்தாதா ஒரு விழாவைக் கொண்டாடுவார். நீங்கள் இதை அகத்தே செய்யும்போது, உங்களை அவதானிப்பவர்கள் அதை சரிபார்த்துச் சொல்வார்கள். ஏனென்றால், அவர்கள் உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், அப்படித்தானே? சம்ஸ்காரங்கள் யாராவது ஒருவருடனேயே வெளிப்படும், அல்லவா? ஒவ்வொரு குழந்தைக்கும் தான் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற தூய போதை இருப்பதை பாப்தாதா கண்டார். நீங்கள் அதிபதிகள், அப்படியல்லவா? நீங்கள் சர்வசக்திவான்களாக, சகல சக்திகளையும் கொண்டவராக இருப்பதனால், ஓர் எண்ணத்தை நிறைவேற்றுவதும் ஒரு சக்தியே ஆகும், அப்படியல்லவா? அச்சா.
முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! பாருங்கள், பலர் வந்திருக்கிறார்கள். பாப்தாதா பாராட்டுகிறார். மதுவனத்திற்கு வந்திருப்பதற்காகப் பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்! நீங்கள் ‘மிகவும் தாமதமாகி விட்டது’ என்ற பலகை போடப்படும் முன்னர் வந்து விட்டதாக பாப்தாதா இன்னமும் உணர்கிறார். ஆகவே, குடும்பம் முழுவதும் இந்தத் தூய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் சதா இரட்டை முயற்சி செய்து, நீங்கள் கடைசியாக வந்திருந்தாலும் வேகமாகச் செல்வீர்கள் என்ற இந்த நம்பிக்கை பாப்தாதாவிற்கு எப்படியும் உள்ளது. அத்துடன் முழுக் குடும்பமும் இந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? முதல் தடவை வந்திருப்பவர்களே, நீங்கள் கடைசியாக வந்திருந்தாலும் வேகமாகச் சென்று முதலில் வருவீர்கள் என்ற தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? முதல் இலக்கத்தில் வரவேண்டும். முதல் என்பதில் ஒருவர் மட்டும் இல்லை. முதல் வகுப்பில் முதலாவதாக ஆகுங்கள். இது சாத்தியமா? உங்களால் வேகமாகச் சென்று, முதலில் வர முடியும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அச்சா. பின்னால் அமர்ந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது சாத்தியமா? அச்சா. ஒருசிலரே இருக்கிறார்கள். முழுக் குடும்பமும் அத்துடன் பாப்தாதாவும் உங்களுடன் ஒத்துழைத்து, உங்களை முன்னேற்றவே விரும்புகின்றார்கள். இதனாலேயே, நீங்கள் எந்த நிலையத்தில் இருந்து வந்திருந்தாலும் அந்த நிலையத்தில் உங்களின் இந்தச் சத்தியத்தை மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். இது சாத்தியமே. இது முடியாத காரியம் இல்லை. இது சாத்தியமே, ஆனால் இதற்கு இரட்டைக் கவனம் தேவைப்படுகிறது. கடைசியாக வந்திருந்து, நீங்கள் வேகமாகச் சென்று அனைவருக்கும் காட்டுவீர்கள் ஆயின், உங்களின் தீவிர முயற்சிக்கான நாள் அந்த நிலையத்தில் கொண்டாடப்படும். நாங்கள் ஒரு விழா வைப்போம். அனைவருக்கும் தமது இதயங்களில் தந்தைக்கு மிக விரைவாகச் சமமானவர் ஆகி அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற உற்சாகம் உள்ளது. குழந்தைகள் அமிர்த வேளையில் பாப்தாதாவுடன் பேசும்போது, அவர் களிப்படைகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் அவர் புதியவரோ அல்லது பழையவரோ, தனது இதயபூர்வமாக அதிக, அதிக ஆசீர்வாதங்களை வழங்குகிறார். நீங்கள் ஓரடி எடுத்து வைக்கும்போது, தந்தை ஓராயிரம் அடிகள் உதவியை வழங்குகிறார். ஏனென்றால், இப்போது மாற்றத்திற்கான நேரம் துரித கதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அச்சா.
