30.11.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.2008 Om Shanti Madhuban
உண்மையான அன்பானவராக இருந்து, தந்தையிடம் உங்களின் சுமைகள் எல்லாவற்றையும் கொடுங்கள். நீங்கள் களிப்பை அனுபவம் செய்வீர்கள். கடின உழைப்பில் இருந்து விடுபடுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது கவலையற்ற சக்கரவர்த்திகளின் ஒன்றுகூடலைப் பார்க்கிறார். சக்கரவர்த்திகளின் இத்தகைய பெரிய ஒன்றுகூடல், சங்கமயுகத்தில் இந்த நேரத்தில் மட்டுமே இடம்பெறும். சுவர்க்கத்தில்கூட, சக்கரவர்த்திகளின் பெரிய ஒன்றுகூடல் இருக்க முடியாது. எவ்வாறாயினும், பாப்தாதா இந்த வேளையில் சக்கரவர்த்திகள் எல்லோருடைய ஒன்றுகூடலைப் பார்த்து இப்போது களிப்படைகிறார். தொலைவில் இருப்பவர்களும் இதயத்திற்கு நெருக்கமாகத் தென்படுகிறார்கள். நீங்கள் எல்லோரும் பாபாவின் கண்களில் அமிழ்ந்து இருக்கிறீர்கள். அந்தக் குழந்தைகள் இதயத்தில் அமிழந்து இருக்கிறார்கள். இது அத்தகையதோர் அழகான ஒன்றுகூடல். இந்த விசேடமான தினத்தில், அவ்யக்த ஸ்திதியின் விழிப்புணர்வின் பிரகாசம், ஒவ்வொருவரின் முகத்திலும் புலப்படுகிறது. தந்தை பிரம்மாவின் நினைவானது எல்லோருடைய இதயத்திலும் அமிழ்ந்துள்ளது. ஆதிதேவர் தந்தை பிரம்மாவும் தந்தை சிவனும் குழந்தைகள் எல்லோரையும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இன்று, அதிகாலை 2 மணியில் இருந்து, பாப்தாதாவின் கழுத்தில் வெவ்வேறு வகையான மாலைகள் காணப்பட்டன. மலர் மாலைகள் பொதுவானவை. வைர அட்டிகைகளும் பெரிய விடயம் இல்லை. ஆனால், விலைமதிப்பற்ற அன்பு முத்துக்களின் அட்டிகைகள் அதிகபட்சம் மேன்மையானவை. ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும், இந்தத் தினத்தில், குறிப்பாக அன்பு வெளிப்பட்டு உள்ளது. பாப்தாதாவின் முன்னால் நான்கு வகையான மாலைகள் வெளிப்பட்டு இருந்தன. முதல் இலக்க மாலை, தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுகின்ற மேன்மையான முயற்சிகளைச் செய்யும் மேன்மையான குழந்தைகளுக்கு உரியது. இத்தகைய குழந்தைகள் தந்தையின் கழுத்தில் மாலைகளின் வடிவில் இருந்தார்கள். முதல் மாலை எல்லாவற்றிலும் மிகச்சிறியது. இரண்டாவது மாலை, நெருக்கமாகவும் சமமானவராகவும் ஆகுவதற்கு அன்புடன் முயற்சி செய்கின்ற குழந்தைகளுடையது. முதல் இலக்கம், மேன்மையான முயற்சியாளர்களுக்கு உரியது. இவர்கள் வெறுமனே முயற்சியாளர்கள். மூன்றாவது மாலை, தந்தையின் சேவை செய்வதில் சகபாடிகளாக இருக்கும் அன்பான குழந்தைகளுக்கு உரியது. இது நீண்டதொரு மாலையாக இருந்தது. எவ்வாறாயினும், அவர்கள் சிலவேளைகளில் தீவிர முயற்சியாளர்கள், சிலவேளைகளில் அதிகளவில் புயல்களுக்கு முகங் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களிடம் சம்பூரணம் ஆகுவதற்கான நல்லதோர் ஆசை உள்ளது. நான்காவது மாலை, முறைப்பாடு செய்பவர்களுக்கானது. அவ்யக்த தேவதைகளின் முகங்களின் ரூபங்களைக் கொண்ட வெவ்வேறு வகையான குழந்தைகளின் மாலைகள் காணப்பட்டன. வெவ்வேறு வகையான மாலைகளைப் பார்த்து, பாப்தாதா களிப்படைந்தார். அதேவேளை, அன்பையும் சகாஷையும் வழங்கினார். இப்போது, நீங்கள் எல்லோரும், ‘நான் யார்?’ என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எவ்வாறாயினும், எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரிலும் உங்களின் இதயங்களில் வெளிப்பட்ட விசேடமான எண்ணம் என்னவென்றால், ‘இப்போது, நான் நிச்சயமாக எதையாவது செய்ய வேண்டும்’ என்பதே ஆகும். உங்களில் பெரும்பாலானோரிடம் எண்ணங்களின் வடிவில் இந்த ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. நடைமுறை வடிவில் நீங்கள் வரிசைக்கிரமம் ஆனவர்கள். ஆனால் அது உங்களின் எண்ணங்களில் உள்ளது.
