30.08.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 13.04.2011 Om Shanti Madhuban
உங்களின் யோக சக்தியின் எரிமலை அக்கினியை சம்ஸ்காரங்களின் தகனக் கிரியைக்காகப் பயன்படுத்துங்கள். உங்களின் நடத்தை, முகம், பார்வை, மனோபாவம், எண்ணங்களின் ஊடாகத் தந்தையை வெளிப்படுத்துங்கள்.
இன்று, குழந்தைகளின் அன்பானது அன்புக்கடலை அவர்களிடம் வரச் செய்துள்ளது. குழந்தைகளான உங்களுக்கு உங்களின் இதயங்களில் தந்தைக்கான அன்பைக் கொண்டிருப்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இந்த அன்பை எப்போதும் கொண்டிருப்பதன் அடிப்படையில், நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், அன்பெனும் பாடத்தில் பாப்தாதா குழந்தைகளான உங்களை முன்னணியிலேயே வைத்துள்ளார். இன்று, குழந்தைகளான நீங்கள் அவரை உங்களின் அன்பெனும் இழையால் கட்டி, குறிப்பாக அன்புக்கடலை மதுவனத்திற்கு அழைத்துள்ளீர்கள். இத்தகைய அன்பு எப்போதும் வெளிப்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகளான உங்களின் இதயபூர்வமான அன்பு எப்போதும் தொடர்ந்து இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரான தந்தையை வந்தடைகிறது. எனினும் அது நிச்சயமாக வரிசைக்கிரமமாகவே உள்ளது. இந்த அன்பின் அடையாளம், இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர் சதா ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்க வேண்டும். எந்தவொரு குழந்தையும் தனித்து இருக்கக்கூடாது, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். நீங்கள் சதா ஒன்றிணைந்து இருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் தனியாக இருப்பவர் ஆகுகிறீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் தனியாக இருக்கும்போது, மாயை தனது வாய்ப்பை எடுத்துக் கொள்கிறாள். இதனாலேயே, பாப்தாதா கூறுகிறார்: இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர், சதா உங்களின் இதயத்தில் நிலைபெற்று இருக்க வேண்டும். இதுவே உண்மையான, சதா அன்பு எனப்படுகிறது. நீங்கள் சிலவேளைகளில் தனித்து இருக்கிறீர்களா அல்லது எப்போதும் ஒன்றிணைந்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு குழந்தையும் என்ன சத்தியத்தைச் செய்துள்ளார்? மதுவனவாசிகளான நீங்கள் குறிப்பாக ஒன்றாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒன்றாக வீடு திரும்பிச் செல்வீர்கள், ஒன்றாக இராச்சியத்தை ஆட்சி செய்ய வருவீர்கள் என்ற போதையைக் கொண்டிருக்கிறீர்கள். அதேபோல், இங்கே அமர்ந்திருக்கும் மிக, மிக இனிமையான கருவிக் குழந்தைகள் தமது இதயபூர்வமாக தந்தைக்குச் சத்தியம் செய்துள்ளீர்கள் - பெரும்பாலானோருக்கு இது நடைமுறை ரூபமாகவும் உள்ளது – அதாவது, நீங்கள் சதா ஒன்றிணைந்த ரூபத்தில் இருப்பீர்கள். எவ்வாறாயினும், அது வரிசைக்கிரமமானது. ஒவ்வொரு மகாராத்தி கருவிக் குழந்தையும் தமது முகங்களால் தந்தையின் காட்சியை அருள வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். தந்தையின் முகம், ஒளியாலும் அவரின் அன்பான, தனித்துவமான நடத்தையாலும் நிரம்பி இருக்கும் காட்சிகள் தொடர்ந்து அவர்களின் முகங்கள் மற்றும் நடத்தைகளின் மூலம் அருளப்பட வேண்டும்.
நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள். இறுதிவரை, எத்தனை தடவைகள் ஒவ்வொரு முரளியிலும் ஸ்ரீமத்திற்கேற்ப தந்தை பிரம்மா, ‘பாபா, பாபா’ எனக் கூறினார்? அதைக் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒவ்வொரு முரளியிலும் அவர் பல தடவைகள் ‘பாபா, பாபா’ எனக் கூறுகிறார். அத்துடன் அவரின் முகம், ரூபம், வார்த்தைகள், குறிப்பாக கண்களாலும் நெற்றியாலும் அவர் தந்தையை வெளிப்படுத்துகிறார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் இதை அனுபவம் செய்துள்ளீர்கள். தந்தை பிரம்மாவைப் பார்க்கும்போது நீங்கள் எதை அனுபவம் செய்கிறீர்கள்? பாப்தாதா. எவரும் தந்தை என்ற வார்த்தையை மட்டும் சொல்வதில்லை. ஆனால் ஒவ்வொருவரின் உதடுகளில் இருந்தும் பாப்தாதா என்ற வார்த்தை வெளிப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் ஒன்றாகவே அனுபவம் செய்யப்படுகிறார்கள். அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள். உங்களைப் பார்க்கின்ற எவரும் இயல்பாகவே உங்களின் முகம், வார்த்தைகள், நடத்தை மற்றும் பார்வையினூடாகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். உங்களில் பெரும்பாலானோர் உங்களின் முகம், வார்த்தைகள் மற்றும் செயல்களால் தந்தையை வெளிப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருப்பதை பாப்தாதா இப்போது கண்டார். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை பிரம்மா சதா தனது நடத்தை, முகம், பார்வை, மனோபாவம் மற்றும் எண்ணங்களினூடாகத் தந்தையை வெளிப்படுத்தினார். நீங்கள் அனைவரும் அதை அனுபவம் செய்தீர்கள். தந்தை பிரம்மா மட்டும் உங்களைப் பார்த்தார் என்பதல்ல. பாப்தாதா உங்களைப் பார்த்தார். என்ன காரணம்? தந்தை பிரம்மா சதா தனது கண்களிலும் தனது நெற்றியிலும் தந்தையை அமிழ்த்தி வைத்துள்ளார். உங்களில் கலந்துள்ள பாப்தாதா உங்களின் கண்கள், வாய், நடத்தையின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும். உங்களுக்குக் கற்பிக்கும் ஒரேயொருவர் உங்களின் வார்த்தைகளின் மூலம் அனுபவம் செய்யப்பட வேண்டும்: அவன் என்ன கூறுகின்றானோ, அவள் என்ன கூறுகின்றாளோ, அவர்களுக்குக் கற்பித்து சர்வசக்திவான் தந்தையின் சக்தியால் அவர்களை நிரப்பும் ஒரேயொருவர், கடவுளே ஆவார். இவர்கள் கடவுளின் குழந்தைகள். இவர்கள் கடவுளின் மாணவர்கள். அவர்கள் கடவுளைப் பின்பற்றுகின்ற கடவுளின் சீடர்கள் அல்ல. ஆனால், ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன்களை உருவாக்குபவர்கள். இப்போது, காலமும் உங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. சூழ்நிலைகள் மாறுகின்றன. இந்தச் சூழ்நிலைகள் அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கடவுளை நினைவூட்டுகின்றன. எனவே, ஒன்று காலம். மற்றையது, இரண்டு கருவிக் குழுக்களினதும் சிறப்பியல்பு. இந்தச் சந்திப்பிற்காக வந்திருக்கும் இந்தக் குழு, தயார் நிலையில் உள்ள குழுவாகும்.
