31.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, மன்மனாபவ என்ற அப்பியாசத்தைத் தொடர்ந்தும் செய்தால், நீங்கள் 21 பிறவிகளுக்கு என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கேள்வி:
சற்குருவின் எந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கு மறைமுகமான முயற்சி தேவையாகும்?பதில்:
சற்குருவின் ஸ்ரீமத்: இனிய குழந்தைகளே, உங்கள் சரீரங்களை மறந்து என்னை நினைவு செய்யுங்கள். உங்களை ஆத்மாக்கள் என்று மாத்திரமே கருதுங்கள். ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள்: சரீரமற்றவர் ஆகுங்கள்! உங்கள் சரீரத்தையும், சரீர சமயங்கள் அனைத்தையும் மறந்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்குக் குழந்தைகள் மறைமுகமான முயற்சியைச் செய்ய வேண்டும். இந்த மறைமுகமான முயற்சியைப் பாக்கியசாலிகளான குழந்தைகளால் மாத்திரமே செய்ய முடியும்.ஓம் சாந்தி.
குழந்தைகள் இந்த அப்பியாசத்தைத் தமது சகோதர சகோதரிகளுக்குக் கற்பிப்பதற்காகவே இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். இது என்ன அப்பியாசம்? இந்த அப்பியாசத்தில் குழந்தைகள் எதனையும் கூற வேண்டியதில்லை. பௌதீக அப்பியாசங்களை அவர்கள் செய்யும்போது, அவர்கள் எதனையாவது கூற வேண்டும். கீதையின் கடவுளான இந்தப் பரம ஆசிரியர் இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு யோக அப்பியாசத்தைக் கற்பிக்கின்றார். இந்த அப்பியாசமும் மறைமுகமானது. மாணவர்கள் என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கே அப்பியாசம் கற்பிக்கப்படுகின்றது. இந்த மன்மனாபவ எனும் அப்பியாசத்தால் நீங்கள் 21 பிறவிகளுக்கு என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என்றுமே நோய்வாய்ப்பட மாட்டீர்கள். ஆகையால், இந்த ஆன்மீக அப்பியாசம் மிகவும் சிறந்தது. தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! எதனையும் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களை ஆத்மாக்கள் என்று கருதும்படி உங்களுக்குக் கூறப்படுகின்றது. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவீர்களாக! தந்தையை நினைவு செய்தால் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்பதே சதா இவ்வாறு இருத்தல் என்பதன் அர்த்தம். இந்த ஆன்மீக அப்பியாசத்தினால் நீங்கள் முன்னைய கல்பத்திலும் என்றென்றும் ஆரோக்கியமாக இருந்தீர்கள். ஆன்மீகத் தந்தையான பரமாத்மா பரமதந்தை சிவன் மாத்திரமே இந்த ஆன்மீக அப்பியாசத்தைக் கற்பிக்கின்றார். வழிபாடு செய்யப்படும் அந்த ஒரேயொருவர் மாத்திரமே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். மக்கள் ‘நமசிவாய’ என்றும் கூறுகின்றார்கள். ‘பிரம்ம தேவனுக்கு வந்தனங்கள்’ ‘பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்’ என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றார்கள். இந்த அப்பியாசத்தை ஒரு பௌதீக மனிதன் உங்களுக்குக் கற்பிப்பதில்லை. இந்த அப்பியாசத்தைப் பிரம்மாவும் உங்களுக்குக் கற்பிப்பதில்லை. இல்லை. நீங்கள் பிரம்மாகுமார் குமாரிகள் என்று அழைக்கப்பட்ட போதிலும், நீங்கள் எழுதும் கடிதங்களில் ‘சிவபாபா மேற்பார்த்து பிரம்மா’ என்றே