இன்று, குழந்தைகள் எல்லோரையும் பார்க்கும்போது, இந்த அன்பு தினத்தில், இந்த நினைவு தினத்தில், சக்தி நாளில் பாப்தாதா தனது இதயபூர்வமான விசேடமான ஆசீர்வாதங்களையும் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். இன்று, அன்பிற்கான விசேடமான தினமாக இருப்பதனால், உங்களில் பெரும்பாலானோர் அன்பிலே மூழ்கி இருக்கிறீர்கள். அதேபோல், முயற்சி செய்வதிலும், சதா அன்பிலே மூழ்கி இருங்கள். அன்பிலே திளைத்திருங்கள். ஆகவே, இலகுவான வழிமுறை, அன்பு, இதயபூர்வமான அன்பே ஆகும். இது தந்தையின் அறிமுகத்தின் விழிப்புணர்வுடன் கூடிய அன்பு. இந்த அன்பானது, நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற பேறுகளின் அன்பால் நிரம்பி உள்ளது. அன்பு மிக இலகுவான வழிமுறை. ஏனென்றால், அன்பான ஆத்மாக்கள் கடினமாக உழைப்பதில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். அன்பில் திளைத்திருப்பதனால், அன்பிலே மெய்மறந்திருப்பதனால், நீங்கள் எந்த வகையான கடின உழைப்பையும் களிப்பூட்டும் ரூபத்திலேயே அனுபவம் செய்வீர்கள். அன்பாக இருப்பவர்கள், இயல்பாகவே சரீரங்களின் எந்தவிதமான உணர்விற்கும், சரீர உறவுகளில் கவனம் செலுத்துவதற்கும் சரீர உலகில் கவனம் செலுத்துவதில் இருந்தும் அப்பாற்பட்டு இருப்பார்கள். அவர்கள் இயல்பாகவே அன்பிலே திளைத்திருப்பார்கள். இதயபூர்வமான அன்பு தந்தைக்கு நெருக்கமாக இருக்கும் அனுபவத்தையும் தந்தையின் சகவாசத்தினதும் அவருக்குச் சமமாக இருக்கும் அனுபவத்தையும் அவர்களுக்குக் கொடுக்கும். அன்பான ஆத்மாக்கள் சதா தங்களைத் தந்தையின் ஆசீர்வாதங்களுக்குத் தகுதிவாய்ந்தவர்களாகவே கருதுவார்கள். அன்பானது இலகுவாக அசாத்தியமானதையும் சாத்தியம் ஆக்கும். அவர்கள் எப்போதும் தந்தையின் ஒத்துழைப்புக் கரத்தையும் அன்புக் கரத்தையும் தமது தலைகளின் மீதும் தமது நெற்றிகளின் மீதும் இருப்பதை அனுபவம் செய்வார்கள். அவர்களின் புத்திகளில் நம்பிக்கை உள்ளது. அதனால் அவர்கள் கவலையற்றவர்களாக இருப்பார்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்தில் இருந்த குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் ஆரம்ப காலத்தின் அனுபவம் உள்ளது. சேவை செய்வதற்கு ஆரம்பத்தில் கருவிகளாக இருந்த குழந்தைகளுக்கும் தந்தையைக் கண்டு கொண்ட விழிப்புணர்வுடன் அதிகளவு அன்பின் போதையை ஆரம்பத்தில் அனுபவம் செய்த அனுபவம் உள்ளது. இந்த ஞானத்தை நீங்கள் பின்னரே பெற்றுக் கொண்டீர்கள். ஆனால், முதலாவது போதை, அன்பிலே உங்களையே மறந்து இருந்ததே ஆகும். தந்தையே அன்புக்கடல் ஆவார். ஆகவே, ஆரம்பத்தில் இருந்தே, பெரும்பாலான குழந்தைகள் அன்புக்கடலில் திளைத்திருக்கிறார்கள். முயற்சியின் வேகத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிக நல்ல வேகத்துடன் முயற்சி