30.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இந்த நேரத்தில் தந்தையிடம் உங்களை அர்ப்பணித்தால் நீங்கள் 21 பிறவிகளுக்குச் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.

கேள்வி:
ஞானம் நிறைந்த குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்வதற்கு எந்ததொரு பழக்கத்தை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்?

பதில்:
அதிகாலை வேளையில் எழுந்திடும் பழக்கத்தை ஆகும். அதிகாலை வேளையில் எழுந்து பாபாவை நினைவு செய்தல் மிகவும் சிறந்ததொரு தாரணை ஆகும். இரவில் தாமதிக்காது படுக்கைக்குச் சென்று அதிகாலையில் எழுந்திடும் குழந்தைகளின் ஸ்திதியானது நாள் முழுவதும் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஞானம் அற்றவர்கள் உறங்கும் நேரத்தின் அரைவாசி நேரமே ஞானம் நிறைந்தவர்கள் உறங்க வேண்டும். இரவு 10.00 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 2.00 மணிக்கு எழுந்து நினைவில் அமர்ந்திருங்கள்.

பாடல்:
எனக்கு ஆதரவளித்தவருக்கு இதயம் நன்றி சொல்கின்றது….

ஓம் சாந்தி.
பாபாவின் நேர்முன்னிலையில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் அனைவரும் நீங்கள் சரீரத்தில் வாழும் ஆத்மாக்கள் என்பதைப் புரிந்திருக்கின்றீர்கள். இங்கேயே சரீரத்தில் வாழும் ஆத்மாக்கள் உள்ளனர். ஆத்மாக்களுக்கு ஒரு சரீரம் இல்லாதபோது, அவர்கள் நிர்வாணமாக உள்ளார்கள், அதாவது, ஆத்மாக்கள் சரீரமற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு நீங்கள் ஒரு சரீரத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஆத்மாவினாலோ அல்லது பரமாத்மாவினாலோ ஒரு சரீரத்தில் பிரவேசிக்காமல் உரையாட முடியாது. சரீரத்தில் வாழுகின்ற ஆத்மாக்களாகிய நீங்கள் 5000 வருடங்களின் முன்னர் அவரின் முன்னால் வந்ததைப் போன்றே இப்பொழுதும் தந்தையின் முன்னிலையில் வந்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். குழந்தைகள் தமது லௌகீகத் தந்தையிடம் இருந்து நிச்சயமாகத் தமது ஆஸ்தியை பெறுகின்றார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையான பரமாத்மா, பரமதந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஏன் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்? தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்காகவே. ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்கள் தாம் ஒரு பொறியியலாளராகவோ அல்லது சட்டத்தரணியாகவோ ஆகுவதற்கு ஓர் ஆசிரியரிடம் கற்கின்றோம் என்பதை அறிந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஓர் இலக்கும் குறிக்கோளும் உள்ளன. பரமாத்மாவான பரமதந்தை பிரம்மாவின் சரீரத்தில் அமர்ந்திருந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். கடவுள் பேசுகின்றார்: அசரீரியானவரே கடவுள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சரீரத்தில் வாழும் ஆத்மாக்கள் நிச்சயமாக மறுபிறவி எடுக்கின்றார்கள். மனிதர்கள் மறுபிறவி எடுக்கின்றார்களா என்று ஒரு சந்நியாசியிடம் வினவினால் அவர் இல்லையெனப் பதிலளிக்க மாட்டார். அவ்வாறாயின், அவர்கள் எவ்வாறு 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேச முடியும்? அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா என்றும் அவர்களிடம் வினவுங்கள். ஓர் ஆத்மா நிச்சயமாகத் தனது சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். இவ்வாறாக, சில மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். 