வந்திருக்கும் குழந்தைகளான உங்களில் பெரும்பாலானோருக்கு உங்களின் இதயபூர்வமாக ஊக்கமும் உற்சாகமும் இருப்பதை பாப்தாதா பார்த்தார். நாங்கள் நிச்சயமாகத் தந்தையை வெளிப்படுத்தப் போகிறோம். உங்களின் முகத்தால், உங்களின் முகத்தின் நடத்தையால், வார்த்தைகளால் எந்தவோர் ஆத்மாவுடனும் உள்ள தொடர்பாலும் உறவுமுறையாலும் இதைச் செய்வீர்கள். தற்காலத்தில், உங்களின் மனங்களின் நன்மை செய்யும் உணர்வுகளால் ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் ஆத்மாக்கள் உங்களுடன் தொடர்பில் வருகிறார்கள், உங்களுடன் தொடர்பில் வர விரும்புகிறார்கள். பாப்தாதா உங்களுக்கு வழங்கியுள்ள உங்களின் மனங்களால் சேவை செய்யும் பணியில், யோகியுக்தாக இருந்தவண்ணம் உங்களின் மனங்களால் சேவை செய்வதை நீங்கள் பயிற்சி செய்தால், நீங்கள் நிச்சயமாக இந்த அதிர்வலைகள் யாராவது ஒருவரைச் சென்றடையச் செய்வீர்கள். எங்கிருந்தோ தமக்கு ஒளிக்கதிர்களும் சந்தோஷம் மற்றும் அமைதியின் அலைகளும் வருவதை அவர்கள் உணர்வார்கள். ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெளிவாக இருக்காது. இந்தக் கதிர்களும் அலைகளும் வருகின்றன, ஆனால் அவை பாரதத்தில் உள்ள பாப்தாதாவின் குழந்தைகளிடம் இருந்து வருகிறது என்பது அவர்களுக்குத் தெளிவாக இருக்காது. இல்லாவிட்டால், அவர்கள் அனைவரும் இங்கே ஓடோடி வருவார்கள். இப்போது அந்த ஆத்மாக்களில் மேலும் சக்திவாய்ந்த கதிர்களைப் பரப்புங்கள், அதன் மூலம் அது அவர்களுக்குத் தெளிவாகும். அவை அவர்களைச் சென்று அடைகின்றன. அது ஆரம்பித்துள்ளது. சில கதிர்கள் அவர்களைச் சிறிதளவு சென்றடைய ஆரம்பித்துள்ளது. இப்போது இதை மேலும் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். இதில் தடையை உருவாக்கும் விடயம், அவர்களுக்குத் தெளிவாகச் சென்று அடையாததன் காரணம், நீங்கள் யோகம் செய்தாலும் நீங்கள் அமிர்த வேளையில் அமர்ந்திருந்தாலும் எரிமலை யோகம் குறைவாக இருப்பதே ஆகும். இந்தக் காரணத்தால், நீங்கள் இந்தக் கதிர்களை அனுப்புகின்ற பக்தர்களும் ஆத்மாக்களும் அவ்வளவு தெளிவாக அவற்றைப் பெறுவதில்லை. இரண்டாவதாக, உங்களிடம் எரிமலை யோக அக்கினியின் சக்தி இல்லாததால் அல்லது குறைவாக இருப்பதனால் இடையில் தடையை உருவாக்கும் சம்ஸ்காரங்களை முடிக்க முடிவதில்லை. சம்ஸ்காரங்களை மாற்ற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இந்த சம்ஸ்காரங்கள் இறக்கின்றன. ஆனால் அவை எரிக்கப்படுவதில்லை. இராவணனைக் கொல்வது மட்டுமன்றி, கொன்றபின்னர் அவனை எரிக்கிறார்கள். ஏனென்றால், அவனைக் கொன்றாலும் அதன்பின்னர் அவனுடைய உடல் எஞ்சியுள்ளது. அதேபோல், நீங்கள் அமிர்தவேளையில் நினைவிற்காக அமர்கின்றீர்கள். ஆனால், அக்கினி ரூபத்தில் யோகம், எரிமலை நெருப்பின் வடிவம் குறைவாகவே உள்ளது. நீங்கள் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் இதயபூர்வமாக உரையாடுகிறீர்கள். அத்துடன் உங்களின் வாழ்க்கையின் விடயங்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். நீங்கள் சதா யோக அக்கினியைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக சம்ஸ்காரங்களைக் கொல்கிறீர்கள், அந்த சம்ஸ்காரங்கள் இறக்கின்றன. ஆனால் அவ்வப்போது மீண்டும் உயிர்பெறுகின்றன. அவை எரிக்கப்படும்போது, அவற்றின் பெயர், உருவம் முடிந்துவிடுகின்றன. இப்போது, உங்களின் இதயபூர்வமான உரையாடல்களில், நீங்கள் அடைய விரும்பிய அளவை அடையவில்லை என்றே குழந்தைகளான நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள்.