விலாசம் இடுகின்றீர்கள். அவர் மறைமுகமானவர். மக்களால் இதனை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? பிரம்மா பிரஜைகளின் தந்தை ஆவார். ஆகையால், உலகில் உள்ள மக்கள் அனைவருமே அவரின் குழந்தைகள் ஆவார்கள். அவர் மக்களின் தந்தை ஆவார். உங்களுக்கு அப்பியாசத்தைக் கற்பிப்பவர் அசரீரியான தந்தை ஆவார். அவர் மறைமுகமானவர். அவர் மறைமுகமானவர் என்பதால், அவரைப் புரிந்து கொள்வதில் மக்களுக்குச் சிரமம் உள்ளது. பிரம்மாவைக் கடவுள் என்று அழைக்க முடியாது. இங்கு நீங்கள் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் என்ற பெயரையே பயன்படுத்துகின்றீர்கள், அதாவது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் என்பதே அதன் அர்த்தமாகும். எவராவது வரும்போது, புதிய உலகைப் படைப்பவர் பிரம்மா அல்ல, அதனைப் படைப்பவர் அசரீரியான தந்தையே என்று அவருக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர் பிரம்மாவினூடாகப் படைப்பைப் படைக்கின்றார். இவ் உலகிற்கு அப்பாலுள்ள பரமாத்மா பரமதந்தை, பிரம்மாவினூடாகப் படைப்பைப் படைக்கின்றார். அதாவது அது பரமாத்மாவின் படைப்பு என்பது அதன் அர்த்தமாகும். ‘சிவபாபா மேற்பார்த்து பிரம்மா’ என்றே நீங்கள் உங்கள் கடிதங்களில் விலாசம் இடுகின்றீர்கள். ஆகையாலேயே அவரை நினைவு செய்வதற்கு இதுவும் ஒரு வழிமுறை ஆகும். சிவபாபா பிரம்மாவினூடாக உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களிடம் கூறுவது: மன்மனாபவ! அவர் உங்களுக்கு வேறு எந்தச் சிரமமும் கொடுப்பதில்லை. அவர் கூறுகின்றார்: நீங்கள் முன்னேறி, சத்திய உலகிற்கு அதிபதிகள் ஆக விரும்பினால், சத்திய உலகை ஸ்தாபிக்கின்ற ஒரேயொரு உண்மையான தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். எல்லையற்ற தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்களில் இருந்து நீங்கள் விடுதலை அடைவீர்கள். ஸ்ரீகிருஷ்ணரைத் தூய்மை ஆக்குபவர் என்று அழைக்க முடியாது. பரமாத்மா பரமதந்தையைத் தவிர வேறு எப்பெயரும் இதனுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதில்லை. அவர் தந்தையான கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். அனைவருமே அவரைத் தந்தை என்று அழைக்கின்றார்கள் என்பதால், அவரைச் சர்வவியாபி என்று எவ்வாறு உங்களால் கூற முடியும்? அவர் அனைவரையும் விடுதலை செய்யவே வருகின்றார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் சக்கரத்திற்குப் பிழையானதொரு கால எல்லையைக் கொடுத்துள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த அப்பியாசத்தைச் செய்ய வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். இங்கே நீங்கள் அமர்ந்திருக்கும்போது, உங்களை சரீரமற்ற ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையை நீங்கள் நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழியும். ஓர் ஆசிரியர் மாணவர்களின் முன்னிலையில் கதியில் அமர்வதே சரியாகும். ஓர் ஆசிரியர் நிச்சயமாக அப்பியாசத்தைக் கற்பிக்க வேண்டும் என்பதே சட்டமாகும். சிலர் மூத்த (சீனியர்) ஆசிரியர்களும் சிலர் இளைய (ஜுனியர்) ஆசிரியர்களும் ஆவார்கள். நீங்கள் அதி அன்புக்குரிய தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதால் இங்கே