8.4 மில்லியன் பிறவிகள் என்ற கேள்விக்கே இடமில்லை. முதற் பிறவி நிச்சயமாக மிகவும் சிறந்ததும் சதோபிரதானதாகவும் இருக்கும். இறுதிப் பிறவியோ தீயதாகவும் தமோபிரதானாகவும் இருக்கும். ஆத்மாக்கள் 16 சுவர்க்கக் கலைகளில் இருந்து 14 சுவர்க்கக் கலைகளாகக் குறைவடைந்து, அதன் பின்னர் 12 சுவர்க்கக் கலைகள் உடையவர்கள் ஆகுகின்றார்கள். ஆத்மாக்கள் நிச்சயமாக மறுபிறவி எடுக்கின்றார்கள். அத்துடன் வினவுங்கள்: நல்லது, பரமாத்மாவான பரமதந்தை மறுபிறவி எடுக்கின்றாரா அல்லது அவர் பிறவிகளுக்கு அப்பாற்பட்டவரா? பாருங்கள், இக்கருத்து மிகவும் சூட்சுமமானது. அவர் பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறினால், அது சிவனின் பிறந்தநாளுடன் பொருந்தாது. ஆகையால் நீங்கள் கூறவேண்டும்: ஆனால், சிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. விளக்கப்படுகிறது: ஆம், சிவனின் பிறந்தநாள் உள்ளது, ஆனால் இறப்பு என்று நீங்கள் கூறுவது சிவனின் பிறப்புடன் சம்பந்தப்படுவதில்லை. அவர் இறப்பாராயின், அவரும் மறுபிறப்பு எடுக்க வேண்டும். தந்தை ஒருபோதும் மறுபிறவி எடுப்பதில்லை. அவர் ஒருமுறை மாத்திரமே இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கின்றார். அவ்வளவே! அவர் மறுபிறப்பு எடுப்பதில்லை. பரமாத்மா பரமதந்தை மறுபிறப்பு எடுப்பதில்லை. அவர் ஒருபோதும் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகுவதில்லை. பிறப்பு இறப்பு சக்கரத்தில் சுழன்று வரும்போதே ஆத்மாக்கள் அனைவரும் தொடர்ந்தும் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள், ஆகையாலேயே அவர்களைத் தூய்மை ஆக்குவதற்குத் தந்தை வருகின்றார். ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர் என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும். ஓர் ஆத்மா வீட்டிலிருந்து வரும்போது, அவர் தூய்மையாகவே இருக்கின்றார், எனினும் மாயை அவரைத் தூய்மை அற்றவர் ஆக்குகின்றாள். தந்தை உங்களை ஒருபோதும் தூய்மையற்றவர்கள் ஆக்குவதில்லை. தந்தையால் ஒருபோதும் தீய வழிகாட்டல்களைக் குழந்தைகளுக்கு வழங்க முடியாது. இந்த நேரத்தில் வாழும் மனிதர்கள் மாத்திரமே தூய்மையற்ற வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்கள். தூய்மையான தந்தை கூறுகின்றார்: தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள், அதாவது, விகாரத்தில் ஈடுபடாதீர்கள்! இராவணனின் கட்டளைகளின் மூலமே இவ்வுலகம் துன்ப உலகம் ஆகியது. முதலில் அது சந்தோஷ உலகமாக இருந்தது. சந்தோஷத்தையும் துன்பத்தையும் தருபவர் தந்தை அல்ல. இல்லை. தந்தை என்றுமே துன்பத்திற்கான வழிகாட்டலைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுப்பதில்லை. மாயையே