டெல்லி மற்றும் ஆக்ராவின் சேவைக்கான முறை: ஆரம்பத்தில் இருந்தே, டெல்லி சேவையில் புதிய விடயங்களைச் செய்வதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் இதைச் செய்கிறீர்கள், அல்லவா? டெல்லி இதைச் செய்து வருகிறது. எனவே, சேவைக்காக இப்போது புதியதொரு கண்டுபிடிப்பைச் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நன்றாகவே உள்ளன. ஏனென்றால், அவற்றினூடாக விரிவாக்கம் நிகழ்கிறது. அத்துடன் மக்களும் ஓர் உறவுமுறையைப் பேணுகிறார்கள். இப்போது நடப்பவை அனைத்தும் நன்றே. ஆனால் இந்த நிகழ்;ச்சிகள் இப்போது நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. இப்போது ஏதாவது புதியதை உருவாக்குங்கள். அதன் மூலம் சேவை செய்பவர்களுக்கு ஏதாவது புதிய ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும். நீங்கள் இதைச் செய்வீர்கள், அல்லவா? இது நல்லது. அனைவரிலும் உற்சாகத்தை உருவாக்குங்கள். அதைச் செய்வதில் அவர்களை மும்முரமாக வைத்திருங்;கள். நீங்கள் செய்யும் பெரிய நிகழ்ச்சிகளில் சொற்பொழிவு ஆற்றுபவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களுடன் சேர்ந்து செல்கிறார்கள். அதுவும் தேவையே, ஆனால் இப்போது தரமுள்ள ஆத்மாக்கள் மும்முரமாக இருக்கும் வகையில் எதையாவது இப்போது கண்டுபிடியுங்கள். ஏனென்றால், டெல்லியே தலைநகரமாக இருக்க வேண்டும். எனவே, டெல்லியை; சேர்ந்தவர்கள் ஏதாவது கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும். இது ஓகேயா? இது ஓகேயா? நீங்கள் அனைவரும் இதைச் செய்வீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது நல்லது. எவராலும் இதை உருவாக்க முடியும். புதியவர்களும் இதை உருவாக்க முடியும். வேறு யாருக்காவது இதைப் பற்றிய எண்ணம் தோன்றுமாயின், அவர்களால் மதுவனம், தலைமையகத்திற்கு எழுத முடியும். அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. அச்சா. டெல்லியைச் சேர்ந்தவர்களும் முயற்சிக்காக முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும். எந்தவொரு நிலையமும் அது இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ இருந்தாலும் அத்துடன் அந்த நிலையத்துடன் தொடர்பில் இருக்கின்ற நிலையங்களும் ஆறு மாதங்களுக்கு தடைகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று பாப்தாதா நீண்ட காலத்திற்கு முன்பே கூறியுள்ளார். எந்தவொரு தடையும் வரக்கூடாது. தடைகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் முதல் இலக்கத்தைக் கோரினால், நாங்கள் ஒரு நாளைத் தடைகளில் இருந்து விடுபட்ட நாளாகக் கொண்டாடுவோம். பாப்தாதா இப்போது இதை ஆறு மாதங்களுக்குச் செய்யும்படி உங்களுக்குக் கூறுகிறார். இதை ஆறு மாதங்களுக்குப் பயிற்சி செய்தபின்னர், அந்தப் பழக்கம் உருவாகிவிடும். எவ்வாறாயினும், நீங்கள் ஒரு பரிசைக் கோருவதற்கு, பாபா உங்களுக்கு ஆறு மாதங்களை வழங்குகிறார். டெல்லி என்ன இலக்கத்தைக் கோருவீர்கள்? முதல் இலக்கம். பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். முழுக் குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறார்கள். திருப்தி அடைந்தவர்கள், பேச வேண்டும். சேவையிலோ அல்லது உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளிலோ, பாப்தாதா பெயர்களைக் கேட்டிருந்தார். ஆனால் இன்னமும் எந்தவொரு பெயரும் வரவில்லை. பிராந்தியங்கள் இல்லாவிட்டால், பிரதான நிலையங்களுடன் தொடர்பில் உள்ள நிலையங்களும் இதைச் செய்தால்கூட பாப்தாதா அதை ஏற்றுக் கொள்வார். நீங்கள் இப்போது வேகமாக அடிகளை எடுத்து வைக்க வேண்டும். ஏன்? எதுவும் சடுதியாக நடக்கலாம். பாபா உங்களுக்கு ஒரு திகதியைக் கொடுக்க மாட்டார். அச்சா.
