29.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களை ஆத்மாக்களாகக் கருதி ஆத்மாக்களுடன் பேசுங்கள். மலர்களாகிய நீங்கள் அப்பொழுது தொடர்ந்தும் நறுமணம் கமழ்பவராக ஆகுவதுடன் சரீர உணர்வு எனும் துர்நாற்றமும் அகற்றப்படும்.
கேள்வி:
தங்களுடைய நறுமணத்தை சகல திசைகளிலும் பரப்பும் உண்மையான மலர்கள் யார்?பதில்:
ஏனைய பலரையும் தங்களைப் போல் நறுமணம் கமழும் மலர்கள் ஆக்குபவர்களே உண்மையான மலர்கள் ஆவார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றி சுவாலைக்குத் தங்களை அர்ப்பணிக்கின்ற உண்மையான விட்டிற்பூச்சிகளின் நறுமணம், அதாவது தங்களை முழுமையாக அர்ப்பணித்து மரணித்து வாழ்பவர்களின் நறுமணமானது எங்கும் பரவுகின்றது; உண்மையான மலர்களின் நறுமணம் இயல்பாகவே எங்கும் பரவுகின்றது.பாடல்:
விட்டிற்பூச்சிகளின் ஒன்றுகூடலின் மத்தியிலே சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.ஓம் சாந்தி.
ஆன்மீக விட்டிற்பூச்சிகளான நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் விட்டிற்பூச்சிகள் என்றோ அல்லது மலர்கள் என்றோ கூறினாலும் அது ஒரேவிடயமே. நீங்கள் உண்மையில் விட்டிற்பூச்சிகளாகி விட்டீர்களா அல்லது சுற்றி வந்து அப்பாற் சென்று சுவாலையை மறந்து விடுகிறீர்களா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு ஒரு மலராகி உள்ளீர்கள், அத்துடன் எந்தளவிற்கு இந்த ஞானம் எனும் நறுமணத்தைப் பரப்புகின்றீர்கள் என நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தையே கேட்க வேண்டும். நீங்கள் ஏனையோரையும் உங்களைப் போன்று மலர்களாக்கி விட்டீர்களா? தந்தையே ஞானக்கடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரிடம் அதிகளவு நறுமணம் உள்ளது! நல்ல மலர்களிடமும் விட்டிற்பூச்சிகளிடமும் நிச்சயமாக மிக நல்ல நறுமணம் இருக்கும். அவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருந்து ஏனையோரையும் தங்களைப் போன்று மலர்களாகவும் விட்டிற்பூச்சிகளாகவும் ஆக்குவார்கள். மலர்களாக இல்லாவிடினும் அவர்கள் தங்களை மொட்டுக்களாக ஆக்குவார்கள். மரணித்து வாழ்பவர்களே உண்மையான விட்டிற்பூச்சிகள். அவர்கள் தங்களை அர்ப்பணித்து கடவுளின் குழந்தைகள் ஆகுகின்றார்கள். ஒரு செல்வந்தர், ஓர் ஏழை நபரின் குழந்தையைத் தத்தெடுக்கின்ற பொழுது அக்குழந்தை தன்னைத் தத்தெடுத்த பெற்றோரையே நினைவுசெய்து தனது ஏழைப் பெற்றோரை மறந்து விடுவார். அவர் தனது பெற்றோர் ஏழைகள் என்பதை அறிவார்; தான் செல்வத்தைப் பெறுகின்ற செல்வந்தப் பெற்றோரையே நினைவு செய்வார். சாதுக்களும் சந்நியாசிகளும் முக்தி தாமத்திற்குச் செல்வதற்காக ஆன்மீக முயற்சிகளைச் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் முக்திக்கான முயற்சியைச் செய்கின்றார்கள், ஆனால் அவர்கள் முக்தியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சிலர் தாங்கள் ஒளியுடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறுகின்றனர். ஏனையோர் தாங்கள் அப்பாலுள்ள நிர்வாணா தாமத்திற்குச் சென்று விடுவதாக நம்புகின்றனர். நிர்வாணா தாமத்திற்குச் செல்வதென்றால் ஒளியுடன் கலப்பது என்பதல்ல. நீங்கள் தொலை தூரவாசிகள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். இந்த அழுக்கான உலகில் நீங்கள் இங்கே இருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது? நீங்கள் ஒருவரைச் சந்திக்கின்ற பொழுது இந்நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்பதை அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் இருக்கின்றன. பின்னர் இந்தச் சங்கமயுகம் இருக்கின்றது. சத்திய யுகத்தின் பின்னர் சத்தியஇ திரேதா யுகங்களின் சங்கமம் இருக்கின்றது என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அது யுகத்தின் மாற்றமும் ஆனால் இதுவோ கல்பத்தின் மாற்றமும் ஆகும். மக்கள் நம்புவது போன்று தந்தை ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. தந்தை கூறுகின்றார்: அனைவரும் தமோபிரதானாகி அது கலியுக இறுதியாக இருக்கும் பொழுதே கல்பங்களின் சங்கமத்தில் நான் வருகின்றேன். ஒவ்வொரு யுகமும் முடிவடையும் பொழுதுஇ கலைகள் குறைவடைகின்றன. முழுமையான கிரகணம் இருக்கும் பொழுதே நான் வருகின்றேன். நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. தந்தை இங்கிருந்து விட்டிற்பூச்சிகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: விட்டிற்பூச்சிகளும் வரிசைக்கிரமமே. சிலர் முழுமையாக மரணித்து வாழ்கின்றனர், ஏனையோர் சுற்றி விட்டுச் செல்கின்றனர். உங்களால் மாத்திரமே ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதுவிடின் பின்னர் மாயை உங்களைத் தொடர்ந்தும் விழச் செய்கிறாள். ஸ்ரீமத்திற்குப் பெருமளவு புகழ்ச்சி உள்ளது. கூறப்பட்டுள்ளது: ஸ்ரீமத் பகவத்கீதை. சமயநூல்களைப் பின்னர் உருவாக்கியவர்கள் ரஜோ புத்தியைக் கொண்டிருந்ததால் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணர் துவாபர யுகத்தில் வந்ததாக எழுதினார்கள். நான் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மறைந்து ஏனைய மதங்கள் அனைத்தும் உள்ளபொழுதே வருகின்றேன். தேவ தர்மத்தைச் சேர்ந்த மனிதர்கள் மறைந்து விட்டார்கள் என்றில்லை. தாங்கள் தேவ தர்மத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் என்பது மாத்திரமே ஆகும். அவர்கள் இந்து மதமே தங்களுடைய மதம் எனக் கூறுகின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதை மறக்கின்ற பொழுதே நான் வந்து தேவதர்மத்தை ஸ்தாபிக்கின்றேன். ஒரேயொரு தந்தையே வந்து உங்களைத் துன்ப உலகின் அதிபதிகளில் இருந்து சந்தோஷ உலகின் அதிபதிகளாக மாற்றுபவர். நீங்கள் இப்பொழுது நரகத்தின் அதிபதிகள் எனக் கூறுவீர்கள். உலகம் தமோபிரதானாக வேண்டும். அனைவரும் தூய்மை அற்றவர்கள். இதனாலேயே அவர்கள் தூய்மையானவர்களிடம் சென்று நமஸ்தே கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! உங்களின் தலைமீது பல பிறவிகளின் பெரும் பாவச்சுமை உள்ளது. இல்லாவிடின் நீங்கள் துயரத்தில் அழ வேண்டி வரும். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என மக்கள் நம்புகின்றனர். ஆனால் இல்லை, ஆத்மாக்களே சந்தோஷத்தையும் துன்பத்தையும் அனுபவம் செய்கின்றார்கள். எவருமே இதைப் புரிந்து கொள்வதில்லை. இலக்கு மிகவும் உயர்ந்தது என மீண்டும் மீண்டும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சந்தோஷமற்று இருப்பதனாலேயே இந்நேரத்தில் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கே நீங்கள் துன்ப உலகிற்குச் செல்ல வேண்டும் என்பதை அறிய மாட்டீர்கள். நீங்கள் எவ்வாறு சந்தோஷத்திற்குள் வந்தீர்கள் அல்லது எத்தனை பிறவிகள் எடுப்பீர்கள் என்பனவற்றில் எதையுமே அறிந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். எனவே யார் அதிமேன்மையானவர்கள்? நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆதலால் நீங்களும் கடவுளைப் போல் ஞானம் நிறைந்தவர்கள். நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள், ஆனால் நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். சிலர் அதிகளவு