செய்கிறீர்கள். ஆனால், சில குழந்தைகள் அன்புக்கடலில் மூழ்கி இருக்கிறார்கள். ஆனால் ஏனையோர் அதில் மூழ்கிவிட்டு வெளியே வந்து விடுகிறார்கள். இதனாலேயே, அன்பிலே மூழ்கி இருக்கும் குழந்தைகள், அதற்கு மிகவும் சிறிதளவு முயற்சியே தேவைப்படுவதைக் காண்கிறார்கள். ஆனால், ஏனையோருக்கு அதே அனுபவம் கிடைப்பதில்லை. அவர்கள் சிலவேளைகளில் முயற்சி மற்றும் சிலவேளைகளில் அன்பு என்ற இரண்டு அனுபவங்களையும் பெறுகிறார்கள். எவ்வாறாயினும், அன்பிலே மூழ்கி இருக்கும் குழந்தைகள், தாங்கள் சதா பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பதை அனுபவம் செய்கிறார்கள். தமது இதயங்களில் அன்பைக் கொண்டிருக்கும் குழந்தைகள், கடினமாக உழைப்பதை அன்பாக மாற்றுகிறார்கள். அவர்களின் முன்னால், மலை போன்ற சூழ்நிலைகளும் பஞ்சைப் போலவே அனுபவம் செய்யப்படுகின்றன. ஒரு மலை போன்று அல்ல. கற்களும் நீர் போன்றே அனுபவம் செய்யப்படுகின்றன. இன்று, குறிப்பாக நீங்கள் எல்லோரும் அன்பெனும் சூழலில் இருந்தீர்கள். அதைக் கடின உழைப்பாக அனுபவம் செய்தீர்களா அல்லது அது களிப்பூட்டும் விடயமாக இருந்ததா?
இன்று, நீங்கள் எல்லோரும் அன்பை அனுபவம் செய்தீர்கள், அல்லவா? நீங்கள் அன்பிலே மெய் மறந்திருந்தீர்களா? நீங்கள் எல்லோரும் அன்பிலே மெய்மறந்திருந்தீர்கள். இன்று, நீங்கள் எந்த வடிவிலாவது கடின உழைப்பை அனுபவம் செய்தீர்களா? எந்தவொரு சூழ்நிலையிலும் கடினமாக உழைக்க வேண்டி இருப்பதை அனுபவம் செய்தீர்களா? ‘என்ன? ஏன்?’ அல்லது ‘எப்படி?’ என்ற எண்ணம் ஏதாவது ஏற்பட்டதா? அன்பு உங்களை எல்லாவற்றையும் மறக்கச் செய்து விட்டது. எனவே, பாப்தாதா கூறுகிறார்: உங்களில் எவருமே பாப்தாதாவின் அன்பை மறக்கக்கூடாது. நீங்கள் அன்புக்கடலைக் கண்டுவிட்டீர்கள். நீங்கள் விரும்பிய அளவிற்கு அந்த அலைகளில் உங்களால் பயணிக்க முடியும். ஏதாவதொரு வகையான கடின உழைப்பை நீங்கள் எப்போதெல்லாம் அனுபவம் செய்கிறீர்களோ - ஏனென்றால், மாயை இடையில் உங்களைப் பரீட்சிப்பாள் - அந்த வேளையில், உங்களின் அந்த அன்பின் அனுபவத்தை நினையுங்கள், அந்தக் கடின உழைப்பானது அன்பாக மாறிவிடும். முயற்சி செய்து பாருங்கள். என்ன நடக்கின்றது என்றால், அந்த வேளையில், ‘என்ன? ஏன்?’ என்பதற்குள் அதிகளவில் செல்லும் தவறை நீங்கள் செய்கிறீர்கள். வருகின்ற எதுவும் செல்லவே வேண்டும், ஆனால் அது எப்படிப் போகும்? நீங்கள் அன்பை நினைப்பதன் மூலம் கடின உழைப்பு மறைந்துவிடும். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் வெவ்வேறு வேளைகளில் பாபா, தாதா இருவரின் அன்பையும் அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் அதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் அதை ஏதாவதொரு வேளையில் அனுபவம் செய்துள்ளீர்கள்தானே? ஓகே, அதை நீங்கள் எல்லா வேளையும் அனுபவம் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஏதோவொரு வேளையில் அதை அனுபவம் செய்துள்ளீர்கள். அந்த வேளையில் தந்தையின் அன்பு எத்தகையது என்பதை நினையுங்கள். தந்தையின் அன்பினால் நீங்கள் எதை அனுபவம் செய்தீர்கள்? உங்களின் அன்பின் விழிப்புணர்வுடன் உங்களின் கடின உழைப்பு மாறிவிடும். ஏனென்றால், குழந்தைகளான உங்களில் எவரும் கடின உழைப்பிற்கான ஸ்திதியைக் கொண்டிருப்பதைக் காண பாப்தாதா விரும்பவில்லை. எனது குழந்தைகள், அவர்கள் கடினமாக உழைப்பதா! எனவே, நீங்கள் எப்போது கடின உழைப்பில் இருந்து விடுபடுவீர்கள்? சங்கமயுகத்தில் மட்டுமே உங்களால் கடினமாக உழைப்பதில் இருந்து விடுபட்டு, எல்லா வேளையும் குதூகலமாக இருக்க முடியும். களிப்பு இல்லாவிட்டால், உங்களின் புத்தியில் ஏதாவதொரு வகையான சுமை நிச்சயமாக இருக்கும். தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: உங்களின் சுமைகளை என்னிடம் ஒப்படையுங்கள். ‘நான்’ என்ற உணர்வை மறந்து, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள். உங்களின் பொறுப்புக்களைத் தந்தையிடம் ஒப்படையுங்கள். அப்போது நீங்கள் உண்ணும்போது, பருகும்போது, மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களின் இதயங்களில் நேர்மையுள்ள, உண்மையான குழந்தைகள் ஆகுவீர்கள். ஏனென்றால், சகல யுகங்களிலும் இந்த சங்கமயுகமே, மகிழ்ச்சிக்கான யுகம் ஆகும். இந்த மகிழ்ச்சியான யுகத்திலும் நீங்கள் குதூகலமாகக் கொண்டாடா விட்டால், எப்போது நீங்கள் கொண்டாடுவீர்கள்? சில குழந்தைகள் ஒரு சுமையைச் சுமந்த வண்ணம் அதிகளவில் கடினமாக உழைப்பதை பாப்தாதா பார்க்கும்போது, அவர்கள் அதைக் கையளிக்காமல் தாங்களே சுமந்து கொண்டிருப்பதைப் பாரக்கும்போது, தந்தைக்கு கருணையும் இரக்கமும் ஏற்படும், அல்லவா? மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் சிரமப்படுகிறார்களே! நீங்கள் அன்பிலே மெய்மறந்தவர்கள் ஆகவேண்டும். அன்பான நேரங்களை உங்களால் நினைக்க முடியும். ஏதாவதொரு வேளையில் நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக அன்பை அனுபவம் செய்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக அதை அனுபவம் செய்துள்ளீர்கள். உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது என்பதைத் தந்தை அறிவார். ஆனால் நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள். நீங்கள் தொடர்ந்து கடின உழைப்பையே பார்த்து, தொடர்ந்தும் குழப்பம் அடைகிறீர்கள். இன்று, அமிர்த வேளையில் இருந்து இப்போதுவரை, பாபா மற்றும் தாதா என்ற இரு அதிகாரிகளின் அன்பையும் அனுபவம் செய்துள்ளீர்கள். பின்னர், இந்தத் தினத்தை நினைப்பதன் மூலம், அந்த அன்பின் முன்னால் உங்களின் கடின உழைப்பு முடிவிற்கு வந்துவிடும்.