பாப்தாதா இன்று சமிக்ஞை கொடுக்கிறார். ஏனென்றால், விசேடமான மகாவீர் குழந்தைகள் இன்று சந்திப்பதற்காக வந்துள்ளார்கள். அத்துடன் மதுவனவாசிகளும் இருக்கிறார்கள். மதுவனத்தில் என்ன உள்ளது? மதுவனம் என்றால் பாபா என்று அர்த்தம். நீங்கள் மதுவனம் என்று சொன்னதும் அனைவரும் யாரை நினைவு செய்கிறார்கள்? மதுவனத்தின் பாபாவை. எனவே, மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் இதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். மதுவனம் என்று சொன்னதும் நீங்கள் மதுவனத்தைச் சேர்ந்த பாபாவை நினைவு செய்கிறீர்களா? மதுவனத்தில் வாழ்பவர்களை அனைவரும் என்ன பார்வையுடன் பார்க்கிறார்கள்? மதுவனத்தைச் சேர்ந்தவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் இருக்கிறார்கள். அடியிலோ (சாந்திவான்) அல்லது உச்சியிலோ (பாண்டவபவன், கியான் சரோவர் போன்றவை) இன்றைய ஒன்றுகூடலில் அதிகபட்ச எண்ணிக்கையில் இருப்பவர்கள் மதுவனவாசிகளே ஆகும். மதுவனவாசிகள் நிச்சயமாக ஒவ்வொரு மதுவனவாசியின் முகத்திலும் நடத்தையிலும் பாபா, பாபா மட்டுமே தென்படும் அற்புதத்தைக் காட்டுவார்கள் என்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் தந்தை புலப்படுவார். ஏனென்றால், மதுவனத்தில் யக்யத்திற்குச் சேவை செய்வதன் மூலம் அதிகளவு சக்தியும் (பல்) பலனும் (ஃபல்) பெறப்படுகிறது. அதை எடுத்துக் கொள்ள விரும்புவர்கள் எடுத்துக் கொள்ள முடியும், நீங்கள் நிச்சயமாக அதைப் பெறுகிறீர்கள். உங்களின் சம்ஸ்காரங்களைப் பார்ப்பதற்கும் அவற்றை ஒத்திசையச் செய்வதிலும் நீங்கள் பெரும், நிலையான கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியம். மதுவனத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் மீதும் பாப்தாதாவிற்கு விசேடமான அன்பு உள்ளது. ஏன்? ஏனென்றால், தந்தை அவரே உருவாக்கிய யக்யத்திற்குச் சேவை செய்வதற்காக நீங்கள் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள். முதலில், மதுவனவாசிகள் தாம் செய்த முயற்சிகளின் பலனைப் பெறுகிறார்கள். இரண்டாவதாக, மதுவனத்திற்கு வருகின்ற பிராமண ஆத்மாக்களுக்கு அல்லது புதிய ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதும் யக்ய சேவையே ஆகும். அது சாதாரணமான சேவை அல்ல. யக்ய சேவை செய்வற்காக நீங்கள் மேலதிக புண்ணியத்தைப் பெறுகிறீர்கள். யாராவது மதுவனவாசி பாப்தாதாவிடம் இருந்து பெற்ற ஸ்ரீமத்திற்கேற்ப அமிர்த வேளையில் இருந்து இரவுவரை மிகச்சரியாகச் செயல்பட்டால், அவர் நிச்சயமாக அதன் மூலம் மேலதிக புண்ணியத்தைப் பெறுகிறார். மதுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது தெரியுமோ தெரியாதோ, அல்லது அவர்கள் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வாறாயினும் அவர்கள் நிச்சயமாகத் தமது சேவைக்கான புண்ணியத்தைப் பெறுவார்கள். மதுவனவாசி ஆகுவது என்பது சாதாரணமான விடயம் இல்லை. ஒருவர் என்ன வகையான வேலை செய்தாலும் அவர் சுத்தம் செய்பவராக இருந்தாலும் இத்தகைய சாதாரணமான வேலை, உங்களை அதிகளவு புண்ணியத்தை உருவாக்க அனுமதிக்கிறது. ஏனென்றால், இது தந்தையால் உருவாக்கப்பட்ட யக்யம் ஆகும். இந்த யக்யத்தில் இருந்தே, இந்த மதுவனத்தில் இருந்தே, அனைவரும் இறையன்பைப் பெறுகிறார்கள். இதனாலேயே, தந்தை