போதையுற்று பாபாவின் வழிகாட்டல்களைத் தாங்கள் தொடர்ந்தும் பின்பற்றுவதாக நம்புகின்றார்கள். எந்தளவிற்கு நீங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்களோ அதற்கேற்பவே மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து நேரடியாகவே குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: குழந்தைகளே சரீர உணர்வைத் துறவுங்கள்! ஆத்ம உணர்வு உடையவர்களாகி சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! தந்தையே சதா சந்தோஷத்தை அருள்பவர். தந்தை துன்பத்தைக் கொடுக்கின்றார் என்றில்லை. தந்தை ஒருபொழுதும் தனது குழந்தைகளுக்குத் துன்பம் விளைவிக்க மாட்டார். குழந்தைகள் தங்களது தவறான செயற்பாடுகளினால் துன்பத்தைப் பெறுகின்றார்கள். தந்தையால் துன்பத்தைக் கொடுக்க முடியாது. அவர்கள் கூறுகின்றார்கள். ஓ கடவுளே எங்கள் குலம் தொடரும் வகையில் எங்களுக்கு ஒரு புத்திரனைக் கொடுங்கள். அவர்கள் புத்திரர்கள் மீது பெருமளவு அன்பு வைத்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களது சொந்தச் செயல்களின் மூலம் துன்பத்தைப் பெறுகின்றார்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளான உங்களை மிகவும் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அசுர கட்டளைளைப் பின்பற்றுவதனால் நீங்கள் துன்பத்தையே பெறுகின்றீர்கள். குழந்தைகள் தங்களது தந்தை, தங்களது ஆசிரியர் அல்லது தங்களது மூதாதையரின் வழிகாட்டல்களுக்கு கீழ்ப்படியாத பொழுது துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே துன்பம் விளைவிக்கின்றார்கள்; அவர்கள் மாயைக்குச் சொந்தம் ஆகுகின்றார்கள். இப்பொழுது மாத்திரமே நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதின் பேறு 21 பிறவிகளுக்கு நீடிக்கின்றது. அதன்பின்னர் நீங்கள் அரைக் கல்பத்திற்கு மாயையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள். கடவுள் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பதற்கு ஒருமுறை மாத்திரமே வருகின்றார். மாயை உங்களுக்கு அரைக் கல்பத்திற்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றாள். தந்தை உங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். மாயையின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால் நீங்கள் 100சதவீதம் அபாக்கியசாலிகள் ஆகிவிட்டீர்கள். மிக நல்ல மலர்களாக இருப்பவர்கள் அந்தப் போதையால் சதா சந்தோஷமாக இருக்கின்றார்கள். அதுவும் வரிசைக்கிரமமானதே; சில விட்டிற்பூச்சிகள் தந்தைக்குச் சொந்தமாகி அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள். ஏழைக் குழந்தைகள் மாத்திரம் தங்களது கணக்குகளை எழுதுகின்றார்கள். செல்வந்தர்கள் ஒருவேளை தங்களுடைய பணம் எடுக்கப்பட்டுவிடும் எனப் பயப்படுகின்றார்கள். செல்வந்தர்களுக்கு இது மிகவும் சிரமமாக இருக்கும். தந்தை கூறுகின்றார்: நானே ஏழைகளின் பிரபு ஆவேன். ஏழைகளுக்கே எப்பொழுதும் தானங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு கைப்பிடி அவலைக் கொடுத்து அதன் பலனாக மாளிகையைப் பெற்ற குசேலரின் உதாரணமும் உள்ளது. நீங்களும் ஏழைகளே. உதாரணமாக ஒருவரிடம் 25 முதல் 50 ரூபாய்கள் இருந்து அவர் அதில் 20, 25 பைசாக்களை பாபாவுக்குக் கொடுத்தாலும் ஒரு செல்வந்த நபர் 50000 ரூபாய்களைக் கொடுத்தாலும் அவை இரண்டுமே சமனாகும். இதனாலேயே “ஏழைகளின் பிரபு” என்ற பெயர் நினைவுகூரப்படுகின்றது. செல்வந்தர்கள் “தங்களுக்கு