29.11.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே உண்மையான ராஜரிஷிகள், உங்கள் கடமை தபஸ்யா செய்வதாகும். தபஸ்யா செய்வதன் மூலமே குழந்தைகள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றனர்.
கேள்வி:
எம்முயற்சி உங்களைக் காலம் எல்லாம் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றது?பதில்:
நீங்கள் ஆத்மாக்களின் ஒளியை ஏற்றி, தமோபிரதான் ஆத்மாக்களை சதோபிரதான் ஆனவர்கள் ஆக்குவதற்கு முயற்சி செய்யும்போதே காலமெல்லாம் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். இந்நேரத்தில் கவனயீனமாக இருந்து, தவறுகள் செய்பவர்கள் அதிகளவு அழுவார்கள். நீங்கள் சித்தி அடைவதற்கு முயற்சி செய்யாது விட்டால் தர்மராஜிடம் இருந்து தண்டனையை அனுபவம் செய்வதுடன், பூஜிக்கப்படவும் மாட்டீர்கள். தண்டனையை அனுபவம் செய்ய நேரிடுபவர்களால் தலைநிமிர்ந்து பார்க்க முடியாதிருக்கும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எல்லாவற்றிற்கும் முதலில் அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு, உங்களை ஆத்மாக்களெனக் கருதுமாறு கூறுகின்றார். முதலில் ஆத்மாவும், பின்னர் சரீரமும் உள்ளன. கண்காட்சிகளிலும், அருங்காட்சியகங்களிலும், வகுப்பிலும், எங்கும் முதலில் நீங்கள் அனைவரையும் எச்சரிக்க வேண்டும்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, நீங்கள் அனைவருமே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்றில்லை. இங்கு அமர்ந்திருக்கும் போதும், உங்கள் எண்ணங்கள் சகல திசைகளிலும் அலைபாய்கின்றன. சத்சங்கங்களில், சாது வரும்வரை அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் நிச்சயமாக ஏதோவொரு எண்ணத்துடன் அமர்ந்திருப்பார்கள். பின்னர், சாது வந்ததும் அவர் கூறுகின்ற கதையைச் செவிமடுக்க ஆரம்பிக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: பக்தி மார்க்கத்தில் சில விடயங்கள் கூறப்படும்போது, மக்கள் அதனைச் செவிமடுக்கின்றனர். அவை அனைத்தும் செயற்கையானவை, அவற்றில் எதுவுமே இல்லை எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் கொண்டாடுகின்ற தீபாவளியும் (தீபமாலை) செயற்கையானதே. மூன்றாவது ஞானக்கண் திறந்திருக்கும் பொழுதே ஒவ்வொரு வீட்டிலும் ஒளி இருக்க முடியும் எனத்; தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் இருள் சூழ்ந்துள்ளது. அந்த ஒளி அனைத்தும் வெளிப்படையானது. நீங்கள் உங்கள் ஒளியை ஏற்றுவதற்காக முழுமையான மௌனத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களை உங்கள் ஆதி தர்மத்தில் ஸ்திரப்படுத்துவதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த நினைவு யாத்திரை மூலமே உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்களின் ஒளி அணைந்து விட்டது: சக்திக்கான பெற்றோல் முழுவதும் பயன்படுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகும்போது, மீண்டும் நிரப்பப்படுவீர்கள். பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. மக்கள் இப்பொழுது இலக்ஷ்மியை அதிகளவில் வழிபடுகின்றனர். இலக்ஷ்மியா, சரஸ்வதி மாதாவா மகத்தானவர் எனச் சில குழந்தைகள் எழுதி வினவுகின்றனர். இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணன் ஒருவருக்கே சொந்தமானவர். அவர்கள் மகாலக்ஷ்மியை வழிபடும்போது, அவரை நான்கு கரங்களுடன் காட்டுகின்றனர். அவ்வுருவம் அவர்கள் இருவரையுமே குறிக்கின்றது. அது உண்மையில் இலக்ஷ்மி நாராயணனின் வழிபாடு என்றே அழைக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரும் ஒருமித்து இருப்பதால் அவர்கள் நான்கு கரங்களுடைய உருவத்தைக் காட்டிய