இப்போது, இந்த வருடம், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் அன்பிலே நிறைந்தவராகவும் கடின உழைப்பில் இருந்து விடுபட்டவராகவும் இருப்பதைக் காண விரும்புகிறார். எந்த வகையான கடின உழைப்பின் எந்தவொரு பெயரோ அல்லது சுவடோ உங்களின் இதயத்திலோ அல்லது உங்களின் வாழ்க்கையிலோ இருக்கக்கூடாது. இது சாத்தியமா? இது சாத்தியமா? நீங்கள் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும் என்று உணர்பவர்கள், இந்த தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இந்த விசேடமான தினத்தில், கடின உழைப்பில் இருந்து விடுபட்டிருக்கும் விசேடமான ஆசீர்வாதத்தை ஒவ்வொரு குழந்தையும் கொண்டிருக்கிறார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆமா? அப்படி என்றால், ஏதாவது நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ‘என்ன? ஏன்?’ போன்றவற்றை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்தானே? அன்பான நாட்களை நினைத்துப் பாருங்கள். அந்த அனுபவங்களை நினையுங்கள். அந்த அனுபவங்களில் உங்களை மறந்திருங்கள். நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். தந்தை குழந்தைகளான உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: நீங்கள் எல்லோருமே தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கு ஜீவன்முக்திக்கான அந்தஸ்தைக் கோருவீர்கள், நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வீர்கள் எனச் சத்தியம் செய்துள்ளீர்கள். எனவே, ஜீவன்முக்தியில் கடின உழைப்பு இருக்க முடியுமா? 21 பிறவிகளில், ஒரு பிறவி சங்கமயுகத்திற்கு உரியது. உங்களின் சத்தியம், 21 பிறவிகளுக்கானது, 20 பிறவிகளுக்கானது அல்ல. எனவே, இப்பொழுதில் இருந்தே கடின உழைப்பில் இருந்து விடுபடுங்கள். அதாவது, ஜீவன்முக்தி அடையுங்கள், கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுங்கள். தற்சமயத்தின் சம்ஸ்காரங்கள், ஆத்மாவில் 21 பிறவிகளுக்கு வெளிப்பட்டு இருக்கும். எனவே, நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்களின் ஆஸ்தியைக் கோரிவிட்டீர்கள், அல்லவா? அல்லது, இப்போதுதான் அதைக் கோரப் போகின்றீர்களா? எனவே, தயவுசெய்து கவனம் செலுத்துங்கள்! கடினமாக உழைப்பதில் இருந்து விடுபடுங்கள். திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். நீங்கள் மட்டும் திருப்தியாக இருக்காதீர்கள். நீங்கள் மற்றவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் கடின உழைப்பில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். இல்லாவிட்டால், ஒவ்வொரு நாளும், ஏதாவதொரு சுமை அல்லது கடின உழைப்பின் ஏதாவதொரு சூழ்நிலை, ‘என்ன? ஏன்?’ என்ற வடிவத்தில் உங்களின் மொழியில் வெளிப்படும். இப்போது, காலம் நெருங்கி வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். எப்படிக் காலம் நெருங்கி வருகிறதோ, அதேபோல், தந்தைக்கு நெருக்கமாக வரும் அனுபவமும் இப்போது அதிகரிக்க வேண்டும். நீங்கள் தந்தைக்கு நெருக்கமாக ஆகுவது, காலத்தையும் நெருக்கமாகக் கொண்டு வரும். ஆத்மாக்கள் அனைவரினதும் துன்பம் மற்றும் அமைதியின்மையின் சத்தம் உங்களின் காதுகளில் எதிரொலிப்பது குழந்தைகளான உங்களுக்குக் கேட்கவில்லையா? நீங்கள் எல்லோரும் மூதாதையர்கள், அத்துடன் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்கள். ஓ மூதாதை ஆத்மாக்களே, ஓ பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களே, உலக நன்மைக்கான பணியை நீங்கள் எப்போது பூர்த்தி செய்வீர்கள்?