இந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் செல்வதில்லை. மதுவனமே தந்தையின் வருகின்ற, உங்களைச் சந்திக்கின்ற, அத்துடன் மற்றவர்களை அவரைச் சந்திக்கச் செய்கின்ற பாகத்தைப் பதிவு செய்துள்ளது. மதுவனவாசிகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் புண்ணியக் கணக்கை அறிந்து, அதை இனங்கண்டு, அந்த மகத்தான பேற்றின் சொரூபம் ஆகவேண்டும். என்னதான் நடந்தாலும், அந்தவிடயம் மூத்தவர்களை அடையச் செய்வது உங்களின் கடமை ஆகும். ஏனென்றால், அது அவர்களைச் சென்றடையச் செய்வது என்றால், அதை உங்களின் இதயத்தில் இருந்து நீக்குதல் என்று அர்த்தம். அதன்பின்னர் உங்களின் பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதையிட்டு எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இதனால் பாவத்தைச் சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள். அது பொறுப்பாக இருப்பவர்களின் பாவமே ஆகும். நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். அதைப் பற்றி அவர்களுக்குச் சொல்வது மட்டுமே உங்களின் கடமை. எவ்வாறாயினும், என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை, ஏன் இது நடக்கவில்லை, ஏன் அது நடக்கவில்லை என்று சிந்திப்பது எல்லாம், நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அல்லது, நீங்கள் மேலும் அதிகமான வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்களின் பொறுப்பை நிறைவேற்றினீர்கள், அது அவர்களைச் சென்றடையச் செய்தீர்கள். அது அவர்களைச் சென்றடைய வேண்டும். நீங்கள் அதை வழக்கம், சம்பிரதாயத்திற்கேற்ப அவர்களைச் சென்றடையச் செய்ய வேண்டும். உண்மையில், நீங்கள் மதுவனவாசிகளான பிராமணர்கள் ஆவீர்கள். நீங்கள் மேன்மையானவர்கள், உங்களின் அந்தஸ்தை நீங்கள் அறிவீர்கள், அத்துடன் நீங்கள் செய்யும் பணிகளை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களும் கற்றுக் கொள்ளும் வகையில் நீங்கள் பணிகளைச் செய்கிறீர்கள். மதுவனவாசிகளின் மீது அனைவரும் அதிகளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையின் பலனைக் காட்டுங்கள். மதுவனத்தின் குழந்தைகளுக்கு இடையே, சில குழந்தைகள் ஒழுக்கக் கோட்பாடுகளுடன் தங்களின் முயற்சியைச் செய்கிறார்கள், தந்தையின் மீது அன்பு வைத்திருப்பதுடன் அவருடன் ஒத்துழைக்கிறார்கள் என்பதை பாப்தாதா அறிவார். பாப்தாதாவின் ஆசைகள்: மதுவன வாசிகளுக்காக பாப்தாதா கொண்டிருக்கும் ஆசை என்ன? மதுவனவாசியாகவும் தந்தையின் குழந்தையாகவும் இருக்கும் ஒவ்வொருவரும் அன்பாகவும் யக்யத்தின் மீது ஒத்துழைப்பவராகவும் இருந்து, தந்தையின் அறிமுகத்தைத் தமது நடத்தையால் வழங்க வேண்டும்: மதுவனவாசிகளான நாங்கள் மகத்தான பாக்கியத்தைக் கொண்டிருக்கிறோம்! உங்களின் பாக்கியத்தை வெளிப்படுத்துங்கள், ஏனென்றால், நீங்கள் யக்யத்தின் வாசிகள் ஆவீர்கள். அனைத்திற்கும் முதலில் கடவுள் எதை உருவாக்குகிறார்? அவர் யக்யத்தை உருவாக்கினார், யக்யத்திற்கான இடம், மதுவனமே ஆகும். நீங்கள் மதுவனத்தின் புகழை அறிவீர்கள், அப்படித்தானே? மதுவனத்தின் புகழை அறிந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாப்தாதா இங்கே (தொலைக்காட்சியைப் பார்க்கிறார்) பார்க்கிறார். அச்சா, மிகவும் நல்லது.