போதிலும், மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: அனைவரும் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டனர். ஒரு லௌகீகத் தந்தை முழு உலகிலுமுள்ள குழந்தைகளை விவேகம் அற்றவர்கள் எனக் கூறுவாரா? உலகத் தந்தை யாரென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவரே கூறுகின்றார்: நானே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவேன். நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள். அனைவரும் கடவுள் என அந்த சாதுக்கள் கூறுகின்றனர். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஞானத்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். மனிதர்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் கூறுகின்றார்கள்: தாங்கள் இன்ன இன்னார். அவர்கள் சரீரங்களின் பெயர்களின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கின்றனர். பரமாத்மாவாகிய சிவபாபா அசரீரியானவர். அவ்வாத்மாவின் பெயர் சிவன். சிவபாபாவிற்கு மாத்திரமே ஆத்மாவிற்கு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவரே பரமாத்மாவாகிய கடவுள். அவரது பெயர் சிவன் ஆகும். ஏனைய ஆத்மாக்கள் அனைவருக்கும், அவர்களது சரீரங்களுக்கே பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபாபா இங்கு வசிப்பதில்லை, அவர் பரந்தாமத்தில் இருந்தே இங்கு வருகின்றார். சிவனின் அவதாரம் உள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வருகின்றார்கள் எனத் தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். தந்தைக்கும் ஒரு பாகம் உள்ளது. தந்தை இங்கு மகத்துவம் மிக்க பணியொன்றை மேற்கொள்கின்றார். அவரது அவதாரத்தில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதால், அவருக்கென ஒரு விடுமுறை தினத்தைக் கொண்டாடவும், அவரின் முத்திரையை வெளியிடவும் அவர்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். தந்தை அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என்பதால், சகல நாடுகளிலும் இதனையிட்டு விடுமுறை கொடுக்கப்பட வேண்டும். அவரது பிறந்த தினத்தையோ, அவர் பிரிந்து செல்லும் தினத்தையோ எவராலும் அறிந்து கொள்ள முடியாது, ஏனெனில், அவர் தனித்துவமானவர். இதனாலேயே அவர்கள் சிவராத்திரி பற்றிச் சாதாரணமாகப் பேசுகின்றனர். அரைச் சக்கரத்திற்கு எல்லையற்ற பகலும், மற்றைய அரைச் சக்கரத்திற்கு எல்லையற்ற இரவும் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இரவு முடிவடையும்போது, பகல் ஆரம்பிக்கின்றது. தந்தை இரண்டிற்கும் இடையில் வருகின்றார். இதுவே மிகச் சரியான நேரமாகும். ஒரு குழந்தை பிறக்கும்போது, அது மாநகர சபையில் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது. ஆறு நாட்களின் பின்னர் குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுகின்றது. அது பெயர் சூட்டுவிழா எனப்படுகின்றது. சிலர் அதனை “சாத்தி” (ஆறாவது நாள் விழா) என அழைக்கின்றனர். பல மொழிகள் உள்ளன. அவர்கள் இலக்ஷ்மியை வழிபடும்போது, வாண வேடிக்கைகள் போன்றவை இருக்கும். நீங்கள் அவர்களிடம் வினவ முடியும்: நீங்கள் இலக்ஷ்மியின் பண்டிகையைக் கொண்டாடுகின்றீர்கள், ஆனால் அவர் எப்பொழுது சிம்மாசனத்தில் அமர்ந்தார்? அவர் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, முடிசூடும் விழாவையே அவர்கள் கொண்டாடுகின்றனர். அவரது பிறந்த தினத்தை அவர்கள் கொண்டாடுவதில்லை. அவர்கள் இலக்ஷ்மியின் படத்தை ஒரு தட்டில் வைத்து, அவரிடம் செல்வத்தை வேண்டுகின்றனர். அவர்கள் வேறு எதனையும் அவரிடம் வேண்டுவதில்லை. ஆலயங்களில் அவர்கள் எதையும் வேண்டுவார்கள், ஆனால் (தீபமாலை) தீபாவளியன்று, அவர்கள் செல்வத்தை மாத்திரமே வேண்டுகின்றனர். எவ்வாறாயினும், அவர் செல்வத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் அது அவர்களின் நம்பிக்கை! ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் வழிபடும்போது. அவர் ஒரு குறுகிய காலத்திற்குச் செல்வத்தைப் பெறுவது சாத்தியமாகும். அது தற்காலிக சந்தோஷம் ஆகும். எங்கோ ஓர் இடத்தில் நிரந்தர சந்தோஷம் இருக்க வேண்டும்! அவர்களுக்குச் சுவர்க்கத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. சுவர்க்கத்துடன் எதையும் ஒப்பிட முடியாது. அரைச் சக்கரத்திற்கு இந்த ஞானமும், அரைச் சக்கரத்திற்கு பக்தியும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் விருப்பமின்மை உள்ளது. இவ்வுலகம் பழையதும், அழுக்கானதும் என்றும், அதனால் புதிய உலகம் நிச்சயமாகத் தேவை என்றும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. வைகுந்தம் புதிய உலகம் எனப்படுகின்றது. அது சுவர்க்கம், அதாவது வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்நாடகத்திலுள்ள நடிகர்கள் அழியாதவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு உங்கள் பாகத்தை நடிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். பாபா உங்களிடம் கூறியுள்ளார்: நீங்கள் கண்காட்சி ஒன்றில் மக்களுக்கு விளங்கப்படுத்தும் போதெல்லாம், எல்லாவற்றிற்கும் முதலில் அவர்களிடம் உங்கள் இலக்கும் குறிக்கோளுமாகிய இதனைக் காண்பித்து, எவ்வாறு நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெற முடியும் என்பதை விளங்கப்படுத்துங்கள். அனைவரும் நிச்சயமாக பிறப்பு இறப்புச் சக்கரத்தினுள் வர வேண்டும். நீங்கள் ஏணிப் படத்தைப் பயன்படுத்தி மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். பக்தி இராவண இராச்சியத்திலேயே ஆரம்பமாகின்றது. சத்திய யுகத்தில் பக்தியின் பெயரோ, சுவடோ இல்லை. இந்த ஞானமும், பக்தியும் வெவ்வேறானவை. நீங்கள் இப்பொழுது இப்பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டுள்ளீர்கள். இப்பழைய உலகம் இப்பொழுது முடிவடையப் போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு எப்பொழுதும் சந்தோஷத்தையே கொடுப்பார். ஒரு தந்தை தனது குழந்தைகளுக்காக அதிக பிரயத்தனம் செய்கின்றார். அவர் ஒரு புதல்வனைப் பெறுவதற்காக குருமாரிடமும், சாதுக்களிடமும் செல்கின்றார். ஏனெனில், தனக்கு ஒரு புதல்வன் இருந்தால், தனது சொத்துக்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுக்க முடியும் என அவர் நம்புகின்றார். ‘எனக்கு ஒரு புதல்வன் இருந்தால், அவனை எனது வாரிசு ஆக்க முடியும்.’ ஒரு தந்தை ஒருபோதும் தனது குழந்தைகளுக்குத் துன்பம் விளைவிப்பதில்லை. அது அசாத்தியம்! நீங்கள் தாயையும், தந்தையையும் அழைத்து அழுதீர்கள். எனவே, ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுகின்றார். ஒரேயொரு தந்தையே சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். ஆன்மீகத் தந்தையே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர். இந்த விநாசமும் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்கே ஆகும். வேறு எவ்வாறு நீங்கள் முக்தியையோ, ஜீவன் முக்தியையோ பெறுவீர்கள்? எவ்வாறாயினும், எவரும் இதனைப் புரிந்துகொள்வதில்லை. ஏழைகளும், பலவீனமானவர்களுமே இங்கு வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் மாத்திரமே தாங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும். எவ்வாறாயினும், செல்வந்தர்களான முக்கியஸ்தர்களின் சரீர உணர்வு மிகவும் உறுதியாக உள்ளது, கேட்கவே வேண்டாம்! பாபா மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறுகின்றார்: நீங்கள் இராஜரிஷிகள். ரிஷிகள் எப்பொழுதும் தபஸ்யா செய்வார்கள். அவர்கள் பிரம்மத்தை நினைவு செய்கின்றனர், அவர்கள் ஒளித் தத்துவத்தை நினைவு செய்கின்றனர். சிலர் காளி போன்றவர்களைக்கூட நினைவு செய்கின்றனர். பல சந்நியாசிகள் காளியை வழிபடுகின்றனர். அவர்கள் காளி மாதாவை அழைக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில், அனைவரும் விகாரமானவர்களாக உள்ளனர். காமச் சிதையில் அமர்ந்ததால் அவர்கள் அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டனர். தாய், தந்தை, குழந்தைகள் அனைவரும் அவலட்சணமானவர்களாக உள்ளனர். இது ஓர் எல்லையற்ற விடயம். சத்தியயுகத்தில் எவரும் அவலட்சணமானவர்கள் அல்ல, அனைவரும் அழகானவர்கள். நீங்கள் எப்பொழுது மீண்டும் அவலட்சணமானவர்கள் ஆகினீர்கள் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் முற்றிலும் அவலட்சணமானவர்கள் ஆகும்வரை, படிப்படியாக மென்மேலும் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். தந்தை கூறுகின்றார்: இராவணன் உங்களைக் காமச் சிதையில் அமரச்செய்து, உங்களை முற்றிலும் அவலட்சணமானவர்கள் ஆக்கிவிட்டான். இப்பொழுது நான் உங்களை மீண்டும் ஒரு தடவை இந்த ஞானச் சிதையில் அமரச் செய்கின்றேன். ஆத்மாவே தூய்மை ஆக்கப்பட வேண்டும். தூய்மையாக்குபவரான தந்தை இப்பொழுது வந்து, எவ்வாறு தூய்மையாகுவது என உங்களுக்குக் காண்பிக்கின்றார். தூய்மை ஆகுவது எவ்வாறு என நீரினால் எவ்வாறு உங்களுக்குக் காட்ட முடியும்? எவ்வாறாயினும், நீங்கள் மில்லியன் கணக்கானோருக்கு இதனை விளங்கப்படுத்த நேரிடும் போது, அந்த மில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினரே இதைப் புரிந்துகொண்டு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காகத் தந்தையிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, பல காட்சிகளைப் பெறுவீர்கள். உங்கள் கல்வி பற்றிய அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தற்போது கவனயீனமாக உள்ளவர்கள் பின்னர் பெருமளவில் அழுவார்கள். அதிகளவு தண்டனை அனுபவம் செய்யப்படுவதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். அப்பொழுது உங்களால் தலைநிமிர்ந்து பார்க்க முடியாதிருக்கும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, முயற்சி செய்து சித்தி அடைந்தால், நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை. அப்பொழுதே நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் தண்டனை அனுபவிக்க நேர்ந்தால், நீங்கள் பூஜிக்கப்பட முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆத்மாக்களின் ஒளியை ஏற்றவேண்டும். தற்போது, ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். எனவே, அவர்கள் சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும். ஓர் ஆத்மா ஒரு புள்ளி ஆவார்: அது ஒரு நட்சத்திரம் போன்றது. நீங்கள் ஆத்மாவிற்கு வேறு எப்பெயரும் கொடுக்க முடியாது. சிலர் இதனைக் காட்சியில் கண்டுள்ளதாக பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். சுவாமி விவேகானந்தரினதும், இராமகிருஷ்ண பரமஹம்சரினதும் உதாரணம் உள்ளது. அவர் மற்றவரிலிருந்து ஒளி வெளிவருவதைக் கண்டார். எனவே, அது ஓர் ஆத்மாவாகவே இருந்திருக்க வேண்டும். அது அவரினுள் இரண்டறக் கலந்து விட்டதாக அவர் நினைத்தார். ஓர் ஆத்மா எவரினுள்ளும் வந்து இரண்டறக் கலக்க முடியாது. ஓர் ஆத்மா சென்று, இன்னொரு சரீரத்தை எடுக்கின்றார். இறுதியில், நீங்கள் இதனைப் பெருமளவில் காண்பீர்கள். பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டது