ஒவ்வொரு துறைகளின் பிரிவுகளும் உலக நன்மைக்கான வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்பதற்காக மீட்டிங்குகள் வைத்துத் திட்டங்களைச் செய்கிறார்கள் என்ற செய்திகளை பாப்தாதா பார்த்திருக்கிறார். நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்கிறீர்கள். ஆனால், பாப்தாதா உங்களிடம் கேட்கிறார்: இறுதியில், எப்போது வரை? தாதிகள் இதற்குப் பதில் அளிப்பார்களா? பாண்டவர்கள் பதில் அளிப்பார்களா: எதுவரை? திட்டங்கள் செய்வதில், வெவ்வேறு துறைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தந்தையை வெளிப்படுத்தும் இலட்சியத்தையே வைத்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், திடசங்கற்பமான சத்தியத்துடனேயே வெளிப்படுத்துதல் இடம்பெறும். உங்களின் சத்தியத்தில் திடசங்கற்பம். ஏதாவதொரு காரணத்தால் அல்லது ஏதாவது சூழ்நிலைகளால் சிலவேளைகளில் திடசங்கற்பம் குறைவடைகிறது. நீங்கள் மிக நல்ல சத்தியங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் இவற்றை அமிர்த வேளையில் கேட்டால் - தந்தை அவற்றை எல்லா வேளையும் கேட்கிறார். ஒவ்வொருவரின் இதயத்தின் ஒலியையும் கேட்கக்கூடிய வசதியை இன்னமும் விஞ்ஞானம் உங்களுக்குத் தரவில்லை. தந்தை இதைக் கேட்கிறார்: சத்தியங்களின் மாலைகள். நீங்கள் நிறைவேற்ற வேண்டும் எனக் கொண்டிருக்கும் எண்ணங்கள் மிகவும் நல்லவை. அது இதயத்தைக் களிப்படையச் செய்கிறது. அதனால் பாப்தாதா கூறுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! நீங்கள் என்ன செய்ய வேண்டும் என பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அதைச் செயலில் செய்யும்போது, முரளி வாசிக்கும் நிலைவரை, நீங்கள் 75 சதவீதம் நன்றாகவே இருக்கிறீர்கள். ஆனால் கர்மயோகா என்று வரும்போது, அதில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. சில சம்ஸ்காரங்கள், சில சுபாவம்: சுபாவமும் சம்ஸ்காரங்களும் உங்களை எதிர்க்கின்றன. அதனால், திடசங்கற்பமான சத்தியத்திற்குப் பதிலாக, அது சாதாரணம் ஆகிவிடுகிறது. திடசங்கற்பத்திற்கான சதவீதம் குறைந்து விடுகிறது.
குழந்தைகள் விளையாடும் விளையாட்டைப் பார்க்கும்போது, பாப்தாதா புன்னகை செய்கிறார். அது என்ன விளையாட்டு? பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? இந்த விளையாட்டுக்களைப் பார்க்கும்போது, பாப்தாதா கருணை கொள்கிறார். அவர் அதை இரசிப்பதில்லை. ஏனென்றால், சில குழந்தைகள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தங்களின் எல்லாவற்றின் பழியையும் மற்றவர்களில் போடுவதில் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் என்ன விளையாட்டை விளையாடுகிறீர்கள்? நீங்கள் கதை கட்டுகிறீர்கள். நீங்கள் நினைக்கிறீர்கள்: எப்படியோ, இதை யார் பார்த்தது? எனக்குத் தெரியும், எனது இதயத்திற்குத் தெரியும். தந்தை பரந்தாமத்திலும் சூட்சும வதனத்திலும் அமர்ந்திருக்கிறார். ‘நீங்கள் இதைச் செய்யக்கூடாது’ என்று யாராவது ஒருவருக்கு நீங்கள் சொன்னால், அவர் என்ன விளையாட்டுக்களை விளையாடுவார் என உங்களுக்குத் தெரியுமா? ‘ஆம், அது நடந்தது, ஆனால்.....’ அவர் நிச்சயமாக, ஆனால்.... என்று கூறுவார். ஆனால் என்ன? ‘அது அப்படி இருந்தது, அவர் அதைச் செய்தார், அது அப்படி நடந்தது, அதனாலேயே அது நடந்தது. நான் அதைச் செய்திருக்க மாட்டேன், ஆனால் இந்தக் காரணத்தினாலேயே அது நடந்தது. அவர் அதைச் செய்தார், அதனாலேயே நானும் அதைச் செய்தேன். இல்லாவிட்டால், நான் அதைச் செய்திருக்கவே மாட்டேன்.’ எனவே, இது என்ன? உங்களின் சொந்தப் புரிந்துணர்வு குறைவாக இருப்பதே இதன் அர்த்தமாகும். ஓகே, உதாரணமாக, யாராவது ஒருவர் எதையாவது செய்தார், அதனாலேயே நீங்கள் அதைச் செய்தீர்கள். அது மிகவும் நல்லது. அவர் முதல் இலக்கத்தில் இருந்தார், நீங்கள் இரண்டாவது இலக்கத்தில் இருந்தீர்கள். அது நல்லதே. பாப்தாதா அதையும் ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் முதல் இலக்கத்தில் இருக்கவில்லை, நீங்கள் இரண்டாம் இலக்கத்திலேயே இருந்தீர்கள். எவ்வாறாயினும், முதல் இலக்கத்தில் இருப்பவர் தன்னை மாற்றிக் கொண்டால், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நினைப்பது சரியாகுமா? அந்த வேளையில், நீங்கள் இதையே நினைக்கிறீர்கள், அப்படித்தானே? ஓகே, உதாரணமாக, முதல் இலக்கத்தில் உள்ள அந்த நபர், தன்னை மாற்றிக் கொள்கிறார். முதல் இலக்கத்தில் உள்ள ஏனைய எல்லோருக்கும் அது அவர்களின் தவறு, அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாப்தாதா கூறுகிறார். அது சரியே. ஓகே. முதல் இலக்க நபர் தன்னை மாற்றிக் கொண்டால், யார் முதல் இலக்கத்தைப் பெற்றவர்? நீங்கள் முதல் இலக்கத்தைப் பெற மாட்டீர்கள், அப்படித்தானே? மாற்றத்தின் சக்தியில் நீங்கள் முதல் இலக்கத்தைப் பெற மாட்டீர்கள். நீங்கள் அவருக்கு முதல் இலக்கத்தைக் கொடுத்தீர்கள், எனவே உங்களின் இலக்கம் என்ன? அது இரண்டாம் இலக்கம், அல்லவா? நீங்கள் இரண்டாம் இலக்கத்தில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்வீர்களா? இல்லை, ‘அது அப்படி இருந்தது, அது இப்படி இருந்தது....’ என்றே நீங்கள் சொல்வீர்கள். இந்த வகையான பாஷை, விளையாட்டுக்களிலேயே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இப்போது, ‘இப்படி இருந்தது, அப்படி இருந்தது, எப்படி?’ போன்ற விளையாட்டுக்களை முடித்துவிட்டு, ‘நானே என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று நினையுங்கள். நான் என்னையும் மாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் மாற்ற வேண்டும். எவ்வாறாயினும், உங்களால் மற்றவர்களை மாற்ற முடியாவிட்டால், குறைந்தபட்சம் உங்களால் அவர்களுக்கு நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் வழங்க முடியும். இது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சொந்தமான ஒன்று, அப்படித்தானே? எனவே, நீங்கள் அர்ஜூனா, முதலடி எடுத்து வைப்பவர் ஆகவேண்டும். நீங்களா அல்லது இரண்டாம் இலக்கத்தில் இருப்பவரா உலகின் முதல் இராச்சியத்தின் உரிமையைக் கொண்டுள்ள இலக்ஷ்மி, நாராயணனுக்கு நெருக்கமாக ஆகப் போகின்றவர்?
இந்த வருடம், பிராமண ஆத்மாக்களான, பிரம்மா குமார்கள், பிரம்மா குமாரிகளான உங்கள் எல்லோரின் மீதும் பாப்தாதா நம்பிக்கை வைத்திருக்கிறார். நீங்கள் இங்கே வரும்போது, ஒரு பட்ஜை அணிகிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரு பட்ஜ் அணிகிறீர்கள், அல்லவா? நீங்கள் இங்கே வரும்போதும், ஒரு பட்ஜைப் பெறுகிறீர்கள்தானே? அது கடதாசியோ, தங்கமோ அல்லது வெள்ளியோ எதனாலும் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு பட்ஜை அணிவதைப் போல், உங்களின் இதயத்திலும் உங்களின் மனதிலும் ஒரு பட்ஜை அணியுங்கள்: ‘நான் என்னை மாற்ற வேண்டும். நான் ஒரு கருவி ஆகவேண்டும்.’ இது மாற வேண்டும். இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். இந்த நபர் மாற வேண்டும். இந்தச் சூழ்நிலைகள் மாற வேண்டும். இல்லை. ‘நான் என்னை மாற்ற வேண்டும்.’ சூழ்நிலைகள் வரும். நீங்கள் மேலே செல்கிறீர்கள். உயர்ந்த இடங்களில், பிரச்சனைகளும் உயர்வாகவே இருக்கும், அல்லவா? எவ்வாறாயினும், இன்று அன்பின் விழிப்புணர்வின் சூழல் வரிசைக்கிரமமாக, உங்களின் கொள்ளளவிற்கு ஏற்ப இருந்ததைப் போல், சதா உங்களின் மனதில் அன்பிலே திளைத்திருக்கும் சூழலை வெளிப்படுமாறு வைத்திருங்கள்.