பரீட்சை போன்றவற்றிற்கு அவசியம் இல்லை. பிரம்மா அதி அன்பிற்கினியவர் அல்ல. எப்பொழுதுமே தூய்மையாக இருப்பவரே அதி அன்பிற்கினியவர் ஆவார். அனைவரிலும் அதி இனியவர் யார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மக்கள் கடவுளை நினைவு செய்யும்போது கூறுகின்றார்கள்: ஓ துன்பத்தை அகற்றுபவரே, சந்தோஷத்தை அருள்பவரே! அவர் விடுதலை அளிப்பவர் என்றும் அழைக்கப்படுகின்றார். அவரே உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவிப்பவர். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும். நாடகத்திட்டப்படி இவ்வுலகம் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். உலகம் தூய்மை ஆகும்பொருட்டு, தீ ஒன்று மூட்டப்பட வேண்டும். அந்தத் தீ எவ்வாறு மூட்டப்படும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். விநாசம் இடம்பெறாமல் உலகம் தூய்மையாக முடியாது. இதுவே உருத்திர ஞான யாகமாகும். உருத்திரனுக்கும் சிவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் சிவன் என்ற பெயர் பிரதானமானது. எவ்வாறாயினும், தத்தமது மொழிகளில் அவர்கள் வெவ்வேறு பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவரின் உண்மையான பெயர் சிவனாகும். மக்கள் சிவனின் பிறந்தநாளையும் கொண்டாடுகின்றார்கள். சிவனின் பிறந்தநாள் பாரதத்தில் மிகவும் பிரபல்யமானது. எல்லையற்ற தந்தையின் பிறந்தநாள் இருப்பதனால், அவர் நிச்சயமாக இங்கே வரவேண்டும். சிவபாபாவின் பெயர் மிகவும் பிரபல்யமானது. அவரே சுவர்க்கத்தின் ஸ்தாபனையைப் பிரம்மாவினூடாக மேற்கொள்கின்றார். ஆகையால் அதிமேலான தந்தை நினைவு செய்யப்பட வேண்டும். பிரம்மா அதிமேலானவர் அல்ல. ஆனால், உண்மையில் அவர் அவ்வாறு ஆகுகின்றார். அதன் பின்னர் அவர் மிகவும் கீழான நிலையையும் அடைகின்றார். பிரம்மாகுமார் குமாரிகளாகிய நீங்களும் மிகவும் கீழான நிலையை அடைந்து இப்பொழுது அதிமேலானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தந்தையின் வீடான அதி உச்சத்திற்கும் செல்வீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் திரிகாலதரிசிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரம்மாண்டையும் உலக ஆரம்பம், மத்தி, இறுதியையும் நாங்கள் அறிவோம். பிரம்மாண்டம் என்பது ஆக உச்சியிலுள்ள ஆத்மாக்களின் வசிப்பிடமாகும். உலகிலுள்ள வேறு எவராலும், ஆத்மாக்கள் அசரீரியான உலகில் வாழ்பவர்கள் என்று விளங்கப்படுத்த முடியாது. இங்குள்ள உலகமும், பிரம்மாண்டமும் இரு வேறு உலகங்களாகும். ஆத்மாக்கள் நிர்வாணா உலகில் வாழ்கின்றார்கள். அது அமைதிதாமம் என்றும் அழைக்கப்படுகின்றது. அமைதியே ஆத்மாக்களின் வடிவமாகும். மௌன உலகம், ‘அசைவு’ உலகம், ‘பேசும்’ உலகம் போன்றன உள்ளன. நீங்கள் ‘அசைவு’ உலகில் நீண்டகாலத்திற்கு இருப்பதில்லை. பலரும் மௌன உலகில் இருக்க நேரிடும். வேறு இடம் இல்லை. ஆத்மாக்கள் தந்தையையும், வீட்டையும் நினைவு செய்யும்போது, அவர்கள் அதை மேலேயே நினைவு செய்கின்றார்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும், இடையில் உள்ள இடத்தைப் பற்றித் தெரியாது. மக்களிடம் அந்தளவிற்கு இந்த ஞானம் இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகிலேயே வாழ்கின்றார்கள் என்று அவர்கள் வெறுமனே கூறியபோதிலும், எவருக்குமே அவர்களின் தொழில் என்னவென்பது தெரியாது. அவர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். பிரம்மா விஷ்ணுவாகவும், விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகுகின்றார். நீங்கள் லீப் புண்ணிய மாதத்தைக் கொண்டிருப்பதைப் போன்றே, (இந்து கலண்டர்களுக்கு ஏற்ப) இது லீப் யுகமாகும். இது குறுகிய காலத்திற்கே நீடிக்கும். இது நீங்கள் வைரம் போன்ற பெறுமதியானவர்கள் ஆகுவதற்கான மிகவும் மேன்மையான பிறவியாகும். சூத்திரர்களில் இருந்து தேவர்கள் ஆகுவது என்பது அதிமேன்மையானது என்று கருதப்படுகின்றது. நீங்கள் பிராமணர்கள் ஆகும் போது, நீங்கள் பாட்டனாரின் ஆஸ்திக்கு உரிமை உடையவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சதா மன்மனாபவ ஆக இருங்கள்! தந்தையின் செய்தியை அனைவருக்கும் தொடர்ந்தும் கொடுங்கள்! தந்தை தூதுவர் என்று அழைக்கப்படுகின்றார். வேறு எவருமே தூதுவர் அல்ல. ஏனைய அனைவரும் வெறுமனே தமது சொந்த சமயங்களை ஸ்தாபிக்கவே வருகின்றனர். தூய்மை ஆகுங்கள் என்ற செய்தியைக் கொடுப்பதற்கு வருகின்ற தூதுவர் ஒரேயொருவரே உள்ளார். ஏனையோர் தத்தமது சமயத்தை ஸ்தாபிக்கவே வருகின்றார்கள். அவர்கள் உங்களை மீண்டும் அழைத்துச் செல்லும் வழிகாட்டிகள் அல்ல. ஒரேயொரு சற்குருவினால் மாத்திரமே சற்கதியை அருள முடியும். ஒரேயொரு பரமாத்மா பரமதந்தை சிவன் மாத்திரமே உண்மையைப் பேசி உண்மையான பாதையைக் காட்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு மறைமுகமான முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் உங்கள் சரீரத்தை மறந்து, ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரங்களை நீக்கும்போது, நீங்கள் முழு உலகையும் துறப்பதுடன், ஒவ்வோர் ஆத்மாவும் தனிமை ஆகின்றார். தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகினால் உங்கள் உறவினரையும் நண்பர்களையும் நீங்கள் நினைவு செய்ய மாட்டீர்கள். நான் ஓர் ஆத்மா, எனது தந்தையுடன் நான் வீடு திரும்புவேன். தந்தையிடம் நீங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற ஆலோசனையைத் தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த பாபாவும் மிகவும் பிரபல்யமானவர். தந்தை ஆத்மாக்கள் அனைவருக்கும் இவர் மூலமாக வழிகாட்டியாகி, அனைவரையும் நுளம்புக் கூட்டத்தைப் போன்று தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மாத்திரமே இந்த உண்மையான ஞானம் உள்ளது. நீங்கள் பாண்டவசேனை என்றும் அழைக்கப்படுகின்றீர்கள். பாண்டவர்களின் தந்தையாகிய பரமாத்மா, பரமதந்தை சிவன், முன்னைய கல்பத்தில் செய்ததைப் போலவே இப்பொழுதும் குழந்தைகளாகிய உங்களுக்கு அப்பியாசத்தைக் கற்பிக்கின்றார். விநாசம் நடைபெறும் பொழுது சகல ஆத்மாக்களும் தங்கள் சரீரத்தை நீக்கிவிட்டு வீட்டிற்குச் செல்வார்கள். சத்தியயுகத்தில் ஓர் இராச்சியமும் மிகக் குறைந்தளவு ஆத்மாக்களுமே இருப்பார்கள். ஒரேயொரு இராச்சியமே இருக்கும். இப்பொழுது எண்ணற்ற இராச்சியங்கள் இருக்கின்றன, ஆனால் பின்னர் ஒரேயொரு இராச்சியமே இருக்கும். நாள் முழுவதும் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் தொடர்ந்தும் கடையுங்கள். குழந்தைகளாகிய