எதுவுமே இல்லை. ஆகாயம் வெற்றிடம் எனப்படுகின்றது, எனினும் அதற்கும் ஒரு பெயர் இருக்கவே செய்கின்றது. ஸ்தாபனையானது ஒவ்வொரு சக்கரத்திலும் இடம்பெறுகின்றது என்றும், அது நிச்சயமாக இப்போதும் இடம்பெறும் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பிராமணர்களாகிய நாங்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக முயற்சி செய்கின்றோம். கடந்து செல்கின்ற ஒவ்வொரு விநாடியும் நாடகத்திற்கு ஏற்பவே எனப்படுகின்றது. முழு உலகினதும் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இச்சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டது. அது தொடர்ந்தும் ஒரு பேனைப் போன்று ஊர்ந்து செல்கின்றது. அது தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், அனைத்தையும் செய்யும் போதும் தந்தையை நினைவு செய்யுங்கள்! இதில் மாத்திரமே நன்மை உள்ளது. சிலவேளைகளில் மாயை உங்களை அறைவாள். நீங்கள் பிராமணர்கள், நீங்கள் ரீங்காரமிடும் வண்டுகள் செய்வது போன்று, மற்றவர்களையும் உங்களைப் போன்று பிராமணர்கள் ஆக்க வேண்டும். அந்த ரீங்காரமிடும் வண்டு வெறும் உதாரணமே ஆகும். நீங்கள் உண்மையான பிராமணர்கள். பிராமணர்களாகிய நீங்களே தேவர்கள் ஆகவேண்டும். இதனாலேயே நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கென சங்கமயுகம் உள்ளது. நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காகவே இங்கு வருகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் முதலில் நிச்சயமாக பிராமணர்கள் ஆகவேண்டும். பிராமணர்களின் உச்சிக்குடுமி உள்ளது. நீங்கள் பிராமணப் புரோகிதர்களுக்கு விளங்கப்படுத்த முடியும்: உங்கள் பிராமண குலம் உள்ளது, எனினும் பிராமண இராச்சியம் என்பது இல்லை. உங்கள் குலத்தை ஸ்தாபித்தவர் யார்? உங்கள் மூத்தவர் அல்லது தலைவர் யார்? நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தினால், அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். அந்தப் பிராமணர்கள் சமய நூல்கள் போன்றவற்றை எடுத்துரைப்பதால், மக்கள் அவர்களுக்கு அதிகளவு மரியாதை கொடுக்கின்றனர். ஆரம்ப நாட்களில், பிராமணப் புரோகிதர்கள் ராக்கி கட்டச் செல்வதுண்டு. இந்நாட்களில், இதைச் செய்வதற்கு குழந்தைகளே செல்கின்றனர். தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்பவர்களுக்கே நீங்கள் ராக்கி கட்டவேண்டும். நிச்சயமாக சத்தியம் ஒன்று செய்யப்பட வேண்டும். பாரதத்தை மீண்டும் தூய்மை ஆக்குவதற்காக நாங்கள் இச்சத்தியத்தைச் செய்கின்றோம். நீங்கள் தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மையாக்க உதவ வேண்டும். இதைக் கூறுவதற்கான சக்தி வேறு எவரிடமும் இல்லை. இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுவதால், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவே உங்கள் தொழிலாகும். வேறு எந்த மனிதர்களும் இவ்வாறு இல்லை. நீங்கள் அவர்களை இந்தச் சத்தியத்தைச் செய்ய வைக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: காமமே மிகக் கொடிய எதிரி! இதனை வெற்றி கொள்ளுங்கள்! இதை வெற்றி கொள்வதால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் நிச்சயமாகத் தங்கள் முன்னைய பிறவியில் முயற்சி செய்தார்கள். அவ்வாறே அவர்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகினார்கள். அவர்கள் அந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக எத்தகைய முயற்சி செய்தார்கள் என நீங்கள் மக்களிடம் கூறலாம். இதனையிட்டுக் குழப்பம் அடைவதற்கென எதுவுமே இல்லை. இந்த தீபாவளி