உங்களைச் சந்தோஷம் இழக்கச் செய்கின்றாள். மாயையை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். மனிதர்கள் மாயை என்பதன் அர்த்தத்தைப் புரியாமல் இருக்கின்றார்கள். அவர்கள் செல்வத்தை மாயை எனக் குறிப்பிடுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: இவருக்கு மாயையின் போதை உள்ளது. எவ்வாறாயினும், மாயையை இட்டு எந்தப் போதையும் இருப்பதில்லை. அங்கே அவர்கள் இராவணனுக்கு ஒரு கொடும்பாவியை செய்து எரிப்பதில்லை. ஓர் எதிரிக்கே கொடும்பாவி எரிக்கப்படுகின்றது. அரைக் கல்பத்தின் பின்னரே இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகுகின்றது. சரீரத்தின் அகங்காரம் இருக்கும்போது, ஏனைய விகாரங்கள் அனைத்தும் பின்தொடர்கின்றன. தேவர்கள் விகாரப் பாதையில் வீழ்ந்தார்கள், அதாவது, அவர்கள் பாவப்பாதையில் சென்றார்கள் என்று சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாயையினால் ஆதிக்கம் செலுத்தப்படும்போது, அவர்கள் அடிமைகள் ஆகுகின்றார்கள். அதனால் அவர்கள் தொடர்ந்தும் பிறரது வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள். ஏனையவரின் வழிகாட்டல்கள் என்றால் மாயையின் வழிகாட்டல்கள் ஆகும். ஸ்ரீமத் என்றால் தந்தையின் மேன்மையான வழிகாட்டல்கள் என்று அர்த்தமாகும். ஏனையவை பிறரின் வழிகாட்டல்களான இராவணனின் வழிகாட்டல்கள் ஆகும். இதனாலேயே தந்தை கூறியுள்ளார்: அசுர சமுதாயத்தினர் இராவணனின் பிடியில் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். சத்தியயுகத்தின் கால எல்லை நூறாயிரம் ஆண்டுகள் என்று மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் மிகச்சரியான கால எல்லையான 5000 ஆண்டுகளைக் காட்டுகின்றீர்கள். இற்றைக்கு 2000 ஆண்டுகளின் முன்னர் கிறிஸ்து வந்தார். புத்தரின் வருகையின் பின்னர் 2250 வருடங்களும் இஸ்லாமியரின் வருகையின் பின்னர் 2500 ஆண்டுகளும் ஆகியுள்ளன. அவர்கள் அனைவருமே இறுதி அரைக் கல்பத்திலேயே வந்தனர். அதன் முன்னர் தேவர்களின் ஆட்சியே நிலவியது. ஆகையால், தேவர்கள் நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று எவ்வாறு கூற முடியும்? அந்தளவிற்கு மனிதர்களின் எண்ணிக்கை இருந்திருந்தால், இப்பொழுது இன்னமும் எத்தனையோ மனிதர்கள் இருந்திருப்பார்கள்! எவ்வாறாயினும் மனிதர்களின் எண்ணிக்கை அந்தளவிற்கு இல்லை. 5000 வருடங்களில் பில்லியன் அளவு எண்ணிக்கையில் மக்கள் உள்ளனர். கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளின் முன்னர் ஆதிசனாதன தேவிதேவியரின் தர்மம் இருந்தது என்று கூறப்படுகின்றது. 5000 வருடங்கள் முடிவடைய உள்ளன. இந்த நாடகமும் முடிவடைய உள்ளது. எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. எவருமே நான் எவ்வாறானாவர் என்றோ, நான் என்ன செய்கின்றேன் என்றோ அல்லது உலகச் சக்கரத்தைப் பற்றியோ அறியாமல் இருக்கின்றார்கள். தந்தை மாத்திரமே இது கீதையின் அத்தியாயம் என்று விளங்கப்படுத்துகின்றார். தந்தை வந்து உங்களுக்கு இலகு இராஜயோகம் கற்பித்தார். இது மிகவும் இலகுவானது என்று தந்தை, வயோதிபத் தாய்மாருக்கும் விளங்கப்படுத்துகின்றார். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்தால் போதும்! ஒரு குழந்தை பிறந்தவுடன், ஒரு வாரிசு பிறந்து விட்டது என்பதே அதன் அர்த்தம். நீங்கள் பாபாவின் வாரிசுகள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் தந்தையை மீண்டும் 5000 வருடங்களின் பின்னர் சந்திக்க வருகின்றீர்கள். இவை மிகவும் மறைமுகமான விடயங்கள் ஆகும். பாபா உங்களிடம் வினவுகின்றார்: நாங்கள் முன்னர் சந்தித்திருக்கின்றோமா? ‘ஆம், பாபா’ என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆத்மாவான நீங்கள் வாயினால் கூறுகின்றீர்கள்: 5000 வருடங்களின் முன்னர் நான் உங்களைச் சந்தித்துள்ளேன். நீங்கள் இச்சரீரத்தின் மூலம் எங்களுக்கு இக்கற்பித்தல்களைக் கொடுப்பதற்காக வந்தீர்கள். தந்தையிடம் இருந்து தமது ஆஸ்தியைப் பெறுவதற்காகத் தாம் இங்கு அமர்ந்திருக்கின்றோம் என்பதை மிகவும் உறுதியான குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். நாங்கள் இப்பொழுது பிரம்மாவின் மூலமாக எல்லையற்ற தந்தைக்கு உரியவராக இருக்கின்றோம். தந்தை வினவுகின்றார்: உங்களுக்கு என்னைத் தெரிகின்றதா? நான் உங்கள் தந்தை ஆவேன். நீங்கள் கூறுகின்றீர்கள்: ஆம் பாபா. பரமாத்மா பரமதந்தையாகிய நீங்களே ஆத்மாக்களான எங்கள் தந்தை ஆவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்பி, உங்களுக்கு ஆஸ்தியையும் வழங்கினேன். மாயை அதனை உங்களிடம் இருந்து அபகரித்து விட்டதால், நான் மீண்டும் அதனை உங்களுக்குக் கொடுப்பதற்காக வந்துள்ளேன். மாயை அதனை உங்களிடம் இருந்து அபகரிக்கின்றாள், தந்தை அதனை நீங்கள் பெறுவதற்கு உங்களுக்கு உதவுகின்றார். இந்த நாடகம் பல தடவைகள் நடிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்தும் நடிக்கப்படும். இதற்கு ஒரு முடிவு இல்லை. ஆத்மாக்கள் தொடர்ந்தும் பாபாவிற்கு உரியவர் ஆகுவார்கள். சிலர் உண்மையான குழந்தைகளும் சிலர் மாற்றாந்தாய்க் குழந்தைகளும் ஆவார்கள். பலவீனமான குழந்தைகளும் உறுதியான குழந்தைகளும் உள்ளனர். மாயை சிலவேளைகளில் உறுதியான குழந்தைகளையும் வெற்றி கொள்கின்றாள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நாங்கள் வாழும்வரை, உங்களிடம் இருந்து எங்கள் ஆஸ்தியை நாங்கள் தொடர்ந்தும் பெறுவோம். உங்கள் தலையின் மீது பெரும் பாவச்சுமை உள்ளது. நீங்கள் நினைவில் அதிகளவு நிலைத்திருக்கும் அளவிற்கு நீங்கள் யோக அக்கினியின் மூலம் பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். அக்கினி அனைத்தையும் தூய்மை ஆக்கும். உங்கள் அக்கினி, யோக அக்கினியாகும். இது எல்லையற்ற யாகமாகும். எல்லையற்ற வர்த்தக வியாபாரி எல்லையற்ற யாகத்தை வளர்த்துள்ளார். வேறு எந்தவொரு யாகமும் இத்தனை வருடங்கள் நீடித்தது கிடையாது. ஏழு, எட்டு நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு நீடிக்கும் யாகங்களை அவர்கள் வளர்க்கின்றார்கள். உங்களது இந்த யாகம் பல ஆண்டுகளாக நீடிக்கின்றது. தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: என்னை மறக்காதீர்கள்! என்னை நினைவு செய்யுங்கள், பிறவிபிறவியாக நீங்கள் சேமித்த பாவச்சுமை உங்களை விட்டு அகன்றுவிடும். கடவுள் பேசுகின்றார்: தந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! அவர் நிச்சயமாக வந்துள்ளதாலேயே அவர் இதனைக் கூறுகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இந்த நேரத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் தூய்மை அற்றவராக இருக்கின்றீர்கள். நீங்கள் யோகத்தின் மூலம் தொடர்ந்தும் தூய்மை ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் சத்தியம் செய்தீர்கள்: நீங்கள் வரும்போது, நான் ஏனைய அனைவரிடம் இருந்தும் விலகி, உங்கள் ஒருவரிடம் மாத்திரம் என்னை இணைத்துக் கொள்வேன். என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன். ஒரு மனைவி தன்னைக் கணவனிடம் அர்ப்பணிக்கின்றாள், ஒரு கணவன் தன்னை மனைவியிடம் அர்ப்பணிக்கின்றார். இங்கே தன்னைத் தந்தையிடம் அர்ப்பணிக்கும் விடயமே உள்ளது. ஒரு தம்பதியினர் திருமணம் செய்யும்போது, தம்மை ஒருவரிடம் ஒருவர் அர்ப்பணிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எந்த மனிதரிடமும் இப்பொழுது உங்களை அர்ப்பணிக்கக் கூடாது. நீங்கள் சத்தியம் செய்தீர்கள்: என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன். உங்களை என்னிடம் அர்ப்பணிக்கும்போது, உங்களை நான் 21 பிறவிகளுக்குச் சந்தோஷமாக வைத்திருப்பேன். இது மிகவும் சிறந்த ஆஸ்தியாகும்! ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் மாத்திரமே நீங்கள் மேன்மை அடைவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இலக்ஷ்மி நாராயணனின் படத்தையும் உங்கள் வீட்டில் வைத்திருங்கள். நாங்கள் இந்த ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றோம். அவர் பரந்தாமத்தில் இருந்து வருகின்றார். எவ்வாறாயினும், கழுகான மாயை எதிலும் குறைந்தவள் அல்ல. இது எவரையும் குறிப்பிட்டுக் கூறப்படவில்லை, அனைத்தும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிலர் தாம் தந்தையிடம் இருந்து தமது ஆஸ்தியைப் பெறுகின்றோம் என்பதை முற்றிலும் மறந்து விடுகின்றார்கள். அவர்கள் இங்கே அமர்ந்திருக்கும்போது, அந்த போதை உள்ளது. இங்கிருந்து அவர்கள் சென்ற உடனேயே அவர்கள் மறந்து விடுகின்றார்கள். அதன் பின்னர் அடுத்த நாள் காலை அவர்கள் புத்துணர்ச்சி பெற்ற பொழுதும் பின்னர் நாள் முழுவதும் மீண்டும் மறந்து விடுகின்றார்கள். ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இங்கிருந்த பின்னர், மிகவும் நன்றாக சேவை செய்த சிலர் இப்பொழுது இன்று இங்கில்லை. அவர்கள் எவ்வகையிலோ கீழ்ப்படிவற்றவர்களாக இருந்ததாலேயே மாயையினால் மிகவும் பலமாக அறையப்பட்டதால் வெளியேற வேண்டியேற்பட்டது. பாபா கூறுகின்றார்: ஏறுகின்றவர்கள், அன்பின் இனிமையைச் சுவைக்கிறார்கள், விழுபவர்கள் முற்றாக நொறுங்குகின்றார்கள். அவர்கள் எவ்வாறு முற்றாக நொறுங்குகின்றார்கள் என்பதை உங்களால் பார்க்க முடிகின்றது. அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள், ஆனால் அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே இருக்கும். அங்கே அனைவருமே சந்தோஷமாக இருந்தபோதிலும். அந்தஸ்தில் வேறுபாடு