நீங்களும் கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டும். புதிய டெல்கி இருந்த பொழுது புதிய பாரதம் இருந்தது. அப்பொழுது ஒரேயொரு தேவிதேவதா தர்மமே இருந்தது. இந்து சமயம் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் அல்ல. பிராமணர்களாகிய நாங்களே தேவர்கள் ஆகுகின்றோம். மற்றைய சமயத்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதலில் வருபவர்களே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். இவை யாவும் புரிந்துகொள்வதற்கு மிகவும் சுலபமான விடயங்களாகும். இந்நாடகமானது இப்பொழுது முடிவடையப் போகின்றது என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கின்றது. சகல நடிகர்களும் இப்பொழுது இங்கே வந்துவிட்டார்கள். உங்கள் 84 பிறவிகளையும் நீங்கள் நிறைவுசெய்து விட்டதால், நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஏனெனில் நீங்கள் களைப்படைந்துள்ளீர்கள். பக்திமார்க்கம் களைப்படைவதற்கான பாதையாகும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவுசெய்து எல்லோருக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள்: சரீரத்தையும் உங்கள் சரீர உறவினரையும் மறந்து உங்களை ஆத்மா எனக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். சரீரமற்றவர் ஆகுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். ஏனெனில் நீங்கள் இப்போது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். மரணம் உங்கள் முன்னாலேயே இருக்கின்றது. புத்துணர்ச்சியைப் பெறுவதற்காகவே குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நேர்முன்னிலையில் வந்திருக்கின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நேரடியாக விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, சரீர உணர்வினைத் துறந்து சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இப்பொழுது இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. ஒரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகித் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் முயற்சியைச் செய்யாவிடின் உங்களால் அதன் பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது. பின்னர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் வருமானத்தைப் பெற்றுக் கொண்டு மற்றவர்களையும் அழையுங்கள். தந்தையை அடையும் பாதையை எல்லோருக்கும் காட்டுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் உபகாரிகள் ஆகவேண்டும், உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கூட நீங்கள் நன்மை செய்ய வேண்டும். இங்கே, நீங்கள் ஆன்மீக உணர்வில் இருக்குமாறு கூறப்படுகின்றீர்கள். உங்களுக்கு மகாமந்திரம் கொடுக்கப்படுகின்றது. தந்தை அவரே வந்து உங்களுக்கு புராதன யோகத்தைக் கற்பிக்கிறார். அது யோகத்தீயில் உங்களின் பாவங்கள் எரிக்கப்படும் என்று நினைவுகூரப்படுகிறது. நீங்கள் இந்த சமிக்ஞையை முன்னைய சக்கரத்திலும் பெற்றுக் கொண்டீர்கள். தந்தை உங்களுக்கு சமிக்ஞையைக் காட்டுகின்றார்: உங்களை ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழலாம். ‘நான் உங்களிடம் புகலிடம் தேடினேன்’ என்பது நினைவுகூரப்படுகின்றது. இதுவும் நிகழ்கின்றது. துன்பத்தை அனுபவம் செய்யும் ஒருவர், சக்திவாய்ந்த ஒருவரிடம் சென்று புகலிடம் கோருகின்றார். இதுவே இங்கும் நடைமுறைரீதியில் நிகழ்கின்றது. அதிகளவு துன்பம் வரும்போது அதை உங்களால் சகிக்க முடியாது போனாலோ, விரக்தியானதொரு சூழலில் இருந்தாலோ நீங்கள் தந்தையிடம் புகலிடம் தேடி ஓடோடி வருகின்றீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலுமே உங்களுக்கு சற்கதியைக் கொடுக்க முடியாது. பழைய உலகம் அழியப்போகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதற்கான ஆயத்தங்களே செய்யப்படுகின்றன. ஒருபுறத்தில் ஸ்தாபனைக்குரிய ஆயத்தங்களும், மறுபுறத்தில் விநாசத்திற்கான ஆயத்தங்களும் இடம்பெறுகின்றன. ஸ்தாபனையானது நடைபெற்றதும் விநாசம் நிச்சயமாக இடம்பெறும். பாபா ஸ்தாபனையை நடாத்துவதற்காகவே வந்திருக்கின்றார் என்றும், இவரின் மூலம் நீங்கள் நிச்சயமாகவே உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். எப்படியாயினும், தூண்டுதலால் எதுவுமே பெற்றுவிட முடியாது. உங்கள் ஆசிரியரிடம் அவரின் தூண்டுதலாலேயே நீங்கள் கற்பீர்கள் எனக் கூறுவீர்களா? யாவும் தூண்டுதலினால் நடைபெற முடியுமாயின், ஏன் சிவனின் பிறந்ததினமானது கொண்டாடப்படுகின்றது? அவ்வாறாயின், தூண்டுதலினாலேயே அனைத்தையும் செய்பவரின் பிறந்தநாளானது கொண்டாடப்பட வேண்டிய அவசியமே இல்லை. சகல ஆத்மாக்களுக்கும் பிறந்தநாட்கள் உள்ளன. சகல ஆத்மாக்களும் சரீரங்களினுள் பிரவேசிக்கின்றார்கள். ஆத்மாவும் சரீரமும் ஒன்றாக வரும்பொழுதே ஆத்மா பாகம் ஒன்றை நடிக்கின்றார். ஆத்மாக்களின் சுயதர்மம் அமைதி ஆகும். ஆத்மாக்களே ஞானத்தைக் கிரகிக்கின்றார்கள். ஆத்மாக்களே நல்ல, தீய சம்ஸ்காரங்களை தம்முடன் கொண்டு செல்கின்றார்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். அங்கு தூய்மை மாத்திரமே இருக்கும். அங்கு தூய்மையின்மை என்ற சுவடே கிடையாது. இது நச்சுக்கடல். இது மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் இது எவரது புத்தியிலும் புகுவதே இல்லை. எவ்வாறாயினும் உங்களால் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. நாடகத்தின் பந்தனத்திலேயே அனைவரும் கட்டுண்டு இருக்கின்றார்கள். நீங்கள் ஏணியின் மிக உச்சியில் இருந்தே இறங்கி வந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, நாங்களும் கீழே விழ வேண்டியுள்ளது. எனவே, தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது ஏறுவதற்கான முயற்சியைச் செய்யுங்கள். எனினும் தமது பாக்கியத்தில் இதனைக் கொண்டிராதவர்களே இதனைக் கூறுகின்றார்கள். அதனைக் கூறுபவர்கள் தமது பாக்கியத்தில் அது இல்லை என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். இங்கு 2 தொடக்கம் 4 வருடங்கள் இருந்ததன் பின்னர் கூட சிலர் விழுந்து விடுகின்றார்கள்;. அதன் பின்னர் தாம் பெரிய தவறு செய்து தமக்குத்தாமே தீங்கிழைத்து விட்டதாக உணர்கின்றார்கள். இதுவே அரைக்கல்பத்திற்கான நோயாகும். இது ஒரு சிறிய விடயமல்ல! நீங்கள் அரைக்கல்பமாகவே நோயாளிகளாக இருந்தீர்கள். இந்திரிய