ஆக்ரா உப பிராந்தியம்: ஆக்ரா அரசாங்கத்தின் பட்டியலில் மிகவும் பிரபல்யமானது என்பதனால் ஆக்ரா அத்தகைய பணியையும் அத்தகைய சேவையையும் செய்ய வேண்டும். சர்வசக்திவான் அரசாங்கம் பிரபல்யம் அடையும் வகையில் ஆக்ராவைச் சேர்ந்தவர்கள், அத்தகையதொரு சேவையைச் செய்ய வேண்டும். எவ்வாறு ஆக்ராவில் தாஜ்மகால் இருக்கிறதோ, அவ்வாறே ஏதாவது செய்யுங்கள். நம்பிக்கை உள்ளது. நம்பிக்கைக்குப் பாராட்டுக்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரத்தில் நீங்கள் அதைச் செய்வீர்கள்? (நாங்கள் ஒரு மேலாவும் ஒரு மெகா நிகழ்ச்சியும் செய்வோம்.) அனைவரும் மெகா நிகழ்ச்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் வேறெந்தப் பிராந்தியமும் முன்னர் செய்திராத ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குங்கள். ஆக்ரா அனைவரும் வந்து பார்க்கும் தகுதியைப் பெற்றுள்ளது. அரசாங்கத்திடம் தாஜ்மகால் உள்ளது. ஏதோ பிரச்சாரம் நடக்கிறது, ஆக்ரா அதற்காக அறியப்படுகிறது. இப்போது இத்தகைய பணியைச் செய்யுங்கள். அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அமிர்த வேளையில் அமர்ந்திருந்து, அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதாவதொரு தொடுகை ஏற்படும். இது சரிதானே? ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் இருக்கிறார்கள். எனவே, ஓர் அற்புதத்தைச் செய்யுங்கள். பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் கூறுகிறார்: இப்போது ஏதாவது புதியதாகச் செய்யுங்கள். காலத்திற்கேற்ப என்ன நடக்கிறதோ, அதில் புதுமை இருக்கிறது, ஆனால் இப்போது புதியதொரு கண்டுபிடிப்பை உருவாக்குங்கள். எந்தவொரு பிராந்தியமும் அதைச் செய்ய முடியும். ஆனால் ஏதாவது புதியதாகச் செய்யுங்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கிறார். அத்துடன் அவர் ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பையும் அறிவார். ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு சிறப்பியல்பைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் அதை ஒரு பணியில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஏனையோரிலோ அது மறைந்துள்ளது. இதனாலேயே, ஒவ்வொரு குழந்தையும் அன்பான, நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள குழந்தை எனத் தந்தை கூறுகிறார். நீங்கள் பறந்து கொண்டிருப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை விரும்புகிறார். அச்சா.
எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் விசேடமாகத் தந்தையின் இதயத்தால் நேசிக்கப்படுபவர்கள். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் உங்களின் விழிப்புணர்வில் இந்த இலட்சியத்தை வைத்திருக்க வேண்டும்: நான் தீவிர முயற்சி செய்து, தந்தையை வெளிப்படுத்த வேண்டும். அதனால் அனைவரின் இதயங்களும், ‘எனது பாபா வந்துவிட்டார்’ என்று சொல்ல வேண்டும். இத்தகைய ஊக்கமும் உற்சாகமும் மிக்க எண்ணங்கள் தற்காலத்தில் பாப்தாதாவை வந்தடைகின்றன. உங்களில் பெரும்பாலானோரிடம் இந்த ஊக்கமும் உற்சாகமும் உங்களின் இதயங்களில் காணப்படுகின்றன. இந்தச் செய்தி இப்போது எவ்வளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்பதே பாப்தாதாவின் ஆசை ஆகும். எவருமே அதில் தவறவிடப்படக் கூடாது. அவர்கள் ஏதாவது ஒன்றைத் தமது ஆஸ்தியாகப் பெற வேண்டும். ஜீவன்முக்தி இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் அவர்கள் அன்புடன் முக்திக்கான ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், தந்தை அனைவருக்கும் ஓர் ஆஸ்தியை வழங்க வேண்டி உள்ளது. எத்தனை பேரை அவர்களின் ஆஸ்தியைப் பெறச் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் உங்களின் இராச்சிய உரிமை என்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதாவிடம் இருந்து அதிக, அதிக அன்பும் ஆசீர்வாதங்களும் உரித்தாகுக. அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தியாகம் மற்றும் தபஸ்யாவினால் அனைவருக்கும் உபகாரியாகி, நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி அடைவீர்களாக.எவ்வாறு பௌதீகமான நெருப்பைத் தொலைவில் இருந்தே அனுபவம் செய்ய முடிகிறதோ, அவ்வாறே, உங்களின் தியாகம் மற்றும் தவத்தின் ஒளிர்வு தொலைவில் இருந்தே அனைவரையும் கவர வேண்டும். ஒரு சேவையாளராக இருப்பதுடன் கூடவே, ஒரு தியாகியாகவும் தவத்தின் சொரூபமாகவும் ஆகுங்கள். அப்போது நீங்கள் செய்யும் சேவையில் இருந்து உடனடியான, நடைமுறைப் பலன் அனுபவம் செய்யப்படும். ஒரு தியாகி என்றால் உங்களின் பழைய எண்ணங்கள் அல்லது சம்ஸ்காரங்கள் எதுவும் புலப்பட மாட்டாது. ஒரு தபஸ்வி என்றால் உங்களின் திருஷ்டியினூடாக, உங்களின் புத்தியின் உணர்வையும் உங்களின் ஆத்ம உணர்வு ரூபத்தையும் தவிர வேறு எதுவும் புலப்பட மாட்டாது. நீங்கள் உருவாக்கும் எந்தவோர் எண்ணத்திலும் ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் நன்மை மட்டுமே இருக்க வேண்டும். அப்போது நீங்கள் அனைவருக்கும் உபகாரம் செய்பவர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
சரீரங்களின் எந்தவொரு உணர்விற்கும் அப்பால் செல்வதற்கு, உருவத்தைப் பார்க்காதீர்கள். ஆனால் உயிர்வாழ்பவரையும் நடத்தையையும் பாருங்கள்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
நீங்கள் அனைவரும் மாஸ்ரர் உலகைப் படைப்பவர்கள். இந்த விழிப்புணர்வு உங்களுக்குள் இருக்கும்போது நீங்கள் இலகுவாக பணிவெனும் பண்பை விருத்தி செய்து கொள்வீர்கள். உங்களிடம் பணிவு இருக்கும்போது, அதாவது, இயல்பான முறையில் இலகுத்தன்மை இருக்கும்போது, ஏனைய நற்குணங்கள் அனைத்தும் இயல்பாகவே வந்துவிடும். முதலில் இந்த ரூபத்தின் விழிப்புணர்வில் எப்போதும் ஸ்திரமாக இருந்து பின்னர் சிந்தித்து அதன்பின்னர் செயலாற்றுங்கள். நீங்கள் முகங்கொடுக்க வேண்டிய, உங்களை எதிர்க்க வருகின்ற சிறிய விடயங்கள் அனைத்தும் சிறுவர்கள் தமது மூத்தவர்களின் முன்னால் விளையாடும் விளையாட்டுக்களைப் போன்றே இருக்கும். அவை எவற்றாலும் பாதிக்கப்படாமல் அவர்கள் இருப்பதைப் போன்றே காணப்படும்.