கருவிகள் ஆகியுள்ள குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் கவனம் செலுத்துவதுடன், அவர்களைத் திருப்திப்படுத்தி, திருப்தியின் கதிர்கள் உலகைச் சென்றடையச் செய்ய வேண்டும். கருவிகள் ஆகியிருப்பவர்கள் இந்தப் பணியையும் செய்ய வேண்டும். இதற்கான காரணம் என்னவென்றால், கருவிகள் ஆகியிருப்பவர்களுக்கு அவர்களின் சொந்தக் கைகள் உள்ளன. அவர்களின் சம்ஸ்காரங்களை மாற்றச் செய்வதற்கு நீங்கள் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் அவர்களைச் சேவை செய்ய வைக்கிறீர்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு நிலையமே தங்குமிட வசதிகளையும் உணவையும் அளிக்கிறது. எவ்வாறாயினும், இப்போது அவர்கள் தந்தையிடம் இருந்து சக்தியைப் பெற்று, உங்களின் சேவை இடத்திற்கு வருகின்ற எவரும் அந்த சூழலால் முதலில் கவரப்படும் வகையில் அத்தகைய சூழலை உருவாக்குவதற்கும் தேவையான சக்தியால் அவர்களை நிரப்புங்கள். இது ஏனென்றால், தற்காலத்தில், அனைவரும் தாம் வந்தவுடனேயே எதையாவது அனுபவம் செய்யும் வகையில், அதைப் பார்ப்பதன் மூலமே அவர்களுக்கு ஓர் அனுபவம் செய்யும் வகையில் ஏதாவது நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அவர்கள் செவிமடுப்பதை அனுபவம் செய்கிறார்கள், யோகத்தை அனுபவம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் சூழலையும் அனுபவம் செய்ய வேண்டும். கருவிகள் ஆகியிருக்கும் ஆத்மாக்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்: இது உங்களின் விசேட சேவையாகும். நீங்கள் யோகியுக்தாக இருந்து சூழலில் நல்லதொரு ஸ்திதியைப் பேணினால், அது சேவை இடத்தில் இயல்பாகவே ஒரு விளைவை ஏற்படுத்தும். சூழலிலும் அதிர்வலைகளிலும் பாப்தாதாவினதும் மூத்த கருவிகளினதும் ஆதிக்கம் உள்ளது. பாப்தாதாவைச் சுற்றியுள்ள சூழல் மாற்றம் அடைகிறது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் சூழலை உருவாக்க வேண்டும். ஏனென்றால், உங்களின் நிலையங்களின் சூழலை மாற்றினால் மட்டுமே உலகின் சூழல் மாறும். இது உங்களின் சேவை இடங்களில் இருந்தே நடக்கும். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். உங்களுக்கு இந்த இலட்சியம் உள்ளது. ஆனால், இப்போது நீங்கள் இந்த இலட்சியத்தை மேலும் சக்திவாய்ந்ததாக ஆக்க வேண்டும். தற்காலத்தில் மக்களால் உங்களின் முகம் மற்றும் உங்களின் அதிர்வலைகளால் உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் புத்திகள் அசுர புத்திகளின் ஆதிக்கத்திற்கு உட்படுகின்றன. ஆனால் அவர்கள் இந்த ஞானத்தின் ஆதிக்கத்திற்கும் உள்ளாகுகிறார்கள். இதனாலேயே, சந்திப்பிற்கு யார் வந்திருந்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்பானவர்கள். இல்லாவிட்டால், நீங்கள் ஏன் இந்தச் சந்திப்பிற்காக உங்களின் பெயரை வழங்கினீர்கள்? உங்களுக்குத் தைரியம் உள்ளது. இதனாலேயே உங்களின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே, இப்போது உங்களின் கடமையை வெளிப்படுத்துங்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்புகிறீர்கள். அதைச் செய்ய நீங்கள் விரும்புவதை பாப்தாதா அறிவார். ஆனால் இப்போது உங்களின் முயற்சியைச் சிறிது அதிகரியுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?