இருக்கும். பாடசாலையிலும் அனைவரும் ஓர் அந்தஸ்தை அடையவே முயற்சி செய்கின்றார்கள். ஒரு பிரஜையாக இருப்பதிலோ, உங்கள் பாக்கியத்தில் எது உள்ளதோ அது போதும் என்றோ சந்தோஷம் அடையாதீர்கள். இல்லை. அது தமோபிரதான் முயற்சி எனப்படுகிறது. இது ஒரு குதிரைப் பந்தயமாகும். அனைவராலும் முதல் இலக்கத்தைப் பெற முடியாது. இது ஒரு மனித ஓட்டப் பந்தயமாகும். அவரது கழுத்து மாலையில் ஒருவராக வேண்டும் என நீங்கள் விரும்பினால் நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். அனைத்தும் நினைவிலேயே தங்கி உள்ளது. மாயை உங்களை முற்றாக பந்தயத்தில் இருந்து வெளியேற்றும் வகையிலே தடைகளை ஏற்படுத்துவாள். உங்களுடையது மனித ஓட்டப் பந்தயமாகும். ஆத்மா கூறுகின்றார்: நான் மிகவும் சந்தோஷத்தை இழந்திருந்தேன். நான் மீண்டும் மீண்டும் சரீரங்களை எடுத்ததால், நான் மிகவும் விரக்தி அடைந்துள்ளேன். ஆத்மா கூறுகின்றார்: இப்பொழுது நான் பாபாவிடம் செல்ல விரும்புகின்றேன். பாபா உங்களுக்குப் பல வழிகளைக் காட்டியுள்ளார். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்கள் நினைவில் மாத்திரமே நிலைத்திருப்பேன். எந்தளவிற்கு உங்களால் அதற்கு நேரம் ஒதுக்க முடியுமோ அந்தளவிற்கு நல்லது. உங்களது அரசாங்க வேலைக்காக நீங்கள் எட்டு மணித்தியாலங்களை ஒதுக்குவதைப் போன்று நினைவில் நிலைத்திருப்பதற்கு குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலங்களை ஒதுக்குங்கள். உலகத்தைச் சுவர்க்கம் ஆக்குவது மிகவும் மகத்துவமான சேவையாகும். தந்தையையும் சந்தோஷதாமத்தையும் நினைவு செய்யுங்கள். அவ்வளவே. நீங்கள் எட்டு மணித்தியாலங்களுக்கு இந்தச் சேவையை செய்தால், நீங்கள் முழுமையாக ஆஸ்தியை பெறுவீர்கள். இவ்வாறாக நினைவில் நிலைத்திருக்கும்போது, உங்கள் பாவங்கள் அழியும். இந்தச் சேவைக்காக எட்டு மணித்தியாலங்களை ஒதுக்கினால், நீங்கள் மற்றைய 16 மணித்தியாலங்களும் ஓய்வாக இருப்பீர்கள். இயன்றளவு மீண்டும் மீண்டும் பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் எங்கு அமர்ந்திருந்தும் பாபாவை நினைவுசெய்ய முடியும். அதிகாலையே மிகவும் சிறந்த நேரமாகும். சிந்தியில் ஒரு வாசகம் உள்ளது: நேரத்திற்கு உறங்கச் செல், அதிகாலை எழுந்திடு! இதனைச் செய்பவர்கள் தெய்வீகக்குணங்கள் உடையவர்கள். இந்தப் புகழ் இந்நேரத்திற்கு உரியதாகும். தந்தை கூறுகின்றார்: இரவில் தாமதிக்காது உறங்கச் சென்று, அதிகாலையில் எழுந்திடுங்கள். இந்த ஞானம் அற்றவர்கள் எட்டு மணித்தியாலங்கள் உறங்குகின்றார்கள். ஆனால் நீங்கள் அதில் அரைவாசி நேரத்தையே உறக்கத்திற்காக ஒதுக்க வேண்டும். நான்கு அல்லது ஐந்து மணித்தியால உறக்கம் போதுமானது. நீங்கள் கர்மயோகிகள் ஆவீர்கள். இரவு 10.00 மணிக்கு உறங்கச் செல்லுங்கள். அதிகாலை 2.00 மணிக்கு எழுந்திடுங்கள். சிவபாபாவை நினைவு செய்வதனால், நீங்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். நீங்கள் ஆரோக்கியம், செல்வம் இரண்டையும் பெறுகின்றீர்கள். நல்லது அதிகாலை 2.00 மணிக்கு விழித்தெழுவது சாத்தியம் இல்லையெனில் அதிகாலை 3.00 அல்லது 4.00 மணிக்காயினும் எழுந்திடுங்கள். அது முதற்தரமான