பாப்தாதா மிக நல்ல செய்திகளைப் பெறுகிறார். எண்ணத்தின் வடிவிலும் அவை மிகவும் நல்லவை. ஆனால் அவற்றை நடைமுறையில் பயிற்சி செய்யும்போது, நீங்கள் உங்களின் கொள்ளளவிற்கேற்ப ஆகிவிடுகிறீர்கள். இப்போது, இரண்டு நிமிடங்களுக்கு, நீங்கள் எல்லோரும் இறையன்பிலும் சங்கமயுகத்தின் ஆன்மீகக் களிப்பு ஸ்திதியிலும் ஸ்திரமாகுங்கள். அச்சா. மீண்டும் மீண்டும் அவ்வப்போது தொடர்ந்து இந்த அனுபவத்தைக் கொண்டிருங்கள். ஒருபோதும் அன்பைக் கைவிடாதீர்கள். அன்பிலே மெய்மறந்திருப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். அச்சா.
நீங்களும் சந்தோஷமாக இருப்பதுடன் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும் யோகியுக்த், யுக்தியுக்த், ராசியுக்த் (சகல இரகசியங்களையும் புரிந்து கொள்ளுதல்) குழந்தைகள் எல்லோருக்கும் - நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்கக்கூடாது, ஆனால் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும் - அன்புக்கடலில் அமிழ்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் தந்தைக்குச் சமமாக ஆகுவதற்கான முயற்சியை எப்போதும் செய்யும் தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கும் இலகுவாக அசாத்தியத்தைச் சாத்தியம் ஆக்கும் மேன்மையான குழந்தைகளுக்கும் சதா தந்தையுடன் இருக்கின்ற, அவரின் சேவையைச் செய்வதில் சகபாடிகளாக இருக்கின்ற மிகவும் அதிர்ஷ்டசாலி, அன்பான குழந்தைகளுக்கும் அவ்யக்த தேவதை ரூபத்திற்கான இந்த அவ்யக்த தினத்திலே, இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் ஆசீர்வாதங்களும் உரித்தாகுக. அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் நினைவின் மாய மந்திரத்தின் மூலம் முழுமையான வெற்றி பெற்று, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.தந்தையின் நினைவே, நீங்கள் விரும்புகின்ற எந்தவொரு பெறுபேற்றையும் அடையக்கூடிய ஒரு மாய மந்திரம் ஆகும். உலக ரீதியிலும், ஒரு பணியில் வெற்றி பெறுவதற்காக, அவர்கள் ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்கிறார்கள். அதேபோல், இங்கும், நீங்கள் எதிலாவது வெற்றி பெற விரும்பினால், அதற்குப் பயன்படுத்தும் வழிமுறையானது, நினைவெனும் மகாமந்திரம் ஆகும். இந்த மாய மந்திரம் ஒரு விநாடியில் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. சதா இதை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். நீங்கள் நிலையான வெற்றியின் சொரூபம் ஆகுவீர்கள். நினைவில் இருப்பது பெரியதொரு விடயமாக இல்லாவிட்டாலும் நிலையான நினைவில் இருப்பதன் மூலமே நீங்கள் முழுமையான வெற்றி பெறுவீர்கள்.
சுலோகம்:
விரிவாக்கங்கள் எல்லாவற்றையும் ஒரு விநாடியில் அதன் சாரத்திற்கு அமிழ்த்துவது என்றால், இறுதிச் சான்றிதழைக் கோருதல் என்று அர்த்தம்.அவ்யக்த சமிக்கை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள். (அசரீரி மற்றும் விதேகி).
எப்படி உங்களால் ஓர் ஆடையை இலகுவாகக் கழற்ற முடிகிறதோ, அதேபோல், உங்களால் உங்களின் சரீரம் என்ற ஆடையையும் இலகுவாக அகற்றக் கூடியதாகவும் தேவைப்படும் வேளையில் இலகுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சி தேவைப்படுகிறது. உங்களின் ஆடை இறுக்கமாக இருந்தால், உங்களால் அதை இலகுவாகக் கழற்ற முடியாது. அதேபோல், உங்களின் சரீரம் என்ற ஆடை இறுக்கமாக அல்லது எந்தவொரு சம்ஸ்காரத்திலும் அகப்பட்டு இருக்கக்கூடாது. இதற்கு, சகல சந்தர்ப்பங்களிலும் இலகுவாக இருங்கள். நீங்கள் இலகுவாக இருந்தால், சகல பணிகளும் இலகுவாக நிறைவேற்றப்படும். எந்தளவிற்கு உங்களின் பழைய சம்ஸ்காரங்களில் இருந்து நீங்கள் அதிகளவில் பற்றற்று இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் ஸ்திதியும் பற்றற்று இருக்கும். அதாவது, நீங்கள் இலகுவாக சரீரமற்றவர் ஆகுவீர்கள்.