சுகத்தில் ஈடுபட்டதால் (போகிகள்) நீங்கள் நோயாளிகள் (ரோகி) ஆகினீர்கள். தந்தை இங்கு வந்து உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். கிருஷ்ணரும் யோகேஸ்வரர் என்றே அழைக்கப்படுகின்றார். இந்நேரத்தில் நீங்களே உண்மையான யோகிகள் ஆவீர்கள். யோகேஸ்வரனே உங்களுக்கு யோகத்தைக் கற்பிக்கின்றார். நீங்கள் ஞானஞானேஸ்வரர்களாக இருக்கின்றீர்கள். பின்னர் இராஜஇராஜேஸ்வரர்கள் (இளவரசர்கள், இளவரசிகள்) ஆகுவீர்கள். இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் செல்வந்தர்களாகவும் யோகத்தின் மூலம் நீங்கள் நோயற்றவர்களாகவும் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும் ஆகுகின்றீர்கள். உங்கள் துன்பங்கள் யாவும் அரைக்கல்பத்திற்கு நீக்கப்பட்டுவிடும். ஆகவே, இதற்காக நீங்கள் எவ்வளவு முயற்சியைச் செய்யப் போகின்றீர்கள்? அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மை ஆகுவதற்குச் சரீரமற்று இருத்தலைப் பயிற்சி செய்யுங்கள். ஒரேயொரு தந்தையை நினைவு செய்கின்ற செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் மறந்துவிடுங்கள்.2. யோகேஸ்வரத் தந்தையிடம் இருந்து யோகத்தைக் கற்று உண்மையான யோகிகள் ஆகுங்கள். இந்த ஞானத்தின் மூலம் செல்வந்தர்களாகவும் யோகத்தின் மூலம் நோயில் இருந்து விடுபட்டு, என்றென்றும் ஆரோக்கியமானவராகவும் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கருவி ஆத்மாக்களிடம் இருந்து கர்மயோகி ஆகுவதற்கான ஆசீர்வாதத்தைப் பெற்று, மாஸ்ரர் ஆசீர்வாதங்களை அருள்பவர் ஆகுவீர்களாக.ஏதாவது பௌதீகமாகச் செய்யப்படுவதை நீங்கள் பார்க்கும்போது, உங்களால் அதை இலகுவாகச் செய்ய முடியும். இதனாலேயே, நீங்கள் சேவை, துறவறம், அன்பு மற்றும் ஒத்துழைப்பின் நடைமுறை ரூபத்தை மேன்மையான கருவி ஆத்மாக்களிடம் காணும்போது, அது உங்களுக்கு ஓர் ஆசீர்வாதம் ஆகுகிறது. கருவி ஆத்மாக்கள் தமது நற்குணங்களின் தாரணையை, வேலை செய்யும்போது பயன்படுத்துவதை நீங்கள் பார்க்கும்போது, அது நீங்கள் ஒரு கர்மயோகி ஆகுவதற்கான ஆசீர்வாதத்தை இலகுவாகப் பெறுவதைப் போன்றதாகும். தொடர்ந்து இத்தகைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்பவர்கள், தாங்களும் மாஸ்ரர் ஆசீர்வாதங்களை அருள்பவர்கள் ஆகுகிறார்கள்.
சுலோகம்:
பெயரைச் சம்பாதிப்பதன் அடிப்படையில் சேவை செய்வது என்றால், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்று வரும்போது, உங்களின் பெயரைப் பின்னால் போடுதல் என்று அர்த்தம்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
தூய்மையின் அடையாளம், சுத்தமும் சத்தியமும் ஆகும். நாள் முழுவதும் நீங்கள் அமர்ந்திருக்கும்போது, அசைந்து திரியும்போது, பேசும்போது அல்லது பௌதீகமான மற்றும் சூட்சுமமான சேவையைச் செய்யும்போது, அது சரியான முறையில் செய்யப்படா விட்டால், நீங்கள் செய்யும் முறையில் சிறிதளவு வேறுபாடு இருந்தாலும் அதுவும் சுத்தம் இல்லை, அதாவது, அது தூய்மை இல்லை என்று அர்த்தம். ஒருவருக்குத் துன்பம் விளைவித்தல் அல்லது பாவச் செயலைச் செய்தல் மட்டும் தூய்மை இன்மை கிடையாது. எவ்வாறாயினும், நீங்கள் உங்களுக்குள் சரியான முறையில் சத்தியத்தையும் சுத்தத்தையும் அனுபவம் செய்தால் நீங்கள் தூய்மையானவர் ஆவீர்கள்.