இப்போது, பாப்தாதா அனைவரின் பெறுபேற்றையும் பார்க்க விரும்புகிறார். மதுவனத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது சந்திப்பிற்காக வந்திருப்பவர்களோ, இருவரிடம் இருந்தும் பாபா பெறுபேறுகளைப் பார்க்க விரும்புகிறார். ஜகதாம்பா செய்த விசேடமான முயற்சியானது: தந்தை எதையாவது கூறினார், ஜகதாம்பா அதைச் செய்தார். உங்களின் தீதியின் வார்த்தைகள்: நாங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும், நாங்கள் வீடு திரும்ப வேண்டும். உங்களின் தாதியின் எண்ணம், நாங்கள் இப்போது கர்மாதீத் அடைய வேண்டும் என்பதே ஆகும். அவர் கர்மாதீத் ஆகுவதில் வகுப்புக்கள் கொடுப்பதுண்டு. அத்துடன் கர்மாதீத் ஆகுவதற்கும் அவர் உற்சாகத்தை வழங்கினார். இருந்து சென்றுவிட்ட உங்களின் பாண்டவர்களுக்கும் இருந்த எண்ணம்: பாண்டவர்களான நாங்கள் அனைவரும் வெற்றியாளர்கள் எனப்படுகிறோம். பாண்டவர்களுக்கு இருந்த, இன்னமும் இருக்கின்ற இலட்சியம் என்னவென்றால், வெற்றியாளர் பாண்டவர்களின் ஞாபகார்த்தம் என்பதே ஆகும். பாண்டவர்களைப் பற்றிப் பேசும்போது நீங்கள் எதை நினைவு செய்கிறீர்கள்? வெற்றி. மறுபுறத்தில் எல்லையற்ற சேனை இருந்தபோதிலும், பாண்டவர்கள் என்ற வார்த்தையை நினைவு செய்யும்போது, நீங்கள் வெற்றியையே நினைவு செய்கிறீர்கள். ஐந்து பாண்டவர்களே இருந்தார்கள், ஆனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். சூழல் எத்தகையதாக இருந்தாலும் எல்லையற்ற இராணுவத்தின் சூழல் இருந்தபோதும் பாண்டவர்களின் தந்தையின் ஸ்ரீமத்தால் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். அந்த வெற்றி புகழப்பட்டது. இப்போது, அதே பாண்டவர்களே வெற்றியாளர்கள் ஆகியுள்ளார்கள், அத்துடன் மற்றவர்களையும் வெற்றி பெறச் செய்கிறார்கள். பாண்டவர்களைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எந்த விடயத்தில் அவர் மகிழ்ச்சி அடைகிறார்? நீங்கள் சக்திகளின் சகபாடிகள் என்பதில். நீங்கள் சக்திகளுக்கு உங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் சகபாடிகளாக இருந்து அவர்களை முன்னேறச் செய்கிறீர்கள். தந்தை எவ்வாறு சக்திகளுக்கு சிவசக்திகளாக இருக்கும் மந்திரத்தை வழங்கி, அவர்களை ஒன்றிணைந்தவர்கள் ஆக்கினாரோ, அவ்வாறே, பாண்டவர்களும் தமது சிறப்பியல்பிற்கேற்ப, சக்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்களை முன்னணியில் வைப்பதில் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் சதா அனைவரிலும் சிறந்தவர்கள் ஆகுவதுடன் முன்னேறிச் செல்கிறார்கள். அச்சா.
இன்று உங்களின் அன்பைப் பார்க்கும்போது, பாப்தாதா உங்கள் அனைவருக்கும் அன்பு மாலையை அணிவிக்கிறார். இப்போது, நீங்கள் அனைவரும்கூட ஒருவருக்கு ஒருவர் அன்பு மற்றும் ஒத்துழைப்பு மாலையை அணிவிக்க வேண்டும். கரங்களின் மாலை அல்ல, ஆனால் உங்களின் இதயபூர்வமான ஒத்துழைப்பு என்ற மாலையை ஒருவருக்கு ஒருவர் அணிவியுங்கள். குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் சட்டைப் பைகளிலும் ஒத்துழைப்பின் குறிப்புகள் இருக்க வேண்டும் என்று பாப்தாதா முன்னரே உங்களுக்குக் கூறியுள்ளார். உங்களின் சட்டைப் பைகள் ஒத்துழைப்பின் குறிப்புகளால் நிரம்பி இருக்க வேண்டும். தவறுகளின் குறிப்புகளால் அல்ல. எங்கேயாவது ஏதாவது ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கும்போது, ஒத்துழைப்பின் குறிப்பை வழங்குங்கள். உங்களின் பொக்கெற்றில் அது இருக்கிறதா? உங்களிடம் ஒத்துழைப்பின் குறிப்புகள் இருக்கிறதா? அவை நிரம்பி உள்ளனவா? உங்களின் சட்டைப் பைகள் நிரம்பியுள்ளன. அவை வெறுமையாக இல்லையல்லவா? நீங்கள் ஒத்துழைப்புக் குறிப்பை வழங்கினீர்கள், அவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதங்களின் மாலையை அணிவிப்பார்கள்.