நேரமாகும். அந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். அனைவரும் சரீரமற்ற ஸ்திதியில் இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் முற்றிலும், மயான அமைதி நிலவும். அமிர்தவேளையில் நினைவு செய்வது சிறந்த பலனைத் தரும். பொதுவாக, பாபா இரவிலும் எழுந்தே இருப்பார். சூட்சுமச் சேவை செய்யும் போது எக்களைப்பும் அனுபவம் செய்யப்படுவதில்லை. வருமானம் ஈட்டப்படும்போது சந்தோஷம் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து உங்களது அழியாத வருமானத்தைத் தொடர்ந்தும் ஈட்ட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. 21 பிறவிகளுக்குச் சதா சந்தோஷமாக இருப்பதற்கு உங்களை முற்றாகத் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மேன்மையானவர் ஆகுங்கள். சுயத்தினது அல்லது பிறரது வழிகாட்டல்களைப் பின்பற்றுவதை விட்டுவிடுங்கள். கட்டளைகளை மீறாதீர்கள்!

2. அதிகாலையில் எழுந்து, நினைவில் நிலைத்திருந்து ஒரு வருமானத்தை ஈட்டுங்கள். குறைந்தபட்சம் 8 மணித்தியாலமாயினும் உலகைச் சுவர்க்கம் ஆக்கும் சேவையில் நிச்சயமாக ஈடுபடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றை வென்றவராகி, உங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும் அத்துடன் உங்களின் நேரம் மற்றும் எண்ணங்களையும் மனமார ஒப்படைப்பீர்களாக.

எவ்வாறு அனைத்தும் குழந்தைகளான உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே, நீங்கள் தந்தையை உங்களின் வாரிசு ஆக்கி, அவரிடம் அனைத்தையும் ஒப்படைக்கும்போது, நீங்கள் அக சக்தியைப் பெறுவீர்கள். இந்த அகசக்தியால், உங்களின் பற்று இயல்பாகவே முடிவடைந்து விடும். எவ்வாறு சாகார் பாபா தன்னையே முழுமையாக ஒப்படைத்தாரோ, அவ்வாறே, நீங்கள் அனைவரும் உங்களின் விழிப்புணர்வு, நேரம், எண்ணங்கள் என்ற பொக்கிஷங்களை ஒப்படைக்க வேண்டும். அதாவது, உங்களிடம் இருக்கும் அனைத்தையும் ஸ்ரீமத்திற்கேற்ப நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்போது நீங்கள் பற்றை வென்றவராகவும் பந்தனத்தில் இருந்து விடுபட்டவராகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
ஒருவருக்கொருவர் அன்பானவராக இருப்பதற்கு, இலகுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா மலர்ச்சிநிறைந்தவர் ஆகுவதற்கு, இலகுவான சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

பாப்தாதாவின் ஆசீர்வாதம்: சதா சந்தோஷமாக இருந்து, உங்களின் சந்தோஷப் பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் சந்தோஷ அலைகளைப் பரப்புங்கள். உங்களின் முகம் எப்போதும் சந்தோஷப் புன்னகையின் பிரகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த முறையில் மலர்ச்சிநிறைந்தவர்கள் ஆகுங்கள். இதற்கு, நிச்சயமாக இனிமையும் திருப்தியும் உங்களின் வார்த்தைகளில் எளிமையின் புதுமையும் இருக்க வேண்டும். பிராமண ஆத்மாக்களின் வார்த்தைகள் சாதாரணமான வார்த்தைகளாக இருக்கக்கூடாது. உங்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை இருக்க வேண்டும், அதில் இருந்து அனைவரும் ஏதாவது பேறுகளை அனுபவம் செய்ய வேண்டும்.