நேரமில்லை!” எனக் கூறுகின்றனர். இது ஏனெனில் அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லாமையே ஆகும். நீங்கள் ஏழைகள் ஆவீர்கள். ஏழைகள் செல்வத்தைப் பெறுகின்ற பொழுது சந்தோஷம் அடைகின்றார்கள். இங்கே ஏழைகளாக உள்ளவர்கள் அங்கே செல்வந்தர்களாகவும் இங்கே செல்வந்தர்களாக உள்ளவர்கள் அங்கே ஏழைகளாகவும் ஆகுகிறார்கள் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். பலர் கேட்கின்றார்கள்: நாங்கள் யக்ஞத்தைப் பராமரிக்க வேண்டுமா அல்லது எங்களது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டுமா? பாபா கூறுகின்றார்: உங்கள் குடும்பத்தை மிக நன்றாகப் பராமரியுங்கள். நீங்கள் இந்த நேரத்தில் ஏழைகளாக இருப்பதும் நல்லதே. நீங்கள் செல்வந்தர்களாக இருந்திருந்தால் உங்களால் தந்தையிடம் இருந்து முழு ஆஸ்தியையும் கோரியிருக்க முடியாது. சந்நியாசிகள் இவ்வாறு கூற மாட்டார்கள். அவர்கள் பணத்தை எடுத்து தங்களது சொந்தச் சொத்துக்களைக் கட்டுகின்றார்கள். சிவபாபா இவ்வாறு செய்வதில்லை. குழந்தைகளாகிய நீங்களே இந்தக் கட்டடங்கள் அனைத்தையும் உங்களுக்காகவே கட்டியுள்ளீர்கள். இது எவரது சொத்துமல்லஇ இவை அனைத்தும் தற்காலிகமானவை. ஏனெனில் இறுதியில் குழந்தைகள் அனைவரும் இங்கே வந்து தங்க வேண்டும். எங்களுடைய ஞாபகார்த்தமும் இங்கேயே உள்ளது. எனவே நீங்கள் இறுதியில் இங்கே வந்து ஓய்வெடுப்பீர்கள். யோகத்தில் மிகச்சரியான தொடர்புடையவர்கள் தந்தையிடம் ஓடி வருவார்கள். அவர்களும் உதவியைப் பெறுவார்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து பெருமளவு உதவியைப் பெறுகிறீர்கள். நீங்கள் இங்கேயிருந்து விநாசத்தைக் காண்பீர்கள். பாபா எவ்வாறு ஆரம்பத்தில் குழந்தைகளாகிய உங்களுக்குக் களிப்பூட்டினாரோ அதேபோல் அவர் இறுதியிலும் உங்களுக்குக் களிப்பூட்ட ஆரம்பிப்பார். அவர் உங்களுக்குப் பெருமளவு அன்பைக் கொடுப்பார். அது நீங்கள் வைகுந்தத்தில் இருப்பது போல் இருக்கும். நீங்கள் தொடர்ந்தும் மிக நெருக்கமாக வருவீர்கள். நீங்கள் ஒரு யாத்திரையில் இருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். விநாசம் ஒரு குறுகிய காலத்தில் இடம்பெறும். நீங்கள் மிகுந்த சந்தோஷம் உடையவர்கள் ஆகுவீர்கள்; நாங்கள் இப்பொழுது சென்று இளவரசர்கள் ஆகுவோம். பலவிதமான மலர்கள் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானம் எனும் நறுமணத்தை எவ்வளவு கொடுக்கின்றீர்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும்: நான் யாருக்கு ஞானமும் யோகமும் என்ற கற்பித்தல்களைக் கொடுக்கின்றேன்? இதைச் செய்பவர்கள் உள்ளார மிகுந்த மலர்ச்சியாக இருக்கின்றார்கள். பாபா அப்பொழுது அவருடைய ஸ்திதி என்ன எனவும் எந்தளவுக்கு அவருடைய ஸ்திதியில் அவரால் முன்னேற முடியும் எனவும் அறிந்து கொள்கிறார். விட்டிற்பூச்சிகளாகி உள்ளவர்கள் முன்னேறிப் பாய்ந்து செல்வார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மாயையின் பல புயல்கள் வரும். நீங்கள் உங்களை அவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். பரமாத்மா பரமதந்தை இப்பொழுது உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதற்கு வருகின்றார். பரமாத்மா வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையான கடவுள் வந்து தனது குழந்தைகளான ஆத்மாக்களான எங்களுக்கு விளங்கப்படுத்துவது போல் தானும் தனது சகோதர ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்ற ஞானம் ஓர் ஆத்மாவுக்கு