போன்றவற்றால் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை. நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள், நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் ஏராளமாகச் செலவு செய்கின்றனர்! அதில் அதிகளவு இழப்பு உள்ளது. சிலவேளைகளில் தீ மூளவும் செய்கின்றது. எவ்வாறாயினும், அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது உங்கள் புதிய வீட்டிற்கு மீண்டும் ஒரு முறை செல்லவுள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சக்கரம் அதேபோன்று மீண்டும் சுழலும். இது ஓர் எல்லையற்ற திரைப்படம் ஆகும். இது ஓர் எல்லையற்ற ஸ்லைட் ஆகும். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள் என்பதால், உங்களுக்குள் சந்தோஷம் பொங்கியெழ வேண்டும். நாங்கள் நிச்சயமாக எங்களின் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுவோம். தந்தை கூறுகின்றார்: முயற்சி செய்து, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்வதால் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகமுடியும். இந்த (வயோதிப) பாபாவினால் மிக மேன்மையானவர் ஆகமுடியுமானால், உங்களால் அவ்வாறு ஆக முடியாதா? அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை எப்பொழுதும் அவரது குழந்தைகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பது போன்று, நீங்களும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகவேண்டும். முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள்.2. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு தபஸ்யா செய்யுங்கள். இந்த அழுக்கான, பழைய உலகில் எல்லையற்ற துறவிகள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
ஒவ்வொருவரது சிறப்பியல்பையும் அறிந்திருப்பதன் மூலம் ஒரே வழிகாட்டலில், ஓர் ஒற்றுமையான ஒன்றுகூடலை உருவாக்குவதன் மூலம் அனைவர் மீதும் தூய ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருந்து, நம்பிக்கைக்கு உரியவராக இருப்பீர்களாக.நாடகத்திற்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஏதாவது ஒரு சிறப்பியல்பை பெற்றிருப்பீர்கள். அந்தச் சிறப்பியல்பை பயன்படுத்துவதுடன் ஏனையவர்களின் சிறப்பியல்புகளையும் பாருங்கள். ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருங்கள், அப்பொழுது அவர்கள் கூறுவதன் உள்நோக்கம் மாறும். ஒவ்வொருவரின் சிறப்பியல்பையும் பார்க்கின்ற போது, உங்களில் பலர் இருந்த போதிலும், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது தென்படுவதுடன், ஒன்றுகூடல் ஒரே வழிகாட்டலில் ஒற்றுமையாக இருக்கும். ஒருவர் இன்னொருவரைப் பற்றி அவதூறாக ஏதாவது ஒன்றை உங்களிடம் கூறினால், அவருக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக, அவ்வாறு உங்களிடம் கூறுபவரின் வடிவத்தை மாற்றும் போது, நீங்கள் பிறரையிட்டு தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
மேன்மையான எண்ணங்களின் பொக்கிஷமே, பிராமண வாழ்வினதும் மேன்மையான வெகுமதியினதும் அடிப்படை ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).
ஒரு விநாடியில், சரீரமற்றவர் ஆகும் பயிற்சியை கொண்டிருக்காது விட்டால், இறுதிக் கணங்கள் போராடுவதிலேயே கழியும். நீங்கள் எதிலெல்லாம் பலவீனமாக இருக்கிறீர்களோ, அது உங்கள் சுபாவமாகவோ, பிறருடன் நீங்கள் கொண்டிருக்கின்ற உறவுகளிலோ, உங்கள் எண்ணங்களின் சக்தியிலோ, மனோபாவத்திலோ, அல்லது சூழலின் ஆதிக்கத்திலோ ஆக இருக்கலாம். எதில் நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்களோ, அதில் மாயை இறுதித்தாளின் போது உங்களைப் பரீட்சித்துப் பார்ப்பாள். ஆகையால் சரீரமற்றவர் ஆகுகின்ற பயிற்சியே மிகப் பிரதானமானது.