உங்களின் முன்னோடிக் குழுவின் விசேடமான ஆத்மாக்களும் சூட்சும வாசியான தந்தையும் காத்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் உங்களை வந்தடைகிறதா? அவர்கள் ஒரு திகதியைக் கேட்கிறார்கள். உங்களின் மூத்த தாதிகளும் தாதாக்களும் ஒரு திகதிக்காகக் காத்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு ஒரு திகதியைக் கொடுப்பீர்களா? கொடுப்பீர்களா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, பேசுங்கள்! நீங்கள் ஒரு திகதியைக் கொடுப்பீர்களா? அல்லது, பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்வீர்களா? இதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகின்றீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் எஞ்சியிருக்கும் சம்ஸ்காரங்களைத் தகனம் செய்ய வேண்டும். அப்போது அந்த நேரம் நெருக்கமாக வரும். இது மட்டுமே காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரேயொரு வழிமுறை ஆகும். எஞ்சி இருக்கும் சம்ஸ்காரங்களே தடைகளை உருவாக்குகின்றன. அடுத்த பருவகாலம் ஆரம்பம் ஆகுவதற்கு முன்னர் பல நாட்கள் எஞ்சியுள்ளன. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு சம்ஸ்காரத்தைத் தகனம் செய்யுங்கள். தொடர்ந்து அவற்றை ஒவ்வொன்றாகத் தகனம் செய்யுங்கள். அவ்வளவு நாட்கள் எஞ்சியுள்ளன. பாப்தாதா அடுத்த பருவகாலத்தில் வரும்போது, உங்களின் சம்ஸ்காரங்களை எரித்து விட்டீர்கள் என்று உங்களின் கைகளை உயர்த்தப் போகின்றோம் என்று நினைப்பவர்கள் யார்? இவ்வாறு உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அவை எரிந்து விட்டன என்று கூறுபவர்கள்? நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். முன்கூட்டியே பாப்தாதா உங்களுக்குப் பல, பல, பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் தீவிர முயற்சியாளராகி, சோம்பேறித்தனத்தின் வெவ்வேறு வடிவங்கள் அனைத்தையும் முடித்து, சதா உற்சாகத்தைக் கொண்டிருப்பீர்களாக.தற்சமயம், மாயை சோம்பேறித்தனத்தின் பல்வேறு வடிவங்களால் தாக்குகிறாள். சோம்பேறித்தனம் குறிப்பிட்டதொரு விகாரம் ஆகும். அதை முடிப்பதற்கு, நீங்கள் எப்போதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான உற்சாகம் உங்களுக்குள் இருக்கும்போது, உங்களின் சோம்பேறித்தனம் முடிந்துவிடும். அதனால் நீங்கள் உங்களின் உற்சாகம் குறைவடைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நான் அதைப் பற்றிச் சிந்திப்பேன். ‘நான் அதைச் செய்வேன், நான் நிச்சயமாக அதைச் செய்வேன், அது நடக்கும்.....’ இவை அனைத்தும் சோம்பேறித்தனத்தின் அடையாளங்கள். சோம்பேறித்தனம் நிறைந்த அந்தப் பலவீனமான எண்ணங்கள் அனைத்தையும் முடித்து, சிந்தியுங்கள்: நான் எதைச் செய்ய வேண்டியிருந்தாலும் எவ்வளவைச் செய்ய வேண்டி இருந்தாலும் நான் அதை இப்போதே செய்ய வேண்டும். அப்போதே நீங்கள் தீவிர முயற்சியாளர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
உண்மையான சேவையாளர் ஆத்மாவின் சிந்திப்பதும் செய்வதும் சமமாக இருக்கும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
தூய்மையின் சுவாலை எப்போதும் மேன்மையானதாகவும் எரிந்து கொண்டும் இருக்க வேண்டும். சிறிதளவேனும் குழப்பம் இருக்கக்கூடாது, ஆனால் அசைக்க முடியாதவராக இருங்கள். உங்களின் தூய்மையின் சுவாலை எந்தளவிற்கு அசைக்க முடியாததாக இருக்கிறதோ, அந்தளவிற்கு இலகுவாக அனைவராலும் தந்தையை இனங்காண முடியும். அத்துடன் தூய்மைக்கான வெற்றியும் காணப்படும். சதா தூய்மையின் ஆளுமையை உங்களின் விழிப்புணர்வில் வெளிப்படுத்தி வைத்திருங்கள். உங்களின் விழிப்புணர்வே உங்களின் சக்தியின் அடிப்படை ஆகும். எங்கே சக்தி உள்ளதோ, அங்கே மாயையால் வரமுடியாது. சக்திசாலி ஆத்மாவிடம் மாயை வருவது அசாத்தியம்.