உள்ளது. நானும் (பிரம்மா) ஓர் ஆத்மா. பாபா எனக்குக் கற்பிக்கின்றார், நான் பின்னர் ஏனைய ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றேன். எவ்வாறாயினும் ஆத்மாக்களாக இருக்கின்ற நம்பிக்கையைக் கொண்டிருக்காததால் மக்கள் தங்களை மனிதர்களாகக் கருதி மனிதர்களுக்கு விளங்கப்படுத்துகின்றனர். பரமாத்மாவாகிய நான் ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றேன். நீங்கள் இந்த ஞானத்தை ஆத்மாக்களுக்கே கூறுகின்றீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்து ஏனையோருக்கும் அதனைக் கூறினீர்களாயின் அம்பு உடனடியாகவே இலக்கைத் தைக்கும். நீங்களே ஆத்ம உணர்வில் நிலைத்திருக்க முடியாதுவிடின் உங்களால் எவரையும் அதனைக் கிரகிக்கத் தூண்ட முடியாது. இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது. நீங்கள் உங்களுடைய அங்கங்கள் மூலம் செவிமடுக்கின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுடனேயே (குழந்தைகள்) பேசுகின்றேன். பாபாவின் கட்டளைகள்: சரீரமற்றவர்கள் ஆகுங்கள்! சரீர உணர்வைத் துறந்து என்னை நினைவு செய்யுங்கள்! இது உங்களின் புத்திகளில் பிரவேசிக்க வேண்டும். நான் ஆத்மாக்களுடனேயே பேசுகின்றேன், சரீரங்களுடனல்ல. ஒருவர் பெண்ணாக இருந்த பொழுதிலும் நான் அவரினுள் இருக்கும் ஆத்மாவுடனேயே பேசுகின்றேன். நீங்கள் இப்பொழுது பாபாவுக்குச் சொந்தம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இருப்பினும் புத்தி தொடர்ந்தும் மிகவும் சூட்சுமமான முறையில் தொழிற்படுகின்றது. நான் ஓர் ஆத்மா, நான் இவரின் ஆத்மாவுக்கு விளங்கப்படுத்துகின்றேன். இவர் என்னுடைய சகோதரர். நான் இவருக்குப் பாதையைக் காட்ட வேண்டும். ஆத்மா இதைப் புரிந்து கொள்கின்றார். நீங்கள் இதைப் புரிந்துகொள்கின்ற பொழுதே அம்பு இலக்கைத் தைக்கும். நீங்கள் ஒருவருடைய சரீரத்தைப் பார்த்துக்கொண்டு இந்த ஞானத்தைப் பேசுகின்ற பொழுது அந்த ஆத்மா செவிமடுக்க மாட்டார். முதலில் நீங்கள் ஆத்மாக்களுடன் பேசுவதாக அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். ஓர் ஆத்மா ஆண் அல்லது பெண் எனக் கூறப்படுவதில்லை; ஆத்மாக்கள் அதற்கும் அப்பாற்பட்டவர்கள். பிரம்மாவும் சரஸ்வதியும் ஆணும் பெண்ணும் எனக் கூறப்படுவதைப் போன்று ஒரு சரீரமே ஆண் அல்லது பெண் எனக் கூறப்பட்டுள்ளது. சிவபாபாவை ஆண் அல்லது பெண் என்று அழைக்க முடியாது. தந்தை ஆத்மாக்களுக்கே விளங்கப்படுத்துகின்றார். இலக்கு மிகவும் உயர்ந்தது. இந்தக் கருத்து மிகவும் உறுதியானது. ஆத்மாவுக்கு ஓர் ஊசி போடப்பட வேண்டும். அப்பொழுதே சரீர உணர்வு துண்டிக்கப்பட முடியும். இல்லையெனில் எந்த நறுமணமோ அல்லது பலமோ இருக்க மாட்டாது. இது மிகச்சிறிய விடயமாகும். நான் ஆத்மாவுடன் பேசுகின்றேன். தந்தை கூறுகின்றார்: நீங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். எனவே ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! மன்மனாபவ! அப்பொழுது நீங்கள் இயல்பாகவே “மத்தியாஜிபவ” ஆகுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது மிகவும் சூட்சுமமான புத்தியைப் பெற்றுள்ளீர்கள். அதிகாலையில் விழித்தெழுந்து அமர்ந்திருந்து இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். பகல் நேரத்தில் நீங்கள் சேவை செய்ய வேண்டும், ஏனெனில் நீங்கள் கர்மயோகிகள். எழுதப்பட்டுள்ளது: உறக்கத்தை வென்றவர்கள் ஆகுங்கள். இரவில் விழித்திருந்து ஒரு வருமானத்தைச் சம்பாதியுங்கள். பகல் நேரங்களில் மாயையின் விரிவாக்கம் பெருமளவு உள்ளது. அமிர்தவேளையின் சூழல் மிகவும் நல்லது. நீங்கள் எந்த நேரத்தில் விழித்தெழுந்து ஞானக்கடலைக் கடைகின்றீர்கள் என உங்களில் எவருமே பாபாவுக்கு எழுதுவதில்லை. இதற்குப் பெருமளவு முயற்சி தேவை, ஏனெனில் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இங்கே நீங்கள் எல்லைக்கு உட்பட்டவற்றின் அதிபதிகள். தண்ணீர் போன்றவற்றின் எல்லைகள் மீது அதிகளவு சச்சரவுகள் உள்ளன! அதன் காரணமாக அதிகளவு விரோதம் உள்ளது! அவர்கள் தங்களைச் சகோதரர்களாகக் கருதுவதில்லை. தாங்கள் அனைவரும் ஒன்றே என அவர்கள் கூற வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக முடியாது. பல ஆத்மாக்கள் இருக்கின்றனர், ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாகத்தைக் கொண்டுள்ளனர். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்திலும் இங்கே அமர்ந்திருந்தீர்கள். நாடகத்திற்கு ஏற்பவே இலைகள் அசைகின்றன. கடவுள் ஒவ்வோர் இலையையும் அசையச் செய்கின்றார் என்றில்லை. இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு பின்னர் அவற்றை ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். நீங்கள் விட்டிற்பூச்சி ஆகி விட்டீர்களா, நீங்கள் பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்களா, நீங்கள் பயனற்ற விடயங்கள் பற்றிப் பேசுகின்றீர்களா, உங்களுடைய பணத்தைப் பாவ காரியத்துக்குப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஆத்மாக்களுடன் பேசுங்கள். நீங்கள் ஆத்ம உணர்வு நிலையில் இருந்து இந்த ஞானத்தைச் செவிமடுத்துக் கூறுகின்ற பொழுது உங்களால் அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்க முடியும்.2. உறக்கத்தை வென்றவராகி இரவில் விழித்திருந்து ஒரு வருமானத்தைச் சம்பாதியுங்கள். இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். பயனற்ற விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தவத்தால் உங்களின் பாவங்களையும் தமோகுணி சுபாவத்திற்கு உரிய உங்களின் சம்ஸ்காரங்களையும் எரித்து தபஸ்யா சொரூபமாகத் தென்படுவீர்களாக.இறை பராமரிப்பிற்கான பணி இப்போது நடைபெறுவதைப் போல் இறுதிக்கணங்களில் உங்களின் பாவங்கள் மற்றும் தமோகுணி சம்ஸ்காரங்கள், பஞ்சபூதங்களின் தமோகுணியான குணம் என்பவை உங்களின் தபஸ்யாவால் எரிகின்ற பணி இடம்பெற வேண்டும். இதற்கு சதா நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதி என்ற ஆசனத்தில் ஸ்திரமாக இருந்தவண்ணம் உங்களின் தபஸ்வி ரூபத்தை வெளிப்படுத்துங்கள். உங்களின் சரீர உணர்வினைத் துறப்பதும் ஆத்ம உணர்வில் இருக்கும் தபஸ்யாவும் நடைமுறையில் உங்களின் ஒவ்வொரு பௌதீக அங்கத்திலும் தென்பட வேண்டும்.
சுலோகம்:
சம்ஸ்காரங்களின் எந்தவொரு முரண்பாட்டில் இருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருப்பதில் சமநிலையைப் பேணுங்கள்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
தந்தை கள்ளங்கபடமற்ற பிரவு என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவரால் எதையும் எதிர்க்க முடியாத அளவிற்கு அவர் அந்தளவு அப்பாவி கிடையாது. கள்ளங்கபடமற்ற பிரபுவாக இருப்பதுடன் கூடவே அவர் சர்வசக்திவானும் ஆவார். நீங்களும் உங்களின் சக்தி ரூபத்தை மறந்து வெறுமனே அப்பாவியாக இருக்கக்கூடாது. இல்லாவிட்டால் நீங்கள் மாயையின் அம்பால் தாக்கப்படுவீர்கள். மாயை உங்களை எதிர்ப்பதற்கு முன்னர் மாயை தலைவணங்கி உங்களை வணங்கும் வகையில் சக்தி ரூபம் ஆகுங்கள். மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருங்கள்.